Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாட்டு ஆசை காட்டி யாழில் கோடிக்கணக்கில் மோசடி எம்.றொசாந்த் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கடந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு அனுப…

  2. முள்ளிவாய்க்கால் - காஸா ஒப்பிட்ட "யுனிசெப் பேச்சாளர்" (ஆதவன்) 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் முள்ளிவாய்க்காலில் தான் பெற்ற அனுபவங்களை காஸாவுடன் ஒப்பிட்டுள்ளார் 'யுனி செப்' பேச்சாளரான ஜேம்ஸ் எல்டர். "எம்மிடம் சுயாதீன ஆய்வுக் குழுக்கள் இருந்தன. எனினும் இலங்கை விடயத்தில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மோதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறுவர்கள் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் நான் நேரில் பார்த்தேன். அப்போது நான் புலிகளுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதாக ஐ.நா. வுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி கருத்துத் தெரிவித்திருந்தார்." என்று எல்டர் கூறியுள்ளார். எல்டரை இலங்கை அரசாங்கம் வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்…

    • 4 replies
    • 728 views
  3. உண்மை, நல்லிணக்க ஆ.குழுவில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை! காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவிப்பு (ஆதவன்) காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வு என்ற பெயரில் முன் வைக்கப்படவுள்ள உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக் குழுவில் நம்பிக்கை இல்லை. இந்த ஆணைக்குழு சர்வதேசத்தை ஏமாற்றும் கபட நாடகம் என்று காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:- பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் பேசாது அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி, உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் செயற்றிட்டத்தை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். உண்மைக்கும் …

  4. பிரமிட் அமைப்புகளால் யாழிலும் பலர் ஏமாற்றம்! (ஆதவன்) தடைசெய்யப்பட்ட பிரமிட் அமைப்புகள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. அவை கண்டறியப்பட்டு சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சட்டமா அதிபரிடம் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. தடைசெய்யப்பட்ட பிரமிட் நிறுவனங்களுள் குளோபல் லைப் ஸ்டைல் லங்கா லிமிட்டெட் முதலிடம் வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் வலையில் சிக்கி யாழ்ப்பாணத்திலும் பலர் ஏமாந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (ஐ) https://newuthayan.com/article/பிரமிட்_அமைப்புகளால்_யாழிலும்_பலர்_ஏமாற்றம்!

  5. வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுப்பு வெளிநாடுகளிலுள்ள ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்ைககளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் அனுமதி மறுஅறிவித்தல்வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதுதொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவித்தல் விடுப்பதற்கு நடவடிக்ைக எடுக்கப்பட்டதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் இவ்வாறான ஆய்வு கப்பல்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை துறைமுகங்களில் அவற்றை நங்கூரமிட முடியுமென்றும் அதனை எவ்விதத்திலும் நிறுத்தமுடியாதெனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டி…

  6. மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை! ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம்.! adminDecember 23, 2023 மாகாண சபைகளுக்கு காவற்துறை அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து நடத்திய செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்கள…

  7. தமிழ் மக்களை, ஜனாதிபதி தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறார்! adminDecember 23, 2023 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டு செல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே தமக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையெனவும் கூறியுள்ளார். ஜனாதிபதியை பாராட்டவேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியு…

    • 3 replies
    • 265 views
  8. இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் ரஷ்யா தலையிடாது! “இலங்கையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் பிரச்சனை தொடர்பாக ரஷ்யா தலையிடவோ, விமர்சிக்கவோ போவதில்லை” என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஸகார்யன் (Levan Dzhagaryan) தெரிவித்துள்ளார். ரஷ்ய தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில் இலங்கையால் தனது வெளியுறவுக் கொள்கையை சுதந்திரமாகச் செய்படுத்த முடியும். இலங்கையில் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை நான் தவிக்கின்றேன். முக்கியமாக இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் விமர்சிக்கவோ அல்லது தலையிட…

    • 2 replies
    • 533 views
  9. தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன். பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்களில் வெற்றிகொள்ளவும் தமிழ் மக்களை அதற்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளம் எ…

    • 7 replies
    • 804 views
  10. மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை இம்மாதம் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையில் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுமாறு மாற்றுத்திறனாளிகளுக்கான ஐக்கிய முன்னணி மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென அங்கவீனமுற்றோர்களுக்கான பாராளுமன்ற மன்றத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/285692

  11. ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன. அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக…

  12. யாழில் போதைப்பொருட்களுடன் கைதாகும் பெண்கள் – பெருமளவான பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் மீட்பு! adminDecember 22, 2023 யாழ்ப்பாணம், துன்னாலை பகுதியில் கடந்த மூன்று தினங்களில் போதைப்பொருட்களுடன் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து பெருமளவான பணம், கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருட்கள், என்பவை மீட்கப்பட்டுள்ளன. நெல்லியடி காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துன்னாலை பகுதியை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரை கைது செய்து, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில். அவரிடம் இருந்து 620 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 16 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 இலட்சத்து 78 ஆயிரத்து 9…

  13. சிறுவர்களின் திறமையையும் அவர்களின் திறன்களையும் வளர்த்தெடுக்கும் விதமாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று அமைக்கப்படுவதற்குரிய நடவடிக்கைகள் அரச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை உள்ளடக்கி இந்தச் செயற்றிட்டத்தைப் பலப்படுத்துவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கின்றது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்களும், சிறுவர்கள் மீதான துர்நடத்தைகளும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், இவ்வாறானதொரு திட்டம் காலத்தின் தேவையாகவும் மிக அவசியமானதாகவும் தவிர்க்கப்பட, முடியாததாகவும் அமைகின்றது. ஆனால், இந்தக் கட்டமைப்பின் ஊடாக எவ்வாறான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்ற தெளிதலை - திட்டத்தை …

