ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது 12 தமிழ் இளைஞர்கள் கைதானதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 492 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மூத்த ஆலோசகரான பசில் ராஜபக்ச இந்தியா சென்று திரும்பியதிலிருந்து வன்னியில் உள்ள அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இரா.சம்பந்தன் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் மக்களின் சுயாட்டி உரிமையானது நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாகும். இலங்கையில் மனித உரிமைகள் நிலவரங்களானது மிகவும் மோசமாக இருக்கின்றன. ஆட்கடத்தில்கள், சட்டவிரோத கொலைகள் என நாளாந்தம் இட…
-
- 0 replies
- 503 views
-
-
4.12.2008 குமுதம் ரிப்போட்டர் பகுதியில் சுவாமி வம்பானந்தா பகுதியில் வந்த சில ஈழம் சம்பந்தமான செய்திகள் காந்தி தேசம் கொடுக்குது புத்தர் தேசம் கொல்லுது தூத்துக்குடியில் ஒரு போர்டு என்றால் நெல்லையில் இன்னொரு பேனர். நெல்லை நீதிமன்ற வாசலில் 26_ம் தேதி காலை, `தமிழர்கள் உரிமை பாதுகாப்பு வழக்கறிஞர்கள் பேரவை' என்ற பெயரில் திடீரென வைக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பேனரில், முழு ராணுவ உடையில் இருக்கும் பிரபாகரன் படத்துடன், `காந்தி தேசம் ஆயுதம் கொடுக்குது, புத்தர் தேசம் தமிழனைக் கொல்லுது. பிறந்த நாள் காணும் குணாளா, குலக்கொழுந்தே, தம்பி பிரபாகரன் பல்லாண்டு வாழ்க' என்று எழுதப்பட்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் சில மணி நேரங்களில் இந்த பேனரை காவல்துறை அகற்றிவிட்டது. ம.தி.மு.க.வைச் சேர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரின் அடாவடித்தனங்கள் திகதி: 01.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] - யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கென அவுஸ்திரேலிய அமைப்பு ஒன்றினால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் சத்துணவுகள் என்பவற்றை சிறிலங்காப் படையினர் தம்வசப்படுத்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறிலங்காப் படையினருக்கு இவற்றை வழங்கி வருகின்றனர். - யாழில் உள்ள முக்கிய சிறிலங்காப் படைமுகாம்கள் ஊடாகப் பயணிப்போர் கைத்தொலைபோசிகளை எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரதான படைமுகாம்கள் ஊடாக பயணிக்கும் போது கைத்தொலைபேசியை இயங்கு நிலையில் வைத்திருக்கக் கூடாது எனவும் இவ்வாறு பிரதான சிறிலங்காப் படைமுகாம்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
சரத் பொன்சேகாவின் பதவிக்காலமும் யுத்தமும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா அதிகம் பெருமைப்பட்டுக் கொள்வதாகவே தெரிகின்றது. கஜபாகு ரெஜிமண்டின் 25ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், இதில் தன்னைப் பெருமைப்படுத்திக்கொள்ளும் வகையில் இரு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். 01. விடுதலைப் புலிகள் 80 வீதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். 02. எனது பதவிக்காலத்திற்குள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிடுவேன். இவற்றைத் தவிர வேறுசில விடயங்களையும் பேசியுள்ள அவர், விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க- அதாவது போரில் வெற்றிபெற நான் அவசியம், என்னைவிட்டால் வேறு யாராலும் முடியாது என்ற தொனியிலும் பேசியுள்ளார். முதலில், விடுதலைப் புலிகளை 80 வீதம் தோற்கடி…
-
- 1 reply
- 1.5k views
-
-
மஸ்கெலியாவில் வர்த்தக நிலையம் தீக்கிரை வீரகேசரி நாளேடு 12/1/2008 8:32:41 PM - மஸ்கெலியா தபாற்கந்தோர் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து பெரும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 1 1/2 மணியளவில் ஏற்பட்ட இத்தீ விபத்தில் பலசரக்கு பொருட்கள் விற்பனை செய்யும் மேற்படி வர்த்தக நிலையத்தில் இருந்த பலசரக்குப் பொருட்கள் பால்மா பக்கெட்டுகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன. அத்துடன் அக்கட்டிடத்துக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அக்கம்பக்கத்திலிருந்தவர்கள
-
- 0 replies
- 711 views
-
-
