Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி ஊடகவியலாளர்களின் குழு ஒன்று இன்று திங்கட்கிழமை கொழும்பின் புறநகர்ப் பகுதியான கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள். சிறிலங்கா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர்கள் இருவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோதே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இணையத்தள செய்தி ஆசிரியர்களான பெனட் ரூபசிங்க, சந்தருவன் சேனாதீர ஆகிய இருவருமே போத்தல ஜயந்த தாக்கப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போத்தல ஜயந்த கடத்தப்பட்டு தா…

    • 0 replies
    • 348 views
  2. சிறிலங்காவின் தென் மாகாண சபை இன்று நள்ளிரவு கலைப்பட இருப்பதாக அந்நாட்டு அரச வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தென்மாகாண சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் 15 ஆம் நாளுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு அமையவே அதனை இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் கலைப்பதற்கு மாகாண ஆளுநர் தீர்மானித்திருக்கின்றார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதினம்

    • 0 replies
    • 340 views
  3. வடமாகாணத்தில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றவென 500 தமிழ் இளைஞர், யுவதிகள் சிவில் பாதுகாப்புக் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்திற்கு 10 இளைஞர்கள் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் இந்தக் குழுவில் இணைந்து கொள்வோருக்கு அடையாள அட்டைகள், சீருடைகள் என்பன வழங்கப்படும். இப்பணியில் சிறந்த முறையில் செயற்பட்டால் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளவும் முடியும் என மின்சக்கி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழு அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்னும் ஒருமாதத்தில் பொலிஸாருடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் இந்த இளைஞர், யுவதிகள் பணி புரிவார்கள். இது சுதந்…

    • 0 replies
    • 691 views
  4. சிறிலங்காவில் தயாரிக்கப்படும் தைக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்குமாறு கோரி நேற்று முன்நாள் அமெரிக்காவில் நடத்தப்பட்ட முதற்கட்டப் போராட்டத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இந்தப் போராட்டத்தை அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் போவதாகவும் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவில் பெரும் சந்தை வாய்ப்பைப் பெற்றிருக்கும் சிறிலங்கா ஆடைகளை அமெரிக்க மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரும் போராட்டம் நேற்று முன்நாள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பெரும் தொகையானவர்கள் கலந்துகொண்டதுடன், விற்பனையாளர்கள், கொள்வனவு செய்ய வந்தவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரதும் ஆதரவு கிடைத்ததால் இது பெரும் வெ…

    • 0 replies
    • 509 views
  5. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழர்கள் பெருமளவுக்கு வசிக்கும் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சில இடங்கள் இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டு சுமார் ஆறு மணி நேரம் கடுமையான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளவத்தையில் உள்ள உருத்திரா மாவத்தை முழுமையாக சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தப்பட்ட அதேவேளையில் அங்குள்ள வீடுகள், தொடர்மாடிக் கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் சோதனைக்கு உள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு தொடங்கியது. ஜீப் வாகனங்கள், பேருந்துகள் என்பனவற்றில் நூற்றுக்கணக்கில் வந்து இறங்கிய தரைப்படையினரும் காவல்துறையினரும் இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.…

    • 0 replies
    • 419 views
  6. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழியில் நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை செல்வராஜா பத்மநாதன் வழிநடத்துவதை ஏற்றுக்கொள்வதாக சுவிஸ் தமிழர் பேரவை உறுதிப்பிரகடனம் எடுத்துள்ளது. சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் சுவிஸ் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று பிற்பகல் நடைபெற்ற 'உயிர்க்கும் தமிழீழம்' நிகழ்வில் மேற்படி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு தொடங்கி மாலை 6:30 நிமிடம் வரை நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்கள், இந்திய மற்றும் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் பெ…

    • 0 replies
    • 560 views
  7. (சக்திஅம்மா என பெயர் கொண்ட ஆண் இன ஆன்மீகவாதி) முகாம்களில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா?சக்திஅம்மா பதில் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, ஹெலிகாப்டரில் சென்று சக்தி அம்மா உதவி பொருட்களை வழங்கினார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வேலூர் திரும்பிய சக்தி அம்மா நேற்றுமாலை நிருபர்களை சந்தித்தபோது, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தான் உதவி செய்தது பற்றியும், அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றியும் விளக்கிக் கூறினார். தமிழர் முகாமில் எத்தனை பேர் உள்ளனர். அவர்கள் என்ன நிலையில் உள்ளனர். உங்களிடம் என்ன கூறினார்கள்? சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் நல்ல நிலையில்தான் உள்ளனர். இலங்கையில் அவர்கள் எங்கெங்கு வசித்த…

  8. யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடாநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு 11:00 மணியளவில் இவர் தாக்குதலுக்குள்ளானதாகவும், படுகாயமடைந்த அவர் உடனடியாகவே யாழ். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் அரியாலைப் பகுதியிலேயே இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பிட்ட ஈ..பி.டி.பி. வேட்பாளரிடம் வேலை பெறுவதற்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்த இளைஞர்கள் சிலர்தான் இவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும…

