ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் 8,500-க்கும் அதிகமான தமிழர்கள் கலந்துகொண்ட அமைதிக்கான பேரணி மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. இதில் பல பாகங்களில் இருந்தும் ஒன்றுதிரண்ட மக்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 338 views
-
-
மக்கள் கொல்லப்படுவது பிரச்சினைக்குத் தீர்வாகாது : அமெ. ராஜாங்க திணைக்களப் பேச்சாளர் றொபேர்ட் வூட் வீரகேசரி இணையம் 4/17/2009 10:36:02 AM - வன்னியில் பொதுமக்கள் கொல்லப்படுவதானது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவராதென்றும் அது எந்த இறுதியான சமாதானத்துக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாகவே இருக்குமென்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களப் பேச்சாளரான றொபேர்ட் வூட் தெரிவித்திருப்பதாக ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. வன்னியில் பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் உடனடி போர்நிறுத்தம் ஒன்றுக்குச் செல்லவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதாக ஏ.பி. மற்றும் ஏ.எவ்.பி. செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன. பொதுமக்கள் தப…
-
- 1 reply
- 538 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசை இந்தியா வலியுறுத்தியிருப்பதை வரவேற்பதாகவும், இதை ஏற்று போரை நிறுத்த சிறிலங்கா அரசு மறுத்தால் அதன் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 340 views
-
-
வன்னிப் பகுதியில் தொடரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள இந்தியாவின் முன்னாள் மூத்த இராஜதந்திரியான விஜய் நம்பியார் இன்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து வன்னி நிலைமைகள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 330 views
-
-
இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி இன்று மேலும் ஒருவர் தீக்குளித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 330 views
-
-
அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 260 views
-
-
அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 270 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 310 views
-
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 348 views
-
-
சிறிலங்காவின் கம்பகா மாவட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஜே.வி.பி. உறுப்பினரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 280 views
-
-
முல்லைத்தீவுச் சிறுவர்களின் கதி? [17 ஏப்ரல் 2009, வெள்ளிக்கிழமை 6:45 மு.ப இலங்கை] எந்தக் கொம்பன் சொன்னாலும், முல்லைத் தீவில் தான் நடத்தும் போரை நிறுத்தப்போவ தில்லை; இறுதி முடிவு கிடைக்கும் வரை அது தொடரும் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு, சர்வதேசத்துக்குக் கூறிவருகிறது. தனது அந்த முடிவில் எவரது அழுத்தத் திலும் பெயரிலும் மாற்றம் இருக்காது என்று ஜனாதிபதி முதற்கொண்டு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் வரை வெகு உறுதியாக நிற்கின்றனர். இந்தப் போரினால் தமிழ் மக்கள் ஆயிரக் கணக் கில் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் பல்லாயிரம் பேர்களின் வாழ்க்கை சுக்குநூறாகியும் சிதைந்தும் போகிறது. உடல் நலம் பாதிப்பு, ஊன முறுதல், மனநலம் குன்றுதல் என்று எண்ணிப் பார்த்த…
-
- 0 replies
- 863 views
-
-
அம்பலன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்த ளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க... மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா? தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி; ஏறத்தாள 8000 பேர் பங்கேற்ற கான்பெர்ரா பேரணி Get Flash to see this player. [ஒருங்கமைப்பாளர் -ஜான் தர்மா அவர்களின் செவ்வி] More than 8000 at the massive rally in Canberra; Senator Bob Brown makes surprise visit and meet the hunger strikers; protestors walk to Department of Foreign Affairs (DFAT); Hunger Strikers to meet DFAT Representative. Online Reporting from Canberra Courtesy:TamilNational.com
-
- 0 replies
- 1k views
-
-
மோதல் நடைபெறும் பகுதியில் உள்ள மக்கள் தொடர்பாக நான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த சில வாரங்களாக தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். அதன்போது தாங்கள் விருப்பத்திற்கு மாறாக பொதுமக்களை தடுத்து வைக்கவில்லை என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை ஜோன் கோம்ஸ் ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது: மோதல் நடைபெறும் பகுதியில் உள்ள மக்கள் தொடர்பாக நான் விடுதலைப் புலிகளுடன் கடந்த சில வாரங்களாக தொடர்புகளை மேற்கொண்டிருந்தேன். அதன்போது தாங்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பொதுமக்களை தடுத்து வைக்கவில்லை என விடுதலைப் புலிகள் தெளிவாக தெரிவித்தனர். …
-
- 1 reply
- 822 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அமெரிக்கத் தூதரகம் ஊடாக அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கான மனு கையளிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 294 views
-
-
