Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கான முயற்சி ஒன்று எதிரணிகளால் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீரவே இதற்கான முயற்சிகளின் பின்னணியில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமான தேர்தல்கள் எதிர்நோக்கப்படும் நிலையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கிய உபாயமாக இந்தக் காய் நகர்த்தலை மங்கள சமரவீர மேற்கொண்டிருக்கின்றார். 2007 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோ

    • 1 reply
    • 499 views
  2. பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுதவியை ஏமாற்றி பெற விவசாய சிறுகடன் திட்டம் பன்னாட்டு நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறீலங்கா அரசு கபடத்தனமான அறிவித்தல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. வடக்கில் போர் இடம்பெற்ற பிரதேச மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில், விவசாயத்தினை ஊக்குவிக்க இருப்பதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இதற்கென சிறுகடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும

  3. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் சிறிலங்கா காவல்துறை – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சிறீலங்கா காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரவதாக, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது. கண்டியில் மனித உரிமை அமைப்பொன்றை நடத்திவரும் அருட்தந்தை நந்தன மனதுங்கவை ஆதாரம்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்கா காவல்துறையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் காரணமாக உண்மையை வெளிப்படுத்த தயங்கி வருகின்றனர். சிறீலங்கா காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல்கள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள் என்பவற்றில் ஈடுபட்டு வருவதாகவும், ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு மு…

  4. வெறும் பானையை வைத்திருக்கும் மகிந்தவால் பசியாற்ற முடியுமா? – சுவிசிலிருந்து தொல்காப்பியன் ‘விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் நடைமுறைப் படுத்தும்” என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னர் கூறியிருந்தார். ஆனால், இப்போது அவரதும், அவரது அரசாங்கத்தினதும் கூற்றுக்கள் அதற்கு முரணான வகையில் அமைந்திருக்கின்றன. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீங்கலாக) நியமித்த அரசாங்கம் இதுவரைக்கும் அதனைக் காரணம் காட்டியே காலத்தை இழுத்தடித்து வந்தது. இப்போது, மக்கள் ஆணையின் பின்னரே அரசியல் தீர்வு என்ற புதியதொரு ஆயுதத்தைக் கையில் எடுத்து கவசமாகப் பாவிக்கத…

  5. லசந்த, போத்தலய துள்ளலை அடக்கியது நானே – அமைச்சர் மேர்வின் சில்வா அறிவிப்பு சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன். போத்தலயவும் துள்ளினார். அவரது காலை உடைத்துப் போட்டேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். தற்போது எனது தேர்தல் தொகுதியில் எங்களது ஒருவனே எனக்கு விளையாட்டுக் காட்டுகின்றார். அவரது ஊருக்கே வந்து, இன்று நான் இதனைக் கூறுகின்றேன், அவருக்கு நான் இன்னமும் ஐந்து நாட்கள் மாத்திரம் கொடுக்கின்றேன். களனி பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகவில்லையென்றால், நான் கெட்டவன் என்று கூறவேண்டாம். அதன்பின்னர் என்னை யாரும் குறைகூறக் கூடாது. எனது வார்த்தை மீறிச் சென்றால், அவரையும் லசந்தவை அனுப்பி…

  6. வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் உள்ள இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 50 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கப் பேச்சாளர், மருத்துவத் தாதியர்களின் பணிகளைக் கூட இந்த மருத்துவர்களே செய்ய வேண்டியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்த மக்களுக்காக என வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் போதுமான மருத்துவ வசதிகளோ தேவையானளவு மருத்துவப் பணியாளர்களோ இல்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்திருக்கும் அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், இதனால் மருத்துவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், மருத்துவ சேவையையும் வழங்குவதில் நெ…

    • 0 replies
    • 325 views
  7. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளேட்டின் நிருபர்கள், பணியாளர்கள் மற்றும் முகவர்களுக்குத் தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பணியாளர்கள் தொடர்ந்தும் அச்சநிலையில் இருப்பதாகவும் குடாநாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னரும் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், ஜூன் மாதம் 30 ஆம் நாளுக்குப் பின்னர் 'உதயன்' நாளேடு தனது வெளியீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த விடயத்தில் தலையிட்டு, பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கியதையடுத்து 'உதயன்' தொடர்ந்தும் வெளிவந்துகொண்டுள்ளது. 'தேசத்தைப் பாத…

