ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
ஈழத் தமிழர் விவகாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா கபடம் நாடகம் ஆடி வருகின்றார் என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 748 views
-
-
ஈழத் தமிழர்களின் உரிமைப் போருக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய மத்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் சென்னையில் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் நாள் நடிகர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 729 views
-
-
வடபகுதி மோதல்களை நிறுத்துவதற்காக, தமிழக அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே மேற்கொண்டதாக அறிய முடிகிறதென சிங்ளடகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது சென்னையில் தங்கிருக்கும் சிவாஜிலிங்கம், அண்மையில் தமிழகத்தின் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் வடக்கு தனிநாடாக வேண்டும் என கூறுமாறு கேட்டுள்ளதுடன், பெரியார் திராவிட கழகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அத்துடன் சிவாஜிலிங்கம் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரையும் சந்தித்துள்ளதாக இலங்கையின் புலனாய்வுதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா முயற்சி – ஜே.வி.பி: இலங்கையில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இந்திய முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படக் கூடாது எனவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. பிரிவிணைவாத கொள்கைகளின் மூலம் இலங்கையின் அரசியல் ரீதியான அதிகாரத்தை கைப்பற்ற இந்தியா சதித்திட்டம் தீட்டி வருவதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டி சாலிகா அரங்கில் நடைபெற்ற அகில இலங்கை போக்குவரத்து உழியர்களின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு முதல் இலங்கை விவகாரங்களில் இந்தியா அநாவசியமாக தலையீடு செய்து வருவதாக அவர…
-
- 0 replies
- 714 views
-
-
சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணம் ஆராய இந்திய உயர் அதிகாரிகள் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம்: திருகோணமலை சம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலக்கரி அனல் மின்நிலையம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். இலங்கையின் முதலாவது நிலக்கரி அனல் மின் நிலையம் நுரைச்சோலையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மின்நிலையத்தின் ஊடாக ஆயிரத்து 500 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையத்தை அமைக்க இந்திய இணக்கம் தெரிவித்தது. இதனடிப்படையில் இந்த இந்திய அதிகாரிகளின்…
-
- 0 replies
- 570 views
-
-
சட்டத்தின் வாயிலாக மாகாணங்களுக்கு அதிகாரம் - சுற்று நிருபங்கள் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக மீண்டும் மத்திய அரசிடம் – எம்முடன் பேசுகிறார் அமைச்சர் ஹிஸ்புல்லா:(குரல் இணைப்பு) சட்டத்தின் வாயிலாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கி பின்னர் சுற்று நிருபங்கள் ஊடாகவும் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாகவும் அவற்றின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மத்தியில் கையகப்படுத்தி இருப்பதாக கிழக்கு மாகாண சபையின் முக்கிய அமைச்சரான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆற்றிய உரை குறித்து குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று காலை எமது செய்திச் சேவை அவருடன் தொடர்பு கொண்டது.,,,,, http://www.gl…
-
- 0 replies
- 740 views
-
-
தமிழகத்தின் போர்நிறுத்த முனைப்பு விடுதலைப் புலிகளின் ஏற்பாடே – கோதபாய ராஜபக்ஷ: இலங்கையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் தீவிர முனைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓர் ஏற்பாடே என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியான முன்நகர்வுகள் எந்த காரணத்திற்காகவும் இடைநிறுத்தப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 29ம் திகதிக்குள் இலங்கையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த இந்திய மத்திய அரசு, இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்காவிடின் இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்யப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கையர்கள் …
-
- 0 replies
- 785 views
-
-
