Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன்…? – சென்னையில் கருத்தரங்கம் நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற தலைப்பில் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி இதற்கு தலைமையேற்கிறார். தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார். http://meenakam.com/

  2. புத்த மடாலயத்தை தாக்கியதாக கைதான 7 தமிழுணர்வாளர்கள் நாளை விடுதலை சென்னை எழும்பூர் மகாபோதி புத்த மடாலயத்தை தாக்கியதாக கைது செய்யப்பட்ட 7 தமிழுணர்வாளர்களுக்கு இன்று நிபந்தனை பிணை கிடைத்துள்ளது. இவர்கள் நாளை சென்னை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளார்கள். தமிழக மீனவர்களை சிறீலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதைக்கண்டித்து கடந்த 24 ஆம் திகதி இரவு மகாபோதி சங்கம் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக 4 நாள் முன்னர் பெரியார் திராவிடர் கழகத்தைச்சேர்ந்த 6 பேரும், நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாளை காலை பிணையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகின்றனர். http://meenakam.co…

  3. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் விடுதலை செய்யக் கோரி ஈழ தமிழர்கள் நடத்திய உணவு புறக்கணிப்பு போராட்டம் வெற்றி . செங்கல்பட்டு சிறப்பு ஏதிலிகள் முகாமில் கடந்த ஏழு நாட்களாக நடை பெற்ற தொடர் உண்ணா புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவு 11.மணிக்கு முடிவுக்கு வந்தது . ஐவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,சிறப்பு முகாம் உயர் அதிகாரி கோவிந்தராசன் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.அதன் அடிப்படையில் முகாமில் இருக்கும் 27 பேரில் ஐவரை ஏற்கெனவே விடுதலை செய்ய சொல்லி நீதி மன்றத்தில் இருந்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே அவர்கள் ஒரு வாரத்திற்குள் விடுவிக்கப்படுவார்கள் என உறுதி யளிக்கப்பட்டது . உண்ணா புறக்கணிப்பு போர…

  4. http://www.yarl.com/files/110201_jaffna_report.mp3

    • 0 replies
    • 765 views
  5. பெரும்பான்மை இனத்தவரிடம் நாட்டை ஏன் தாரை வார்த்தீர்கள்? பிரி.தூதரக அதிகாரிகளிடம் கேள்வி (பட இணைப்பு) செவ்வாய், 01 பெப்ரவரி 2011 21:31 .இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் நாட்டை பெரும்பான்மை இனத்தவர்களிடம் ஒப்படைத்துச் சென்றமையே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது- எனவே பிரச்சினைக்கான தீர்வை பிரித்தானியர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழு கோரி உள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருக்கும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோதே இக்குழு மேற்கண்டவாறு விண்ணப்பித்தது. இச்சந்திப்பு யாழ். ஆயரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவினர் இங்கு முக…

  6. சுவிட்ஸ்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் துளிர் விடுவது ஒடுக்கப்படுகிறது (பகுதி 1)- டீ.பி.எஸ்.ஜெயராஜ் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கு முகமாக சுவிஸ் மத்திய காவல்துறையினர் கடந்த ஜனவரி 11ந் திகதி பத்து உயர் புலி செயற்பாட்டாளர்களைக் கைது செய்தமை மிகப் பெரிய முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஹெல்விற்றியா அல்லது சுவிஸ்ட்லாந்து 40-42,000 ஸ்ரீலங்காத் தமிழர்களின் வாழ்விடமாகும். ஆயினும் இத்தொகையானது, கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், அல்லது அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்களைக்காட்டிலும் குறைவாக இருந்த போதிலும்,சுவிஸில் உள்ள தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட முயற்சிக்கு வழங்கிய மிகப் பரந்த பங்களிப்பு மற்றைய ம…

  7. புனர்வாழ்வு முகாமில் நடப்பது என்ன ? பாகம் – 03 அங்கு சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்ட பெண்களும் பெண் போராளிகளும் பட்ட இன்னல்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. தமிழ் மரபுக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ற வகையில் தம்மைப் பாதுகாத்து வந்த பெண்களினது கலச்சார வாழ்க்கைக்கு எந்த வித பங்கமும் வராது அதைத் தட்டிக் கொடுத்து அதில் தீவிரம் காட்டி வந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பக்குவமாகவும், பண்பாகவும் வழக்கப்பட்ட எம் இனப் பெண்கள் எந்த வித வசதிகள் இன்றி பல இன்னல்களைச் சந்தித்தார்கள். 300 சதுர கிலோ மீற்றரிக்கும் குறைவான அப்பிரதேசத்தில் 2000 – 3000 ஆண்களுடன் 1000 திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு தடுத்;துவைக்கப்பட்டு 10 – 15 மலசலக் கூடங்களில் சிலது …

