ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றப்படாத கேவில் பகுதியில் தென்பகுதி மீனவ நிறுவனங்கள் கடலட்டை பிடிப்பதற்கு எதிராக கட்டைக்காடு மீனவ சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக கட்டைக்காடு மீனவ சங்கம் இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது. தேச வழமைக்கேற்ப தென்பகுதி மீனவ நிறுவனங்கள் கேவில் பகுதியில் கடலட்டை பிடிப்பதாயின் அப்பிரதேச சமாசத்தின் அனுமதியுடன் மட்டும் கடற்றொழிலில் ஈடுபட முடியும் என மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கேவில் பகுதி விடுவிக்கப்படாத காரணத்தினாலும் குறைந்தளவில் அப்பிரதேசத்தில் மீனவர்கள் வசிக்கின்ற காரணத்தினாலும் கட்டைக்காடு மீனவ சங்கம் தென்பகுதி மீனவ நிறுவனங்களின் மீன்பிடி தொழிலுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதி தெரிவித்தார்…
-
- 2 replies
- 957 views
-
-
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளே இன்னமும் அகற்றப்பட வேண்டியுள்ளன. மிகவும் கடினமான பிரதேசங்களில் இவை புதைக்கப்பட்டுள்ளதால் 2020ஆம் ஆண்டிலேயே இவற்றை முழுமையாக அகற்ற முடியுமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை கண்ணிவெடி அகற்றும் வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் பிரசன்ன குருபோம தெரிவித்தார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் புதைக்கப்பட்டிருந்த நிலக்கண்ணி வெடிகளில் 90 வீதமானவை அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 124 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளே ஏனைய 10 வீத பிரதேசத்துக்குள் அடங்குகின்றன. நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரதேசங்களிலும் இயந்திரங்களைப் பயன்பட…
-
- 0 replies
- 419 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வடக்கு, கிழக்கில் சுதந்திரமாக அசியல் செய்கின்றனர். பிரபாகரன் இருந்தபோது அதற்கு இடம் தரப்படவில்லை என்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரமான ஆயுதக்குழு ஒன்றை தோற்கடித்ததன் மூலம் இலங்கையில் சமாதானம், விடுதலை மற்றும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடிந்துள்ளது. படையினன் அர்ப்பணிப்பும் தற்துணிவுமே இந்த வெற்றிக்கான அடிப்படைகளாகும். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் எந்த இடத்திலும் பிரச்சினைகள் இடம்பெறவில்லை. போரின்போது இடம்பெயர்ந்த மூன்று லட்சம் பேரையும் மீண்டும் குடியமர்த்தும் போது, விடுதலைப்பு லிகள் புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றுவதே பிரதான தடையாக அமை…
-
- 0 replies
- 500 views
-
-
வெளிநாடுகளில் திட்டமிட்டு செயற்படும் குழுக்கள் போலி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி, இலங்கையில் தனியார் வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளவர்களின் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரியவருகிறது. தமது கணக்கில் இருந்த லட்சக்கணக்கான பணம் திடீரென குறைந்துள்ளமை குறித்த, வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிலர் வங்கி நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணைகளில், வாடிக்கையாளர்களின் பணம் போலி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் சூறையாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு வாடிக்கையாளர்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமை குறித்து ஒரு தனியார் வங்கியில் மாத்திரம் 30 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இலங்கை வங்கிகளில் உள்ள பணம்…
-
- 0 replies
- 487 views
-
-
அரசியலில் இரண்டு பகை சக்திகளை பிரதிநிதித்துவப் படுத்தும் இரண்டு கொடிகள் கடந்த வாரம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் என்னவெனில் இரண்டு கொடிகளும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி மே தின நிகழ்ச்சிகளின் போதே சர்ச்சையை கிளப்பியிருக்கின்றன. ஐ.தே.க. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் சென்றவர்களில் சிலர் புலிக் கொடியை ஏந்திச் சென்றார்கள் என்று அரச ஊடகங்கள் கூறியதில் ஒரு சர்ச்சை உருவாகியது. அதே மே தினக் கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தேசிய கொடியைஉயர்த்தியதா…
-
- 0 replies
- 542 views
-
-
வேலியோடு சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட மனிதன், அதுகுத்துகிறது, குடைகிறது என்று புலம்பினானாம். அதுபோலவே, தங்களுக்கு என்று தற்போது உள்ள பிரச்சினைகள் போதாது என்பதுபோல், இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடம் இல்லாத ஒரு 'கொடிப் பிரச்சினையை' கொடுத்து, அதன் மூலம் அரசியல் செய்ய சில கூட்டமைப்பு தலைவர்களும் சில பல புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் முயல்வது அவர்களுக்கு தங்களது மக்களின் அன்றாட பிரச்சினைகள் மீது அக்கறை இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அனைத்து தரப்பினராலும் விலைவாசி உயர்வு ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து பல ஆண்டுகள் ஆகிட்டன. ஆதியில் இனப் போரைக் காரணம் காட்டி அரசாங்கமும், அடுத்தடுத்த இராணுவ வெற்றிகளால் மக்களில் பெரும்பான்…