தனி ஈழம்தான் இந்தியாவுக்கு பாதுகாப்பு!" - 'விடுதலைப்புலி' நடேசன் பேட்டி மீண்டும் ஒரு முழுமையான யுத்த நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது ஈழம்! இருபது ரூபாய்க்கு ஒருவேளை உணவை வயிறார சாப்பிட முடியும் நம்முடைய தேசத் தில். ஆனால், இன்றைய நிலையில் அதே இருபது ரூபாய்க்கு ஒரு தீப்பெட்டிதான் வாங்க முடியும், ஈழத்தில்! ஒரு கிலோ அரிசி 100 ரூபாய், ஒரு லிட்டர் பெட்ரோல் 1,000 ரூபாய், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் -450 ரூபாய்..! பொருளாதார தடையால் அன்றாட வாழ்க்கைக்கே அல்லாடிக்கொண்டிருக்கும் அந்த பாவப்பட்ட மக்களுக்கு அக்னிப் பரிசாக குண்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கிறது சிங்கள ராணுவம். முன் எப்போதும் இல்லாத வகையில் உக்கிர மான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்துக்கு…
-
- 0 replies
- 800 views
-
-
சிறைத் தோழர்கள் சந்திப்பு! சென்னை புழல் சிறையில் உள்ள பொழிலன், மாறன், நல்லரசன், முருகேசன், ஜான் பீட்டர், உத்திராபதி, கலை, அய்யப்பன், குணங்குடி ஆர்.எம். அனீபா ஆகியோரை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், பொருளாளர் சா. சந்திரேசன், பொன்னிறைவன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். பல்வேறு பொய்வழக்குகளில் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள ஈழத்தமிழர்களையும் அவர்கள் சந்தித்தனர். -தென் செய்தி
-
- 0 replies
- 685 views
-
-
ஈழமக்கள் படும் துயரில் உலகம் பாராமுகம் இலங்கை நா. ம. உ சேனாதிராசா கடுங் கண்டனம் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டின் அயலகத் தமிழர் கருத்தரங்கத்தில் தமழீழத்தைச் சேர்ந்த திரு.சேனாதிராசா அவர்கள் ஆற்றிய உரை: தமிழர்களின் தலைவர்களுக்கு மட்டுமல்ல... தமிழர்கள் எங்கெங்கு வாழுகின்றார்களோ - அவர்கள் எல்லாம் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டது போல... கூண்டுகளில் வாழ்வது போல தமிழீழ மக்கள் வாழ்ந்து கொண்டிருப்ப தாகவும் சிங்களப் படையினரின் அத்துமீறல்களைப் பற்றி தெரிவிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஐ.நா.வி.னுடைய நிறுவன அதிகாரி களைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் தெரிவித்த அவர், சென்ற முதலாம் தேதி கொழும்புக்கு இந்த நாட்டின் பிரதமர் வந்த போது மதிப்பிற்குரிய மன…
-
- 0 replies
- 561 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
வெள்ளம்போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம்; அன்னார் உள்ளத்தால் ஒருவ ரேமற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொ ணாதே; எனவையம் கலங்கக் கண்டு துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம் சொக்கும்நாள் எந்த நாளோ? என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இன்று இருந்திருந்தால் அகமகிழ்ந்து இருப்பார். அவர் பாடிய பாடலைப் போல் தமிழர்கள் ஒன்றுபட்டு களத்தில் நின்று முழங்கியதை பார்த்திருந்தால் தனது கனவு நனவானதைக் கண்டு மிகப்பெரும் மகிழ்ச்சியை அடைந்திருப்பார். அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2ம் தேதி தமிழகம் அந்த புனிதருக்கு முற்றிலும் வேறுபாடான வகையில் வீரவணக்கம் செலுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டின…
-
- 0 replies
- 753 views
-
-
சிங்கள அரசுக்கு ஜெ ஆதரவு-கருணாநிதி சென்னை: இலங்கை விவகாரத்தில் ஜெயலலிதா சிங்கள அரசுக்கு ஆதரவாக இருப்பதாக அந் நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகரே கருத்து தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை: கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வைகோ வராவிட்டாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தை அவரும் ஏற்று கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்று கூறியிருக்கிறார்? பதில்: ஆம். அவர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு வராவிட்டாலும், தனது உணர்வை வெளிப்படுத்தியிருப்பதைப் படிக்கும் போது நமக்குப் புல…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சி இப்பொழுது ஒரு கூரையில்லாத நகரம். சமாதான காலத்தில் கட்டிய வீடுகளைத் தாங்களே உடைத்துக்கொண்டும் பெயர்த்துக்கொண்டும் சனங்கள் போய்விட்டார்கள். நான்கு ஆண்டுகளுக்குள் எல்லாமே தலைகீழாகிவிட்டன. இப்போது சுவர்கள் மட்டும் எஞ்சியிருக்கின்றன. ஆட்களற்ற தெருக்கள். சனங்களில்லாத வளவுகள். தெருநிறைய நாய்கள். குண்டுவீச்சு விமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி மெல்ல மெல்ல சூனியப்பிரதேசமாக மாறிவருகிறது. அது முழு யுத்தப் பிராந்தியமாகக் கனிந்துகொண்டிருக்கிறது. தமிழர்களின் பட்டினங்களில் மிகவும் இளையது கிளிநொச்சி. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலேயே அது உருவானது. சடுதியாக வளர்ச்சியடைந்து கிளிநொச்சி வடபகுதியின் முக்கிய விவசாயப் பட்டினமாகியது. வடக்கின் நெற் களஞ…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழகத்தில் , ஈழத்தின் மீதான இந்த அக்கறை எவ்விதம் ஏற்பட்டதெனச் சிலர் திகைத்து நிற்கின்றார்கள். ஆனால் ஈழத்தின் மீது ஆழமான நேசிப்பு வைத்திருக்கும் தமிழக உறவுகள் அனைவரும் ஒருமித்துச் சொல்கின்றார்கள் ஈழத்தின் மீதான நேசம் என்றும் தமிழகத்தில் குறைந்ததில்லை. ஆனால் அரசியற் சதுரங்கக் காய் நகர்ததலுகளுக்குள் அகப்ட்டுக்கொள்ளாதிருப்பதற
