ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
ஜக்கிய நாடுகள் சபையின் அமர்வில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தந்த சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடத்திய கண்டனப் பேரணியில் ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்கள் மான உணர்வு உடையவர்கள்; வீரமுடையவர்கள். அவர்களை யாரும் அழிக்க முடியாது. பூவாக மலரும் புயலாகவும் மாறும் புத்தெழுச்சி கொண்டதுதான் எமது தமிழினம். அதற்கு எடுத்துக்துக் காட்டாக ஈழத்தமிழர்கள விளங்குகிறார்கள். இலங்கை இராணுவம் ஈழத்; தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து விலங்குகளை விடக் கொடூரமான முறையில் கொன்று குவித்து வருகிறது. மக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பாதுகாப்புத் தேடி காடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு 2 லட்சம் மக்கள் ஏதிலிகளாக்கபட்டுள்ளனர். எனவே, எமது உறவுகளை ஈவிரக்கமற்று அரக்கத்தனமாக கொண்டு குவித்து வரும் இலங்கைக்கு ஆயுதங்களையோ இராணுவ உதவிகளையோ இந்தியா வழங்குவது தமிழர்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் இவ்வாறு இயக்குநர் சீமான் தெரிவித்துள்ள…
-
- 4 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைதுசெய்யும் வல்லமை படையிருக்கு இரு;ப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவர் கண்ணுக்கு எட்டும் தூரத்திலேயே இருப்பதாகவும் சத்தமிட்டால் கேட்க்கும் தொலைவில் அவர் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். அவர் மண்ணுக்கு அடியிலும், தரையில் பல்வேறு இடங்களில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் எங்கு ஒழிந்துகொண்டாலும் பிரபாகரன் கைதுசெய்யப்படுவார் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அவர் மறைந்திருக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய தொழிநுட்பம் படையினரிடம் இருப்பதாகவும் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கூறியுள்ளார். பேலியகொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை …
-
- 5 replies
- 2.4k views
-
-
ஒவ்வோரு தடவையும் நான் வெளியே செல்லும் போது எனது அடையாள அட்டையை பார்வையிடும் பொலிஸார் அதிகளவுக்கு கேள்வி கேட்கின்றனர். திரும்பிப் போகுமாறு அடிக்கடி கூறுகின்றனர். நாங்கள் ஆபத்தானவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் புலிகள் என்று அவர்கள் சொல்கின்றனர். 54 வயதுடைய வடபகுதியைச் சோந்த லக்ஷ்மி வள்ளியம்மா என்ற பெண் தெரிவித்தார். குறைந்த கட்டணம் அறவிடும் வெள்ளவத்தைப் பகுதி விடுதியொன்றில் வள்ளியம்மா தங்கியிருக்கிறார். தனது மகனுடன் 18 மாதங்களுக்கு முன்னர் இப் பெண் கொழும்புக்கு வந்துள்ளார். வடக்கின் யுத்த சூழ்நிலையால் தென்பகுதிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கானோரில் வள்ளியம்;மாவும் ஒருவராவார். கொழும்பில் சாதராண தமிழ் மக்களின் வாழ்க்கை மோசமடைந்து வருவதாக அவர் கூறினார். …
-
- 0 replies
- 1.9k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பி வைக்க சிறிலங்கா நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் பணக்கொடுப்பனவுப் பட்டியலில் சில மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் இருப்பதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல அசாதாரண குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.7k views
-
-
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை [வியாழக்கிழமை, 25 செப்ரெம்பர் 2008, 01:33 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர். தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர். இந்த நிகழ்வு 10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம் அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது. …
-
- 0 replies
- 761 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன கிளிநொச்சி மீது இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் உரிமை சார்பாளரான பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பாலானவர்கள் தம்மிடம் படையினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதாக குறிப்பிட்ட பிரைன் செனவிரட்னஇ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நிலைக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றே …
-
- 7 replies
- 1.6k views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொறிவெடித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 724 views
-
-