  14. ஊசி மூலமான போதைப்பொருள் நுகர்வின் காரணமாக, யாழ்ப்பாண இளைஞர்களிடத்தில் குறிப்பாக 17 தொடக்கம் 25 வயதுடையவர்களில்" இருதய வால்வில் கிருமித்தொற்று ஏற்படுகிறது என்றும், இதனால் இருதயம் செயலிழப்பது அதிகரித்துள்ளது என்றும் மருத்துவத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஊசிமூலம் போதைப்பொருளை நுகர்வதால் எய்ட்ஸ் தொற்று இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கின்றது அல்லது அதிகரிக்கும் அத்தனை ஏதுநிகைளும் ஏற்பட்டிருக்கின்றது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டிருந்தன. இந்தத் தகவல் வெளிப்பட்டு, ஓரிரு நாள்களில் அதே சாரப்பட்டதான இருதயநோய் தொடர்பான எச்சரிக்கையும் வெளிவந்திருக்கிறது. இவ்விருதகவல்களையும் வைத்து அச்சமடைந்தாலும் 'பதற்றமட…

  15. மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானி ஞானேந்திரன் லெக்சன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானியாக மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் அவர்கள் தனது முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழை பெற்றுள்ளார். இவர் தனது ஆரம்பக் கல்வியை மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் கற்றதோடு உயர்தரத்தில் தொழில்நுட்பக் கல்வியை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளார். கடந்த வருடம் கொழும்பு ரத்மலான விமான பயிற்சி சேவையில் இணைந்து முதல் கட்ட பயிற்சியை நிறைவு செய்து சான்றுதலை பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது இளம் விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuth…

  16. ஜனாதிபதியிடம் இருந்து நல்லிணக்கம் தொடர்பில் சாதகமான பதில்! நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றன . இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீர…

    • 1 reply
    • 706 views
  17. துறவியாகும் டயானா கமகே? இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவியின் கதாபாதிரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை- இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள குறித்த திரைப்படமானது பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கதாபாத்திரத்துக்காக டயானா கமகே தனது தலையை மொட்டையடிக்கத் தீர்மானித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363886

    • 11 replies
    • 1.5k views
  18. 22 DEC, 2023 | 10:12 AM தமிழ் கட்சிகள் ஜனாதிபதி சந்திப்புக்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பு அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியுடன் தமிழ் கட்சிகள் மூன்றுக்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்டுள்ளன சந்திப்புகள் பல விடயங்களுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. குறிப்பாக நேற்றைய சந்திப்பில் வலி வடக்கு காணிகள் விடுவிப்பது மாகாண சபை நேரடி நிதிகளைப் பெறும் தொகையை அதிகரிப்பத…

  19. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டம், இச்சட்டமூல முன்மொழிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும், உயர்நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரபல துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கியதாக இயங்கிவரும் உலகளாவிய வலையமைப்பு செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் நா…

  20. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நபரொருவர் 300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை (21) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்ப…

  21. இமாலயபிரகடனத்தை கையளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தமை உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் இந்த சந்திப்பின் மூலம் ஏற்பட்டுள்ள வலிகள் குறித்து கவலையடைவதாக தெரிவித்துள்ளது. பன்முகத்தை தன்மை குறித்த ஈடுபாடுகளிற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்களை கொண்ட பொதுஜனபெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்தோம் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. செல்வாக்கு செலுத்தக்கூடிய எவரும் இமாலய பிரகடனம் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளிற்கான அதன் ஆணை குறித்து அறிந்துகொள்ளச்செய்வதே இதன் நோக்கம்.எனவும் கனடா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் படங்களும் இந்த சந்திப்பும் கனடா தமிழர…

  22. Published By: VISHNU 21 DEC, 2023 | 08:18 PM ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சிக்கான மூலோபாயமானது இறந்த உடலுக்கு ஓட்சிசன் கொடுத்தல் போன்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கடுமையாக சாடியுள்ளார். அவர் வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அடிப்படை மூலோபாய விடயங்கள் சிலவற்றை கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடந்த உள் நாட்டு இறைவரி தொடர்பான கலந்துரையாடலில் முன்வைத்து உரையாற்றினார். ஜனாதிபதி கூறிய மூலோபாயம் ஒன்று வெளிநாடுகளுடன் வர்த்தக…

  23. 21 DEC, 2023 | 08:28 PM (நா.தனுஜா) இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அரசியல் தீர்வற்ற வெறும் 'நல்லிணக்கக் கொடியைக்' காண்பித்து தம்மைத் தொடர்ந்து ஏமாற்றவேண்டாம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த அவர், அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய…

  24. 21 DEC, 2023 | 08:53 PM யாழ்தேவி கடுகதி புகையிரதம் தடம்புரண்டதால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸை நோக்கி புறப்பட்ட யாழ்தேவி கடுகதி புகையிரதம் இன்று வியாழக்கிழமை (21) மாலை 07மணியளவில் மஹவ புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு மலையகத்துக்காக நாளை முதல் விசேட புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/172246

  25. Published By: VISHNU 21 DEC, 2023 | 03:43 PM இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடும், புதிய தலைவர் தெரிவும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது "கடந்த 18 ஆம் திகதி எங்களுடைய கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் சபைக் கூட்டமும் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகத் தெரிவும் இடம்பெற இருக்கின்றன. எந்தக் காரணம் கொண்டும் கட்சிக்கான புதிய தலைவர் தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.