ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
மாணவர்கள் போராட்டம்-ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு புதன்கிழமை, அக்டோபர் 15, 2008 RSS இலவச நியூஸ் லெட்டர் பெற thatsTamil Bookmarks சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரியும், அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தனர். இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர…
-
- 0 replies
- 676 views
-
-
மஹசீன் சிறைச்சாலையில் இன்று இலங்கை நேரம் 12 அணியளவில் உட்புகுந்த 20 இராணுவத்தினர் தமிழ்க் கைதிகளை இம்சைப்படுத்தியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதனை உறுதிப்படுத்தினார். இன்று நன்பகல் அங்கு சென்ற இராணுவத்தினர் தமிழ்க் கைதிகள் 60 பேரின் சிறைக் கூடங்கள் மற்றும் அவர்களின் உடமைகளைச் சோதனையிட்டுள்ளனர். வழமைக்கு மாறான இந்த நடவடிக்கை குறித்து தமிழ்க் கைதிகள் எதிர்ப்பு வெளியிட்ட போது அவர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் தூக்கி வீசப்பட்டு பல்வேறு அசௌகரியங்களைப் படையினர் ஏற்படுத்தியதாக தனக்கு முறையிட்டுள்ளதா…
-
- 0 replies
- 667 views
-
-
உங்கள் நன்றிகளை கலைஞருக்கு கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலமாக தெரிவிக்கலாம். cmcell@tn.gov.in thedmk@vsnl.com
-
- 7 replies
- 1.9k views
-
-
சென்னை - இலங்கை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழக கட்சிகள் அனைத்தும கலந்துகொண்டன. இதில் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றும் போது தெரிவித்ததாவது : இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போரின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் உயிர் தப்பி சுமார் பத்து இலட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கும் உலக நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். உள்நாட்டிலேயே சுமார் 5 இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக அலைகிறார்கள். இந்தியாவில் வங்காளி, பஞ்சாபி, ம…
-
- 0 replies
- 979 views
-
-
தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலமாகும்: பா.நடேசன் [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 10:25 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் சிங்கள தேசத்துக்கு உதவுவதைவிட தமிழர் தேசத்துக்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலமாகும்- எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு இந்தியா உதவ முன்வர வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை ஏட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: "இலங்கையில் தற்போது என்னதான் நடக்கிறது. சிங்கள இராணுவத்தின் கை ஓங்கியிருப்பது போல செய்திகள் வருகிறதே?" "இலங்கைத் தீவில் சிங்கள அரச படையினர், தமிழர் தாயக…
-
- 3 replies
- 983 views
-
-
சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலையிலும், பள்ளத்தாக்கிலும், பாலைவனத்திலும், பொட்டல் காட்டிலும்,…
-
- 0 replies
- 1.8k views
-
-
விரும்பினால் படியுங்கள் http://img390.imageshack.us/img390/4503/wolftalkhc5.jpg நன்றி : உதயன்
-
- 4 replies
- 2.1k views
-
-
இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்... தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் . ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்... இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!! கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in
-
- 10 replies
- 2.9k views
-
-
அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்துக்கு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் நன்றி [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 11:21 மு.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தினை நடத்த முன்வந்த அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்துக்கு சுவிஸ் இளையோர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர்கள் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலைகளை கண்டித்து தமிழக மாணவர்கள் ஒருமித்து குரல் கொடுப்பதையிட்டு நாம் மிகவும் பெருமிதம் அடைகின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்கா அரசை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவினதும் உலகினதும் கவனத்தை ஈர்க்கவல்லதாகவும் எமக்கான நல்லதொரு தீ…
-
- 0 replies
- 560 views
-
-
-
இலங்கைத் தமிழர்களை சிங்கள இராணுவத்திடமிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தினைத் தொடங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு நான் விடுத்த வேண்டுகோள் அழைப்பிற்கிணங்க வருகை தந்துள்ள கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டம் ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக்கொள்வதற்கா…
-
- 0 replies
- 784 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நாளை 14ஆம் திகதி கூட்டவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது. தற்பொழுது ஜெனீவாவிலிருக்கும் இரா.சம்பந்தன் உட்பட மூவர் அடங்கிய குழு நாளைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளுக்கு ஈழத்தமிழர் மீது முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து விளக்கமளிக்கவிருப்பதாகவும், ஏற்கனவே, சில தமிழகக் கட்சிகளின் பிரமுகர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து விளக்கமளித்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 11 replies
- 1.5k views
-
-
இன்று மாலை ஈரோட்டில் 4 மணி அளவில் பெரியார் திராவிடர் கழகம் , தமிழ் தேசிய பொதுவுடைமைக்கட்சி, தமிழர் தேசிய விடுதலை இயக்கம் , தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் போன்ற இயக்கங்கள் ஒருங்கிணைந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். ஈரோடு தொடர்வண்டி நிலையம் முன்பாக 4 மணியளைவில் திரண்ட தோழர்கள் ஈழத்தமிழர்க்கு ஆதரவாக முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலமாக ஈரோடு தலைமை தபால்நிலையம் முன்பாக பேரணியை முடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் மோகன்குமார் தலைமையேற்க பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் இராம.இளங்கோவன், ஆதித்தமிழர் பேரவை தோழர் பொன்னுச்சாமி , விடுதலைச்சிறுத்தைகள் தோழர் சேதுபதி,…
-
- 2 replies
- 1.3k views
-
-