  8. சினிமா பாடலாசிரியை, அக்கா தாமரை அவர்களுக்கு ஒரு ஈழ தமிழச்சியின் ஆதங்க மடல், அன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு வணக்கம்! நான் தமிழீழம், கிளிநொச்சி,யை பிறப்பிடமாகக்கொண்டவள், உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க", என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது, அந்தப்பாடலின் கவி நயமும் இனிமையும், தவிர வேறெதையும் நான் அறிய முயற்சிக்கவுமில்லை, ஆனால் அப்பாடலில் அப்படி ஒருவித்தியாசம் இருப்பதாக மனது உணர்ந்து கொண்டது, சிலகாலங்களுக்குப்பின் அந்தப்பாடலை எழுதியது ஒரு பெண்கவிஞர் என்றும், பெயர் தாமரை என்றும் படித்து அறிந்தேன், மனம் மகிழ்ச்சியை தோற்றியது, அந்த மகிழ்ச்சி ஏன் தோன்றியதென்பதுகூட எனக்குத் தெரியவில்லை. நவீன கலை இலக்கியத்துறையி…

  9. இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக போர் நடந்த போது ஈழத்தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவை நாம் தமிழர் கட்சி சார்பில் நாகையில் நடந்தது. பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவரும், திரைப்பட இயக்குனருமான சீமான் பேசுகையில், இலங்கையில் நடந்த ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் 1.75 லட்சம் தமிழ்ச்சொந்தங்களை சிங்களவர்கள் கொன்றனர். 538 தமிழக மீனவர்களை தாக்கி படுகொலை செய்துள்ளனர். போராடியே வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தமிழ் இனம் தள்ளப்பட்டுள்ளது. அடக்குமுறைகளால் இங்குள்ள ஆட்சியாளர்கள் நம்மை அடக்கிவிட முயற்சிக்கின்றனர். அடக்குமுறை அதன் வாசலை …

  10. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். திரைப்பட பாடலாசியர் தாமரை இது குறித்து கடுமையாக விமர்சித்து சீமானுக்கு கடிதம் எழுதியிருந்தார். தாமரையின் இந்த கடிதம் குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் பிரச்சனைக்காக நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் சீமான் அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’தாமரை தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் ஜெயலலிதாவை தாங்கள் ஆதரிப்பது பற்றியும், கருணாநிதியை எதிர்ப்பது பற்றியும் விமர்சித்திருக்கிறாரே? என்ற கேள்விக்கு, …

  11. புலம்பெயர் தமிழ் அமைப்புடன் பேசுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராகவே உள்ளது: ஆனால் நோர்வேயை நடுநிலையாளராக வைக்க விரும்பவில்லையாம்! [Tuesday, 2011-02-01 07:24:28] நோர்வேக்கு சிறப்பு நிலைக் கடமைகள் எதையும் வழங்குவதற்கு விரும்பவில்லை என்று இலங்கை அரச வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அரசியல், இராணுவத் தலைவர்களைத் தண்டிப்பதை இலக்காக வைத்து போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணைகள் நடத்தப்படவேண் டும் என்று வலியுறுத்தி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகத்துக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நோர்வேயை நடுநிலையாளராக நியமிக்க சிறிலங்கா விரும்பவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும் மு…

  12. ரீ.ஆர்.ஓ அமைப்பையும் அதன் கண்காணிப்பில் இயங்கிவந்த சிறுவர் இல்லத்தையும் கே.பி தனது பொறுப்பில்... செவ்வாய்க்கிழமை, 01 பிப்ரவரி 2011 01:26 kpவிடுதலைப்புலிகளின் ரீ.ஆர்.ஓ அமைப்பையும் அதன் கண்காணிப்பில் இயங்கிவந்த சிறுவர் இல்லத்தையும் தனது பொறுப்பில் எடுத்து நடத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ள கே.பி இதன்முலம் கல்வி மற்றும் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்துவதே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். ஆடம்பரங்கள் மற்றும் பாதுகாப்பு எற்பாடுகள் எதுவுமில்லாமல் திடீரென வந்திறங்கிய கே.பி யாழ்.பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் நடத்திய கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளாராம். முன்னர் ரீ.ஆர்.ஓ அமைப்பின் கண்காணிப்பின் கீழ் முத்தையன் கட்டு பிரதேசத்தில் இயங்கி வந்த புனிதபூமி என்ற சிறுவர் இல்…

  13. செவ்வாய்க்கிழமை, 1, பிப்ரவரி 2011 (17:33 IST) விடுதலை புலியா? டெல்லி போலீசில் சிக்கிய வாலிபரிடம் விசாரணை டெல்லி விமான நிலையத்தில் விமான நிலைய இமிக்கிரேஷன் பிரிவு போலீசார் பயணிகளின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த வாலிபர் பிரான்சு நாட்டில் இருந்து வருவதாக கூறியதால் அவர், விடுதலைப்புலியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அந்த வாலிபர் தனது பெயர் சிங்காரவடிவேல் என்றும் பிரான்சிற்கு வேலை விஷயமாக சென்றதாகவும் கூறினார். சொந்த ஊர் திருச்சி என்றும் கூறினார். உடனே டெல்லி போலீசார் சிங்கார வடிவேல் கூறியது உண்மைதா…