    • 0 replies
    • 505 views
  8. வீரகேசரி நாளேடு இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனுக்கு செங்கல்பட்டில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நம் தமிழ் இனம் ஒடுக்கப்பட்டது. அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம…

    • 1 reply
    • 719 views
  9. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியில் இருந்து நாளை ஓய்வுபெறும் எயர் சீஃப் மாசல் டொனால்ட் பெரேரா வெளிநாடு ஒன்றுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படவிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்களாதேஷ், வியட்நாம் உட்பட ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றில் இவர் தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. வானூர்தி படைத் தளபதிப் பதவி உட்பட பல முக்கியமான பதவிகளை அவர் கடந்த காலங்களில் வகித்துள்ளார். வான் படைத் தளபதிப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 30 வருட காலம் இவர் வான் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இராணுவத் தளபதிப் பதவியில…

    • 0 replies
    • 503 views
  10. துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு'' பேசுகிறார் பிரபாகரன் - அருட் தந்தை ஜெகத் கஸ்பர் ராஜ் நாளாந்த வாழ்வின் கடமைகளும், கவலைகளும், சம்பந்தமில்லா மனிதர்களும் நீதிக்கான வேட்கையிலிருந்து நம்மை தணிக்கின்றன. இச்சூழல்வினைக்கு நானும் விதி விலக்கல்ல. அதிகாலை எழுந்து நடக்கும்போது இருக்கிற உணர்வெழுச்சியும் வேகமும் அந்தியாகும் போது இருப்பதில்லை. ஆயினும் ஒருசில நிகழ்வுகள் மட்டும் நம்மை நிம்மதியாக இருக்க முடியாமற் செய்யும், எண்ணும்போதெல்லாம் கண்ணியச் சீற்றம் கிளர்த்தும். கடந்த சுமார் ஐம்பது நாட்களாய் என்னை கனன்றுகொண்டே இருத்தி வைக்கும் நிகழ்வு மே, 14, 15, 16 நாட்களில் முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புத்தேடி ராணுவக் கட்டுப் பாட்டு பகுதிகளுக்குள் வந்த பல்லாயிரக் கணக்கான தமிழ்ப்…

  11. இலங்கை முகாம்! நெஞ்சை சுட்ட நிஜம்! நேரில் கண்ட பத்திரிகையாளர் ஜெயாமேனன்! தேன் என்று சொல்வதால் நாக்கு இனிக்காது. நலன்புரி முகாம் என்றும் உலகின் மிகப்பெரிய மறுவாழ்வு மையம் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் மனித அவலத்தின் சாட்சியாகவே இருக்கின்றன இலங்கையில் உள்ள அகதி முகாம்கள். சொந்த மண்ணில் அகதிகளாகத் தவிக்கும் ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்களின் வாழ்நிலை குறித்து அரசுத்தரப்பிலான அதிகார மிக்க பொய்களைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளின் நிவாரண உதவியைப் பெறுவதற்காக ராஜபக்சே கட்டவிழ்த்துவிடும் பொய்களை ரத்தினக் கம்பளத்தில் தாங்கிப்பிடித்து, அதனை அப்படியே வெளியிடும் சில ஊடகங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் ம…

  12. சுதந்திர இணையத்தள ஊடகமான 'லங்கா நியூஸ்' இணையத் தளத்தை சிறிலங்காவில் பார்வையிட முடியாதவாறு அந்நாட்டு அரசு தடை செய்திருப்பதையிட்டு ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அனைத்துலக நிறுவனமான எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு (RSF) வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. ஜூன் மாதம் 11 ஆம் நாள் முதல் சிறிலங்கா அரசின் உத்தரவின் பேரில் இந்த இணையத்தளம் சிறிலங்காவில் உள்ள படிப்பாளர்களால் பார்வையிட முடியாதவாறு தடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 459 views
  13. வவுனியா முகாம்களில் 2.5 இலட்சம் மக்களுக்கு வைத்தியர்கள் 50 பேர் மட்டுமே இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வைத்தியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் குணசேகரா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி ராஜபட்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 வைத்தியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது. 300 தாதிகள் பணியாற்ற வேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், வைத்த…

