ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142952 topics in this forum
-
யால காட்டில் இளைஞன் சுட்டுக்கொலை திகதி: 07.08.2009 // தமிழீழம் யால காட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நடமாடிய இளைஞர் ஒருவரை விடுதலைப் புலி என நினைத்து சிறிலங்காப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இரவு 11 மணியளவில் இந்தக் காட்டுப் பகுதியில் இந்த இளைஞன் நடமாடிய போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், லவுகலையைச் சேர்ந்த வெங்க புலிகாயன் (22) எனப்படுபவர் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் நேற்றுக் காலை பொத்துவில் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சங்கதி
-
- 1 reply
- 909 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான தனது இறுதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை நேற்று முன்தினம் பாசையூர் சென் அன்ரனீஸ் தேவாலயப்பகுதியில் நடத்தியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆதரவாக கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்றுக் களத்தில் குதித்திருந்தனர். இரவு 10.30 மணிவரை இந்தப் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவுடன் பிரச்சாரங்கள் முடிவுற்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிக மோசமாக விமர்சிக்கும் அநாமதேய துண்டு…
-
- 2 replies
- 973 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் நேற்று முன்நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து மலேசிய மற்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்தும் வேறு தொடர்புகள் ஊடாகவும் 'புதினம்' சேகரித்த தகவல்களில் இருந்து தெரியவருவதாவது: நேற்று முன்நாள் புதன்கிழமை பிற்பகல் அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 'மஜீத் இந்தியா' என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள 'ரியூன்' (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார். வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலே…
-
- 10 replies
- 3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலை அங்கிகள் பலவும் சில ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 541 views
-
-
செய்தியாளர் முகிலன் 07/08/2009, 04:35 வடக்கில் 87 வீதமும், கிழக்கில் 41 வீதமான நிலமும் அரசுக்குச் சொந்தமாம் வடக்கில் 87 வீதமான நிலங்களும், கிழக்கில் 41 வீதமான நிலமும் தொடர்ந்தும் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமாக இருப்பதாக, அரச தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும் வகையில், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும்;, அமைச்சருமான தினேஸ் குணவர்த்தவினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள 829,880 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 725,471 ஹெக்டேயரும், கிழக்கிலுள்ள 76,666 ஹெக்டேயர் நிலப்பரப்பில் 54,551 ஹெக்டேயர் நிரப்பரப்பும் அரசுக்கு சொந்தமானவை எனக் கூறப்பட்டு…
-
- 0 replies
- 686 views
-
-
பிரித்தானியச் செய்தியாளர் 07/08/2009, 02:53 சிறீலங்காவின் மிதிவெடி அகற்றலுக்கு பிரித்தானியா நிதி உதவி சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையின்போது புதைக்கப்பட்ட மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைக்கு பிரித்தானிய அரசு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது. கண்ணிவெடி அகற்றும் அலோசனைக் குழு ஒன்றின் ஊடாக ஐந்து இலட்சம் பவுண்ஸ்களை வழங்கி சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள இவ் உதவி கண்ணிவெடிகள் காணப்படும் இடங்களை அடையாளம் காணவும், அள…
-
- 0 replies
- 339 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதனை அவர் பதுங்கியுள்ள நாட்டில் வைத்து சுட்டுக்கொல்வதே தமது நோக்கம் என்றும் சூழ்நிலைகள் சரிவர அமையாததனால் அவரை கைது செய்து சிறிலங்கா கொண்டுவர வேண்டியதாகிவிட்டது என்றும் சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பத்மநாதன் மலேசியாவில் வைத்து கடத்தப்பட்டது தொடர்பில் சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த மூன்று பேர் அனைத்துலக ஊடக நிறுவனமான 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்துக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர். அவரை சிறிலங்கா கொண்டுவரவேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. ஆனால் அவரைக் கொல்வதற்கு சூழ்நிலைகள் எம்மை அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் 'ரொய்ட்டர்ஸ்' செய்தி நிறு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சீனாவையும் இலங்கையையும் பாதுகாப்பு ரீதியில் முடக்க இந்தியா புதிய திட்டம் செய்திகள்: சீன அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் பேணி வரும் பாதுகாப்பு உறவுகளைக் கட்டுப்படுத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு யுத்த உபகரணங்களை விநியோகம் செய்யும் பிரதான நாடாக மாறுவதற்கான முயற்சிகளில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை வரையறுக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இந்தியாவிற்கு நேரடியாக ஆயுதங்களை விநியோகிக்க முடியாத ஓர்…
