Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழ நாதம் ஞாயிற்று கிழமை வடமராட்சி கிழக்கில் போர் முடிந்த பின்னரும் அங்கு மக்களை மீழ் குடியேற இராணுவம் இதுவரை அனுமதிக்கவில்லை. ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் யுத்த நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அனுமதி வழங்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை பலாலி படைத் தலைமையகத்தில் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினரிடம் இதற்கான உறுதிமொழியை வழங்கினார் தளபதி ஹத்துருசிங்க. முதற்கட்டமாக அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளை திங்கட்கிழமை அங்கு மீளக்குடியமர்த்தப்படவுள்ளன. ஏற்கனவே அம்பன் பிரதேசத்தில் ஒரு சிறிய பகு…

    • 0 replies
    • 609 views
  2. சீமான் கைதைக்கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை சிறையில் அடைத்ததைக்கண்டித்து கனடாவிலுள்ள இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலதிக படங்களுக்கு http://meenakam.com/?p=6176

  3. ஆளும் கட்சியிலேயே பிரச்சினைகள் நிலவுகின்றன – கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும், ஆளும் கட்சியிலேயே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சகல கட்சிகளிலும் முரண்பாடுகள் ஏற்படும் எனவும், எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது இந்த முரண்பாடுகள் அதிகமாக வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை விடவும் நாட்டு மக்கள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைமைத்துவ பிரச்சினைகளை விடவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முதன்மையானது என அவர் சுட்டிக்கா…

  4. வடகிழக்கில் மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன – சிறீலங்கா இராணுவம் வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன்படி, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த 1813 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. கண்ணி வெடி அகற்றும் பணிகளை ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். இதற்கு மேல…

  5. மீண்டும் ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளையும் யானைச் சின்னத்தில் போட்டியிட வைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தேர்தல் முறைமை மாற்றங்களை கருத்திற் கொண்டு எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றியீட்டும்…

  6. சிறீலங்கா அரசு சார்ந்த அமைச்சர்களும் அரசிற்கு எதிர்ப்பு சிறீலங்கா அரசாங்கத்தின் எதேட்சையதிகார அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையில் அரசாங்கத்துக்குள் உள்ள ஒரு பிரிவினரும் அதற்கு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளதாக அரச வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையின் தவணையை அதிகரிக்கும் நடவடிக்கையை தாம் எதிர்பதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற இடது சாரி அமைச்சரான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதிமுறை நீக்கப்பட்டு நாட்டின் தலைவர் நாடாளுமன்றத்திற்கு பொறுப்பு சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்காரவும் அரசாங்க…

  7. ஆரியவதியின் 24 ஆணிகள் அறையப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – சிறீலங்கா அரசாங்கம் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றிருந்த இலங்கை பெண்ணான ஆரியவதி மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மிகப்பெரிய மனித உரிமை மீறல் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மனித உரிமை மீறல் அடிப்படையிலான சர்வதேச ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஆத்தாவுட செனவிரட்ன தெரிவித்துள்ளார். இந்த இலங்கைப் பணிப்பெண்ணின்; உடலில் சவூதி தொழில் தருனர் ஒருவரால் 24 ஆணிகள் அறையப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதனை அடுத்து இலங்கை திரும்பிய ஆரியவதிக்கு சத்திர சிகிச்சையின் பின்னர், 18 ஆணிகள் எடுக்கப்பட்டன. எனினும் ஏனைய ஆணிகள் எடக்கமுடியாத நிலை இருப்பதாக வைத்…

  8. இந்திய இராணுவம் மீண்டும் இலங்கையில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் இறுதிப்போரின் போது சிறீலங்கா படையினருக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய படையினரில் சிலர் சிறீலங்காவின் யுத்தம் தொடர்பாக கற்றுக்கொள்வதற்காக வரவுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டவிதம் குறித்து கற்றுக்கொள்வதற்காகவே இந்திய இராணுவக் குழு எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக இராணுவ தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார் பங்களாதேஸின் ராணுவக்குழு ஒன்றும் இந்த பாடத்தை கற்றுக்கொள்வதற்காக சிறீலங்காவுக்கு வந்திருந்ததாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் விடுதலைப்புலிகளுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு அழைத்து…