  14. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை அரசாங்கத்தைப் பொறுத்தவரை சில பிரச்சினைகளைத் தீர்த்திருந்த போதும் புதிய சில பிரச்சினைகளை அல்லது நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உதாரணமாக வெற்றி பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட அவசரகால நிலையை தொடர்ந்தும் பேணிக்கொள்ள விரும்புகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. யுத்தத்தின் எச்சங்களில் இருந்து தோற்றம் பெறக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு அவசரகால நிலை அவசியம் என்று அரசாங்கம் கருதக் கூடும். அல்லது தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடிகளை கையாள்வதற்கு சட்டம் அவசியமானது என்று கருதப்படவும் கூடும். எவ்வாறாயினும் தெளிவானது என்னவெனில் அவசரகால நிலையை தளர்த்துவது அரசாங்கத்தின் அல்லது இரா…

  15. “இலங்கையில் தமிழின அழிப்புப் போர் இன்னும் முடியவில்லை” – பெ.மணியரசன் “இலங்கையில் தமிழின அழிப்புப் போர் இன்னும் முடியவில்லை , இதற்காகத்தான் இப்போதும் இந்திய ராணுவத்தின் உதவியைக் கோருகின்றனர்” என்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன் கூறியுள்ளார். திருச்சியில் அக்கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “தமிழ்த் தேசியம்” சிறப்பு மாநாட்டில் அவரது நிறைவுரை: “தமிழகத்தில் தமிழர்கள் அரசியல் விடுதலை பெற வேண்டும். ஈழத் தமிழர் விடுதலைக்கு நாம் துணை நிற்க வேண்டும். இந்த இரண்டும்தான் முக்கியக் கடமைகள். ஈழ விடுதலை என்ற முற்றிய கதிரை இந்திய, சீன அரசுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் அழித்து நாசம் செய்துவிட்டது. ஆனாலும், …

  16. ராஜீவ்காந்தியை கொல்ல… சிங்கள ராணுவம் நடத்திய சதி! இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே Imageஅவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன. இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். ‘சமாதா…

  17. செய்தியாளர் மகான் 13/07/2009, 17:46 பொலநறுவையில் உந்துறுளி விபத்து! சிறீலங்காக் காவல்துறையினர் இருவர் பலி! பொலநறுவை மாவட்டம் அரலகங்விலப் பகுதியில் சிறீங்காக் காவல்துறையினர் பயணித்த உந்துறுளி விபத்துக்கு உள்ளாகியதில் சிறீலங்காக் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அரலகங்வில காவல்நிலையத்தில் கடமையை முடித்துவிட்டு உந்துறுளியில் சென்றுகொண்டிருந்த காவல்துறையினர் உந்துறுளி மிது எதிரே வந்த சுமையூர்தி மீது மோதியதில் குறித்த இரு காவல்துறையினரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து சுமையூர்த்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது செலுத்திச் சென்ற சுமையூர்த்தியும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. pathivu

  18. செய்தியாளர் கயல்விழி 13/07/2009, 15:40 அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 73 பேர் கைது அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 73 பேர் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் அதிகம் உள்ளடங்கியுள்ள இந்த மக்கள், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோர முற்பட்ட போதிலும், அங்கு செல்ல முன்னரே கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு அருகிலுள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள் எனவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. pathivu

  19. "ஐரோப்பிய ஒன்றியம்" என பொறிக்கப்பட்ட ஊர்தியில் இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் அவரது குழுவினர் கடந்த புதன்கிழமை இரண்டு நாட்கள் பயணமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இதன்போது யாழ் பல்கலைக்கழகத்திற்கான பயணத்தில் "ஐரோப்பிய ஒன்றியம்" என பொறிக்கப்பட்டிருந்த ஊர்தியில் அவர் வந்திறங்கியதாக, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர். சிறீலங்கா படையினரின் அதியுயர் பாதுகாப்புக்கு மத்தியில் யாழ் வந்த தூதுவர், எதற்காக "ஐரோப்பிய ஒன்றியம்" என எழுதி பொருத்தப்பட்ட ஊர்தியில் பயணத்தார் என்பது சந்தேகமாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். நன்றி சங்கதி

