ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
கோவை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு கோவை காந்திபுரத்திலுள்ள பெரியார் படிப்பகத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் மாவீரர் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலதிக படங்களுக்கு மீனகம்.கொம்
-
- 0 replies
- 877 views
-
-
ஒவ்வொரு தமிழனின் இதயத்துடிப்பும் தமிழீழம் என்றே துடிக்கும் - மலேசிய துணைமுதல்வர் ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 03:06 இன்றைய நாளான மாவீரர் நாளுக்காக மலேசிய பினாங்கு துணைமுதல்வர் பேராசியர் டாக்டர் பி.இராமசாமி உரையாற்றியிருந்தார். அவர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டதாவது, இன்று (27.11.2010) மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போ…
-
- 0 replies
- 745 views
-
-
இனங்களிடையே மீண்டும் கலகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 05:25 2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக ரூபா 214 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதுடன் இவ்வருடம்(2010) பாதுகாப்புச் செலவினத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 13 பில்லியன் அதிகரிக்கப்பட்டிருப்பதை நாம் காண்கின்றோம்.ஆனால் இவ்வருட (2010 ஆம் ஆண்டிற்கான) நிதி ஒதுக்கீட்டில் ரூபா 201 பில்லியனும் 2009 ஆம் ஆண்டுக்கான ரூபா 177 பில்லியனும் மட்டுமே பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு 75 பில்லியனும் சுகாதார அமைச்சிற்கு 62 பில்லியனும் கல்வி அமைச்சிற்கு 31 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாத…
-
- 0 replies
- 719 views
-
-
தடுத்து வைத்துள்ள விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை விசாரணை ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 03:03 தற்போது இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களை விரிவாக விசாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, ஓமந்தை மற்றும் பூஸா ஆகிய இராணுவ முகாம்கள் இரண்டிலும் ஆயிரத்து 500 க்கும் அதிகமான சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தேவையான சந்தேக நபர்கள் வெளிநாடுகளில் இருப்பதனால் சர்வதேச ரீதியில் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலி சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட …
-
- 0 replies
- 587 views
-
-
யாழ்ப்பாணத்தை விசேடப்படுத்தாவிடின் இலங்கை-இந்திய உறவு பூரணமடையாது வட மாகாண மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள்,நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்காக தன்னால் முடிந்த அளவிற்கு இந்தியா பங்களிப்பை வழங்க முயற்சித்து வருகிறது.இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அர்த்த புஷ்டியான தீர்வுப் பொதியே இறுதியான அரசியல் இணக்கப்பாட்டுக்கு தேவைப்படும் சூழலை உருவாக்கும் என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார். குடாநாட்டுக்கு நேற்று விஜயத்தை மேற்கொண்ட எஸ்.எம்.கிருஷ்ணா யாழ்நகரில் இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்ந…
-
- 1 reply
- 680 views
-
-
யாரை நோக? http://www.bbc.co.uk/news/world-south-asia-11846369 Why Sri Lankan Tamils won't remember war dead this year By Swaminathan Natarajan இப்படி ஒரு செய்தி BBC இல் இருக்கு, நானும் வாசித்து பார்த்து இந்த தலையங்கத்திர்ற்கும், எங்கட நடராஜன் இன் செய்திர்ற்கும் ஏதேனும் தொடர்பிருக்கா என்று பார்த்தால், அம்சா சொன்ன ஒரு ஒரு கருத்தது தான் இவர் போட்ட தலையகத்திர்ற்கு பதில் சொல்லுகிறது.."அவர்கள் விடுதலை வீரர்கள் இல்லை, அவர்கள் பயங்கரவாதிகள் ......" எனது கவலையெல்லாம், இந்த கூலிக்கு மாரடிக்கும் இந்த நடராஜன், மற்றும் இன்னோரென்ன ஆக்களை கூட (காசு கொடுத்து) வெல்ல முடியாமல் இருக்கிறோம் என்பது தான். ஒவ்வொரு செய்தி நிறுவனமும் சில சில கட்டுபாடுகளை/ நோக்கங்களை வைத்தி…
-
- 4 replies
- 905 views
-
-
