Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தப்பி செல்ல முற்பட்ட இராணுவ கைதி சுட்டுக்கொலை சனிக்கிழமை , ஆகஸ்ட் 21, 2010 கண்டி போகம்பரை சிறைச்சாலையில் அடைத்து வைக்கபட்ட தப்பி ஓடிய இராணுவ சிப்பாய்கள் நேற்று சிறையினை உடைத்துக்கொண்டு ஓடமுயற்சித்தனர். ஓடவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சுவர் பாய்ந்து ஓட முயற்சித்த போது பொலிசாரினால் சுடப்பட்டனர். இதில் ஒரு இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார் என கூறப்படுகின்றது. ஈழ நாதம்

    • 0 replies
    • 607 views
  2. புலிகளால் கைப்பற்றப்பட்ட காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கும் படையினர்! சனி, 21 ஆகஸ்ட் 2010 06:55 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கிளிநொச்சி மாவட்ட மக்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காணிகளை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்காமல் படைத் தரப்பினர் சாக்குப்போக்குக் கூறி வருகின்றனர் இது சம்பந்தமாக காணிகளின் சொந்தக்காரர்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். ஆனால் புலிகளுக்கு காணிகளின் சொந்தக்காரர்கள் இக்காணிகளை கொழுத்த பணத்துக்கு விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளார்கள் என்று படைத் தரப்பினர் கூறுகின்றார்கள். இந்நிலையில் மாவட்ட அரச செயலகத்தில் இவ்விடயம் சம்பந்தமாக அடுத்த வாரம் உயர்மட்டக் கூட்டம் ஒன்று இடம்பெ…

    • 2 replies
    • 656 views
  3. அவுஸ்திரேலிய தேர்தலில் முக்கிய விடயமாகக் கருதப்படும் ஈழ அகதிகள் விவகாரம்: திகதி:21.08.2010 அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் குடிவரவு விடயமும், படகுகளில் தஞ்சம் கோரி வருகின்ற இலங்கை உட்பட்ட அகதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ள விடயமும் மிக முக்கிய விவகாரமாக அமைந்துள்ளதென்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வரும் அகதிகளே அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலமாக அதிகளவில் செல்கின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவ்வாறாக அகதிகளாகச் சந்தேகிக்கப்படுவோரை ஏற்றிவந்த 80 கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2008இல் நூறு பேருக்கும் குறைவாக இருந்த கடல் வழியாக வருகின்ற ஆட்கள…

  4. கிளிநொச்சியில் காடுகளை அழித்து மரமுந்திரிகைச் செய்கை: சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ! திகதி:21.08.2010 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் அடர்ந்த காட்டை அழித்து அங்கு மரமுந்திரிகையை பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரச வளங்கள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ணவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அரச அதிகாரிகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். வடபகுதிக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இவர் அங்கு இதுதொடர்பான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அதிகாரிளைப் பணித்துள்ளார். முன்னர் இந்த நிலப்பரப்பில் மரமுந்திரிக…

  5. கடவுளே காப்பாற்று-தேங்காய் உடைத்து வழிபட்டிருக்கிறார் அனோமா பொன்சேகா. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டுமென அவரது மனைவி அனோமா பொன்சேகா, முன்னேஸ்வரம், முத்துவலையில் உள்ள காளி அம்மன் கோவில் பூஜை ஒன்றில் கலந்துகொண்டார். மேற்படி பூஜையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் அத்துடன், அரசாங்கத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஊடகவியாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவும், அதில் கலந்து கொண்டிருந்தார். இலங்கையில் சட்டங்கள் மதிக்கப்படுவதில்லையென்பதை அனைவரும் அறிவார்கள் என , பூஜையின் பின்னர் அனோமா பொன்சேகா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமக்கு மாத்திரம் இன்றி, முழு நாட்டிலும் சட்டத…

  6. சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தியாகி முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.-நாம் தமிழர் கோரிக்கை இது தொடர்பாக நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறி இருப்பதாவது.பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழர்க்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கின்றது. தமிழர் தம் இனமானம் காக்கவும்,தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார்.எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்று கூறிக்கொண்டு பதவிகளைத்தேடிச் செல்பவர்கள்,நாட்டின் பாதுகாப்புக்காக …