  20. இராணுவத் தளபதிக்கு பதவி உயர்வா ? பறிப்பா? விடுதலைப் புலிகளுக்கெதிரான போருக்கு தலைமை வகித்த சரத் பொன்சேக்காவை, ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது சொல்லாமல் வீடு செல், என்ற தொனியில் உபசரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இராணுவத் தளபதி பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளமையால் சரத் பொன்சேக்காவுக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது கொள்கை ரீதியாக பலம்சேர்த்த ஜாதிக ஹெல உறுமய, போர் வெற்றியின் பின்னர் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டதைப் போன்றே சரத் பொன்சேக்காவும் தற்போது உபசரிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார். அரசாங்கத்தின் யுத்த வெற்றியின் பின்னர், நாட்டின் எதிர்கால பாதுகாப்புடன் தொடர்புடைய பல செயற்திட்டங…

  21. 13ஆவது திருத்தத்தில் பிரிவினைக்கு எதிரான போதியளவு ஏற்பாடுகள் உள்ளடக்கம் இன பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால்,அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, ஹெல உறுமய போன்றவை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவதுடன் இந்தத் திருத்தத்தை பூரணமாக அமுல்படுத்துவது பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இந்த அச்சம் ஆதாரமற்றது ஒன்று என்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான பல பாதுகாப்பான ஏற்பாடுகள் இந்த 13 ஆவது திருத்தத்தில் இருப்பதாகவும் தாராளவாத சிந்தனையாளர்கள் கூறுகின்றனர். காணி, பொ…

  22. பிரபாகரன் இடத்தைப் பிடிக்க பதவிச் சண்டையா? நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்கிவரும் நியூயார்க் வாழ் வழக்கறிஞர்-அரசியல் ஆலோசகர் விசுவநாதன் ருத்திரகுமாரனுக்கு ஈழத் தமிழர்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் பெருகிவரும் நிலையில்... முதன் முறையாக நம்மிடம் மனம் திறந்து பேசினார் அவர். ''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவி அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிக அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல... இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடி னார்கள். நாடாளுமன்றத்தில் குரல்…

  23. காலம் கட்டவிழ்த்துவிடும் வழி – பிரம்மசீடன் இருபது ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தலைநிமிர்ந்து நின்ற தமிழீழ அரசு, இன்று அஞ்ஞாதவாச நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொழுதும், தமிழீழ தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கை தணியவில்லை என்பதை நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் ஊடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி வருகின்றோம். இதேபோன்று, தமிழீழ தனியரசை நிறுவுவதற்காக என்றென்றும் எமக்குத் தோள்கொடுத்து உறுதுணை நிற்பதற்கான தமது தார்மீக ஆதரவை எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். படை வலிமையின் மூலம் எமது மண்ணை இன்று சிங்களம் ஆக்கிரமித்துவிட்ட பொழுதும், எந்தவிலை கொடுத்தாவது எமது மண்ணை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற ஓர்மம் எம்மை விட்டு அகலவில்லை. இதனைய…

  24. சிறிலங்காவில் மேலும் ஒரு இணையதளத்துக்கு அரசு தடை அரசாங்கத்திடமிருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இலங்கையில் இணைய சேவை வழங்குனர்களான(ISP) இலங்கை ரெலிகொம்மும் ஏனைய இரண்டு தனியார் இணைய சேவை வழங்குனர்களும் உடனடியாகவே நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா செய்தி இணையத்தளத்தை தமது வாடிக்கையாளர் பார்ப்பதை தடைசெய்துள்ளனர். எனினும் லங்கா செய்தி இணையத்தளத்தின் நிர்வாகத்தினர் தமது இணையத்தளம் தடை செய்யப்பட்டதான உத்தியோகபூர்வ கடிதம் எதனையும் இதுவரை பெறவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இரண்டு பிரத்தியேகமான செய்தியறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்தே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. முதலாவது, மெனிக் முகாமில் ஆத்திரத்திற்குள்ளான இடம் பெயர்ந்த மக்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.