ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
அனைத்துலக நாடுகளினதும் அமைப்புக்களினதும் அழுத்தங்களைத் தொடர்ந்து வன்னிப்பெரு நிலப்பரப்புக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 534 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பின் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலுமான களமுனைகளில் கடந்த இரண்டு மாதங்களாக சிறிலங்கா படை பலத்த இழப்புக்களைச் சந்தித்து வருகையில் சிறிலங்கா வான்படை புதிய வகை எரிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 764 views
-
-
யால பகுதியில் இராணுவத்தினர் மீது புலிகள் மீண்டும் தாக்குதல்: ஒருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2008, 05:29 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள யால பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார மேலும் கூறியதாவது: யால பகுதியின் மூன்றாவது வலயப்பகுதியில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. அப்பகுதிக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதில் காயமடைந்த இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் புத்தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 569 views
-
-
படையினர் என்றுமில்லாதவாறு மிகவும் பலவீனமான நிலையில் வன்னியில் அகலக் கால் பதித்துள்ள, எமக்கு சாதகமான நிலையைப் பயன்படுத்தி எமது நிலங்களை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டதென விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; ""மக்கள் புரட்சியின் ஊடாகவே தமிழீழத் தேசிய விடுதலை சாத்தியம் என்பதை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் கூறியிருந்தார். இவ்வாறான மக்கள் எழுச்சியும் புரட்சியும் தற்போது தமிழர் மண்ணில் வியாபித்துள்ளது. தமிழர் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலுள்ள மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலை தொடர்பான எ…
-
- 19 replies
- 3.2k views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நேற்று தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் நிர்வாக பதவிகளில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா அம்மானிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையிலான பனிப்போர் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரையில் பிரதித் தலைவர் பொறுப்பை வகித்து வந்த பிள்ளையானுக்கு பதிலாக ஜெயம் மாஸ்டரை பிரதித் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் பல்வேறு கிளர்ச்சிகள் வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ந…
-
- 12 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா இராணுவத்தினர் இன்று கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் விமானத்தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டும் ஒரு குழந்தை படுகாயமடைந்துள்ளது. இந்த தாக்குதல் இன்று மாலை 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தமிழீழ காவல்துறையினர் அறிவித்துள்ளனர். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-27.html
-
- 5 replies
- 1.4k views
-
-
அரச படையினர் விமானம் மூலமும்இ தரையில் இருந்தும் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் எந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலும் சந்தேகத்திலும் வாழ்ந்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வாராந்த சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வன்னி மக்கள் நாளுக்கு நாள்இ இடத்திற்கும் இடம் நகர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். படையினரின் தாக்குதல்களால் மக்களுக்கு சுதந்திரமாக வாழ முடியவில்லை. உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த மக்கள வீடுகளில் இருந்து வெளியேறி பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து …
-
- 0 replies
- 1k views
-
-
கருணா மற்றும் பிள்ளையான் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆயுத மோதல் ஒன்றை நோக்கி செல்வதை தடுக்கும் வகையில் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) இரண்டு தரப்பினருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இரண்டு தரப்புக்கும் இடையில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் வகையில் கொழும்பில் ரகசிய இடமொன்றில் நடத்தப்படவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் உயர்மட்டத் தரப்பும் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மோதலாக உருவெடுத்து கடந்த 25 ஆம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள கருணா தரப்பினர் அடிக்கடி கூடும் ரி.எம்.வீ.பி. அலுவலகம் ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. …
