ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை! இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorization – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாளை (15) முதல் இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், அதன்படி இந்த அனுமதியைப் பெற வேண்டும். இதற்கிடையில், அமெரிக்கா இலங்கைக்கான அதன் பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பயண ஆலோசனையை இரண்டாம் நிலை (Level 2) கீழ் புதுப்பித்துள்ளது மற்றும் பல ஆபத்து குறிகாட்டிகளைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் …
-
-
- 5 replies
- 417 views
-
-
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு! மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது. நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் …
-
-
- 9 replies
- 480 views
- 1 follower
-
-
யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி! பலரிடம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்க…
-
-
- 7 replies
- 494 views
-
-
Published By: Vishnu 15 Oct, 2025 | 09:08 PM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேல…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டு…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
15 Oct, 2025 | 04:09 PM சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார். பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார். இலங்கை பார்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
இலங்கையிலிருந்து வந்த ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கர அசெம்பிளியில் நரி ஒன்று நுழைந்ததால் ஏற்படவிருந்த ஒரு பெரிய சம்பவம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என டாக்கா ட்ரிப்யூன் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றது. 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், அதிகாலை 2 மணிக்குப் பிறகு சிறிது நேரத்தில் தரையிறங்கியது. விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, நரி திடீரென ஓடுபாதையில் ஓடி தரையிறங்கும் போது தரையிறங்கும் கியரில் சிக்கிக் கொண்டது. விமானியின் விரைவான எதிர்வினை மற்றும் தொழில்நுட்பத் திறன் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதை உறுதி செய்தது. தரையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக …
-
- 0 replies
- 164 views
-
-
15 Oct, 2025 | 04:28 PM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்புக்காக முறையற்ற வகையில் இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மனுஷ நாணயக்கார, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியிருந்தார். இதன்போது மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மனுஷ நாணயக்கார நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்! | Virakesari.lk
-
- 0 replies
- 87 views
-
-
கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது | Virakesari.lk
-
- 0 replies
- 84 views
-
-
கடலில் மீனவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் சிவப்பு நண்டுகள் 15 Oct, 2025 | 11:59 AM மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில் காணப்படும் சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின் தாக்கம் காரணமாக குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார் கிராமங்களை கொண்ட பகுதியாகும். இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக ' சிவப்பு நண்டு' என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில் பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளன. குறித்த சிவப்பு நண்டை …
-
- 0 replies
- 100 views
-
-
15 Oct, 2025 | 05:45 PM இலங்கையில் அதிகரித்துவரும் புற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தொடுதல், கண்டறிதல் மற்றும் பரிசோதித்தல் தொணிப்பொருளுக்கு அமைய மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் முகமாக நீச்சல் சைக்கிள் ஓட்டம் மற்றும் மரதன் என முக்கோண வடிவிலான விளையாட்டு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. நிகழ்வு ஆரம்பிக்கும் முகமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு பங்குபற்றுனர்கள் அனை…
-
- 0 replies
- 87 views
-
-
15 Oct, 2025 | 01:25 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது. இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
கோப்பாய் காவல் நிலையத்தை உடனடியாக அகற்ற உத்தரவு… October 15, 2025 யாழ்ப்பாணம், கோப்பாய் காவல் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் குறித்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இப் காவல்நிலையம், கடந்த 30 வருடங்களாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ள நிலையில் அக் காணியின் உரிமையாளர்கள், காணியை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் வந்த நிலையில் , அதற்கு பலன் கிட்டியிருக்கவில்லை. இந் நிலையில், 2019ஆம் ஆண்டு, இக் காணிகளுக்கு உரிமையான 9 உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். இதன் பிரகாரம் வழக்கு கடந்த 6 ஆ…
-
- 1 reply
- 183 views
-
-
யாழ்ப்பாணம் 8 மணி நேரம் முன் யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி! சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்று யாழ் மாணவி, ஒருவர் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச அரங்கில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வழங்கும் நிகழ்வில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்வி ஜனாதிபதி சிறப்புப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார். இதன் போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கத்தை , ஜனாதிபதி அனுரவிடம் இருந்து மாணவி பெற்றுள்ளார். பதக்கம் வென்ற யாழ் மாணவி கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. யாழிற்கு பெருமை சேர்த்த மாண…
-
- 4 replies
- 302 views
-
-
குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு October 15, 2025 கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தார் அதன் தொடர்ச்சியாக இன்று பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்துத் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது. ரணில் விக்ரமசிங்ஹ அதிகாரத்திலிருந்த போது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட அப்பகுதியிலுள்ள சுமார் 341 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள். இருப்பினும் ரணில் விக்கிரமசிங்ஹ தலையீடு செய்த காரண…
-
- 0 replies
- 118 views
-
-
யாழ். மத்திய பேருந்து நிலையக் கடைகள் மூலம் இ.போ.ச ரூ.9.45 இலட்சம் வருமானம்! யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி நடைபெற்றது. அக் கலந்துரையிடலில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்க…
-
- 0 replies
- 227 views
-
-
பாதாள குழு முக்கியஸ்தர்களின் 3902 கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமை! கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்கள் தொடர்பாக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட ஏராளமான சொத்துக்களைக் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2021 மற்றும் 2024 க்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துக்களின் நிதி மதிப்பு 3902 கோடி ரூபா என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அந்த சொத்துக்களைக் கைப்பற்ற இலங்க…
-
- 0 replies
- 119 views
-
-
வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம்! adminOctober 15, 2025 வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10.25) சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். வல்வை முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருவும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய தண்டபாணிக தேசிகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது , வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக எம். கே சிவாஜிலிங்கத்தின் பெயர் காணப்பட்டது தேர்தல் முடிவுகளின் படி, பட்டியல் உறுப்பினராக பெண் உறுப்பினர்களையே தெரிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்தமையால் தமிழ் தேசிய பேரவை சார்பில் பட்டியல் உறுப்பினராக…
-
- 0 replies
- 196 views
-
-
Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனவும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்ட வைத்திய அதிக…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
Published By: Vishnu 12 Oct, 2025 | 02:00 AM சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பீஜிங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டம், "ஒரு பகிரப்பட்ட எதிர்காலம் – பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயல்முறை" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை சீன அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு (UN Women) இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. பிரதமர் ஹரிணி அமரசூரிய, இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றுவதோடு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங…
-
- 3 replies
- 186 views
- 1 follower
-
-
4 Oct, 2025 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எனக்கு சொந்தமானது என சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும். அந்த கட்டிடம் குறித்து நேற்று திங்கட்கிழமை (13) தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் குறிப்பிடும் போது அதில் எனது பெயரை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அந்த கட்டிடம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித…
-
- 0 replies
- 173 views
-
-
14 Oct, 2025 | 05:28 PM மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்டச் செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் ஒரு போதும் அகற்றப்பட மாட்டாது என மன்னார் நகர சபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார். மன்னார் நகர சபையில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை. இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக…
-
- 0 replies
- 99 views
-
-
Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 05:05 PM இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) …
-
-
- 2 replies
- 219 views
- 1 follower
-
-
பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் 14 Oct, 2025 | 12:11 PM பல நாடுகளை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர். அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றதோடு, நாளைய தினம் புதன…
-
- 0 replies
- 162 views
-
-
திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம் தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுக் காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பிக்குமார்கள், சிங்கள் மக்கள். பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக மாற்றுப் பாதை ஊடாக விகாரையை நோக்கிச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பின்னர் அதேபாதையால் திரும்ப…
-
- 0 replies
- 109 views
-