ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
04 Oct, 2025 | 02:17 PM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் சனிக்கிழமை (04) ஆரம்பமானது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பமான இப்பட்டமளிப்பு விழாவின் முதலாம் நாளில் பிரதம அமைச்சரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 1966 உள்வாரி, வெளிவாரி மாணவர்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கி உறுதிசெய்யப்படவுள்ளன. முதலாம் நாளின் சனிக்கிழமை (04) முதலாவது அமர்வின் போது சிவசுப்ரமணியம் பத்மநாதனுக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. 240 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது அமர்வின் …
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், இன்று (03) காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருகையில், பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று (02) மாலை, போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ராஜேந்திரன் கபிலன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பொலிஸார் அவரைத் துரத்திப் பிடித்த நிலையில், அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட கபிலனை பொலிஸார் ப…
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
04 Oct, 2025 | 11:38 AM கல்வி, ஒழுக்கம், நேர்மை, கண்ணியம், உழைப்பு போன்றவற்றிற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு காலத்தில் பெயர் போனவர்கள். ஆனால் கடந்த ஆட்சிகளில் ஏற்பட்ட போதைப்பழக்கம், தொலைபேசி பாவனை காரணமாக இளைஞர்கள் திசைமாறி சீரழிந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்களை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்ன நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானை வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற நடைபெற்ற நல்லொழுக்க தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அனைவரு…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்ன…
-
- 0 replies
- 126 views
-
-
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்! இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை பெற்ற கடன்கள் குறித்து குழு விசாரித்தபோது, கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலக அதிகாரிகள், 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 19.6 டிரில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினர். அனைத்து கடன் வாங்கும் செயல்முறைகளும் தற்போது அரச கடன் மேலாண்மை அலுவலகத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன. நாட்டின் கடன் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்த தி…
-
- 0 replies
- 134 views
-
-
me இலங்கை 17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு! சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ…
-
- 0 replies
- 200 views
-
-
ரணில் விக்ரமசிங்க வைத்துச் சென்ற கடன் பொறிக்குள் தற்போதைய அரசு சிக்கியுள்ளது - புபுது ஜயகொட 04 Oct, 2025 | 04:11 AM (எம்.ஆர்.எம்.வசீம்) அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தினால் உலகில் ஆகக்குறைவான கடன் குறைப்பு செய்த நாடு இலங்கை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ப…
-
- 0 replies
- 108 views
-
-
அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம்! 04 Oct, 2025 | 09:59 AM அரச வங்கிகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு எதிராக, தீப்பந்த போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள இலங்கை வங்கி வடபிராந்திய காரியாலத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நேற்று வெள்ளிக்கிழமை(03) இரவு 7 மணியளவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அரச வங்கிகளின் சட்டத் திருத்தங்களினூடாக, வங்கி தனியார் மயப்படுத்தலை நோக்கி செல்லவுள்ளதாக போராட்டக்காரர்கள் இதன்போது குற்றஞ்சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226851
-
- 0 replies
- 121 views
-
-
யாழ் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா 04 Oct, 2025 | 10:59 AM யாழ் மாவட்ட பண்பாட்டுப்பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இணைந்து கொண்டாடிய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றது. யாழ். புனித யுவானியர் தேவாலய முன்றலில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி மாவட்டச் செயலகத்தினை வந்தடைந்ததனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகம் கேட்போர் கூடத்தில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. குழந்தை ம.சண்முகலிங்கம் அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டுப் பெரு விழாவில், 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் - பிரதேசங்களுக்குரிய கலைஞர்களாலும், மாணவர்களாலும் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும், "யாழ…
-
- 0 replies
- 121 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு 04 Oct, 2025 | 10:00 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு எதிர்வரும் 08.10.2025 புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது. பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த ஆய்வுமாநாட்டின் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்து சிறப்பிக்கவுள்ளார். ஆய்வு மாநாடு கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் நடைபெறவுள்ளது. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் திறப்புரையினை ஆற்றவுள்ளார். பல்கலைக்கழகங்களின் பிரதான பணிகளில் ஒன்றாக இருப்பது ஆய்வுச் செயன்ம…
-
- 0 replies
- 81 views
-
-
யாழ். குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் 02 Oct, 2025 | 11:40 AM குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந்திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று புதன்கிழமை (01) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடி…
-
- 1 reply
- 159 views
-
-