  7. க.பொ .உயர்தரப்பாரிட்சை எழுதாது மேவின் முனைவர் ஆனார் முனைவர் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வா, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாரிட்சையில் சித்தியெய்தவில்லை என பௌத்த பிக்குவான தேவாலகம தம்மசேன தொரிவித்துள்ளார் மேவின் சில்வாவை மீண்டும் பிரதியமைச்சராக்க வேண்டுமென கோரி, நேற்று பௌத்த பிக்குகளின் சம்மேளனம் ஒன்று நடத்தப்பட்டது அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தொரிவித்துள்ளார் மேவின் சில்வா, முனைவர் ஆயினும் அவர் துட்டகைமுனுவைப் போன்றவர் என தேரர் தொரிவித்துள்ளார் மேவின் சில்வா எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது அதனை விட்டுவிட்டு விண்வெளிக்கு சென்ற முதல் ரஷ்யர் யூரிககாரின் வந்த ஹெலிகொப்டரை பார்க்க சென்றுவிட்டதாகவும் அ…

  8. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கடல்வழி போக்குவரத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் வழி போக்குவரத்திற்கான உடன்படிக்கை யாவும் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயஸ்தானிகர் அசோக் காந்தாதொரிவித்துள்ளார் இக் கப்பல்சேவை தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் நடைபெற உள்ளது. அத்துடன் இந்தியாவின் கொச்சினில் இருந்தும் துஹ தூத்துக்குடியில் இருந்தும் கொழும்புக்கான கடல்வழி பொக்குவரத்தினை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்தாகவும் அவர் மேலும் தொரிவித்துள்ளார். http://meenakam.com/?p=5506

  9. யுத்தம் மூலமாக இலங்கை அரசாங்கம் முதலீடுகளை பெற்றுக்கொண்டது யுத்தத்தை காரணம் காட்டி இலங்கை அரசாங்கம் தனக்கு தேவையான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக் கொண்டதாக ரத்மலானையில் உள்ள கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் உலக வரலாற்றில் நடைபெற்ற நடைபெறுகின்ற பல யுத்தங்கள், பொருளாதார வாய்ப்புக்கள் இன்மை மற்றும் சமுகங்களுக்கு இடையிலான தொடர்பின்மை போன்ற காரணங்களினாலேயே ஏற்பட்டுள்ளதாகவும் அவா; சுட்டிக்காட்டினாh; தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து வடக்கிலும், கிழக்கிலும் சமாதான சூழ்நிலை ஏற்பட ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் முதலீட்டு வாய்புகள் அதிகரித்…

  10. வெலிக்கடை சிறைச்சாலையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீடக்கப்பட்டன வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவின் குளியலறையிலிருந்து 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. குளியலறையின் ஓர் மூலையில் மிகவும் சாமா;த்தியமாக பொலத்தீன் பைக்குள் கையடக்கத் தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மைக்காலமாக சிறைச்சாலைகளிலிருந்து பெருமளவிலான கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது http://meenakam.com/?p=5500

  11. கே.பியின் பெரும்தொகைப் பணம் எங்கே? அதனை நாட்டுக்குள் கொண்டு வாருங்கள்! ஐ.தே.கட்சி எம்.பி. அரசுக்குஆலோசனை திகதி:20.08.2010 சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்கு முன்னர், கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடமுள்ள நிதியை இலங்கைக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா அரசை வலியுறுத்தினார். ஐ.தே.கட்சியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. ஹர்ஷா டி சில்வா தொடர்ந்து அங்கு கூறியவை வருமாறு: கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் ஏராளமான வங்கிக் கணக்குகளும், பல மில்லியன் டொலர்களும், பல கப்பல்களும் இருக்கின்றன என அரசு தொடர்ந்து தெரிவித்து வருகின…

  12. தந்தையிடமிருந்து ஏழு வயதுச் சிறுவனை பிரித்து வைத்துள்ள கனேடிய அதிகாரிகள்: ஒரு சிறுவன் அவனது தந்தையுடன் ஒன்றாக இருப்பதற்காக, நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறமுடியாது என்று அதிகாரிகள் தெரிவிப்பு. [Friday, 2010-08-20 15:30:42] "சன் சீ" கப்பலில் அகதியாக வந்த சிறுவன் ஒருவனை அவனது தந்தையிடம் இருந்து கனேடிய அதிகாரிகள் தனியே பிரித்து வைத்துள்ள விவகாரம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கப்பலில் நான்கு மாதங்கள் பயணம் செய்து கனடாவுக்கு வந்த சிறுவனும் தந்தையும் ஒன்றாக இருப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கனேடிய சிறுவர் மற்றும் குடும்ப அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை சிறுவர்களும். தாய்மாரும் ஒன்றாகவே வைத்து பராமரிக்கப்படுகின்றனர். 25 தாய்மாரும் 54 சிற…

  13. சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் சிறிலங்காவின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது, மீனவர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்தது கவலைக்கும் கண்டனத்துக்குரிய விடயம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ”இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த சிறீலங்கா அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீனநிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்படஅனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடுகடந்த தமிழீழ…

