ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் மூன்று மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹ ங்குரான மதுபான உற்பத்தி நிலைய அதிகாரிகளிடமிருந்து இந்தப் பணத்தை பிள்ளையான் பெற்றுக் கொண்டுள்ளார். பிள்ளையான் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் 700,000 ரூபா பணத்தை தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் ஜப்பானிய விஜயம் முடிந்ததன் பின்னர் மேலும் 27,00,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக குறித்த ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை, அண்மையில் மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவன பொறியலாளர் படுகொலை சம்பவத்துடன் பிள்ளையான் குழு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சிவில…
-
- 0 replies
- 2k views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் இடத்துக்கு மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளேயின் மனைவி சுதர்சினி அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது. வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் அதே இடத்திற்கு வசந்த சமரசிங்கவை நியமிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்த்pரக் கூட்டமைப்பிடம் கோரியிருந்தது. அவ்வாறானதொரு கோரிக்கை மக்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
திரான்பரசி இன்டர்நசனல் பணிப்பாளர் ஜே.சி.வெலியமுல்லவின் கொகுவலையில் உள்ள இல்லத்தின் மீது நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 612 views
-
-
வாகரையில் பரீட்சித்தது வன்னியில் பலிக்குமா? - கனகரவி - வன்னிப்பெரு நிலப்பரப்பில் வாழும் மக்களைப் பணயமாக வைக்கும் சூழ்ச்சி நடக்கின்றது. சிங்களப் பேரினவாத அரசு தமிழீழ விடுதலையை 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என்ற நிலமைக்குத் தள்ளி விடுவதற்கே கங்கணம் கட்டி நிற்கின்றது. மக்களைப் பணயமாக வைத்து போராட்டத்தின் வேரைப் பிடுங்கி விடுவதற்கான உச்சவேலைகளை முடுக்கி விட்டுள்ளது. அப்படியான எண்ணத்துடன் தான் வன்னிப் பெருநிலப்பரப்பில் புலிகளின் ஆளுகைக்குள் மக்களுக்காகத் தொண்டாற்றி வந்த தொண்டு நிறுவனங்களை வெளியேறி விடுமாறு அறிவித்தது. தொண்டு நிறுவனங்களும் வெளியேற வேண்டி வந்துள்ளது. ஈழத்தமிழரை அழித்து எஞ்சியவர்களை அடிமைகளாக்கி விட்டால் இலங்கைத்தீவு முழுவதையும் தாமே ஆண…
-
- 11 replies
- 2.9k views
-
-
துரோகிகளே! இன்று சிங்களம், கரும்புலிகளின் பாசறைகளை தாக்கி அழித்ததாக கூறிய இலக்கை, இதோ உங்கள் கண் முன்னே காண்கிறீர்கள். உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இந்த பச்சிளம் பாலகனின் அலறல். இன்று சிங்களத்துடன் நீங்கள் சேர்ந்து நடாத்தும் தமிழின படுகொலைக்கு நீங்களே பலியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிங்களம் உங்கள் உடல்;களையும் குதறி, இரத்தங்களை ருசிக்கும் நாட்களை நீங்களே எண்ணத்தொடங்குங்கள் http://www.neruppu.org/
-
- 6 replies
- 2.7k views
-
-
கிழக்கு மாகாணத்தில் இனரீதியாக அரச சேவையாளர்கள் இணைக்கப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது கிழக்கு மாகாணசபையின் கீழ் அரசாங்க பணியாளர்கள் மத்தியிலான ஆட்சேர்ப்புஇ இனரீதியில் இடம்பெறுவதை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சேபித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் இந்த எதிர்ப்ப வெளியிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டின் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அரசாங்கப்பணியாளர்கள் அவர்களின் திறமைகளின் அடிப்படையிலேயே பணிகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படவேண்டும
-
- 0 replies
- 569 views
-
-
யுத்தம் முடியும் முன்னரே சமாதானத்தீர்வை எதிர்பார்க்கும் தமிழ்சமூகம். யுத்தம் முடிந்த பின்னர் சமாதானத்தை எதிர்பார்க்கும் சிங்கள சமூகம் மலையகத்தில் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் நடைமுறை யுத்தம் நிறுத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என விருப்பம் கொண்டுள்ளதாக சமாதானத்தை நம்பிக்கை சுட்டெண்ணில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த சுட்டெண்ணின்படி சிங்கள சமூகத்தின் பெரும்பாலானவர்களும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு நெருங்கி வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிங்கள மக்களை பொறுத்தவரையில் அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதன் மூலம் இந்த சமாதானம் ஏற்படும் என நம்புகின்றனர்.எனினும் இதனை மறுக்கும்…
-
- 0 replies
- 786 views
-
-