  9. அடுத்த வாரத்தில் ஐ.தே.க செயற்குழுவைக்கூட்டி, முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக ஆராயும் ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் அடுத்த வாரத்தில் கட்சியின் செயற்குழுவைக்கூட்டி, இது தொடர்பாக ஆராயுமாறு அவர் பணிப்புரை விடுத்தள்ளார். ஏற்கனவே பொது எதி;ர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்கு ரவூப் ஹக்கீம் தமது முழு ஆதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையிலேயே மனோ கணேசன் உட்பட்டோர் இணைந்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டதாகவும் திடீரென ரவூப் ஹக்கீம், தமது கட்சியை இவ்வாறான ஒரு நிலைக்கு இட்டு சென்றமை …

  10. தமிழ்தேசியக் கூட்டமைப்பை இந்திய வெளி விவகார செயலாளர் நிருபமா ராவ் சந்திக்கவுள்ளார் சிறீலங்காவுக்கு நாளையதினம் இந்திய வெளி விவகார செயலாளர் நிருபமா ராவ வருகை தரவுள்ளார். நாளை மறுதினம் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்வு முகாம்களுக்கு அவர் செல்லவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரப்ப்புகள் தெரிவித்துள்ளன. இதன்போது அவர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் இந்திய உதவிகள் வன்னியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆராய்வார் என உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து புதன் கிழமையன்று நிருபமா ராவ் திருகோணமலைக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திக்கும் அவர்…

  11. உள்ளுராட்சி சபைத்தேர்தல், செனட்சபை மற்றும் ஜனாதிபதியின் தவணையை நீடித்தல் போன்ற விடயங்கள் ஆராயப்படுகின்றது சிறீலங்காவில் அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் எதிர்வரும் 7 ம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் அவசர சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தினேஸ்குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான தீர்மானம் அடுத்த திங்கட்கிழமை அல்லது செவ்வாய்கிழமையன்று வெளியிடப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களிலும் உள்ளுராட்சி சபைத்தேர்தல், செனட்சபை மற்றும் சிறீலங்கா ஜனாதிபதியின் தவணையை நீடித்தல் போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்புடன் அரசியல…

  12. லண்டனில் “உறங்கும் உண்மைகள்” போர் அழிவு கண்காட்சி. “உறங்கும் உண்மைகள்” போர் அழிவு கண்காட்சி ஒன்று லண்டனில் நடைபெறவுள்ளது. லண்டன் மிச்சம் பாக்கில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் கடந்த அறுபது ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழர்கள் மேல் சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்டுவந்த தமிழின அழிப்பு, அடக்கு முறைகள், போர் அவலங்கள் போன்ற பல சம்பவங்கள் உண்மையின் சாட்சிகளாய் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு சிறீலங்கா அரசு தமிழர் தாயகத்தில் நடாத்திய கொடூர யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், பாடசாலை சிறுவர்கள், மற்றும் அழிக்கப்பட்ட வைத்திய சாலைகள், தமிழர் சொத்துக்கள், என்பனவும், போரின் பின் தொடரும் படுகொலைகளையும் சித்தரிக்கும் இந்த கண்காட்சியில் அதிகளவான மக்கள் கலந்…

  13. ரணிலின் பலவீனமே ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு காரணம் – அனுரகுமார ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனமே ஆளும் கட்சியின் ஜனநாயக விரோத செயல்களுக்கு காரணம் என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பு திருத்தங்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசு பெற ரணில் விக்ரமசிங்கவே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் அரசாங்கத்துடன் உரிய முறையில் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த நாற்பத்து மூன்று லட்சம் வாக்காளர்களை ரணிலும் அவரது சகாக்களும் ஏமாற்றியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார் தலைமைத்துவ…

  14. சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகாரச் செயலளர் நிருபமா ராவ் எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடக்குக்கு வருகைதரவுள்ளார். அன்று காலை ஹெலி மூலம் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதி களுக்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். துரையப்பா விளையாட்டரங்கில் ஏற் பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கு பற்றும் அவர், பின்னர் பொது நூலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலில் பங்கேற்பார். குடாநாட்டில் மீள்குடியமர்வு, ஏற்க னவே மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வா தார விடயங்கள் போன்றன தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார். இந்த நிகழ்வில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் வடக்க…