கல்லாறு நாதன் குடியிருப்பு அகதி முகாம் மீது நள்ளிரவு கிபிர் தாக்குதல் இருவர் பலி 5 சிறுவர், 7 பெண்களுட்பட 19 பேர் காயம்... கிளிநொச்சியிலிருந்து கிடைத்த தகவல் Midnight Terrible Arial Attack to Refugee camp at Kilinochchi. 29 November 2008. Nathan Kuddirrippu Refugee camp at Kallaru Kilinochchi was Arial attacked today early morning at 1.35 am. Including one child two death bodies were brought to Tharmapuram Hospital. 1. Sivakumar Sutharsan 5 year 2. Elder one- not identified. Further death bodies may be recovered because still evacuation is going on. Including 5 children and 7 women nineteen injured people were admitted …
-
- 10 replies
- 4.8k views
-
-
விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்கள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇ தமிழர்களின் தலையெழுத்து விரைவில் மாறும் எனத் தெரிவித்துள்ளது. “வன்னியில் அப்பாவித் தமிழர்கள் அரசாங்கப் படைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றுமுன்தினம் கூட அகதிமுகாம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்திருந்தனர்” எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமுன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கட்கிழமை பாராளுமன்…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
இராணுவ சீருடைய அணிந்து கொழும்பு நகரின் சில இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்: காவற்துறை: http://www.globaltamilnews.net/tamil_news....d=2835&cat= இராணுவ சீருடைய அணிந்து கொழும்பு நகரின் சில இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் புலிகளின் திட்டம் குறித்து தெரியவந்ததை தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு செல்லும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கவென வைக்கப்பட்டிருந்த 20 இராணுவ சீருடைகளை மாளிகாவத்தை ஜூம்மா மஜீட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். காவற்துறையினரும் அரச புலனாய்வுத் துறையினரும் இணைந்து இதனை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீருடைகளுடன் அந்த வீட்டில் இருந்த சிங்…
-
- 1 reply
- 3.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியான ஆழ ஊடுருவும் படையணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா இராணுவத்தின் எட்டுப் பேர் கொண்ட அணி ஊடுருவிய போது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அதன் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜெயசிங்க கொல்லப்பட்டார். ஜெயசிங்க தலைமையிலான அணியினர் பல தடவைகள் விட…
-
- 5 replies
- 2.1k views
-
-
நவ. 30: இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் சி. மகேந்திரன். திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "இலங்கைப் பிரச்னை- சிக்கலும் தீர்வும்' என்ற சிறப்புக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: ""இலங்கையில் சிங்களர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை, சிங்கள ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்துவரும் தமிழர்களை, அங்கே இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுகிறார்களே? என்பதுதான் கேள்வி. ஆயுதம் தாங்கியப் போராட்டம் ஏதோ உடனே வந்ததல்ல. தமிழ் மக்களின் 60 ஆண்டு காலப் ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கைக்கு வெள்ளைச் சிற்றூந்து நோய் பிடித்திருப்பதாக, BBC யின் கொழும்புச் செய்தியாளர் றோலன்ட் பேர்க் (Roland Buerk) BBC Radio 4 இற்கு வழங்கிய செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இரவு 8:30இற்கு ஒலிபரப்பாகவுள்ள இந்தச் செய்தி ஆய்வில் கிழக்கில் துணைப்படைக் கருணா குழுவினர் மேற்கொண்டுவரும் படுகொலைகள், கடத்தல்கள் போன்ற மனித உரிமை மீறல்கள் விரிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=111
-
- 0 replies
- 2.6k views
-
-
நெருக்கடி மிகுந்த காலகட்டத்திற்குள் கிழக்கு வன்னி - வன்னியன். ஞாயிறு, 30 நவம்பர் 2008, 08:18 மணி தமிழீழம் [] யாவரும் எதிர் பார்த்துக் காத்திருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவீவர் நாள் கொள்கைப்பிரகடண உரை பலரது எதிர்பார்ப்புக்கும் மாறாக வித்தியாசமான கோணத்தில் அமைந்திருப்பதனையும் வன்னிப் போர் நெருக்கடி தொடர்பாக அவர்கள் பெரிய அளவிலான நெருக்கடிகளை சந்தித்திருக்கின்ற இந்த வேளையிலும் அவரது நிதானமான போக்கினை இவ்வுரை பறை சாற்றி நிற்கிறது. வன்னிப் போர் தொடர்பாக அவர் தனது உரையில் எதனையும் பெரிய அளவில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெரு…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஐக்கிய தேசியக் கடசியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகுவதையும், S.B. திசாநாயக்க போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதையும் இந்தியா விரும்புவதாக, இன்றைய ஞாயிறு சிங்கள இதழான சிலுமின தெரிவித்துள்ளது. அண்மையில் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றபோது, அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு இந்தியா வலியுறுத்தியிருப்பதாகவும் இந்தப் பத்திரிகை தெரிவிக்கின்றது. சர்ச்சைக்குரியவரான திசாநாயக்கவின் குடியிரிமை பறிக்கப்பட்டிருந்ததுடன், சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் இவர் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் 2008ஆம் ஆண்டிற்கான மாவீரர் தின உரை குறித்து புதிய விளக்கங்களோடு சொல்லாத விடயங்களைச் சிலாகித்துச் சிலர் பேசத் தொடங்குவார்களென்று தொலைக் காட்சி ஊடகமொன்று ""வியாக்கியானம்'' செய் கிறது. பிரபாகரனின் மாவீரர் உரை, மக்களால் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில், தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு வியாக்கியானங்களோ, பொழிப்புரையோ தேவையில்லை. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு உத்தியோகபூர்வமாக விடுக்கும் செய்திகளை அடியொற்றியே ஆழமாகவும் விரிவாகவும் இம் மாவீரர் தின உரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை வரலாற்றுப் படிநிலை மாற்றங்களூடாக விளக்கிய பிரபõகரன் சர்வதேச நாடுகள் விதித்த தடைகள் அகற்றப்பட வே…
-
- 1 reply
- 2.1k views
-
-
இன்று வன்னியில் இலங்கை விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் சர்வதேசத்தில் தடைசெய்யப்பட்ட கொத்தணி குண்டுகள் பாவித்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொத்தணி (கிளெஸ்ரர்) ரக ஒரு குண்டில் இருந்து சுமார் 500, 600 வரையான குண்டுகள் வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது. இக்குண்டுகள் உடனடியான சேதத்தை மட்டுமல்ல அவை வெடிக்காத நிலையிலும் பின்னர் சேதத்தையும் அழிவுகளையும் ஏற்படுத்தக் கூடியது. சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகள் அண்மையில் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலின் போது பாவித்தது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe
-
- 6 replies
- 2.2k views
-
-
தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் ஆதரவு உணர்வலை மிக வேகமாகப் பரவி வருகிறது எனவும், தமிழக முதலமைச்சாரால் கூட இனி அதைனை தடுத்து நிறுத்த முடியாது எனவும் மஹிந்தவுக்கு, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் தமிழ் நாடடின் கிராமப் பகுதிகளில் வலுவாகவுள்ள கம்யூனிஸ்ட் கட்சி, யுத்த நிறுத்தம் குறித்து தீவிர அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகவும் தமிழ் நாடடில் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரணில் தெரிவித்துளளளார். மஹிந்த கடந்தவாரம் ரணிலுடன் தொலைபேசியில் உரையாடினார். இதன் போது தமிழ் நாட்டில் காணப்படும் உணர்வலைகள் குறித்து இருவரும் ஆராய்ந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டிற்கான சமீபத்திய விஜயதின் போது ரணில் பயணம் செய்த வாகனம் அரசியல் கட்சிகளின் தொண்ர்களால்…
-
- 3 replies
- 1.6k views
-
-
புலிகள் சரண் அடைந்தால் மட்டுமே அவர்களுடன் அரசு பேச்சு நடத்தும் - இந்தியாவிடம் இலங்கை எடுத்துரைப்பு uthayan.com விடுதலைப்புலிகள் தம்மிடம் உள்ள ஆயுதங்களைக் களைந்து, சரண் அடைந்தால் மட்டுமே அரசாங்கம் அவர்களுடன் பேச்சு நடத்தும். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை . இவ்வாறு இலங்கை அரசின் சார்பில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான டி.எம்.ஜயரத்தின நேற்று கொழும்பிலுள்ள இந்திய பிரதித் தூதுவரைச் சந்தித்து எடுத்துரைத்துள்ளார். அமைச்சர் ஜயரத்னாவின் அலுவல கத்தினால் உத்தியோக பூர்வமாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சந்திப்பு பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
‘நிஷா’ சூறாவளி வெள்ளத்தால் வன்னியில் பேரவலம் ஆனால் தொண்டுப்பணிக்குத் தொடர்ந்தும் தடை uthayan.com ‘நிஷா’ சூறாவளி வன்னியில் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தால் அங்கு பல நூறாயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றனர் என்ற தகவல் நெஞ்சை நெருடுகின்றது. ‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ மாதிரி, யுத்த அனர்த்தங்களால் அல்லற்பட்ட வன்னி மக்களை இயற்கையும் சேர்ந்து வஞ்சித்து பேரவ லப்பட வைத்திருக்கின்றது என்ற செய்தி மனதை உலுப்புகின்றது. வன்னிப் பெரு நிலப்பரப்பு மீது கொழும்பு அரசு பெரும் எடுப்பில் தொடுத்துள்ள கொடூர யுத்தம் காரணமாகத் தமது வீடு, வாசல்கள், நிலபுலங்களை எல்லாம் விட்டு வெளியேறி, உடுத்த உடையோடு இடம்பெயர்ந்த பல நூறாயிரம் மக்கள், காடுகளில் மரங்களின் கீழும் புதர…