-
- 0 replies
- 755 views
-
-
மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட்டால் எம்மை அமோகமான முறையில் வெற்றியீட்டச் செய்வார்கள். எனினும் அச்சுறுத்தல், அபகரிப்பு, வளைத்துப் போடுதல் மூலமாக மக்களைப் பணியவைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான என். சிறிகாந்தா தெவித்தார். மக்களின் தீர்ப்பை மாற்றியமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இல்லாது செய்யும் என்பதுடன் ஜனநாயக விரோதச் செயற்பாடுமாகும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்று…
-
- 0 replies
- 570 views
-
-
அன்பா சொல்லி அம்மி நகராது - பேசுகிறார் பிரபாகரன் அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் ஸ்ரீ அரபிந்தோ அவர்களின் எழுத்துக்களில் இதனைப் படித்தேன்: ""ஏனைய தேசங்கள் போராட்டங்களாலும், யுத்தங் களாலும், வேதனைகளாலும், இரத்தக் கண்ணீராலும் வென்றவற் றை நாங்கள் பெரும் தியாகங்கள் செய்யாமல் பத்திரிகையாளர் களின் பேனா மையைக் கொண்டும், கோரிக்கை மனுக்கள் எழுதத் தெரிந்தவர்களின் உதவியுடனும், மேடைப் பேச்சாளர்களின் திற மையைக் கொண்டும் சுலபமாகச் சாதிக்க அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது வேடிக்கையும் வீண் கனவும் ஆகும்''. பிரசவ வலியின்றி பிள்ளை பிறக்குமா என்ன? சும்மா கிடைப்பதற்கு சுதந்திரம் என்ன சுக்கா? மிளகா? சுக்கு மிளகு கூட இன்று சும்மா கிடைக்காது! ஈழம் மலர வேறொன்றும் நடக்க வேண்டுமென …
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கையின் வடபகுதியில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளவுள்ள 'வடக்கின் வசந்தம்' திட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ்நாட்டின் முக்கிய விவசாய விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
இலங்கையின் வடபகுதியில் 84 விழுக்காடு நிலமும் கிழக்குப் பகுதியில் 41 விழுக்காடு நிலமும் சிறிலங்கா மத்திய அரசுக்கே உரியது என்று நாடாளுமன்றத்தில் நேற்று அரசு தெரிவித்தது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் பெண்கள் அணித் தலைவி சுப்ரமணியம் சிவகாமி (தமிழினி)யை காவற்துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கவும், விசாரணைகளை மேற்கொள்ளவும் கொழும்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல் தலைமையகத்திற்கு விஜயம் செய்த நீதிவான் நிசாந்த ஹப்பு ஆராய்ச்சி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினியைப் பார்வையிட்டதோடு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவையும் வழங்கினார். தமிழினி மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேறி மே மாதம் சரணடைந்ததிலிருந்து காவற்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தமிழினி விடுதலைப் புலிகளின் அரசியல் கோட்பாட்டாளரான அன்ரன் பாலசிங்கத்தினால் பயிற்றுவிக்…
-
- 1 reply
- 980 views
-
-
இலங்கையின் வடபகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்து உதவி வழங்கவுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 370 views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் தலைமை அதிகாரி பிரிகேடியர் கே.ஜே.விஜயதிலக தலைமையிலான 23 பேர் அடங்கிய சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் குழு ஒன்று இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 334 views
-
-
யாழ்., வவுனியா தேர்தல்கள் மூலம் தமிழர்களின் அரசியல் வேட்கையை மீண்டும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலேயே கைது செய்யப்பட்டார் என்று தாய்லாந்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 629 views
-
-
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் கடத்தப்பட்டு சிறப்பு வானூர்தி ஒன்றின் மூலமாகக் கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராஜா பத்மநாதன் கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதேவேளயில், பாதுகாப்புத் தரப்பினர் இந்த விவகாரத்தை உள்நாட்டுச் சட்டங்களுக்கு அமைய கையாள்வார் என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் 'பாரிய கூட்டணி' மூலமாக முள்நாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலுக்குள் வருவதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளையில், அவரது மகன் விமுக்தி குமாரதுங்கவை அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகளும் திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அடுத்த பொதுத் தேர்தலில் தோற்கடிக்கும் நோக்கத்துடன் இதற்கான வியூகங்களை முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவுத் தலைவருமான மங்கள சமரவீர வகுத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்க குடும்பத்தை மீண்டும் அரசியலில் இறக்குவதன் மூலம் ஆளும் கட்சியின் வாக்கு வங்கியை கணிசமான அளவுக்கு உடைக்க மு…