-
- 0 replies
- 528 views
-
-
கிழக்கில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தேடிப் பிடிக்கும் நடவடிக்கையை இலங்கைப் படையினர் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற படையினரின் இந்தத் தேடுதல் நடவடிக்கை தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களை படையினர் திரட்டிவருவதுடன், அவர்களை புகைப்படமும் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடக்கம் படையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகரை, கதிரவெளி படை முகாமிலிருந்து செல்…
-
- 0 replies
- 373 views
-
-
அரசாங்கம் உத்தேசித்துள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தையும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்ட வரைபையும் சமர்ப்பிக்கவே öவளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அமெரிக்கா செல்கின்றார். நாட்டு மக்களிடம் காண்பிக்க விரும்பாத செயற்திட்ட வரைபை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதன் மர்மம்தான் என்ன? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. போலியான தேசப்பற்றை முன்னிறுத்தி நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவில் தள்ளிவிடவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதற்கு எதிராகவும் நாட்டின் பாதுகாப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் இணைந்து இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அக…
-
- 0 replies
- 412 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் வரும் மாதங்களில் தென்அமெரிக்க நாடு ஒன்றுக்கான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பின்னணியிலேயே ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவர் தாமரா குணநாயகத்தை பிறேசிலுக்கான தூதுவராகப் பொறுப்பேற்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தென்அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக தமக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தாமரா குணநாயகம் அண்மையில் எச்சரித்திருந்தார். இந்தநிலையில் தென்அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த சிறிலங்கா அதிபரும், வெளிவிவகார அமைச்சரும் அங்கு செல்வதற்குத் திட்டமிட்ட…
-
- 0 replies
- 441 views
-
-
யாழப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்கு கொண்டு செல்வதற்கும் அத்தோடு அங்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை ஆரம்பிப்பதற்கும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகத்திற்காக இந்திய அரசாங்கம் ரூபா 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கவுள்ளதோடு இலங்கை அரசாங்கம் இதற்காக ரூபா 394 மில்லியனை செலவு செய்யவுள்ளது. 400 ஏக்கர் பரப்பிலேயே இப்பீடங்கள் அமைக்கப்படவுள்ளன. நேற்று முன்தினம் வியாழக்கிழமை கிளிநொச்சி அறிவியல் நகர் பிரதேசத்திற்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயகா இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தாவுடன் விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். இவ்விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித…
-
- 0 replies
- 393 views
-
-
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக கட்டாரில் இயங்கும் இலங்கை இஸ்லாமிய நிலையம், மற்றைய இலங்கை சங்கங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மஜ்லிஸ் கட்டார் அமைப்பு பொது விழிப்புணர்வு விரிவுரை ஒன்றை ஃபனார் ((FANAR) ) இஸ்லாமிய கலாசார நிலைய கேட்போர்கூடத்தில் நடத்தியது. இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் தம்புள்ளை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலைத் தகர்ப்பதற்கு பெரும்பான்மை சிங்கள பௌத்தர்கள் எடுத்த முயற்சியை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் பொறுமை கடைப்பிடிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் சமய ஒற்றுமை நிலைநிறுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் செய்திகளைப் பரப்புவதே இந்த நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாக இருந்தது. இலங்கை முஸ்ல…
-
- 0 replies
- 409 views
-
-