    • 0 replies
    • 593 views
  9. வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான இந்தியப் படை மருத்துவப் பிரிவினரின் சேவைக் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வன்னியில் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியப் படை மருத்துவக் குழுவினர் இலங்கை வந்தனர். போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கினர். இந்திய மருத்துவக் குழுவில் நிபுணர்கள், பொது மருத்துவர்கள், பெண் மருத்துவ அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய 60 பேர் அடங்கியுள்ளனர். இதுவரைக்கும் 21 ஆயிரம் பேருக்கு அவர்கள் சிகிச்சை வழங்கியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய மருத்துவக் குழு தமது சேவையை வழங்கி வருகின்றது. அப்போ…

    • 0 replies
    • 372 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி புலி முக்கியஸ்தரின் 30வயதுடைய மனைவியும் 13வயதுடைய மகளுமே இவ்வாறு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மிகவும் இரகசியமான முறையில் ஹங்கேரி நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போதே பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இவர்கள் வவுனியா தற்காலிக நலன்புரி முகாமில் த…

    • 0 replies
    • 1.5k views
  11. இதை பாத்திட்டு சிந்திக்க வேண்டுமென்பதற்காக மட்டுமே. விளம்பரப்படுத்தலுக்காகவல்ல. கரைமுழுக்கப் பாதுகாப்பு வலையம். சனம் வெளிக்கிடேலாது. வெளியில(புலத்திலை) சோரம்போனதுகளோட போட்ட திட்டத்தின் முதல்படி பக்திப்பரவசத்தைக் காட்டி அல்லது ஊட்டி உருவேத்தி ஊருக்கழைத்து யூரோவாயும் டொலராயும் வேண்டுற திட்டம்தான். இப்ப கணபேர் பயண்சீட்டும் எடுத்திருப்பினம். தமிழினம் ஏமாளியாக இருக்கும்வரை இந்த நிலமை மாறப்போவதில்லை. ஒரு உறுதியான முடிவை எங்கட மக்கள் எடுக்க வேண்டியது அவசியம். அவசியமற்ற இலங்கைப் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதோடு, முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள எமது உறவுகள் விடுதலைபெறும் வரை எந்தவித்திலும் எமது வருமானம் சிங்களத்துக்கு செல்ல நாமே காரணமாக இருக்கக் கூடாது. தமிழினத்தினது வாழ்வையழித்த…

  12. வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் செயற்பட்டு பின்னர், ஆயுதங்களைக் கைவிட்ட தற்பொழுது ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் தமிழ் கட்சிகளும், ஏனைய முகவர்களும் முகாம்களிலுள்ள மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவுவதாகப் பொலிஸ்மா அதிபர் வவுனியாப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை நலன்புரி நிலையங்களிலிருந்து 50,000 பேர் பணம்கொடுத்து வெளியேறியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…

    • 2 replies
    • 1.1k views
  13. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு செயல் வடிவம் கொடுப்பதிலும் அதன் கட்டமைப்பிற்கு வடிவம் கொடுப்பதிலும் ஆர்வமாக உள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் உருத்திரகுமாரனுக்கு இது குறித்து அனுப்பியுள்ள கடிதத்தில் பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானிய தமிழர் பேரவையினருக்கும் தங்களது பிரித்தானிய பிரதிநிதிகளுக்கும் இடையில் 27, ஜூலை அன்று நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. ஜனநாயகப் பண்புகளைக்கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய, அகிம்சா வழியில் உருவாகின்ற, அடிப்படை அரசியல் தளத்தில் இருந்து சகலரினதும் பங்குபற்றுதலு…

    • 3 replies
    • 539 views
  14. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக 'சிறிலங்கா கார்டியன்' என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

  15. ஒன்றிணைந்த இலங்கைக்குள் சீனா இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியுமா? -வேல்ஸிலிருந்து அருஷ் 02/08/2009, 02:42 சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்ப தற்கு இந்தியா அமெரிக்காவுடன் இணைந் துள்ளதாக இந்தியாவின் முன்னாள் இராஜ தந்திரியான எம் பத்ரகுமார் அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்துள் ளார். அண்மைக்காலமாக இந்தியாவுடன் அமெ ரிக்கா நட்புறவை வளர்த்துக்கொள்வதற்கு காட்டிய அக்கறைகளும் அதனை தான் காட்டுகின்றன. ஆனால் இந்திய தரப்பு அதனை பயன்படுத்த தவறிவிட்டது என்றே கொள்ள முடியும். ஏனெனில் இலங்கையில் சீனா வலுவாக காலூன்றிவிட்ட நிலையில் எதிர்காலத்தில் இந்திய அமெரிக்க கூட்டுற வினால் ஏற்படப்போகும் பலாபலன்கள் குறைவானதே. அதற்கான பணி கடினமானது. தென் ஆசிய பிராந்தியத்தில் கேந்திர முக்…