  14. நல்ல சமயம் இது! இதனை நழுவ விடக்கூடாது! தமிழீழம் விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு தீக்குளித்து தன்னைத்தானே அழித்துக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உணர்வோடு கொண்டாடப்பட்டுள்ளது. முத்துக்குமார் மட்டுமல்ல மேலும் 16 இனவுணர்வாளர்கள் தங்கள் இனிய இளைய உயிர்களை தீக்குத் தீனியாக்கினார்கள். ஆனால் முத்துக்குமார் மற்றும் அவரோடு தங்களைத் தாங்களே அழித்துக் கொண்ட உணர்வாளர்களால் தமிழகத்தில் ஒரு சிறு கலகத்தைத்தானும் உருவாக்க முடியவில்லை. ஒரு சிறு நெருப்பையேனும் ஏற்றிட முடியவில்லை. என்ன காரணம்? தியூனிஷா நாட்டில் ஒரு இளைஞன். பெயர் மொகமது பூசிசி (Mohammed Bouazizi) அகவை 23. வேலை இல்லா பல…

    • 18 replies
    • 1.5k views
  15. செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 1, 2011 லங்கா இ-நியூஸ் இணையத்தள அலுவலகம் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டமை உட்பட ஊடகங்கள் மீதான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரியும் ஊடகவியலாளர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA…

  16. செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 1, 2011 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவோருக்கு அமெரிக்க நிதி உதவி திட்டத்தின் கீழ் மடிக்கணினி ஒன்றை வழங்கப்படவுள்ளது. என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில அறிவை விஸ்தரிக்கும் நோக்குடன் இணையம் மூலமான ஆங்கில கற்கை நெறியினை முன்னெடுக்கும் நோக்குடனேயே மாணவர்கள் மடிக்கணினி வழங்கப்படவுள்ளதா அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E…

  17. செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 1, 2011 யாழ்ப்பாணம் பருத்தித்துறை கற்கோவளம் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். மனித உரிமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவரான 26 வயதுடைய ஏ.பிமல் என்பவருடைய தந்தை அழகேஸ் வரதராஜன், யாழ். மனித உரிமை அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதே வேளை யாழில் குற்ற செயல்கள் குரைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட சிங்கள படைத்தளபதி ஹித்துரு சிங்க கூறி இருப்பது நினைவிருக்கலாம். http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%…

  18. யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்னர் வீதிகளில் கூடும் இளைஞர்கள் கைது செய்யப்படுவர் என, சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக பண்டார ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். சந்திகள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் தேவையற்ற விதத்தில் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், ஆட்டோ தரிப்பு நிலையங்களில் சாரதிகளைத் தவிர வேறு எவரும் நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். சுன்னாகம் பகுதியில் அதிகளவான திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக முறையிடப்பட்டுள்ளதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக பொதுமக்களு…

  19. யாழ் மணியந்தோட்டம் உதயபுரத்தில் விரைவில் மக்கள் மீள்குடியேற்றம் * Tuesday, February 1, 2011, 4:11 யாழ் மணியந்தோட்டம் உதயபுரத்தில் மக்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நல்லூர் பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தப் பகுதிக்கு மக்கள் சென்று தமது வாழ்விடங்களைப் பார்வையிட்டு, துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மணியந்தோட்ட உதயபுரத்தில் முன்னர் 200 குடும்பங்கள் குடியிருந்தனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் தற்போது படிப்படியாக அகற்றப்பட்டு மக்களின் பாவனைக்காக விடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. tamilthai.com

  20. விடுதலைப் புலிகள் தொடர்பான சஞ்சிகைகளை வைத்திருந்த ஜோடி குருணாகல் பிரதேசத்தில் கைது! [ பிரசுரித்த திகதி : 2011-02-01 05:23:04 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சஞ்சிகைகளை வைத்திருந்த இளம் ஜோடி குருணாகல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான சஞ்சிகைகள் மற்றும் பிரபாகரனின் புகைப்படங்கள் குறித்த ஜோடியிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கொபிகேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரும், மாவத்த கமவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் விஸ்வமடு பிரதேச இராணுவ முகாமில் கடமையாற்றி வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பஸ்ஸில் வைத்து இந்த சஞ்சிகைகளை பார்வையிட்ட போத…

  21. பிரித்தானிய உயர் குழு இன்று யாழ்.வருகை [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-01 06:52:04| யாழ்ப்பாணம்] பிரித்தானிய உயர் அதிகாரிகள் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றனர்.யாழ்ப்பாண கள நிலவரங்கள், அபிவிருத் திப் பணிகளை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் பிரித்தானி யக் குழு அரச அதிகாரிகள், சமூக பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடும். sangamam.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.