இலங்கையில் ஈழத்தமிழருக்கான வாழ்வுரிமை என்பது கேள்விக்குறியாகவுள்ள நிலையில், புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்துவரும் உக்கிர மோதல்கள் குறித்தும், இதன் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்தும், இதர அரசியல் நடவடிக்கைகள் குறித்தும், இந்திய அரசு தனது உன்னிப்பான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியோருவர் தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும்: தமிழர் தாயகப் பகுதிகள் மீது இராணுவம் தொடுத்துள்ள கடுமையான உக்கிரமான தாக்குதல்கள் மற்றும் இருதரப்புகளுக்குமிடையிலான மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இந்திய அரசுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்pகன்றன. வன்னியில் ஐ.நா நிறுவனம் மற்றும…
-
- 9 replies
- 2.6k views
-
-
சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட ஹொங்கொங் கப்பலில் பணியாற்றிய இலங்கை தலைமை மாலுமியை விடுவிப்பது குறித்து வெளிவிவகார அமைச்சு சோமாலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய வருகிறது. கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஹொங்கொங் கொடியுடன் இலங்கையைச் சேர்ந்த மாலுமி எம். கணேசலிங்கம் தலைமையிலான 25 பேர் கொண்ட பணியாளர்களுடன் கடந்த 17 ஆம் திகதி கிரேட் கிரியேஷன் என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டது. ஏடன் வளைகுடா மற்றும் இந்து சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு சோமாலிய கடற்கொள்ளையர்களால் பெரும் அச்சுறுத்தல் காணப்படுவதாக…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருகோணமலை மாவட்டம் திமிலக்கடவை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 701 views
-
-
வட பகுதியிலிருந்து கடந்த 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐந்து வருட காலத்திற்குள் கொழும்பு உட்பட மேல்மாகாணத்துக்கு வருகை தந்த மக்களை மீண்டும் பதிவு செய்தமையானது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையல்ல. பொதுமக்களின் பாதுகாப்புக்காக பிரஜைகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதினால் அதில் தவறேதும் இல்லை. அது சரியான நடவடிக்கை என்று உயர் நீதிமன்றம் நேற்று(22) அறிவித்தது. இந்தப் பதிவு நடவடிக்கையால் ஒரு கணக்கெடுப்புக்காகவே மேற்கொள்ளப்பட்டதால் இதன் மூலம் பொது மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் குழு சுட்டிக்காட்டியது. இதற்கிடையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தமிழ் மக்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கையானது, சட்…
-
- 2 replies
- 721 views
-
-
ஆரயம்பதியில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு வர்த்தக நோக்கத்திற்காக கடந்த வியாழக் கிழமை (செப்18) சென்ற இரண்டு தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி வெள்ளைவானில் சென்றவர்களினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறை மற்றும் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 16வயதான யோகநாதன் சுரேஸ், 22 கணேசமுதலியார் சுகந்தன் ஆகியோரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். முஸ்லீம் பகுதியான பாலமுனைக்கு ஆடு விற்பனை செய்யச் சென்ற போதே இவர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆரையம்பதியைச் சேர்ந்த பெண்களே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தி…
-
- 2 replies
- 969 views
-
-
வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்-வோல்டர் ஹெலின் வடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் என்று இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா.வின் விஷேட பிரதிநிதி வோல்டர் ஹெலின் வலியுறுத்தினார். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான செயற்திட்டமொன்றை உருவாக்கும் 3 நாள் தேசிய ஆலோசனைக்கூட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பமானது இதில் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வோல்ட்டர் ஹெலின் மேலும் கூறியதாவது: கடந்த 10 - 15 வருடங்களாக இலங்கையில் மக்கள் இடம்…
-
- 0 replies
- 813 views
-
-
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலைய பூசகர் இன்று மாலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். http://www.tamilskynews.com/
-
- 5 replies
- 1.9k views
-
-
பார்த்தியளே இப்ப யார் யாரெல்லாம் பெண்களின்ர மானத்தோட விளையாடினம் என்டு. வேலியே பயிர மேயிற கதைதான். கொஞ்ச நாளுக்கு முன்னால கல்கிசையில ஒரு பொலிசு தன்னுடைய ஆண்மைத்தனத்தை வெளிக்காட்டினாராம். இப்ப நாலு பொலிசுகள் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு ஆண்மையை வெளிப்படுத்திக்காட்டினாங்க