அமெரிக்கா செல்லவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வரும் 18ம் நாள் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவொன்று வொசிங்டன் செல்லவுள்ளது. இந்தக் குழுவில் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோருடன் சிறிலங்கா அதிபரின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தக் குழுவில் நாம…
-
- 0 replies
- 340 views
-
-
தென்னாபிரிக்கா அரசில் பொதுநிர்வாக அமைச்சராக பணியாற்றியவரும், ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் மூத்த உறுப்பினரும், தமிழருமான றோய் படையாச்சி என்று அழைக்கப்படும் இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிநிகழ்வில் உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் இரங்கலுரை நிகழ்த்தவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதியோப்பியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த போது அமைச்சர் றோய் படையாச்சி மாரடைப்பினால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை டர்பன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா பங்கேற்று உரையாற்றவுள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அமைச்சர் றோய் படை…
-
- 0 replies
- 452 views
-
-
பிரித்தானியாவில் தளர்வாக உள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான போர்க்குற்றவாளிகள் அங்கு புகலிடம் தேடியுள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி சன்‘ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்ற மோசமான கொடூரங்களை இழைத்துள்ள போதும் இவர்களை தமது சொந்த நாட்டுக்கு அனுப்ப முடியாதுள்ளது. ஐரோப்பாவின் மனிதஉரிமைச் சட்டங்களே அதற்குக் காரணம். இவ்வாறு லண்டனில் புகலிடம் தேடியுள்ள போர்க்குற்றவாளிகளில் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், ருவாண்டா, சியாராலியோன், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்களாவர். கடந்த 18 மாதங்களில் இவ்வாறான 207 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும…
-
- 0 replies
- 329 views
-
-
கைது, தடுத்து வைத்தல் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் மக்களை அணி திரட்டி சாத்வீகப் போராட்டங்களை நடத்தும் நிலை ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "அண்மையில் திருகோணமலையில் நியாயமற்ற முறையில் எதுவித காரணமுமின்றி பல இளைஞர்களும், யுவதிகளும், முதியவர்களும் கைது செய்யப்பட்டு பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை குறிப்பிட விரும்புகின்றேன். அத்தகைய கைதுகள் பிற இடங்களிலும் சிறிய அளவில் நடைபெற்று வருகின்றன. துரதிஷ்டமாக எம் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் அவலத்தை ஏற்படுத்திய சம…
-
- 0 replies
- 421 views
-
-
தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். அவர்களை ஒரு போதும் கைவிடவோ, அன்றேல் துரோகம் செய்யவோ மாட்டோம். எம்மால் இயன்றளவு முயற்சித்து தேசிய இனப்பிரச்சினைக்கு நல்லதோர் தீர்வை பெற்றுக் கொடுப்போம். சர்வதேசம் மற்றும் இந்தியா எம்முடேனேயே இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாம் சிங்கள மக்களையும் மதிக்கின்றோம். அவர்களின் ஆதரவு எமக்குத் தேவை. நல்லெண்ணம் அவசியம். சிங்கள மக்களை ஒரு சிலர் தவறாக வழிநடத்துகின்றனர். அதாவது அவர்கள் மத்தியில் துவேஷத்தை பரப்ப முனைகின்றார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 377 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்கத்துடன் வட்டமேசை மாநாடு ஒன்று இன்று அவசரமாககக் கூட்டப்படுவதாக புதுடில்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய இந்திய பாராளுமன்றக் குழுவின் சார்பில் அதற்குத் தலைமைதாங்கிய இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இந்த மாநாட்டை அவசரமாகக் கூட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள், அணுகுமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியாவின் அனைத்து…
-
- 0 replies
- 437 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்ததை விடவும் இப்போது அதிக வலியை உணர்கின்றோம். முள்வேலி முகாம் தந்த அவலங்களை விடவும் இப்போது அதிக அச்சத்திற்குள்ளாகியுள்ளோம். இறுதி யுத்தம் இத்தனை அவலங்களைத் தந்தபோதும் எங்களது மக்கள் புலம்பெயர்ந்து வாழும் எங்கள்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். தமிழீழப் போர்க் களம் சிதைக்கப்பட்டு விட்டாலும், புலம்பெயர் தமிழ் உறவுகள் சிங்கள இனவாதத்திடமிருந்து தங்களை மீட்பார்கள் என்ற எதிர்காலக் கனவுடன் காத்திருந்தார்கள். ஆனால், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாகி விஸ்வரூபம் எடுத்துள்ள தலைமைப் போட்டி, தாயகக் கனவுகளைப் பின் தள்ளிவிட்டன. சிங்கள தேசத்தால் சிறை பிடிக்கப்பட்டு, உயிர்ப் பாதுகாப்பற்ற வாழ்வையே விதியாகக் கொண்ட தமிழ் மக்களது உளவுரணைப்…
-