    • 1 reply
    • 399 views
  15. இலங்கைத் தொழிலளார் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினருமான ஜெகதீஸ்வரனின் வீடு கொள்ளையிடப்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 15 லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ம் திகதி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த வீட்டை மூடிவிட்டு கொழும்பு சென்றதாகவும், மீண்டும் வீட்டிற்கு வந்த போது கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் இந்த சம்பவத்…

    • 1 reply
    • 464 views
  16. சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 வடக்கில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிக்கும் பொறுப்பை இந்திய நிறுவனம் ஒன்றே ஏற்றுள்ளதாக அறியவந்தது. இந்த வீடமைப்புக் குறித்து ஆராய அந்த நிறுவனத்தின் மூன்று பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் வந்திருந்தனர். பல்வேறு இடங்களுக்குச் சென்ற அவர்கள் முதற்கட்டமாக வீடுகள் அமைக்கப்படவிருக்கும் பகுதிகளைப் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்து கொண்டனர். தமது நிறுவனம் அமைக்கவிருக்கும் வீடுகளின் அமைவிடங்கள், தமது நிறுவனப் பிரதிநிதிகளின் தங்குமிடங்கள் ஆகியன தொடர்பாகவும் அவர்கள் விரிவாக ஆராய்ந்தனர். ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட் டங்களில் ஆயிரம் வீடுகளும் இரண்டா…

    • 1 reply
    • 305 views
  17. விசா நடைமுறையில் அடுத்த மாதம் முதல் மாற்றம்! சனி, 28 ஆகஸ்ட் 2010 04:32 இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கிய பிற்பாடு விசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி பொதுவாக இருக்காது. ஆயினும் சிங்கப்பூர், மலேசிய பிரஜைகளுக்கு மாத்திரம் விதி விலக்கு. இதன்படி இம்மாதம் 30 ஆம் திகதியுடன் ஒன் எரைவல் விசாக்கள் ரத்து செய்யப்படடுகின்றன. இப்புதியத் திட்டத்தின் அடிப்படையில் 70 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு சென்று விசா விண்ணப்பிக்க கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அ…

    • 1 reply
    • 402 views
  18. . சீனாவின் வடபகுதி வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 ஏவுகணை விரைவில் பரிசோதனை செய்யப்படும் என்று ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார்.இந்தியாவின் முக்கிய பகுதியான இமயமலையை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அதை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதை தடுக்கும் பணியில் காஷ்மீர் ராணுவ தளபதி ஜஸ்வால் ஈடுபட்டார். அவரது திறமையான செயல்பாடு, போர் வியூகம் காரணமாக சீனாவால் இந்திய பகுதிகளை ஆக்ரமிக்க முடிய வில்லை. இந்நிலையில் ஜஸ்வால் சீனாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதற்கு சீன அரசு ஜஸ்வாலை எங்கள் நாட்டுக்கு வர அனுமதிக்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. மேலும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் இலங்கையில் விட…

    • 3 replies
    • 1k views
  19. தவற விட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க தமிழர்களுக்கு கனேடிய செஞ்சிலுவைச் சங்கக் குழு மூலம் வாய்ப்பு! வெள்ளி, 27 ஆகஸ்ட் 2010 14:30 . . கடந்த கால யுத்த நடவடிக்கைகளால் தவற விட்ட உறவுகளைக் கண்டு பிடிக்கின்றமைக்கு ஈழத் தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் கனேடிய கிளை மூலம் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. யுத்த நடவடிக்கைகள், யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெற்றிருக்கும் இடப்பெயர்வுகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான நெருக்கடிகள் போன்றவற்றால் அன்புக்குரிய உறவுகள் பிரிய நேர்ந்திருந்தால் அவர்களுக்கு இடையில் மீண்டும் இணைப்பை ஏற்படுத்தும் மனிதாபிமான இணையத் தள சேவை ஒன்றை இக்கனேடிய கிளை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. …