  14. Aug 16, 2010 / பகுதி: செய்தி / வடமராட்சி கிழக்கு கரையோரப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள்!!! வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் துரித கெதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழையடி முதல் கட்டைக்காடு வரையான கரையோரப் பிரதேசங்களிலேயே இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தென்னிலங்கையில் இருந்து பெருந்தொகையான சிங்கள மீனவர்களை வடபகுதிக்கு கொண்டுசென்றுள்ள சிறீலங்கா அரசு அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட சிங்கள மீனவக் குடும்பங்களை வடபகுதியின் கரையோரங்களில் குடியேற்றி வருவதாகவும், இதனால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் சிங்களவர்களுக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கரையோரப் ப…

  15. இலங்கையின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது:- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரிக்கை! திகதி:20.08.2010 இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த இலங்கை அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீன நிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்பட அனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆழமாகப் பதிவு செய்ய விரும்புகின்றது. இதனையிட்டு இந்திய ஆட்சியாளர்களும் தமிழக அரச தலைவர்களும் கொண்டிருக்கக்கூடிய நீண்ட மௌன…

    • 0 replies
    • 623 views
  16. ஆக 20, 2010 / பகுதி: செய்தி / இந்து ஆலயங்களை அழித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டள்ளது கிழக்கு மாகணங்களில் உள்ள இந்து ஆலயங்களை திட்டமிட்ட வகையில் அழித்துவரும் சிறீலங்கா அரசு அந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்களை நிறுவி வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் கங்குவேலி சிவன்கோவில் அழிக்கப்பட்டுள்ளது. அதனைபோலவே வெருகல் பால முருகன் கோவில், வெருகல் கல்லடி கிராமம் நீலியம்மன் ஆலயம் ஆகியனவும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயங்கள் இருந்த இடங்களில் பௌத்த ஆலயங்கள் கட்டப்படுகின்றன. சிறீலங்கா அரசின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக இந்து அமைப்புக்கள் மற்றும் பொது அம…

    • 3 replies
    • 574 views
  17. கொக்குவில் பிரம்படிப் பகுதியில் படையினர் பாதுகாப்புடன் சிங்கள வர்த்தகர்கள் வியாபாரம் திகதி:20.08.2010 கொக்குவில் பிரம்படி ஸ்ரேசன் றோட் பகுதியில் நேற்று இராணுவப் பாதுகாப் புடன் சிங்கள வர்த்தகர்கள் திடீர் நடை பாதை வியாபாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக்காலை தொடக்கம் மாலை வரை 6 இற்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து மலிவு விலைகளில் பொருள் களை விற்றுள்ளனர். இவர்களது வியாபாரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அந்தப் பகுதியில் இராணுவத்தினரும் கடமையில் இருந்த தாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற வாள் வெட்டுச் சம்ப வத்தின் பின்னர் கொக்குவில் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் சோதனை,காவல் நடவடிக்கையி…

  18. 'புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஒன்பதாவது பகுதி வெள்ளி (20.08.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்) http://www.kuralweb.com/20100819diaspora.aspx

  19. வெள்ளிக்கிழமை, 20, ஆகஸ்ட் 2010 (20:5 IST) இலங்கையில் 2 துணை இந்திய தூதரகங்கள்! இருதரப்பு நட்புறவை மேலும் பேணும் வகையில், இலங்கையில் இரு துணை தூதரகங்களை துவக்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன் தோடா ஆகிய நகரங்களில் இந்த தூதரகங்கள் துவக்கப்படவுள்ளன. இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த ஜுன் மாதம் இந்தியா வந்த போது, இலங்கையில் மேலும் 2 ஊர்களில் இந்திய தூதரகம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இதற்கான தஸ்தாவேஜுக்களை கொழும்பு நகரில், இந்திய தூதர் அசோக் கே.காந்தா, இலங்கை வெளிறவுத்துறை செயலாளர்சி.ஆர்.ஜெயசிங்கேயிடம் இன்று வழங்கினார். இதன்படி புதிய இந்திய தூதரக அலுவலகங்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பன்டோதா நகர்களில் விரைவில் செயல்பட…