-
- 0 replies
- 477 views
-
-
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா தேர்தல்களில் மோசடிகளைச் செய்வதற்கு அரசு திட்டமிட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, அதனால்தான் இந்தத் தேர்தல்கள் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அரசு தடை விதித்திருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில் இந்த தகவல்களைத் தெரிவித்த மங்கள சமரவீர, பாதுகாப்பை காரணம் காட்டி தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். "நாடு முழுவதும் இப்போது பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக…
-
- 0 replies
- 308 views
-
-
சிறிலங்காவில் இருந்து படகு மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்கு முற்பட்ட 32 பேர் நீர்கொழும்பில் நேற்று முன்நாள் சிறப்புக் காவல்துறைக் குழு ஒன்றினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் எனவும் தெரியவருகின்றது. காவல்துறைக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து நீர்கொழும்பில் உள்ள குறிப்பிட்ட இடம் ஒன்றை காவல்துறையினர் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோதே அங்கு மறைந்திருந்த இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். படகில் புறப்படுவதற்காக கடற்கரையில் உள்ள மற்றொரு இரகசியமான இடத்துக்குச் செல்வதற்காக படகு உரிமையாளரை எதிர்பார்த்துக் காத்திருந்தபோதே புதன்கிழமை இரவு 8:30 நிமிடமளவில் இவர்கள் கை…
-
- 0 replies
- 516 views
-
-
வவுனியா மற்றும் யாழ். நகரசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர் தாயகம், சுயாட்சிக்கு வலுவூட்டுவதாக அமையும் என்று கனடிய தமிழர் பேரவை தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக கனடிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அன்பான தமிழீழ உறவுகளே! தமிழர் தாயகம், தன்னாட்சிக் கோட்பாட்டை முன்னிறுத்தி உங்கள் ஆதரவை வேண்டிநிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ.) வவுனியா, யாழ். மாவட்ட தேர்தல்களில் அமோக ஆதரவை கொடுத்து வெற்றியீட்டச் செய்யுங்கள். தமிழர் வரலாற்றில் மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஈழத்தில் நீங்கள் நாளாந்தம் படுகின்ற துன்பங்கள், இழப்புக்கள் அனைத்தையும்…
-
- 0 replies
- 525 views
-
-
நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்காக என தேர்தல் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட தேர்தல் அட்டைகளில் 50 வீதமானவை உரியவர்களுக்கு விநியோகிக்கப்படாமல், யாழ். பிரதான தபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 2 replies
- 385 views
-
-
மலையகச் செய்தியாளர் 06/08/2009, 20:07 கேகாலை தமிழ்மொழி கணிதப் பரீட்சை வினாத்தாளின் 27 கேள்விகளில் 22 வினாக்கள் பிழை கேகாலை பிரதேசத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 9ம் ஆண்டு தமிழ் மொழிமூல கணிதப் பரீட்சை வினாத்தாளின் 27 வினாக்களில் 22 வினாக்கள் பிழையாக தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாளின் முதல் பகுதியில் உள்ள 20 வினாக்களில் 15 வினாக்கள் பிழையெனவும், இரண்டாவது பகுதியில் 7 வினாக்களில் 7உம் பிழையாக காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் பகுதி வினாத்தாளில் வினாவை வாசித்து விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு பிழையுள்ளதாக ஆசிரியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 42 தமிழ் பாடசாலைகள் …
-
- 0 replies
- 682 views
-
-
கடந்த மே மாதம் 17,18,19 ம் திகதிகளில் சரணடைந்த மூத்த போராளிகள் மற்றும் போரளிகள் ஆகியோரை அரச படையினர், அரச புலனாய்வு துறையினர், மற்றும் பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்வேறு இடங்களில் எந்தவிதமான தகவல்களோ அன்றி பதிவுகளோ இன்றி சிறையில் வைத்து சித்திரவதைகள் செய்யப்படுவதனை பலரும் அறிவர். இவ்வாறு கொழும்பு, பனாகொட, வெலிகந்த, அனுராதபுர போன்ற இரகசியமான இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 17 ம் திகதி மே மாதம் ஓமந்தை பகுதியிலும், முள்ளிவாய்க்கால் பகுதியிலும், பின்னர் 19, 21 ம் திகதிகளில் தடுப்பு முகாம்களில் வைத்தும் கைது செய்யப்பட்ட மூத்த உறுப்பினர் திரு வே.பாலகுமாரன், அரசியல் துணை பொறுப்பாளர் திரு சோ.தங்கன், படைத்தளபதி லெப்.கேணல் வேலவன், லெப்.க…
-
- 12 replies
- 2.4k views
-