ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
சிறிலங்கா அரச படைகளுடன் சேர்ந்து செயற்பட்டுவரும் இராணுவத் துணைப் படையான ஈ.பி.டி.பி. அமைப்பின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்ளலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துக்கு மேலாகச் சென்று அரசியல் தீர்வு ஒன்றை அரசு முன்வைக்குமாக இருந்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பு உரிமையைப் பெற்றுக்கொள்வதாற்கு தான் தயாராக இருப்பதாக இது தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கின்றார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பு உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னை ஏற்கனவே அழைத்திருந்ததாகவும், தெரிவித்திருக்கும் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் தீர்வு விடயத்தில் அ…
-
- 14 replies
- 1.1k views
-
-
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ரூ.13 ஆயிரம் கோடி கடனுதவி இரண்டரை பில்லியன் அமெரிக்கன் டொலர் கடனுதவியை பெறவும், வழங்கவும் பரஸ்பரம் இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் இணங்கியுள்ளன. சிறிலங்கா அரசு நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டதாகத் தெரியவில்லை இருப்பினும் முனைய தொகையை விட அதிக பணத்தை சர்வதேச நாணய நிதியம் தற்போது வழங்கவுள்ளதாகத் தெரிகிறது. ஏன் இந்தக் கபட நாடகம், இழுத்தடிப்பது போல உலகிற்குக் காட்டி இறுதியில் தமது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளன உலக நாடுகள். இவர்கள் எப்போதுமே பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றி கவலையடைய்ப் போவதில்லை என்பதே யதார்த்தம். 25 வருட கால் போர் ஓய்வுக்கு வந்ததையடுத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக…
-
- 0 replies
- 737 views
-
-
தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர், கனகரட்ணம் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் ஆகிய மூவரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை நீதிவான் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த ஹப்பு ஆராய்ச்சி கொழும்பில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். பார்வையிடச் சென்றபோதே குறித்த மூவரையும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை நீதிவான் வழங்கினார் எனத் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 681 views
-
-
விடுதலைப்புலிகளின் எரிபொருள் தாங்கி கண்டுபிடிப்பு – சிறிலங்கா ராணுவம் [படங்கள் இணைப்பு] போர் நடைபெற்ற பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையின்போது எரிபொருள் நிரப்பட்ட தாங்கியொன்றை மீட்டெடுத்துள்ளதாக சிங்கள ராணுவம் கூறியுள்ளது. போர் முடிவடைந்த பகுதிகளில் தேடுதல் வேட்டைகள் இப்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. புதுக்குடியிருப்பு பகுதியில் எரிபொருள் நிரப்பட்ட தாங்கியும் பல தகர டிரம்களில் அடைக்கப்பட்ட இயந்திர எண்ணெய்களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்துள்ளதாக சிங்கள ராணுவம் அறிவித்துள்ளது. இதன்படி 25,000 லீற்றர் பெற்றோலும், 230 லீற்றர் கொள்ளளவுடைய 9 இயந்திர எண்ணெய் டிரம்களும் புதைக்கப்பட்ட நிலையில் 56 ஆவது பிரிவு படையினரால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை புதுக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரான்சில் தமிழீழமக்கள் பேரவை கூட்டமும் கொள்கை விளக்கமும் 19.07.2009 ஞாயிற்றுக்கிழமை பாரிசில் உள்ள மொன்றோயில் நகரமண்டபத்தில் பிற்பகல் 17.00 மணிக்கு தாயகத்தின் விடுதலைக்கு வித்தாகிப்போன அனைவருக்கும் அகவணக்கமும், ஈகைச்சுடரினையும் ஏற்றி பிரான்ஸ் தமிழ்மக்கள் பேரவையின் கொள்கை விளக்கக்கூட்டம் ஆரம்பமாகியது. வரவேற்புரை, அறிமுகவுரை, தலைமையுரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பாக திரு. சத்தியதாசன் அவர்கள் உரையாற்றினார். இவர் தனதுரையில் காலத்தின் அவசியம் கருதியும், நாட்டில் உருவாகியிருக்கும் புதிய சூழ்நிலையை கவனத்தில் கொண்டும் பிரான்சில் பலமான ஒரு அரசியல் கட்டமைப்பினை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கியிருந்தார். அவரை தொடர்ந்து தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பி…
-
- 0 replies
- 413 views
-
-
