ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
விடுதலைப் புலிகளினால் கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்படும் க்ளைமோர் குண்டுகளை விநியோகிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இவர் வழங்கிய தகவலுக்கமைய கைப்பற்றப்பட்ட வாகனத்திலிருந்து அதி சக்திவாய்ந்த 20 க்ளைமோர் குண்டுகளையும் கைப்பற்றியதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கூறினர். கடந்த காலங்களில் கொழும்பின் பல பிரதேசங்களில் வெடிக்கப்பட்ட க்ளைமோர் குண்டுகள், கைதுசெய்யப்பட்டுள்ள நபரினாலேயே விநியோகிக்கப்பட்டவையென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அதேபோன்ற அதிசக்திவாய்ந்த 21 க்ளைமோர் குண்டுகளை இதற்கு முன்னர் குறித்த நபர் விநியோகித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளிலிருந…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா வெளிவிவகாரத்துறை செயலளார் பாலித கோகன்ன அடுத்த மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தப் பிரதிநிதி பதவியைப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள உள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்துக்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததும், மக்களின் தற்காலிக தங்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே படையினரின் கனரக ஆயுதங்கள், மோட்டார் நிலைகள் இருந்ததும் மிகத் தெளிவாக செய்மதிப் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கம் தனது முழுமையான அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
சிறிலங்கா காவல்துறையினரால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் அத்துமீறிய மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விகளால் ஊடகத்துறை அமைச்சர்களான அநுரா பிரியதர்சன யாப்பாவும், லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தனவும் திக்குமுக்காடிப்போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 458 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் கடத்தல் மற்றும் சட்டத்துக்கு முரணான நாடு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசுகள், அரச நிறுவனங்கள், முகவர் அமைப்புக்கள் அனைத்துலகச் சட்டங்களை மீறியுள்ளமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை கைது செய்ததன் மூலம் மகிந்த ராசபக்ச பெரும்பான்மை சிங்களவருக்கும் நீண்டகாலமாக கொடுமைப்படுத்தப்பட்ட தமிழருக்கும் இடையிலான இனக் காயங்களை குணப்படுத்துவதற்கான வரலாற்று வாய்ப்பை இழந்துவிட்டார் என்று தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட செய்தி எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. கேபியைக் கைது செய்து பின்னர் அவரை சிறிலங்காவின் புலனாய்வு…
-
- 1 reply
- 465 views
-
-
ராஜபக்சேவை கொல்ல சதி-சிங்களர் கைது வியாழக்கிழமை, ஆகஸ்ட் 13, 2009, 12:00 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கொலை செய்ய விடுதலைப் புலிகளுடன் இணைந்து திட்டம் தீட்டிய சிங்களர் ஒருவரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜபக்சேவின் முதல் எதிரியாக விடுதலைப் புலிகள் கூறப்பட்டு வந்த நிலையில் சிங்களர்கள் மத்தியிலேயே அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், விடுதலைப் புலிகளுடன் இணைந்து இந்த கொலையை நிறைவேற்ற சிங்களர் ஒருவர் சதித் திட்டம் தீட்டியுள்ளார். ராஜபக்சேவின் சொந்த ஊரான மதமலுனா அல்லது தங்கல்லே என்ற இடம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து ராஜபக்…
-
- 0 replies
- 636 views
-
-
25 வருடகால போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் சிறுபான்மையினரான தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் சிறிலங்கா தோல்வி அடைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு வழிவகுத்துவிடக்கூடும் என்றும் அது கூறியுள்ளது. அமெரிக்க இராஜாங்க விவகார துணை அமைச்சர் றொபேர்ட் பிளேக், நேற்று திங்கட்கிழமை அசோசியேட் பிறஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அனேகமாக அடுத்த ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அரச தலைவர் தேர்தல் நடந்து முடியும் வரைக்கும் அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டப் போவதில்லை என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பது தன்னை விசனமடைய வைத்துள்ளது எனவ…
-
- 3 replies
- 649 views
-
-
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தலில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான ஈ.பி.டி.பி.யையும் உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். மாநகர பிதாவாக திருமதி பி.யோகேஸ்வரி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டிருப்பதை கட்சியில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த அப்புத்துரை மங்களநேசன் கடுமையாக எதிர்த்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
கிறிஸ்மஸ் தீவுக்கு அருகாக இந்து மா கடலில் 77 அகதிகளுடன் ஒரு படகை அவுஸ்திரேலியா இடைமறித்து நிறுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவதற்காக வந்தவர்கள் என தெரிவிக்கும் அதிகாரிகள் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்றும் கூறினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
நான் தோற்றதைப் பற்றிக் கவலைப்படவில்லை இதனால் நாட்டுக்குத் தான் இழப்பு!!! வீ.ஆனந்தசங்கரி யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தோற்றுப்போன ' தமிழர் விடுதலைக் கூட்டணித்' தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறுகையில்; இது பெரிய மோசடியான தேர்தலாக நடந்தேறியிருக்கிறது. பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்து குடாநாட்டிற்கு வருகைதந்த அமைச்சர்கள் மக்களை ஏமாற்றினர். இதற்காக இங்கு வந்து சென்ற அமைச்சர்களும் அரசாங்கங்களும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும். 18 வீத வாக்களிப்பே நடைபெற்றிருக்கின்றது. இதற்காக வரும் ஒரு உள்ளூராட்சித் தேர்தலுக்காக அரசு பல கோடிக்கணக்கான ரூபாவைச் செலவு செய்திருக்கின்றது. மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தேர்தல். களியாட்டங்க…
-
- 8 replies
- 1.7k views
-
-
எதிர்காலத்தில் அமையவுள்ள அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை நிச்சயம் இப்போது உள்ளதைவிடக் குறைக்கப்படும் என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