இலங்கையின் மத்திய வங்கியில் பாரிய நிதிமோசடிஇ மோசடி நிதி நிறுவனத்தில் அமைச்சர் மேவின் சில்வா உட்பட்ட பல காவல்துறை அதிகாரிகளும் முதலீடுகளை கொண்டுள்ளனர். இலங்கையின் மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதிமோசடி ஒன்று தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சக்விதி ரணசிங்க என்ற பெயரில் இயங்கி பல கோடி ரூபாய்களை மோசடி செய்ததாக கூறப்படும் சக்விதி ரணசிங்க என்ற நிதியமைப்பு தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பாராமுகமாக இருந்தமை தொடர்பிலேயே காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மத்திய வங்கியின் அதிகாரிகள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் ரணசிங்க என்பவரிடம் இருந்து ஏதாவது நன்மைகளை பெற்றிருப்பார்கள் என்ற…
-
- 0 replies
- 775 views
-
-
வரும் வாரங்கள்இ நாட்கள் நான்காம் கட்ட ஈழப்போரின் உச்சக்கட்டமாக இருக்கும் - இக்பால் அத்தாஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடமாகிய வன்னியின் கதவடியில் தற்போது இலங்கைப் படையினர் இருப்பதாகவும் அவர்கள் இந்த வாரம் கிளிநொச்சியை நோக்கி தாக்குதல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் போரியல் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியின் 85 வீதமான மக்கள் தற்போது தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வன்னிக்கான உணவுகளை கொண்டு சுமார் 60 பாரஊர்திகள் தற்போது அங்கு செல்வதற்கு தயராகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த உணவு வாகனத் தொடரணி செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும…
-
- 0 replies
- 1.5k views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துள்ளதாக லக்பிம செய்திதாள் தமது பாதுகாப்பு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. படையினர் இன்னும் குறைந்தளவு தூரத்தையே கிளிநொச்சியைக் கைப்பற்றும் போரில் கொண்டிருப்பதால் இந்த போர் உக்கிரமடையும் என அந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. 57 படைப்பிரிவு கடந்த வாரம் 1990க்கு பின்னர் கொக்காவிலை கைப்பற்றியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் தமது பாரிய எதிர்த்தாக்குதல்களை படையினருக்கு எதிராக நடத்திவருவதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் புலனாய்வுதுறை தகவல்களின்படி, கிளிநொச்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் இலகுவில் விட்டு செல்வர் என எதிர்ப்பார்க்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள் இன்றாகும் இன்று (27 செப்ரெம்பர்) ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள். இன்று கிளிநொச்சியானது தமிழர்இ சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது. பின்னணி தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தளமாக இந்நகரம் இருந்துவந்தது. 1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக…
-
- 2 replies
- 2.6k views
-
-
அனைத்துலக நாடுகளினதும் அமைப்புக்களினதும் அழுத்தங்களைத் தொடர்ந்து வன்னிப்பெரு நிலப்பரப்புக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 530 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பின் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா படை பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருகையில் சிறிலங்கா வான்படை புதிய வகை எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 760 views
-
-
யால பகுதியில் இராணுவத்தினர் மீது புலிகள் மீண்டும் தாக்குதல்: ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2008, 05:29 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார மேலும் கூறியதாவது: யால பகுதியின் மூன்றாவது வலயப்பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. அப்பகுதிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதில் காயமடைந்த இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் புத்தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 544 views
-
-
படையினர் என்றுமில்லாதவாறு மிகவும் பலவீனமான நிலையில் வன்னியில் அகலக் கால் பதித்துள்ள, எமக்கு சாதகமான நிலையைப் பயன்படுத்தி எமது நிலங்களை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டதென விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; ""மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழத் தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் கூறியிருந்தார். இவ்வாறான மக்கள் எழுச்சியும் புரட்சியும் தற்போது தமிழர் மண்ணில் வியாபித்துள்ளது. தமிழர் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலை தொடர்பான எ…
-
- 19 replies