-
- 0 replies
- 2k views
-
-
தமிழ்நாடு திருச்சியில் ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி அனைத்து சட்டக் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளின் ஆதரவுடன் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 624 views
-
-
பிரித்தானிய தொழில்கட்சியின் தமிழர்களின் தலைவர் சென்.கந்தையா அவர்கள் திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் தொழில்கட்சி, சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளும் அதிகரித்த மனித உரிமை மீறல்களையும் மற்றும் சிறீலங்காவின் அரசியல் கொள்கைகளில் வெற்றிபெற்று அரசமைக்கும் அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் யாப்புமுறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றி இருப்பதுவுமே சிறீலங்கா இனமுரண்பாடுட்டுக்கு முக்கிய காரணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ் மாநாட்டில் சுமார் 10 000 ற்கு மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமையும் இவ்மாநாடு பி.பிசி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டுட்டதுவும் குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 1k views
-
-
'இணைத்தலைமை நாடுகளாக இருந்தாலும் சரி ஏனைய சர்வதேச சக்திகளாக இருந்தாலும் சரி அவை இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பார்த்து இலங்கை அரசு சிறிதளவேனும் பின்வாங்காது. சர்வதேசம் என்னதான் சொன்னாலும் எதற்குமே அரசு அஞ்சாது'. இவ்வாறு இறுமாப்புடன் கூறினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவா அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரைக்கு பதிலளித்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் : ஐ.நா கூட்டத்தில் மஹிந்த கலைந்து கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் வாஷிங்டனில் சில சர்வதேச அமைப்புகள் கூடி இலங்கை விடயங்கள் பற்றிப் பேசத் தீர்மானித்துள்ளன என்று நாம் அறிகிறோம். புலிகளுக்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்படும் இந்த …
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலிகளின் வான்படையினராலும் கரும்புலிகளினாலும், கிட்டு பீரங்கிப்படைப் பிரிவின் ஆட்லறி சூட்டாதரவுடன் மேற் கொள்ளப்பட்ட தரை மற்றும் வான் வழியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீதான வெற்றிகரமான தாக்குதல்களானது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைத்துறையினதும் மூலோபாய நோக்கங்களுக்கு விழுந்த பாரிய நெத்தியடியாகும். அத்துடன் சிறிலங்காப் படைகளின் எதிர்கால நடவடிக்கைகளிலும் பாரிய தாக்கங்களையும் நெருக்கடிகளையும் புலிகளின் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் ஏற்படுத்தப்போகின்றது. அதாவது தற்போது வன்னி பிராந்தியத்திலே இடம்பெறுகின்ற சிறிலங்காப் படையினரின் அனைத்து போர் நடவடிக்கைகளுக்குமான கட்டளைபீடமாகவும் தொடர் பாடல் மையமாகவும் மற்றும் வல…
-
- 2 replies
- 2.2k views
-
-
வீசா வழங்க ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்க செல்ல முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: வீசா வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய முடியாது போனதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் தேவானந்தா கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும், குறித்த காலத்திற்குள் அவரது வீசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தாம்மால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் செல்ல முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர். கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும்…
-
- 10 replies
- 1.9k views
-
-
-
- 19 replies
- 3.6k views
-
-
டென்மார்க் வாழ் எமது அன்பான உறவுகளே !! தாயக மக்களுக்காய் குரல் கொடுக்க ஓர் அவசர அழைப்பு !! இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசின் செயல் கண்டும் மௌனமாய் இருப்போரின் மனக்கதவை இன்னுமொரு தடவை ஓங்கித் தட்ட வேண்டிய அவசர காலம் இது.! எம்மையும் உதவி செய்ய விடாது, தாங்களும் உதவி செய்யாது வெளியேறி விட்ட நிலையில், தேற்றுவார் இன்றி தவிக்கும் வன்னி மக்களுக்காய் ஒருதடவை! இன்னுமொரு தடவை! ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்.! இப்போது வன்னியில் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற போது இலங்கை முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை தொட்டுள்ளது. அன்று துடிப்புடன் நீண்ட உதவிக்கரங்கள்; அனைத்தையும் முடக்கப் பட்டுள்ள நிலமையில் …
-
- 0 replies
- 939 views
-