-
- 0 replies
- 1.9k views
-
-
ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!! நியாயம் வேண்டியும்,நீதியான கௌரவமான வாழ்வு வேண்டியும் களத்திலும் புலத்திலும் தாயக மண்ணிலும், இடம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் உடன்பிறப்புகளை மனவுறுதி தளராது, நம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, வழிப்படுத்தி,மனவளப்படுத்தி, திட சிந்தனையோடு வைத்திருப்பது மிக முக்கிய மான விவகாரமாகும்.இந்த வரலாற்றுத் திருப்புமுனை வேளையிலே,இந்த மிகமுக்கிய பொறுப்பு,ஊடகங்களின் தோள்களில் பொறிந் திருப்பது மறுக்கமுடியாத உண்மை.களத்திலும் புலத்திலும் நம் தமிழ் உடன்பிறப்புகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திவரும் ஊடகங்கள் இந்தக் கனதியான பொறுப்பைக் கடமையுணர்வோடு சுமந்து,தம் கடன் பணியாற்றி …
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால், பொரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே ஆவர். சிறிலங்காவில் உள்ள பயங்கரவாதிகளில் 98 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்வின் சகோதரரும், ஆலோசகரும் சிறிலங்கா சுதந்திரகட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 675 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி. எம்.வி.பி.) கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அக்கட்சியினால் நீக்கப்பட்டிருக்கிறார் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியின் புதிய துணைத் தலைவராக ஜெயம் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. uthayan.com
-
- 2 replies
- 1.6k views
-
-
வன்னியில் கிளிநொச்சி நகருக்கு அருகில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், வான் குண்டுத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும், சிறிய ஆயுதத் தாக்குதல்களும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாக சர்வதேச உதவி அமைப்புக்களுக்கிடையிலான முகவர் குழுவான ஐ.ஏ.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கிளிநொச்சி பிரதேச மக்களும், ஏனைய பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அங்கு தங்கியிருந்தவர்களும் கிளிநொச்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் அந்த அமைப்பை மேற்கோள் காட்டி ஐ.பி.எஸ். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் கிழக்கே முல்லைத்தீவு வீதியிலுள்ள தர்மபுரம் பகுதியில் பெருமளவுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். தர்மபுரம் விவச…
-
- 0 replies
- 2.3k views
-
-
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒரே இரவில் முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளர்ர். கனடாவின் நேசனல் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தமது அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், பதவிப் பிரமாணம் செய்து கொண்டு மூன்று வாரங்களில் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் முழு வீச்சுடன் முன…
-
- 0 replies
- 742 views
-
-
கனேடியத் தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலைக் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (வெள்ளி) மாலை 4மணி 01 நிமிடமளவில் கனடா றிச்மன்ட்ஹில் ஆலய கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகித் தொடர்ந்த வண்ணமுள்ளது. தாயகத்தில் அல்லலுறும் மக்களின் துன்பங்கள் வெளித் தெரியும் வண்ணம் அமைதிவழிப் போராட்டத்திற்கே மகுடம் சேர்த்த இன்றைய பொழுதிலே கனேடித் தமிழ் இளையோர் சமூகம் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் 35 இற்கு மேற்பட்ட இளையோர்களின் முழுமையான 30 மணித்தியால உண்ணா நிலை நிகழ்வுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. கவனயீர்ப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்விலே சேகரிக்கப்படும் நிதியானது தாயகப்பகுதியிலே தற்போதைய இடப்பெயர்வால் அல்லலுறும் மக்களிற்கு, அவர்களது தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அவர்களிற்க…
-
- 2 replies
- 750 views
-
-
வீரகேசரி இணையம் 9/27/2008 9:28:58 AM - பயங்கரவாதத்திற்கு எதிரான எமது படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம். தற்போதைய போரில் எமது படைகள் நிச்சயம் வெற்றியடையும் என்ற பூரண நம்பிக்கை எமக்குள்ளது. அந்த வெற்றியை விரைவாக நாம் பெற்றுவிடுவோம். என பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபஷ இலண்டன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
-
- 0 replies
- 814 views
-
-