இரந்து பெறும் பிச்சை வேறு இணக்கப் பேச்சுத் தீர்வு வேறு இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் என்று மீண்டும் வெளியுலகுக்குப் பம்மாத்துக் காட்டுவது போல அறிவிப்பு விடுத்திருக்கின்றர் மஹிந்த. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வெழுச்சி தமிழகத்தில் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியுள்ள பின்னணியில் அதன் காரணமாகப் புதுடில்லி அரசிடமிருந்து வந்திருக்கும் புதிய அழுத்தத்தைச் சமாளிக்கும் நோக்கில் இதுவரை காலமும் செயற்றிறன் இன்றித் தூங்கிக் கிடந்த சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தை, மீண்டும் தட்டி எழுப்பி, சர்வதேசத்துக்குக் கண்கட்டு வித்தை நாடகம் ஒன்றை திரும்பவும் நடத்திக் காட்டுவதற்காக ஒரு தடவை கூட்டி முடித்திருக்கிறாh அவர். அந்தக் கூட்டத்திலே இலங்கை இனப்பிரச்சினைக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக தீர்மானம்- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது: சுப.வீரபாண்டியன் [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 10:50 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமானது- தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய தீர்மானம் என்று அக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தாயக உறவுகளுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முதலமைச்சர் இன்று செவ்வாய்க்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக்கூட்டத்தில் ஒரு அதிச்சித் தரத்தக்க- தமிழ் மக்களின் உ…
-
- 4 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத்திட்டத்தைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமானது என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா கொழும்பு ஊடகமொன்றுக்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் என சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்த பின்னரே இவ்வாறான தீர்வொன்றை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகக் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுதொடர்பாக விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசிக்காமல், கொள்கை ரீதியில் தம்முடனிருக்கும் சிங்களத் தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் அர…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும்: பா.ம.க. [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 12:16 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கையில் தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்று தமிழ்நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகவியலாளர்களிடம் பா.ம.க. தலைவர் கோ.க. மணி கூறியதாவது: தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்த அனைத்து கட்சிக்கூட்டத்தின் முடிவுகளை வரவேற்கிறோம். தமிழர் பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும். இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு…
-
- 0 replies
- 662 views
-
-
தமிழ்நாடு அரசாங்கம் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை வரவேற்றுள்ள தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகம், போர் நிறுத்த ஒப்பந்த காலத்திலிருந்ததைப் போல் தமிழர் பகுதிகளிலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் மீது சிறிலங்க இராணுவம் தாக்குதல் நடத்தி, அதன் காரணமாக மிகப் பெரும் அளவிற்கு மனிதாபிமான, மனித உரிமை பிரச்சனை எழுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசின், அந்நாட்டு இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுவது இயல்பான, இயற்கையான எதிர் வினையாகும். ஆனால், அவ்வாறு சிறிலங்க அரசின் அடக்குமுறையையும், சொந்த நாட்டு மக்கள் மீது அவர்கள் கடந்த 30 ஆண்டுக்காலமாக கட்டவிழ்த்துவிட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பிற்கு எதிர்ப்புக் குரல் எழும்போதெல்லாம், இங்கிருந்து சில அரசியல் ‘தலைவர்களும்’, சில பத்திரிக்கைகளும் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவான குரலாக சித்தரித்து எதிர்க்குரல…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தினையும் மாவீரர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் தமிழுணர்வையும் இழிவுபடுத்தி இன்று(அக்டோபர் 14) கட்டுரை வெளியிட்ட பாசிச "THE HINDU" பத்திரிக்கையினை கண்டித்து கோயம்பத்தூரில் ஆதித்தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தோழர் வெண்மணி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தமிழின வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இந்து நாளிதழின் அலுவகம் முன்பு இன்று மதியம் இந்து நாளிதழை தீக்கிரையாக்கி இந்து நாளிதழின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து முழக்கமிட்டு கைதானார்கள். இணைப்பு - 2 இந்து நாளிதழிழை எரித்த தமிழக தோழர்கள் மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்து நாளிதழிழை எரித்த தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டார்கள். மேலும் மதியம் வழக்கறிஞர்கள் கைது செய்ய…
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகள் செய்து வரும் மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் சிங்கள அரசுக்கான இந்திய அரசின் உதவிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றார். திரைப்பட இயக்குனர் சீமான் பேசுகையில், இந்திய அரசு நாங்கள் கொடுத்த வரிப்பணத்தில் எங்கள் உறவுகளை சுட்டுக் கொல்கிறது என்றால் நாங்கள் இனி இந்திய அரசுக்கு வரிக் கட்டமாட்டோம் என்றார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத…
-
- 0 replies
- 2k views
-
-
http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...operations.html http://vimbamkal.blogspot.com/2008/10/sri-...rations_13.html
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னியின் மக்கள் போக்குவரத்துக்குரிய முதன்மைப் பாலத்தை சிறிலங்கா படையினர் தாக்கியழித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 804 views
-
-
கிளிநொச்சியின் இரண்டு நோயாளர் காவு வாகனங்களின் கதி என்ன? [செவ்வாய்க்கிழமை, 14 ஒக்ரோபர் 2008, 08:05 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி பொதுமருத்துவமனையின் இரண்டு நோயாளர் காவு வாகனங்கள் நோயாளர்களுடன் சென்றபோதும் அவை வவுனியாவை சென்றடையவில்லை. இரண்டு நோயாளர் காவு வாகனங்களிலும் 11 நோயாளர்கள் புதுக்குடியிருப்பு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு அலுவலகம் வரை சென்றன. அங்கிருந்து வவுனியா செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் உதவி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோயாளர் காவு வாகனங்களில் எட்டு மாதங்களில் பிறந்த குழந்தை உள்ளிட்ட நோயாளர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் அந்த வாகனங்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்று தெரியவில்லை. இதனி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தமிழர்களை மீட்டு எடுக்கக்கூடிய, அவர்களின் இனத்தை இன்றைக்கு நாசப்படுத்துகின்ற சிங்கள அதிகாரிகள், சிங்கள இராணுவத்திடமிருந்து அவர்களை மீட்டெடுக்க அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-