-
- 0 replies
- 741 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிடக்கூடாது: இந்தியப் பிரதமருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை- கலைஞர் கருணாநிதிக்கு கண்டனம் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 11:04 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] எஇந்தியாவில் குண்டுவெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டு நேரத்தை விரயமாக்க வேண்டாம் என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவரும் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்ச இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் விமல் வீரவன்ச கூறியதாவது: இந்தியாவில் பஞ்சம் நிலவுகின்றது. பயங்கரவாத பிரச்சினை உள்ளது. காஸ்மீர், மும்பாய் ஆகிய இடங்களில் குண்டு வ…
-
- 1 reply
- 998 views
-
-
இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டும் என்று கேட்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 697 views
-
-
இந்தியாவின் ஆயுத உதவிகளையும் வேண்டாம் என கூறமுடியுமா என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவரும் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்சவிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 940 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட இந்தியாவின் ஆளும் தேசிய காங்கிரஸ் கட்சி தயக்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்பட வேண்டிய போராட்டம் குறித்து ஆலோசிக்க சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தின் பொதுக்குழு கூட்டம் நேற்று அதன் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக உயர்நீதிமன்றத்தில் பணிகள் முற்றிலுமாக முடங்கின. போராட்டத்தின் ஒரு பகுதியாக முற்பகல் 11 மணியளவில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் மன்றோ சிலையில் இருந்து அரசினர் தோட்டம்…
-
- 0 replies
- 722 views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலையை செய்வதைக் கண்டித்தும் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எதிர்வரும் வியாழக்கிழமை (23.10.08) தமிழ்நாடு தழுவிய தொடருந்து மறியல் போராட்டத்தை நடத்த உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 656 views
-
-
வன்னிக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருள்கள் திரும்பியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏ-9 வீதியில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல்கள் வலுவடைந்ததால் வாகனத் தொடரணி வவுனியாவுக்குத் திரும்பியிருப்பதாகத் தகவல்கள் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்காக இன்று வியாழக்கிழமை 18 லொறிகளில் விசேட உணவுப் பொருள் தொடரணியொன்று அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார். கிளிநொச்சி மாவட்டத்துக்கு 13 லொறிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 5 லொறிகளிலும் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், உணவுப் பொருள்கள் ஏற்றப்பட்…
-
- 1 reply
- 887 views
-
-
ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வுகாண முடியாது. பேச்சுக்கள் மூலமே தீர்வுகாண வேண்டும். சிறி லங்காவில் தொடரும் சம்பவங்கள் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கின்றன என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா தென்னாபிரிக்கா, பிரேஸில் ஆகிய நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சிறி லங்கா இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் ஆக்கபூர்வமானதீர்வு காணப்பட வேண்டும். இன்றேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்து விடப்போவதாக எச்சரித்துள்ளனரே? இந்நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?…
-
- 1 reply
- 719 views
-
-
பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று 6000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இலண்டனில் ஒலிக்கும் குரல், சர்வதேசமெங்கும் எதிரொலிக்கும் என்பது ஊடகத் துறையினருக்கு நன்கு புரியும். காலனியாதிக்க காலத்தில் சூரியன் மறையாத, பாராண்ட பாராளுமன்றத்திற்கு முன்பாகத் திரண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சி ஒன்றுகூடல், பல செய்திகளை மேற்குலக நாடுகளிற்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். பிரித்தானியாவில் குற்றவாளியாகக் கணிக்கப்பட்டவர், சிறீலங்காவில் ஜனநாயகவாதியாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இனி அவரையும் பிரித்தானிய அமைச்சர் சந்தித்து, இனிவரும் றெயினர்ஸ் லேன் கூட்டங்களில், தனது சுய விளக்கத்தை பிரித்தானியத் தமிழ் மக்களுக்குத் தெரிவ…
-
- 0 replies
- 1.1k views
-