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு உதவும் காவல்துறையினரின் தகவல்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம் adminOctober 3, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் , கடத்தல்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் காவல்துறையினர் தொடர்பிலான விபரங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களுடனு…
-
- 0 replies
- 67 views
-
-
இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இவர்களில் 35% (அதாவது, சுமார் 13,000 பேர்) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார். கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது ஆரோக்கிய நல மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருடாந்த மருந்து செலவில் 30% புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிவது ஒரே வழி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 30 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களிட…
-
- 0 replies
- 74 views
- 1 follower
-
-
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது! கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை நிலங்க, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1444938
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
Published By: Vishnu 03 Oct, 2025 | 08:08 PM பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்துவருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை தொடர்பில் ஒரு நாட்டுக்கே உரிய சிறப்பு அறிக்கையாளர் நியமிக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற பக்க நிகழ்வில் உரையாற…
-
- 0 replies
- 85 views
- 1 follower
-
-
02 Oct, 2025 | 04:44 PM (நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே 'இனப்பிரச்சினை' எனும் சொல்லுக்குப் பதிலாக 'மோதல்' எனும் பதம் சேர்க்கப்பட்டதாகவும், சொற்களில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் அதுசார்ந்து நிற்கும் பொருளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் நிறைவேற்றும் விதமாக பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்ப…
-
-
- 5 replies
- 252 views
-
-
வெளிநாட்டவருக்கு இலங்கையில் வதிவிட விசா! adminOctober 2, 2025 திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. குறித்த விசேட விசா ஜெர்மன் நாட்டவரான ப்ரே ட்ரெக்ஸ்செல் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தியோகபூர்வமாக இந்த விசாவை கையளித்துள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதன் மூலம் இலங்கையில் நீண்டகால வதிவிட விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய, 5 வருட வதிவிட விசாவை பெறுவதற்கு 1…
-
- 3 replies
- 259 views
-
-
(எம்.மனோசித்ரா) இலங்கையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் (polymer-based) அடிப்படையிலான குழந்தைகளுக்கு பாலூட்டும் போத்தல்கள் அனைத்தும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தர நிர்ணயச் சான்றிதழை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், தேவையான எஸ்.எல்.எஸ். தரநிலைகளை பூர்த்தி செய்து, உத்தியோகபூர்வ சான்றிதழ் அடையாளத்தைக் காண்பிக்காத பட்சத்தில், அத்தகைய போத்தல்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்ப…
-
-
- 1 reply
- 147 views
-
-
( எம்.நியூட்டன்) புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் அங்கு பணியாற்றிய கடற்படையைச் சேர்ந்த யுவதி ஒருவரை கடந்த மாதம் 25ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் இருவரையும் கைது செய்த புங்குடுதீவு கடற்படையின் உயர் அதிகாரிகள் கடற்படையின் வட பகுதி கட்டளை பணியகத்தின் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு விசாரணைகள் நடைபெற்றதோடு அங்கு காணப்படும் கடற்படையின் வைத்தியசாலையில் கடற்படை யுவதிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் இருவ…
-
- 1 reply
- 169 views
-
-
(இராஜதுரை ஹஷான்) உள்ளக விமான சேவையை அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளது. ஆகவே உள்ளக விமான சேவைக்கு தனியார் துறையினர் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு பேர வாவியை பயன்படுத்தி நீர் விமான சேவையை ஆரம்பிக்கும் திட்டம் கொழும்பு சினமன் லேக் ஹோட்டல் முனையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று வருகைத் தந்த சிறிய ரக நீர் விமானத்தை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்த, ஜோன்ஸ் கீல்ஸ் குழுமம் மற்றும் சினமன் ஹோ…
-
- 3 replies
- 222 views
-
-
30 Sep, 2025 | 03:01 PM இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் செவ்வாய்க்கிழமை (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இள…
-
-
- 8 replies
- 490 views
-
-
மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சந்தேக…
-
- 0 replies
- 125 views
-
-
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிக்கு 32 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பினை நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வியாழக்கிழமை (2) அளித்தார். 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாதத்திலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய கு…
-
- 0 replies
- 107 views
-
-
03 Oct, 2025 | 05:25 PM புதிய ஒரு சட்டம் அமலுக்கு வரும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - சங்கானையில் வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் "செப்டம்பர் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித கேரத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது ஒக்டோபர் மாதம் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக தங்களது அரசின் நிலைப்பாடு என்ன” என கேள்வி எழுப்பினார். குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் என நாங்கள் எமது க…
-
- 0 replies
- 79 views
-
-
மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை …
-
- 2 replies
- 239 views
-