- 3.2k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நேற்று தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 686 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிர்வாக பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மானிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரையில் பிரதித் தலைவர் பொறுப்பை வகித்து வந்த பிள்ளையானுக்கு பதிலாக ஜெயம் மாஸ்டரை பிரதித் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ந…
-
- 12 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டும் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது. இந்த தாக்குதல் இன்று மாலை 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழ காவல்துறையினர் அறிவித்துள்ளனர். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-27.html
-
- 5 replies
- 1.4k views
-
-
அரச படையினர் விமானம் மூலமும்இ தரையில் இருந்தும் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வாராந்த சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வன்னி மக்கள் நாளுக்கு நாள்இ இடத்திற்கும் இடம் நகர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். படையினரின் தாக்குதல்களால் மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியவில்லை. உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மக்கள வீடுகளில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து …
-
- 0 replies
- 997 views
-
-
கருணா மற்றும் பிள்ளையான் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆயுத மோதல் ஒன்றை நோக்கி செல்வதை தடுக்கும் வகையில் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) இரண்டு தரப்பினருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இரண்டு தரப்புக்கும் இடையில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் வகையில் கொழும்பில் ரகசிய இடமொன்றில் நடத்தப்படவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் உயர்மட்டத் தரப்பும் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மோதலாக உருவெடுத்து கடந்த 25 ஆம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள கருணா தரப்பினர் அடிக்கடி கூடும் ரி.எம்.வீ.பி. அலுவலகம் ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 1.9k views
-
-
ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!! நியாயம் வேண்டியும்,நீதியான கௌரவமான வாழ்வு வேண்டியும் களத்திலும் புலத்திலும் தாயக மண்ணிலும், இடம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் உடன்பிறப்புகளை மனவுறுதி தளராது, நம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, வழிப்படுத்தி,மனவளப்படுத்தி, திட சிந்தனையோடு வைத்திருப்பது மிக முக்கிய மான விவகாரமாகும்.இந்த வரலாற்றுத் திருப்புமுனை வேளையிலே,இந்த மிகமுக்கிய பொறுப்பு,ஊடகங்களின் தோள்களில் பொறிந் திருப்பது மறுக்கமுடியாத உண்மை.களத்திலும் புலத்திலும் நம் தமிழ் உடன்பிறப்புகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திவரும் ஊடகங்கள் இந்தக் கனதியான பொறுப்பைக் கடமையுணர்வோடு சுமந்து,தம் கடன் பணியாற்றி …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால், பொரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே ஆவர். சிறிலங்காவில் உள்ள பயங்கரவாதிகளில் 98 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 572 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்வின் சகோதரரும், ஆலோசகரும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி. எம்.வி.பி.) கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அக்கட்சியினால் நீக்கப்பட்டிருக்கிறார் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியின் புதிய துணைத் தலைவராக ஜெயம் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. uthayan.com
-
- 2 replies
- 1.6k views
-
-
வன்னியில் கிளிநொச்சி நகருக்கு அருகில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், வான் குண்டுத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும், சிறிய ஆயுதத் தாக்குதல்களும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாக சர்வதேச உதவி அமைப்புக்களுக்கிடையிலான முகவர் குழுவான ஐ.ஏ.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கிளிநொச்சி பிரதேச மக்களும், ஏனைய பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அங்கு தங்கியிருந்தவர்களும் கிளிநொச்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் அந்த அமைப்பை மேற்கோள் காட்டி ஐ.பி.எஸ். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் கிழக்கே முல்லைத்தீவு வீதியிலுள்ள தர்மபுரம் பகுதியில் பெருமளவுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். தர்மபுரம் விவச…
-
- 0 replies
- 2.3k views
-