Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும். அதேவேளை தமிழ் மக…

  2. சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️ adminDecember 28, 2025 தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 🔍 விசாரணைக்குள்ளாகும் அமைச்சர்கள்: பிமல் ரத்நாயக்க வசந்த சமரசிங்க குமார ஜெயக்கொடி சுனில் ஹந்துன்னெத்தி நளிந்த ஜெயதிஸ்ஸ சுனில் வட்டகல (பிரதி அமைச்சர்) ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வாக்குமூலங்களை வழங்குவ…

  3. மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது: adminDecember 28, 2025 யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார். இது தொடா்பில் பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குறித்த பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சட்டவிரோத போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச…

  4. தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர் Published By: Vishnu 26 Dec, 2025 | 01:18 AM ‘ராஜமகா விகாரை’ என பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தி, இராணுவத்தின் பங்களிப்புடன் காங்கேசன்துறை தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை போலியானது என வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியின் உண்மையான உரிமையாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களே என்பதை ஏற்றுக்கொண்ட வட மாகாண பிரதம சங்கநாயக்க தேரர், அந்த உரிமையை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலையிடாவிட்டால், இனங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் அபாயம் குறித்து எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்கு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை யுத்தத்தின் மூலம் கையகப்படுத்தி நிர்மா…

  5. முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது Dec 27, 2025 - 09:51 PM 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய் வருமானமும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 2,105 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தின் ஊடாக 213 பில்லியன் ரூபாவும், ஏனையவை ஊடாக 70 பில்லியன் ரூபாவும் வருமானமாக பெறப்பட்டுள்ளது. 2025 இன் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 410.5 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 355 பில்லியன் …

  6. எமது காணிகளை மீட்டு தாருங்கள் - நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் கோரிக்கை 27 Dec, 2025 | 05:48 PM தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் " மக்களின் காணி மக்களுக்கே " என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்…

  7. பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு Dec 27, 2025 - 10:13 PM பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது இன்று (27) மாலை 4 மணியளவில் தவறி நீருக்குள் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து காணாமல் போனவரை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -முல்…

  8. 🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்! adminDecember 27, 2025 யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆழிப்பேரலையின் 21-வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழையில் நனையாமல் இருப்பதற்காக, கடற்தொழில் அமைச்சர் ஒரு கையால் குடை பிடித்தபடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர். தேசிய…

  9. 2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் Dec 27, 2025 - 12:15 PM 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் இம்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட 'A' மற்றும் 'Aa' பட்டியல்களைப் (Lists) புதுப்பிப்பது தொடர்பான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் வருகை தருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே உத்தியோகத்தர்கள் செ…

  10. தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. - கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதனால், வறிதாக்கப்படும் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு எதிராக தமிழரசுக் கட்…

  11. வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம் 27 Dec, 2025 | 03:14 PM வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது. அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை …

  12. 27 Dec, 2025 | 11:48 AM மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் சனிக்கிழமை (28) கரையோதுங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 15 அடி நீளமுடைய இந்த ராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொத…

  13. 27 Dec, 2025 | 02:12 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையட…

  14. 27 Dec, 2025 | 11:16 AM புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வேலணை - மண்கும்பானில் ஏற்கனவே இருக்கின்ற, சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்து தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சுவாமினாதன் பிரகலாதன் வலியுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை (26) வேலணை சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனையவையும் கடுமையான பாதிப்புக்களுடனேயே இருக்கின்றன. இவற்றை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படும்…

  15. 2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் adminDecember 27, 2025 அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களி…

  16. தமிழ் – சிங்கள இளைஞர்களுக்கிடையில் ‘மொழிப் பாலம் adminDecember 27, 2025 தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கிடையில் மொழி மற்றும் கலாச்சாரப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விசேட பரிமாற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் (பாலையடி புதுக்குளம்). டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) வரை நடைபெறுகின்றது கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகை தந்த 20 இளைஞர், யுவதிகள் மற்றும் மாந்தை மேற்குப் பகுதி இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள நிலையில் அருட்தந்தை செல்வநாயகம் பீரிஸ், உதவி பிரதேச செயலாளர் டிலக்ஸன், மாவட்ட இணைப்பாளர் அசோக்க முனசிங்க மற்றும் அரசு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனா் இந்த 4 நாட்கள் தங்கியிருக்கும் திட…