அறுபது அகவைக்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிப்பு – மகிந்த ரஜபக்சே சொல்கிறார் வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கிட்டத்தட்ட 15,000 பேரைத் தாம் ஏற்கனவே விடுவித்துவிட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறுகிறார். இபோது கிட்டத்தட்ட 40,000 சிறுவர்களுக்கு தாம் கல்வி வழ்ங்குவதாகவும், புலிப்படையில் இருந்த சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மனித உரிமைகள் குறித்த பிரச்சனைகளை கண்டறிந்து பாராளுமன்றத்தின் முன்னால் முறையிடவென சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் தலைமையிலான விஷேட குழுவொன்றை அமைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இத்தீர்மானமானது அமைச்சர்களுடனான கூட்டமொன்றில் மனித உரிமைகள் பற்றிய விடய விவாதத்தின்போது எடு…
-
- 0 replies
- 509 views
-
-
கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் இலங்கை வருகை கடந்த சனிக்கிழமை வருவதாக இருந்த கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் இன்று வந்தடைவார்கள் என இலங்கை சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இலங்கை வருவதாக இருந்த கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்களின் விமான பயண ஏற்பாட்டிலிருந்த தடங்கல்கள் காரணமாக அவர்கள் பயணம் தாமதமாகியதாகவும் அந்த மருத்துவகுழு இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் பொது சுகாதார திணைக்கள இணைத் தலைவர் டாக்டர் பாலித மகிபால உறுதியாக அறிவித்துள்ளார். வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு இலங்கையரசு கியூபாவைக் கேட்டிருந்தது. இதற்கமையவே டெங்கு நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்தும் பற்றீரியாவை (bacterial…
-
- 0 replies
- 420 views
-
-
ஏதிலிச் சிறுமிக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு வன்னித் தளபதிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு காயமடைந்த நிலையில் வன்னி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏதிலிக் குடும்பத்தைச் சேர்ந்த சோபிகா சுரேந்திரநாதன் (வயது 13) என்ற சிறுமியை உடனடியாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வன்னி இராணுவத் தளபதிக்கு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்தக் குடும்பத்தவர்கள் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ஷிராணி பண்டாரநாயக்கா, சலீம் மர்க், ஜகத் பால பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் விடுத்தது. பிரித்து வெவ்வேறு முகாம்…
-
- 0 replies
- 495 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட 'ஈழம்' வங்கியின் தலைவர் எனக்கூறப்படும் ஒருவரை கொழும்பில் தாம் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். கொலின் ரூபன் எனப்படும் இவர் கொழும்பில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 354 views
-
-
கிழக்கு மாகாணத்தில் இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் ஆயுதக் கையளிப்புக்காகக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்திருந்தபோதிலும், மேலும் பெருமளவு சட்டவிரோத ஆயுதங்கள் இன்று கையளிக்கப்பட்டதாக கிழக்கு இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 290 views
-
-
வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் இருந்து பெண் ஒருவரை வெளியே கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
சிறிலங்கா வான் படையினரால் முன்னர் நடத்தப்பட்ட உள்ளுர் வானூர்தி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக அரசு இன்று அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது. நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இரு…
-
- 0 replies
- 358 views
-
-
தமிழ்நாடு செய்தியாளர் ரூபன் 20/07/2009, 01:29 ஈழத்தமிழர்களை இந்தியா காப்பாற்ற வேண்டும் - சீமான் இலங்கையில் முகாம்களில் சிறைபட்டுள்ள ஈழத் தமிழர்களை மீட்க, இந்திய மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் வலியுறுத்தியுள்ளார். "நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிம்போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் போரினால் பாதிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே முகாம்களில் சிறீலங்கா அரசால் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கண்டம் தெரிவித்தார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு மக்களிற்கு, அரசு போதிய கழிப்பறை, குடிநீர், சுகாதார வசதிகள் செய்து கொடுக…
-