-
- 0 replies
- 643 views
-
-
வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை - களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிப்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2832&cat=1 வடபகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் போர்க் களமுனைகளிலுள்ள படையினரின் இராணுவ முன்னெடுப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான ஆயுதங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு களமுனைகளிலும் இராணுவ முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளிலும் தங்கியுள்ள இராணுவத்தினரை மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்ல படைத்தரப்பினர் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஆயினும் வடக்கில…
-
- 0 replies
- 858 views
-
-
மோசமான காலநிலையினால் யாழ்ப்பாணத்தில் பலர் பலி: http://www.globaltamilnews.net/tamil_news....=2831&cat=1 வடக்கில் நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாக ஒரு தகவலும் 11 பேர் உயிரிழந்திருப்பதாக மற்றும் ஒரு தகவலும் தெரிவிக்கிறது மழை வெள்ளம் காரணமாக 85,679 பேர் வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்துள்ளதாகவும், இவர்கள் 247 பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் நிலவிய மோசமான காலநிலையினால் 5,952 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 30,249 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்ன…
-
- 0 replies
- 779 views
-
-
வடக்கில் யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள 50 ஆயிரம் பேர் கொண்ட விஷேட படையொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பொறுப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இராணுவத்திற்குப் புதிதாக 22,000 பேரும், கடற்படைக்கு 7,000 பேரும், விமானப்படைக்கு 5,000பேரும், பொலிஸ் படைக்கு 15,000 பேரும் உடனடியாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் பயிற்சிபெற்று சேவையில் இணையும் வரை இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் கடமையாற்றுவர். இக்காலப் பகுதியில் தெற்கில் பாதுகாப்புக் கடமைகளை கையாள்வதற்கென 40,000 ஊர்காவற் படை வீரர்களின் சேவை மேலதிகமாகப் பெறப்படவுள்ளது. புதிய நியமனங்களுக்கான அனுமதி மற்றும் செலவீனம் தொடர்பான அங்…
-
- 3 replies
- 1.6k views
-
-
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிஸியின் நவம்பர் 27ஆம் திகதிய சிங்கள மற்றும் தமிழ் ஒலிபரப்புக்களை தணிக்கை செய்துள்ளது. அன்றைய நிகழ்ச்சியின் ஒரு அங்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் தின உரையையும் டிபென்ஸ் வாச் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு குறித்த செய்திகளையும் நேயர்கள் கேட்க முடியாதவாறு தணிக்கை செய்துள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள் சமரவீரவின் தலைமையிலான டிபென்ஸ் வாச் எதிர்த்தரப்பினருடைய கருத்துக்களையும், மற்றைய செய்திகளையும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர் தொடர்பான தகவல்களையும் வழங்கி வருகின்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகளது இந்நடவடிக்கையானது, மக்களுடைய தகவல் அறிந்து கொ…
-
- 0 replies
- 722 views
-
-
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மாவீரர் தினத்தை எவ்வித தடைகளுமின்றி அனுஷ்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27ம்திகதி 60க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தமிழீழத்தின் விடுதலைக்காக உயிநீர்த்த மாவீரர்களின் நினைவாக மாலை வேளையில் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செய்தனர். இதனையடுத்து மாவீரர்களின் நினைவாக கவிதைகள்இ பாடல்களும் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.கடந்த வருடம் மாவீரர் தினத்தில் கைதிகள் மீது பல்வேறு அசௌகரியங்களை சிறை அதிகாரிகள் ஏற்படுத்தினர் ஆனால் இவ்வருடம் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது எமது நிகழ்வை பார்வையிட்டதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்தனர். நன்றி பதிவு
-
- 0 replies
- 887 views
-