கிறீன் ஓசியன் கப்பலில் இன்றும் நோயாளர்கள் ஏற்றப்படுவதாகத் தகவல் பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் வைத்தியசாலையில் உள்ள காயமடைந்தவர்கள் மற்றும் கிளினிக் நோயாளர்களை ஏற்றி வருவதற்காக கிறீன் ஓசியன் கப்பல் இன்று காலை புதுமாத்தளன் கடற்கரையைச் சென்றடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுமாத்தளன் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் உட்பட ஏனைய நோயாளர்களி்ல் மேலும் ஒரு தொகுதியினர் இன்று புல்மோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். நானூறுக்கும் மேற்பட்டவர்களை ஏற்றக்கூடிய கிறீன் ஓசியன் கப்பல் பெரிய புதுமாத்தளன் கடற்கரையில் நங்கூரமிட்டு தரித்து நிற்பதற்கான இறங்குதுறை வசதி இல்லை. இதனா…
-
- 0 replies
- 614 views
-
-
இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் -அமெரிக்கா தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 4/17/2009 8:26:33 AM - தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தசாப்த காலமாக இடம்பெறுகின்ற மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது. இத்தருணத்தில் இருதரப்பும் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நிலவுகின்ற மோதல்களை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளதுடன் மோதல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளிலிருந்து இடம்பெயரும் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் ,இடைத்தங்கல் முகாம்களுக்கு மனிதாபிமான பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் செல்வதற்கு அனுமத…
-
- 2 replies
- 613 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரகத்தை உடனடியாக மூடிவிடுமாறு கோரி இரண்டு பிக்குகள் தலைமையில் நோர்வே தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருக்கின்றது. ஒஸ்லோவில் உள்ள சிறிலங்காவுக்கான தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை வன்மையானன கண்டித்த இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அதற்குப் பதிலடியாக கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரகம் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தினர். நேற்று வியாழக்கிழமை காலை சுமார் பிற்பகல் 1:00 மணி நேரத்துக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இரண்டு பிக்குகளே தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. நோர்வேயின் தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் இதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒஸ்லோவில் …
-
- 1 reply
- 475 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தமிழ் வர்த்தகர் ஒருவர் சிறிலங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய பலசுப்பிரமணியம் குகதாசன் என்ற இளம் வர்த்தகரே கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி அக்கரைப்பற்று காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து கடைக்குச் சென்றபோதே வெள்ளை வானில் வந்த ஆயுதக்குழுவினர் தனது கணவரை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டடில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதினம்
-
- 0 replies
- 337 views
-
-
யேர்மனி, சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, தென்னாபிரிக்காவில் உண்ணாநிலைப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதேவேளையில் இத்தாலியிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 440 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு முன்னேற முயலும் சிறிலங்கா படையினர் இரட்டைவாய்க்கால் சந்தியைக் கைப்பற்றி பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளை, அப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
-
- 1 reply
- 850 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் தத்தமது பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையங்களில் தம்மைப் பற்றிய விபரங்களை உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு இன்று மீண்டும் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
பிரிட்டன் கண்டனம் http://www.srilankaguardian.org/2009/04/br...assacre-in.html சமீபத்தில் தெற்கில் நடந்த மிக மிக கொடூர சம்பவமான 7 சிங்களவர்கள், ''புலிகளினால்'' கொல்லபட்டதை கடுமையாக கண்டித்து, அடுத்த பிரிடிஷ் பிரதமர் எண்று வர்னிக்கபடும் பிரிடிஷ் வெளியுறவு செயளாளர் டெவிட் மில்லிபாண்ட் கண்டணத்தை தெரிவித்துள்ளார்... (உத ஒரு நல்ல மனுசனாக்கும் எண்டு நினைச்சன்........ )
-
- 18 replies
- 3.3k views
-
-
இன்று இந்திய தேர்தல் தொடர்பான செய்திகளை பார்ப்பதற்காக தற்ஸ் தமிழ் இணையத்தளத்திற்கு சென்றேன்.அங்கே போர் நிறுத்தம் முடிந்தது-அதிகாலை முதல் ராணுவம் வெறித் தாக்குதல்-நூற்றுக்கணக்கில் தமிழர்கள் பலி? என்ற தலைப்பில் செய்தி இணைத்திருந்தார்கள். இந்த செய்திக்கு சிலர் தங்கள் கருத்துக்களை எழுதி இருந்தார்கள்.இதை பார்த்ததும் ஒரு கணம் இதயமே உறைந்து விட்டது.அழுகையை என்னால் அடக்க முடியவில்லை. இன்னும் இந்தியா எமக்கு உதவும் என்றிருப்பவர்கள் இனியாவது விழி திறவுங்களேன். இது தான் அந்தக் கருத்துகள். பதிவு செய்தது: 16 யுpச 2009 8:54 யஅஈழத்திலே தமிழர்களை கொல்வதை கேட்டால் எனக்கு பஞ்சாமிர்தம் சாபிடுறது போல சந்தோசம். இவங்க யாரையும் உயிரோட தப்ப விட கூடாது. ராஜீவை கொன்னவங்களுக்கு இ…
-
- 21 replies
- 2.5k views
-