    • 0 replies
    • 550 views
  16. கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்... கடற்கரை உப்புக்காற்றில் கரைந்து போன எதிர்காலம்... மாணவர் சமூகம் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி தொடருகின்றது. "சகோதரர்களே! உங்களின் அகால மரணம் எங்களுக்கு மனரணம் அந்த இறுதித் துடிப்பு சிந்திய உதிரத்துளி சல்லடையாகிப் போன கபால ஓடுகள் கடற்கரைக் காற்றில் கரைந்து போன எதிர்காலம் மறக்காது இவற்றை எங்கள் திருமலை சமூகம். 2006 ஆம் ஆண்டு பிறந்து இரண்டாம்நாள் மாலை வேளையில்இ வழமை போன்று கடற்கரையோரக் காந்தி சிலை அருகே கூடுகின்றார்கள். கலந்துரையாடுகின்றார்கள். சிரித்துப் பேசி மகிழ்கின்றார்கள். பேரினவாத வடிவில் யமன் வந்தான். முதலில் மூன்று சக்கரங்களில்இ நான்கு சக்கரங்களில். …

    • 2 replies
    • 1k views
  17. ஞாயிற்றுக்கிழமை, 2, ஆகஸ்ட் 2009 (18:8 IST) நிர்வாணமாக்கி தமிழக மீனவர்கள் சித்ரவதை:இலங்கை கடற்படை அட்டூழியம் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி நிர்வாணமாக்கி சித்தரவதை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்லமுயன்ற மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி அடித்து விரட்டியுள்ளனர். மேலும் இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி படகில் இருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு மீனவர்களை நிர்வாணப்படுத்தி அட…

  18. இணைந்து கொள்ளுங்கள் யாழ்க்கள உறவுகளே! Irish Trade Unions call for Sri Lanka war crimes investigations Thank David Begg, ICTU's General Secretary: congress@ictu.ie நன்றி !

    • 0 replies
    • 834 views
  19. இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்: ஏ.ஆர். ரஹ்மான் First Published : 02 Aug 2009 12:14:00 AM IST Last Updated : 02 Aug 2009 01:09:52 AM IST சென்னை, ஆக. 1: இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கெüரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரை: இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கட…

  20. வீடு வீடாக சென்று 1500 இற்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகளை பறிப்பு திகதி: 02.08.2009 // தமிழீழம் யாழ்.குடாநாட்டில் கொழும்புத்துறை, அரியாலை, ஈச்சமோட்டைப் பகுதியில் வசிக்கும் மக்களிடமிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ் சாட்டியுள்ளார். தேர்தல் மோசடிகள் மூலம் யாழ்.மாநகர சபைத் தேர்தலில் எவ்வாறேனும் வெற்றி பெற முற்பட்டுள்ள சிறீலங்கா அரசு அதற்காக வாக்காளர் அட்டைகளை பலாத்காரமாக பறித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ். நகரில் நேற்று நடத்தப்பட்ட ஊடக வியலாளர் மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பின…

  21. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பாலித கோஹன்ன, அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நாவுக்கான நியூயோர்க்கின் பிரதிநிதியாக இவர் மாற்றம் செய்யப்படலாம் எனவும், தற்போது அப்பதவியில் இருக்கும்,எச்.எம்.ஜீ.எஸ் பலிஹக்காரவினை பதவிக்காலம் முடியும் முன்னர் நாட்டிற்கு மீள் அழைக்கப்படவுள்ளார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளிவிவகார அமைச்சுப்பதவியில் இருந்து பாலித கோஹன்னவை நீக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்லப்பட்ட போதும் அவை பயனளிக்காமல் போனது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அண்மையில் பதவிநீக்கம் செய்யபப்ட்ட ஜெனீவாவிற்கான பிரதிநிதி தயான் ஜயதிலக்கவின் வெற்றிடத்திற்கு பதிலாக அருனி விஜேவர்த்தன நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. …

    • 0 replies
    • 829 views
  22. அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய மோதல்கள் காரணமாக வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களை காரணமாக வைத்து அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொதுமக்கள் மீது பலவந்தமாக வரிகளை சுமத்த முயற்சிக்கிறது. முகாம் மக்களை வெளியேற்றாமல் தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் நன்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே அம்மக்கள் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம் நிலவரங்கள் பற்றி கரு…

    • 0 replies
    • 505 views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைக்கு தகவல்களைக் கொடுத்து வந்ததாகக் கருதப்படும் வடபகுதியைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படவிருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் வார ஏடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. அதிகாரபூர்வமான கூட்டங்களுக்காக கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளும் இவர்கள் பின்னர் அது தொடர்பான புலனாய்வுத் தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு கொடுத்துவந்ததாகவும், இது தொடர்பான தகவல்களை அண்மையில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுத்தப்பட்டு

    • 1 reply
    • 626 views
  24. வன்னியில் நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியப் படையினருடன் இணைந்துகொள்வதற்காக இந்திய தரைப்படையில் பணியாற்றிய மேலும் 80 பேர் சிறிலங்கா சென்றுளளதாக இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 360 views
  25. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று அயர்லாந்து வர்த்தக சங்கங்களின் மகா சபை வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 321 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.