  17. 27 Nov, 2025 | 04:06 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் நிலை பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231666

  18. 'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம் Published By: Vishnu 16 Dec, 2025 | 08:47 PM (எம்.மனோசித்ரா) வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலு…

  19. யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ் வெள்ளி, 26 டிசம்பர் 2025 07:41 AM இலங்கை விவகாரத்தில் இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் அதிருப்திகள் காணப்பட்டாலும் அந்த விமர்சனங்களை செய்தவர்கள் கூட வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியரருமான ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆராய்ந்து ஜி.எல்.பீரீஸ் அண்மையில் எழுதி வெளியிட்ட "இலங்கை அமைதி செயல்முறை ஒரு உள்பார்வை" எனும் நூலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நூலில், யுத்தம் பெருமளவில் பாதித்த தரப்பினரா…

  20. தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி , தமிழ்த் தேசிய பசுமை இயக்க தலைவர் பொ.ஐங்கரநேசன், ததேமமு செயலாளர் செகஜேந்திரன், தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிரேஸ்ட சட்டத்தரணி க.சுகாஷ், உத்தியோகபூர்வ பேச்சாளர் , ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) பிரசாரச் செயலாளர் ஆகியோர் இவ்வாறு செல்லவுள்ளனர். இது தொடர்பில் கஜேந்திரகுமார் எம்.பி கூறியுள்ளதாவது, சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக…

  21. 🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰 written by admin December 25, 2025 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமிப் பேரலை மற்றும் ஏனைய இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (டிசம்பர் 26) நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 🕒 முக்கிய நேரங்கள் மற்றும் நிகழ்வுகள்: மௌன அஞ்சலி: நாளை காலை 9:25 மணி முதல் 9:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் நாடு தழுவிய ரீதியில் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களிடம் பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. தேசிய நிகழ்வு: 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு, காலியில் உள்ள பெரலிய (Peraliya) சுனாமி நினைவுச் சின்னத்தில் நாளை காலை 8:30 மணி முதல் 11:00…

  22. தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன் 26 Dec, 2025 | 10:41 AM தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அரசாங்கம் என்ற வகையில் குறித்த பிரச்சினையை நீடிக்காமல் …

  23. யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்! ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும் காலநிலை பேரழிவுகள் தீவு நாட்டின் சின்னமான வனவிலங்குகளை நெருக்கடியை நோக்கித் தள்ளுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 20,000 முதல் 27,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (சுமார் 6,000 முதல் 7,000 வரை) உள்ளது. இருந்த போதிலும், இலங்கையில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் யானைகளின் விகிதம் இந்தியாவை விட மிக அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் வ…

  24. மக்களையும் கிராம சேவகர்களையும் மோதவிடாதீர்கள் - பொதுமக்கள் ஆதங்கம் 26 Dec, 2025 | 03:33 PM வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா நிதியால் கிராம சேவகர்களையும் மக்களையும் மோதவிடாதீர்கள் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மக்கள் தரப்பில் கூறப்படுவதாவது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என அரசாங்கத்தால் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பதிவுகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அதே குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிறிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட…

  25. 'தித்வா' சூறாவளி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர் Published By: Vishnu 26 Dec, 2025 | 05:17 AM (நா.தனுஜா) 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 2.3 மில்லியன் மக்களில் 522,000 சிறுவர்களும் 263,000 முதியோர்களும் 21,200 கர்ப்பிணித்தாய்மார்களும் ஆவர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தத்தினால் அதிக போசணை தேவைப்படும் நலிவுற்ற நிலையிலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த 281,830 சிறுவர்களும் 19,021 கர்ப்பணித்தாய்மாரும் 96,637 பாலூட்டும் தாய்மாரும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.