சிறுபான்மை மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து கண்டனத்திற்குரியது - ரவூப் ஹக்கீம் இலங்கையில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் கண்டிக்கத் தக்கவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார் என முஸ்லிம் கார்டியன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை சிங்கள மக்களின் உடமை எனவும், சிறுபான்மை மக்கள் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் இராணுவத் தளபதி கனேடிய ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இராணுவத் தளபதியின் கடும்போக்குவாத கருத்துக்கள் தமிழ்இ முஸ்லிம் மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.…
-
- 0 replies
- 748 views
-
-
அரச சார்பற்ற வெளிநாட்டவர் ஒருவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார் - கோதபாய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பணியாளார் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த திட்ட முகாமையாளர் ஒருவரே இவ்வாறு புலிகளுடன் இணைந்துள்ளதாக பாதுகாப்புப் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாத பகுதிகளிலிருந்து அரச சர்பற்ற நிறுவனங்களை வெளியேறுமாறு அரசாங்கம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து குறித்த இத்தாலி பிரஜை விடுதலைப் புலிகளுடனேயே தாம் தங்கியிருக்கப் போவதாகவும்இ தாம் வன்னியிலேயே உயிர் துறக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏனைய பணிய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஐ.நா. கொடியுடன் கூடிய உணவு வாகன அணி அடுத்த சில நாள்களில் செல்லவுள்ளது. கொழும்பில் உள்ள ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே இதனைத் தெரிவித்துள்ளார். வன்னியில் பணியாற்றிய ஐ.நா.மற்றும் தொண்டர் அமைப்புக்களை வெளியேற வேண்டும் என இலங்கை அரசாங்கம் கால அவகாசம் விதித்திருந்தமையும் அதன் பிரகாரம் கடந்த 16ஆம் திகதி ஐ.நா.அமைப்புக் கள் யாவும் வன்னியிலிருந்து வெளியேறியிருந்தமையும் தெரிந்த வையே. அந்த அமைப்புக்கள் வெளியேறிய பின்னர் ஐ.நா வின் உலக உணவு திட்டத்தின் முதலாவது வாகன அணி அடுத்த சில நாள்களில் செல்லவிருக்கின்றது என்று புஹுனே தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய பொருள்களை நேரடியாக நாமே விநியோகிக்கும் உர…
-
- 0 replies
- 599 views
-
-
வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு சர்வ தேச சுயாதீனக் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெறும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களின் மனித உரிமைகளை மதித்துச் செயற்படுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பாகக் கலந்துகொண்ட, அதன் வெளியுறவு ஆணையாளர் பெரேரோ வோல்டெனொ அதன் பின்னர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பொதுமக்களினதும் உள்நாட்டில் இடம் பெயர…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர்- பெரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே: கோத்தாபாய [சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2008, 06:32 மு.ப ஈழம்] [க.நித்தியா] தமிழர்கள் எல்லாரும் பயங்கரவாதிகள் அல்லர். ஆனால், பொரும்பாலான பயங்கரவாதிகள் தமிழர்களே ஆவர். சிறிலங்காவில் உள்ள பயங்கரவாதிகளில் 98 சதவீதமானவர்கள் தமிழர்கள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டன் பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வன்னி நோக்கிய படை நடவடிக்கையில் எமது படைகள் வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. தரையில் சகல போர்முனைகளிலும் கடல் மற்றும் வான் வழிகளிலும் தாம் மிகுந்த தேர்ச்சியுடன் உள்ளோம். …
-
- 2 replies
- 704 views
-
-
சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி சமாதானத்தை ஏற்படுத்தியுள்ள கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத நிர்வகத்திற்குள் கிழக்கு மாகாணம் மீண்டும் செல்ல தான் இடமளிக்க போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகளுக்கும், அமெரிக்க மக்களுக்கும், அமெரிகக் அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்திற்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் பிள்ளையான் கூறியுள்ளார். கடந்த 30 வருடங்களாக கிழக்கு மாகாண மக்கள் அபிவிருத்தியைக் கண்டிருக்கவில்லை. இந்த மாகாண மக்களுக்கு இந்த சந்த…
-
- 4 replies
- 1.4k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்துப் பொருட்களை எடுத்துச்செல்வதற்குரிய ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் அதிகாரியொருவர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவும், கேணல் சங்கர் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவும் இணைந்ததான பல்வேறு நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு கோட்டத்தில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 679 views
-