- 19 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவுக்கான புதிய இராணுவத் தளபதியை நியமிக்கும்போது சேவை மூப்பு எந்தவகையிலும் கவனத்திற்கொள்ளப்படாமையால் அதிருப்தியடைந்திருக்கும் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும், தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் முகமாக தமது சேவையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படைத் தலைமைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரத்தில் மேற்கொண்ட திடீர் மாற்றங்களினால் இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் பெரும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட விருப்பத்துக்கு அமைவாகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். கூட்டுத் தலைமை அதிகாரிப் பத…
-
- 0 replies
- 689 views
-
-
யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதையடுத்து நகரின் பொதுக்கட்டிடங்கள், வீட்டுச்சுற்று மதில்கள் அனைத்திலும் வகை தொகையின்றி சுவரொட்டிகளை ஒட்டுவதால் மக்கள் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். இச் சுவரொட்டிகளை சிறீலங்கா காவல்துறையினர் "கழிவோயில் பூசி" அழித்து வருவதால் நகர் அவலட்சணமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நவீன சந்தைக்கட்டிடம் முப்பது வருடங்களின் பின்னர் அண்மையில் தான் பன்னிரண்டு இலட்சம் ரூபா செலவில் வர்ணம் தீட்டப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் நகரின் அழகுகெட்டுவிடும் என்ற சிந்தனையில்லாமல் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை ஒட்டிவிட அதை பொலிஸாரும் அதே மனப்பாங்குடன் நகரை அலங்கோலமா…
-
- 0 replies
- 679 views
-
-
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது உயிரிழந்தோரிற்கான ஆத்ம சாந்திவேண்டி பிராத்தனைகள் செவ்வாய்க்கிழமை இந்து அமைப்பக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. கீரிமலையில் இடம்பெறும் இப்பிதிர்க்கடன் செலுத்தும் உறவினர்களினால் வன்னியில் மரணித்தவாகளுக்கான பிதிர்கடன் மற்றும் ஈமைக்கிரியைகள் செலுத்ததாவர்களுக்குமாக இந்த ஆத்ம சாந்திப்பிராத்தனை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுகளை கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள் இராஜ இராஜ ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் மகா ராஜ ஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் ஆகியோர் நடத்தி வைக்கவுள்ளனர். இந்த ஆத்மாசாந்திப் பிரார்த்தனைக்காக இதுவரையில் யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இடம்பெயர்ந்து வ…
-
- 0 replies
- 517 views
-
-
யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் கரையொதுங்கிய இரண்டு இளைஞர்களின் உடலங்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ். மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு இளைஞர்களின் உடலங்களிலும் அடி காயங்கள் காணப்படுவதால் யாழ். மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை உருவாகியிருக்கின்றது. முதலாவது உடலம் புங்குடுதீவு கரையில் ஒதுங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்களின் தகவலையடுத்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் இந்த உடலத்தைப் பொறுப்பேற்று யாழ். மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இரண்டாவது உடலம் நேற்று திங்கட்கிழமை எழுவைதீவுக் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டது. இதனையும் ஊர்காவற்றுறை காவல்துறையினரே பொறுப்பேற்…
-
- 0 replies
- 459 views
-
-
சிறிலங்காப் படையில் இருந்து தப்பியோடியவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் நிறுவனங்களில் மற்றும் அலுவலகங்களில் கடமையாற்றலாம் எனக் கருதும் படைத் தலைமை அவ்வாறானவர்களை தனியார் நிறுவனங்களில் தேடிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படையில் இருந்து தப்பியோடி தனியார்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 150 பேரின் விபரங்களைப் பெறும் நோக்கில் காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதவான் ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். மேற்படி படையினர் 150 பேரினதும் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. படையில் இருந்து கடந்த சில வருடங்களில் தப்பிச்சென்ற 65 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் தனியார்துறை…
-
- 0 replies
- 372 views
-
-
வவுனியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் மதவாச்சி சோதனைச் சாவடியில் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் பலர் கைது செய்யப்படுவதாகவும் உறவினர்கள் முறையிட்டுள்ளனர். விசாரணைக்கு உட்படுத்தப்படும் இளைஞர்கள், யுவதிகள் பலர் சிறிலங்காவின் இரகசிய காவல்துறையினரால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் 10 இளைஞர்கள் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளையில் மதவாச்சி சோதனைச் சாவடியில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் மூன்று இளைஞர்கள் காணமல் போய் உள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது என்று இலங்கை மனித உரிமை ஆ…
-
- 1 reply
- 601 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற திடீர் தேடுதலில் இந்த ஐந்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர். வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே இவர்கள் கொழும்பு வந்ததாகவும் கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் காவல்துறையினரால் காவல்துறையினரால் தெரிவிக்கப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளையில் இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே இந்த ஐந்து இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினரே தேடுதல் நடத்தி இவர்களை கைது…
-
- 0 replies
- 371 views
-
-
முகாம்களை விட்டு வெளியேற எப்போது எமக்கு அனுமதி? * ஒவ்வொரு தடவை செல்லும்போதும் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பும் அகதிகள் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு தான் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் அங்குள்ள மக்கள் "எப்போது நாங்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட போகின்றோம்?' என்று தம்மிடம் கேட்பதாக தெரிவித்திருக்கும் இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே, முகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் மக்கள் தமது எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடன் இப்போதிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதேவேளை, உதவி வழங்கும் முகவரமைப்புகள் முகாம்களிச்ன் நிலைவரம் தொடர்பாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் மீளாய்வு செய்யவிருப்பதாகக் கூறிய நீல் பூனே, முகாம்களிலிர…
-
- 0 replies
- 446 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும் நோக்கில் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையில் சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறிலங்காவின் அரச தலைவர் பணியகம் அறிவித்துள்ளது. மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக அதிகரித்துவரும் அனைத்துலக அழுத்தங்களையடுத்து அதனைச் சமாளிக்கும் நோக்கிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான அரச தலைவர் ஆணைக்குழு செயல் இழந்துள்ளதையடுத்து அனைத்துலக ரீதியாக அதிகளவுக்கு விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இந்த மனித உரிமைகள் சிறப்புக் குழுவில் இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, நீதி சட்ட மறுச…
-
- 0 replies
- 351 views
-
-
மைசூர் புலி திப்பு சுல்தான் வீரத்திற்கிணையான ஈழத்துப்புலி பிரபாகரன் on 20-07-2009 18:30 Published in : செய்திகள், இலங்கை மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப்புலி பிரபாகரனின் வீரம் – கன்னட முற்போக்காளர்கள் - லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் ஜெய் ஈழம் என்றத் தலைப்பில் கருத்தரங்கமும், கன்னடப் பத்திரிகையாளர் குமார் ப்ரோடிகட்டி எழுதிய “ஓ ஈழம்” நூல் வெளியீட்டு விழாவும், கர்நாடகத் தலைநகர் பெங்களூரு காந்தி பஜார், கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது. லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். முனைவர் பஞ்சகர…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான, கெளரவமான வாழ்வு உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான அரசியல் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சிறிலங்க அதிபர் ராஜபக்சவிடம் தான் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். எகிப்தில் நடந்த முடிந்த அணி சேரா நாடுகள் (Non Aligned Movement - NAM) மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சயுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் இராசா எழுப்பிய கேள்விக்கு விளக்கமளித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது என்றும், அவர்களின் பிரச்சனைக்கு 1987ஆம் ஆண…
-
- 0 replies
- 440 views
-