  20. சனிக்கிழமை , ஆகஸ்ட் 28, 2010 விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடையை நீக்க வேண்டுமா? ஆம் எனில், செப். 21ம் தேதி இந்திய உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்யும் நீதிபதியிடம் சொல்லுங்கள் இந்தியாவில் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலையைப் பற்றி இந்திய உள்துறை அலுவலகம் இன்று (27.08.2010) மாலை 3.30 மணியளவில், டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள பொது விசாரணையை, டெல்லி உயர்நீதி மன்றம் எண் : 2ல் நடைபெற்றது. விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட இன்று செல்லவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை. தமிழகத்திலிருந்து பி.ஜே.பியை சார்ந்த ஒருவர் …

    • 2 replies
    • 1.1k views
  21. கனடிய செஞ்சிலுவைச் சங்கம் குடும்பங்களை இணைப்பதற்கான தொடர்பு ஒன்றை இலங்கை குடிவரவாளர்களுக்கு உருவாக்கியுள்ளது குடும்ப அங்கத்தவர்கள் அதிகம் தேவைப்படும் நேரங்களில்தான் பிரிய வேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகின்றது. இதை மனதில் கொண்டு இன்று கனடிய செஞ்சிலுவைச் சங்கம் எம் விசன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப தொலைத்தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்ப உறவுகளை மீளிணைத்தல் திட்டமானது ஆயுதந்தாங்கிய போர்கள்இ இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இதர துயர்மிக்க சம்பவங்களினால் தங்களின் குடும்பங்களைப் பிரிய வேண்டி இருந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு கனடாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் தொ…

  22. யாழ்ப்பாணத்துக்கு வரலாமா? - வெளிநாட்டிலிருந்து குவியும் தொலைபேசி அழைப்புக்கள் [ வலம்புரி ] - [ Aug 28, 2010 04:00 GMT ] யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவுகளுக்குத் தொலைபேசி அழைப் புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெறு வதாகவும் தெரியவருகின்றது.விமான ரிக்கெட் பெறப்பட்டு விட்டது. பயண ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்து விட்டன. ஆனால் யாழ்ப்பாணத்தில் கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக அறிகிறோம். நாம் அங்கு வரலாமா? என்ற கேள்விக் கணைகளையே வெளிநாட்டிலிருந்து க…

  23. வெளிநாடுகளுக் செல்லும் இலங்கையர்கள் உயிரிழந்தால் உடலினை கொண்டுவர 4 லட்ச ரூபா செலவிடப்படுவதாக சேனக அபேகுணசேகர தெரிவித்துள்ளர் வெளிநாடுகளில் உயிரிழக்கும் 20க்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் மாதந்தோறும் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தேசிய காப்புறுதி நிதியத்தின் தலைவர் சேனக அபேகுணசேகர தெரிவித்துள்ளார். திடீர் விபத்துக்கள் மற்றும் இயற்கை காரணங்களினால் வெளிநாடுகளில் உயிரிழக்கும் 20க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது. வெளிநாடுகளில் பணியாற்றி உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக நான்கு லட்ச ரூபா செலவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். காப்புறுதித் தொகையில் சடலத்தை கொண்டு வருவதற்காக செலவிடப்படும் தொகையைத் தவிர்…

  24. 3 வது முறையாகவும் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாவார்' செப்டம்பர் மாதம் 8ம் திகதி அரசியல் அமைப்பு திருத்தம் குறித்த யோசனைத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாம் திகதி இந்த யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியினால் பதவி வகிக்கக் கூடிய தவணைக் காலத்தை நீடிக்கும் நோக்கில் இந்த அரசியல் அமைப்புத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாடாளுமன்றத்திற்கு பொறுப்புச் சொல்லக் கூடிய ஓர் ஆட்சி முறைமையை உருவாக்குவதாக ஜனாதிபதி முதலில் உறுதியளித்த போதிலும், தற்போது அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமக்கு வாக்களித்த மக்களை ரணில் விக்ரமசிங்க ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத…

  25. காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர். அவர்களை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் திரண்டு நின்று உணர்ச்சிப் பிழம்பாக வரவேற்பளித்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கொடி கட்டிய மகிழுந்தில் கூட்டத்தினருக்கு இடையே நுழைந்தனர். இதில் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.