- 0 replies
- 333 views
-
-
ஈழக் கூத்தில் எல்லோரும் கலைஞரே..! ஈழம் எனும் போது காதில் தேன் வந்து பாய்வதாக இருந்த காலம் மாறி, வெறுப்பும் விரக்தியும் விரவிக்கிடக்கும் போக்கு நிறைந்திருக்கின்ற காலம் இதுவாகக் காணப்படுகிறது. சமூக வலைத்தள உரையாடல்களிலும் இவை பற்றித் தொடர்கின்றன. பகிரப்படும் பல கருத்துக்கள் விசுவாசிப்புக்களாகச் சுருங்கி விடுகின்ற போதும், ஒரு சில கருத்துக்கள் அர்த்தம் நிறைந்தவையாகவும், அடிமுடி தேட வைப்பவையாகவும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான தேடல் ஒன்றில் சந்தித்த சில கருத்துக்களுடனான தொகுப்பு இது... ஈழத்தில் பிறந்ததற்காக சின்ன செருக்கொன்று எப்போதுமே என்னோடு இருந்தது. “இறுதிக் கோரங்கள்- பிழையான அரசியல் வழிநடத்தல்கள்“ என்கிற அடையாளங்களுக்குள் சிக்கி…
-
- 0 replies
- 382 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கலாநிதி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜூலை முதலாம் திகதியிலிருந்து இவர் ஐ.நாவுக்கான தூதுவராக பணியாற்றுவார். இதுவரை ஜெனிவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றிய தமரா குணநாயகம், கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை தான் பொறுப்பேற்கப்போவதில்லை என அவர் முன்னர் தெரிவித்திருந்தார். ஐ.நா. நிரந்தர பிரநிதியாக 2011 ஆம் ஆண்டில் பதவியேற்பதற்கு முன்னர், 2009 முதல் 2011 ஆம் ஆண்டுவரை கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயகம் பணியாற்றியமை குறிப…
-
- 7 replies
- 995 views
-
-
இந்திய நாடாளுமன்றக் குழுவின் பயணத்தைத் தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் தோல்வியடைந்துள்ள சிறிலங்கா அரசாங்கம், அடுத்தகட்டமாக இந்தியாவின் மாநில முதல்வர்களை வசப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவின் மாநில முதல்வர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். http://www.puthinapp...?20120508106151
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பின் தென்பகுதியிலுள்ள களுத்துறையில் அமைந்திருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு மசூதியையும் இடித்துத் தகர்ப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பௌத்த பிக்ககளின் தலைமையில் சிங்களவர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை களுத்துறையில் நடத்தியுள்ளார்கள். இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் களுத்துறைப் பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும், பெருமளவுக்கு அமைதியாகவே இடம் பெற்றதாக தெரியவருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். கடந்த மாதத்திலும் இலங்கையின் மத்திய மாகாணமான தம்புளையிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றை …
-
- 5 replies
- 1.3k views
-
-
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணியினை 611 வது படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவத்தினரின் பெயருக்கு எழுதி வழங்கிய வவுனியா பிரதேச செயலர் சிவபாதசுந்தரம், காணி உத்தியோகத்தர் வசந்தன் ஆகியோருக்கு படைப்பிரிவின் அதிகாரி மனம் நிறைந்த நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்திருக்கின்றார்.ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ள ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லக்காணியில் உள்ள மாவீர்களின் நினைவுத்தூபிகள், கல்லறைகள் என்பன இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு இடிபாடுகள் காணியின் எல்லைப்பகுதிகளின் அரண்களாக குவிக்கப்பட்டுள்ளன. துயிலும் இல்லக்காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்துவருவதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்…
-
- 0 replies
- 916 views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – கவிஞர் தாமரை அவர்கள் வழங்கிய செவ்வி.
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் இனம் அழிக்கப்பட்ட பிறகு கருணாநிதி, தானே ஈழம் தொடர்பாக திரைக்கதை வசனம் எழுதி அந்தப் படத்திற்கு என பெயரும் வைத்து கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக உணமையான தமிழ் உணர்வாளர்கள் கொதித்துப்போய் கருணாநிதியை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த காரணங்களும் உண்டு. ஆட்சி பறிபோன பிறகு என்ன செய்ய முடியும். இதையே அதிமுக எம்.எல்.ஏவான பழ.கருப்பையா கூறிகையில் குதிரை ஓடிவிட்ட பிறலு லாயத்தை பூட்டுவதற்கு பூட்டைத் தேடுகிறார் கருணாநிதி எனச் சொல்கிறார். இதுதொடர்பாக மேலும் அதிமுக எம்.எல்.ஏ பழ.கருப்பையா பேசுகையில்: ஈழத் தமிழ் இனமே அழிந்து சுடுகாடான பிறகு, உடல், பொருள், ஆவி என 90 வயதில் துள்ளிக் குதிக்கிறார் கருணாநிதி. இப்போது அவரிடம…
-
- 4 replies
- 1.6k views
-