வழமை போன்றே இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. அம்பாறையின் திருக்கோவில் பிரதேசத்தில் மாவீரர் தினத்துக்கான அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் இன்று அதிகாலை படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாக திகைப்புக்குள்ளாகிய படைத்தரப்பு தற்போது அப்பிரதேசத்தில் கடும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிய முடிகின்றது. புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்ற விவாதங்களுக்கப்பால் இம்முறை உலகெங்கும் மாவீரர் தின நிகழ்வுகள் களைகட்டியுள்ளன. புலிகளின் பலமான செயற்பாடு இருந்த காலத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையொத்ததாக இம்முறையும் அனுஷ்டானங்கள் பரவலாக நடைபெறுகின்றன. …
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையில், உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்திய மத்திய அரசு வழங்கியுள்ளள நிதியினை இலங்கை அரசு சரிவர பயன்படுத்தி வருகிறதா? என்று கனிமொழி எம்.பி நேற்று ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் தமிழ் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதான இலங்கை அரசின் பணிகள் மத்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? என்றும் இலங்கை தமிழர்களுக்கான சம உரிமை வழங்க வகை செய்யும் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா? என்றும் அவர் மேலும் கேட்டுள்ளார். அவருடைய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள மத்திய வெளிவிவகார இணையமைச்சர் பிரனீத் கவுர், இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு…
-
- 0 replies
- 578 views
-
-
தமிழகத்தில் அரசபாளையத்தில் (இராசபாளையம்) மாவீரர் நாள் மிகவும் சிறப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு அகவணக்கம் செலுத்தி மாவீரர் நினைவு நிகழ்வினை கடைபிடித்தனர். மேலதிகமான 35 படங்களை காண: http://meenakam.com/2010/11/28/14833.html
-
- 0 replies
- 756 views
-
-
ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்; ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள் இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!! சரணம் – 1 ஒரு தலைமுறைய தொலைத்துவிட்டு நாட்டை தேடுறோம் - நாடோடி போல ஓடி ஒண்டி கிடக்கிறோம், தமிழன்; ஆண்ட கதை மண்ணில் போச்சி வென்ற ரத்தம் சுண்டி போச்சி - பிரிந்து பிரிந்து இருப்பதால் வாழ்க்கை கூட தோல்வியாச்சி…….. ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்; ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள் இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!! சரணம் – 2 வாழ்க்கைக்கொரு நீதி …
-
- 0 replies
- 805 views
-
-
கிழக்கில் முத்துமாலை மேற்கில் வைரமாலை சீனாவின் வியூகம் – இதயச்சந்திரன் இந்தியாவைச் சுற்றி, முத்துமாலை (STRING OF PEARLS) ஒன்றினை சீனா கோர்த் துக் கொண்டிருப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார் போன்ற, இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில், துறைமுக அபிவிருத்தி என்கிற போர்வையில் சீனா கால் பதிக்கிறது என்பதிலிருந்து இந்த முத்து மாலை விவகாரம் எழுகிறது. சீனாவின் முதலீட்டில் உருவாகும் இந்த துறைமுகங்கள், நாளை சீனாவின் கடற்படைத் தளமாக மாறி விடலாம் என்று இந்தியாவும், அமெரிக்காவும் அச்சமடைவதில் நியாயம் உண்டு. இதைவிட, வேறு ஒரு தந்திர நகர்வில் , சீனா ஈடுபடுவதை, பலர் அவதானிக்க மறந்து விட்டார்கள். இராணுவச் சுற்றிவளைப்பினை ‘முத்து மாலை கோர…
-
- 0 replies
- 1.7k views
-
-
தேசியத்தலைவரின் வழிகாட்டலில் உலகத்தமிழர்களே அணிதிரளுங்கள் – பேராசிரியர் பி.இராமசாமி, பினாங்கு துணை முதல்வர் எனது அன்புக்குரிய உலகத்தமிழ் மக்களே… இன்று (27.11.2010) மாவீரர் நாள். தமிழீழத் திருநாட்டின் மீட்பிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களை ஒளிவிளக்கேற்றிக் கௌரவிக்கும் தேசிய நாள். ‘நான்’, ‘எனது’ என்று பாராமல் தமிழினத்தின் எழுச்சிக்காகவும், தமிழ் மண்ணின் விடிவிற்காகவும் தன்னலமற்று அறப்போர் புரிந்து வீரவரலாறாகிய உத்தமர்களை வாழ்த்தி வணங்கும் திருநாள். தமிழீழத் தாய்நாட்டைக் கட்டியமைக்கும் நோக்கோடு தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள். ஈழத்தமிழினத்தை அடிமைப்படுத்தும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை முறியடித்த…