சிறிலங்கா அரச தலைவரின் முதலாவது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அடுத்த அரச தலைவர் தேர்தலை நடத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்குக் ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்து இயங்கும் துணைப் படையான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்று அழைக்கப்படும் புளொட் அமைப்பும் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் வவுனியா நகரசபைத் தேர்தலில் வென்றிருக்க முடியும் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கையின் மனிதாபிமானச் சிக்கல்கள் மற்றும் அரசியல் கருத்து இணக்கம் என்பன குறித்து புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் சந்தித்துப் பேசியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 306 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் கடத்தல் மற்றும் சட்டத்துக்கு முரணான நாடு கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசுகள், அரச நிறுவனங்கள், முகவர் அமைப்புக்கள் அனைத்துலகச் சட்டங்களை மீறியுள்ளமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் விபரம் வருமாறு: ஜனநாயக நாடு என்ற தனது இறுமாப்பை சிறிலங்கா அரசு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்துலக சட்டம் ஒழுங்குகளால் கட்டுப்படுத்தப்படாத ஓர் அரசாக அது தோன்றுகிறது. சட்டவிரோத கடத்தல், காணாமல் போகச் செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காததுடன…
-
- 0 replies
- 501 views
-
-
சிறிலங்கா தரைப்படையின் 10 ஆவது தளபதியாகப் பணிபுரிந்த ஜி.டி.ஜி.நளின் செனிவிரட்ன தனது 78 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை காலமானார். இவரது இறுதி நிகழ்வுகள் நாளை மறுநாள் பொறளை கனத்தை மயானத்தில் படையினரின் மரியாதை அணிவகுப்புக்களுடன் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1953 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் நாள் சிறிலங்கா தரைப்படையின் இரண்டாம் லெப்டினன்ட்டாக இணைந்துகொண்ட இவர், தரைப்படையின் பல்வேறு முக்கிய பொறுப்புக்களையும் வகித்திருக்கின்றார். 1985 ஆம் ஆண்டில் சிறிலங்கா தரைப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர், மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்த்தப்பட்டார். 1988 ஓகஸ்ட் 16 ஆம் நாளுடன் அவர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். புதினம்
-
- 0 replies
- 520 views
-
-
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தேர்தலில் ஈ.பி.டி.பி.யையும் உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றதையடுத்து யாழ். மாநகர பிதாவாக திருமதி பி.யோகேஸ்வரி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டிருப்பதை கட்சியில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த அப்புத்துரை மங்களேஸ்வரன் கடுமையாக எதிர்த்துள்ளார். விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மங்களேஸ்வரனுக்கு 1,394 வாக்குகள் கிடைத்திருந்த அதேவேளையில், யோகேஸ்வரிக்கு 1,250 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. கட்சியில் அதிகளவு விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களின் வரிசையில் இவர் ஐந்தாவது இடத்திலேயே உள்ளார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மாநகரசபைக்கான உறுப்பினராகத் தெரிவாகியிருந்த மங்களேஸ்வரன், தற…
-
- 0 replies
- 616 views
-
-
சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்ட இரு சிங்கள இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களின் உடலங்கள் வீதியோரத்தில் வீசப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை அடித்து நொருக்கியதுடன், தொடருந்துப் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்திய சம்பவம் சிறிலங்காவின் அங்குலானை பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 293 views
-
-
சிறிலங்கா காவல்துறையால் கைது செய்யப்பட்ட இரு சிங்கள இளஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களின் உடலங்கள் வீதியோரத்தில் வீசப்பட்டயைடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை அடித்து நொருக்கியதுடன், தொடருந்துப் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்திய சம்பவம் சிறிலங்காவின் அங்குலானை பகுதியில் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 416 views
-
-
சிறிலங்காவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து 'விசா' வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள யோசனை தொடர்பாக சிறிலங்கா அரசு தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 548 views
-
-
இன மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகளைத் தடைசெய்வது என சிறிலங்கா அரசு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தனித்தனியாக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்று தாக்கல் செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
இன மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகளைத் தடைசெய்வது என சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தனித்தனியாக அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
சிறிலங்காவுக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 'விசா' வழங்கும் நடைமுறையை நீக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு முன்வைத்துள்ள யோசனை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 473 views
-
-
குமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அதனை இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு பத்து நாடுகளிலும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், சுவிஸர்லாந்து, தென் ஆபிரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, சுவிடன், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் வங்கிக் கணக்குகள் பிரதானமாக பேணப்படுவதாக கே.பி.யிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குமரன் பத்மநாதன் ஐயன்னா குருப் என்ற புலி ஆதரவு நிறுவனத்திற்கு சொந்தமான கணக்குகளில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தவிர விடுதலைப் புலிகளின் வலையமைப்பிலுள்ள ஆறு கப்பல் நிறுவன…
-
- 0 replies
- 1.1k views
-