  20. தலைவரை விட தன்னை பலம் மிக்கவராக காட்ட முயலும் கே.பி ஆக 20, 2010 Font size: Decrease font Enlarge font தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களை விட பலம் மிக்கவராகவும் திறமை மிக்கவராகவும் தன்னை காட்டிக்கொள்ள சிறீலங்கா அரசிடம் சரணடைந்த குமரன் பத்மனாதன், அல்லது செல்வராசா பத்மனாதன் முயன்று வருகின்றார். கே.பி சமீபத்தில் கொழும்பில் உள்ள சிறீலங்கா அரசின் ஆதாவு ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல முரணான கருத்துக்களை பதிவு செய்துள்ளதோடு, தலைமை மீது குற்றம் சுமத்துவதோடு புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாட்டினாலேயே தலைவர் வீரச்சாவடைந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். தோற்றுப்போய்யுள்ள சிறீலங்கா அரசு தமது பிடியில் இருக்கும் சிலரை வைத்து ம…

  21. குடியிருப்பாளர்களை வெளியேற ஸ்ரீலங்கா அறிவிப்பு ஆக 20, 2010 Font size: Decrease font Enlarge font வடதமிழீழமான யாழ்ப்பாணத்தில் முன்னர் புகையிரத பாதைகளாக இருந்த இடங்களில் குடியிருப்போர் உடனடியான அங்கிருந்து வெளியேறுமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் புகையிரத பாதையை மீண்டும் செப்பனிடும் நோக்கில் இந்த அறிவித்தல் தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிபபிட்டார். இதன்காரணமாக, குடியேறியிருப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்காவின் உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப் பின்னர் இவர்கள் புகையிரத பாத…

  22. எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். திகதி: 20.08.2010, “எங்களுக்கு எமது தேசிய தலைவர் ஒரு பண்பாட்டினை கற்பித்துத் தந்துள்ளார். தனிநபர்களைத் தாக்குவது, பொய்யை உண்மை போன்று சொல்வது, தங்களது நலன்களுக்காக விடுதலைப்போரின் சொத்துக்களை, செயல்களை பாவிப்பது எம்மைப்பொறுத்தவரை பெரும் துரோகம். இதனால் நான் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைப்பதை விரும்புவதில்லை. ஆனால், இந்த பொய்யும், வக்கிரப் பிரச்சாரங்களும் எல்லை கடந்து எங்கள் மக்களைப் பாதிக்கும்போது நான் பேசுவேன்” (விடுதலைப்புலிகளின் சர்வதேசக்கட்டமைப்பின் மூத்த உறுப்பினரான வேலும்மயிலும் மனோகரன்அவர்களுடனான இந்தச் செவ்வி, சமகால அரசியல் நிலவரங்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் சவால…

  23. ஆக 20, 2010 / பகுதி: செய்தி / ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 4,763 முறைப்பாடுகள் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த 2009 மே மாதத்திலிருந்து இதுவரை வட மாகாணத்திலிருந்து 4,763 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகங்களிலேயே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் காணாமல்போனமை பற்றியதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருத்தல், கைதுகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தெரிவித்தார். பதிவு

  24. வடபகுதி மக்களின் வைப்புக்களை மிகவேகமாக கவர்ந்து செல்லும் தென் இலங்கை நிதி நிறுவனங்கள் அவற்றில் 10 விழுக்காடு பணத்தினை கூட அவர்களின் அபிவிருத்திக்காக செலவழிப்பதில்லை. இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் முன் நாள் மக்கள் வங்கி தலைவர் இராஜன் ஆசிர்வாதம் அவர்கள். நேற்று முந்தினம் அரச ஆணைக்குழுவிற்கு முன்னால் தனது சாட்சியத்தை அளித்த இராஜன் ஆசீர்வாதம் அவர்கள் மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் வடபகுதி மக்களுக்கு அபிவிருத்தி பணிகளில் அவர்கள் நிதியே பயன்படுத்தப்படவேண்டும். வடபகுதி மக்களின் அபிவிருத்தியானது அந்த பகுதி மக்கள் முற்று முழுதாக ஈடுபாடு கொண்டவகையில் அமையவேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய அபிவிருத்தி பணிகள் அவ்வாறு இல்லையெனவும் கூறியுள்ளார். Eelanatham.n…

  25. மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டிணிக்கு எதிரான அமைப்பின் தொண்டர்கள் வழக்கு தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என மன்னிப்பு சபை கூறியுள்ளது. ஆசியாவிற்கான அதன் பேச்சாளர் ஜொலண்டா பாஸ்கால் அவர்கள் தனது அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தனியான , சுயாதீன விசாரணை குழு ஒன்றினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜொலண்டா. இந்த சர்வதேச விசாரணையினை கொல்லப்பட்ட பணியாளர்களின் சார்பாக வழக்காடி வந்த சட்டவாலர் ரத்தினவேல் அவர்களும் வரவேற்றுள்ளார் Eelanatham.net

    • 0 replies
    • 626 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.