-
- 0 replies
- 729 views
-
-
இராணுவக் குடியிருப்புகளை அமைப்பதற்காக முறிகண்டியில் அரசாங்கம் 1000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருப்பதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார். இஸ்ரேல் பாணியில் இந்நடவடிக்கை உள்ளதாக குறிப்பிட்ட மங்கள சமரவீர எம்.பி., இது முந்தைய ஈழ யுத்தத்தைவிட அபாயகரமானதாக மற்றொரு ஈழ யுத்தத்தத்திற்கு வழிவகுக்கக்கூடும் எனவும் கூறினார். அத்துடன் அரசாங்கம் வரவுசெலவுத்திட்டத்தில்இடம்பெயர்ந்த மக்களுக்காக ஒரு சததத்தைதானும் அரசாங்கம் ஒதுக்கவில்லை எனவும் மங்கள சமரவீர எம்.பி. கூறினார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/11952--1000-.html
-
- 3 replies
- 545 views
-
-
இன்று மாவீரர் நாள்... உருத்திரகுமாரன் அறிக்கை நவ.17,2010 உன்னத மாவீரர் நினைவோடு உறுதியுடன் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் கூறியுள்ளார். மாவீரர் நாளையொட்டி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாவீரர் நாள்! தமது வீரத்தாலும் ஈகத்தாலும் இலட்சிய உறுதியாலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி நம்தேசத்தின் மீது விதையாய்ப் பரவிநிற்கும் நமது மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மதிப்பளித்து வணங்கி நிற்கும் நாள்! ஈழத் தமிழர் தேசத்தை, இத் தேசத்தின் விடுதலை வேட்கையை, இத் தேச மக்களின் வீரமிகு விடுதலைப்போராட்டத்தை உலகப்பந்தின் அனைத்து மூலைகளிலும் நிலைநிறுத்திச் சென்ற நம் வீரமறவ…
-
- 7 replies
- 1.1k views
-
-
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிவ் அலி ஸர்தாரி இலங்கை வந்தடைந்தார். அவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார். நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை மாலை இலங்கை வந்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிவ் அலி ஸர்தாரியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஆஸிவ் அலி ஸர்தாரிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். http://www.tamil.dailymirror.lk/index.php/component/content/article/87---main/11972-2010-11-27-13-56-55.html
-
- 2 replies
- 495 views
-
-
தென்தமிழீழமான மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் மாலை வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின பாடல்கள் ஒலித்ததால் மட்டு.நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாலை மணி 6.15 அளவில் "கார்த்திகை 27" பாடலும் "சுட்டும் விரலால் சுட்டிக்காட்டு" எனும் பாடலும் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒலித்தாக மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சரபவணபாவான் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். வழமையாக மட்டு.மாநகரசபை ஊழியர் ஒருவரே மாலை 6.30 மணி அளவில் வந்து வானொலி செய்திகளை ஒலிபரப்புவதாகவும் ஆனால் இன்று புலிகளின் பாடல் திடீரென ஒலித்ததை இட்டு தாம் அதிர்ச்சியடைந்தாகவும் அவர் கூறினார். மேலும், வழமையாக…
-
- 1 reply
- 960 views
-
-
இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை எந்தவொரு ஆக்கிரமிப்புச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. இந்த வரலாற்று நியதிக்கமைய, உலகத் தமிழர்களின் முகவரியை வீரத்தால் பதித்துவிட்டுச் சென்ற அந்த வீரமறவர்களை நினைவுகூறும் இந்நாளில், விடுதலையென்ற எமது சத்திய இலட்சியத்துக்காகப் போராட உறுதி கொள்வோமாக.இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மாவீரர் நாள் அறிகையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு மாவீரர்நாள் அறிக்கை - 2010 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/10 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2010. அன்பி…
-
- 1 reply
- 932 views
-
-
இன்று காலை யாழில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைத்தார். இதன் பின்னர் பொதுமக்களுக்கு உழவு இயந்திரத்தை கிருஸ்ணா வழங்கினார். இதன் பின்னர் உரையாற்றுகையில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு உறவுகள் உள்ளது. கலாச்சாரத்தினால், பண்பாட்டினால் மொழியால் இந்தியா யாழ்ப்பானத்துடன் தொடர்பை கொண்டுள்ளது. மணிமேகலையில் கூட அந்த தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்துள்ளேன் . இன்றைய வருகை எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியினை தருகின்றது. மிக விரைவில் தலைமன்னார் கப்பல் சேவையும் திருச்சி பலாலி விமான சேவையும் ஆரம்பிக்கப்படும். இது ஓர் புது விடையம் அல்ல பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்த போக்குவரத்து அமைந்திருந்தது என குறிப்பி…
-
- 11 replies
- 935 views
-
-
மதுரை நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களால் நடத்த பட்ட மாவீரர் நாள் நிகழ்வு மதுரையில் நேற்று நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களால் நடத்த பட்ட மாவீரர் நாள் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது , மேலதிக படங்களுக்கு: http://meenakam.com/2010/11/27/14707.html
-
- 2 replies
- 1k views
-
-
கந்தையா சின்னம்மா இரண்டு மாவீர்களின் தாய். வயது 69. யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்த இவர், யாழ்ப்பாண இடப்பெயர்வை அடுத்து, இப்பொழுது வன்னியிலேயே இருக்கின்றார். இவருடைய மூத்த மகன் லெப். அருள் 1993 இல் மணலாற்றில் வீரச்சாவடைந்தார். வித்துடல் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது. அடுத்த மகள் கப்ரன் இசைமலர் ஜெயசிக்குறு சமரின்போது 1998 இல் வீரச்சாவடைந்து முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டார். கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் 1996 இல் சிறிலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டபோது மிகவும் வருந்தியவர் சின்னம்மா. இறந்தோரின் நினைவிடத்தை அழித்ததற்காக சிங்களப் பண்பாடு தலைகுனியும் என்று யாரோ ஒருவர் ஒரு கூட்டத்தில் சொன்னதை இப்போதும் நினைவு கூரு…
-
- 2 replies
- 652 views
-
-
எழுச்சித்தமிழன் முத்துக்குமாரின் தந்தையுடன் மாவீரர் நாளில் ஒரு சந்திப்பு தன்னுயிரை ஈகம் செய்து தமிழகத்தில் தமிழீழ ஆதரவு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழர் முத்துக்குமாரின் தந்தை குமரேசனுடன் அவரது இல்லத்தில் மீனகம் தளத்தின் ஒரு சந்திப்பு… http://meenakam.com/2010/11/27/14766.html
-
- 0 replies
- 591 views
-
-
காங்கிரஸை புதைப்போம் – இயக்குநர் புகழேந்தி தமிழினத்துக்கு விரோதமான காங்கிரஸை புதைப்போம் என்று மாவீரர் நாள் 2010 க்கான மீனகம் செவ்வியில் “காற்றுக்கென்ன வேலி” திரைப்பட இயக்குநர் புகழேந்தி தெரிவித்துள்ளார். http://meenakam.com/2010/11/27/14738.html
-
- 0 replies
- 743 views
-
-
மாவீரர்கள் காணவேண்டிய தமிழீழத்தை நாம் காணவேண்டும் - பேராசிரியர் அறிவரசன் . சிங்கள பேரினவாதத்தின் பிடியில் இருந்து தமிழீழ தாயகத்தை விடுவிக்க மாவீரர் நாளில் உறுதி எடுப்போம் எத்தனை துணையுடன் சிங்கள படை வந்தாலும் , அத்தனை படைகளை முறியடிக்க எம் தலைவர் துனைநிக்கிறார் . http://meenakam.com/2010/11/27/14740.html
-
- 0 replies
- 585 views
-
-
மாவீரர்களை மனதில் நினைப்போம் தமிழீழத்தை மீட்க உறுதியெடுப்போம்… தமிழீழ விடுதலைப் போரில் மாவீரர் தியாகங்கள் முதன்மை பெறுகின்றன. லெப்.சங்கருடன் துவங்கிய மாவீரர் தியாகங்கள் முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. மூன்று தசாப்த காலங்கள் தமிழீழ விடுதலைப் போரை உலகம் உற்று நோக்குவதற்கு இந்த மாவீரரின் தியாகங்கள் தான் வழிவகுத்தன என்பதில் மாற்று கருத்திற்கு இடமேயில்லை. தரை, கடல், மற்றும் ஆகாயம் என நம் வீரமறவர்கள் செய்த சாதனைகள் கொஞ்சமல்ல. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல் எம்மண்ணில் எம்மக்களின் ஆதரவுடன் விடுதலை தீயில் தம்மை ஆகுதியாக்கிய வீர மறவர்களின் கனவுகளை நனவாக்கவேண்டிய கடமை எம்மண்ணில் உதிர்த்த ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உண்டு. இன்று தமிழீழ விடுதலை போர் மௌனித…
-
- 0 replies
- 557 views
-
-
உலகத் தமிழர்களே ஒன்றிணைவோம் தமிழ் தேசியம் வென்றெடுப்போம் – திருமுருகன் மே 17 இயக்கம் நேர்காணல்: மீனகம் எல்லாளன் http://meenakam.com/2010/11/27/14728.html
-
- 0 replies
- 538 views
-