Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்தினரின் முன்நகர்வின் காரணமாக பயங்கரவாதிகள் தமது இறுதிக்காலத்தை நெருங்கியுள்ளதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் படைவீரர்களுக்கு கௌரமளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். இரசாயன ஆயுத சமவாயத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான ஆசிய பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுக்கான பிராந்திய மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேலும் கூறியதாவது: நடைமுறையிலுள்ள இரசாயன ஆயுதங்கள் தொடர்பிலும், இரசாயன ஆயுத சமவாயத…

    • 4 replies
    • 1.5k views
  2. இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதியில் இன்று 6.6- ரிச்டர் அளவுடைய பூமியதிர்வு ஏற்பட்டுள்ளது இதனால் இப்பகுதியில் சுனாமி அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது . இது இன்று காலை ஜவாதீவுப்பகுதியில் காலை 10.07 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது http://www.virakesari.lk http://puspaviji13.net84.net/

  3. திகில் தரும் மயான அமைதி கூறும் செய்தி என்ன ? இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிடும் ஊடகச் செய்திளும் அரச தரப்பினரின் அரசியல் மேடைப் பேச்சுகளும் தமிழ்ப் பொது மக்களின் வயிற்றைக் கலக்கும் அளவுக்கு பீதியை உண்டு பண்ணிக் கொண்டு வருகின்றன. வன்னிப் பகுதி மக்களின் துயரும் துன்பமும் எளிதில் எவராலும் புரிந்து கொள்ளவோ எளிதில் மற்றவருக்குப் புரிய வைக்கவோ முடியாதவை. அத்தனை பெரிய சோகத் துயரில் பெருமழையும் எதிரியின் குண்டு மழையும் மேலும் அவர்களின் நாடி நரம்புகளை வருத்துகின்ற வேளை இது. இன்று அவர்களுக்குப் பக்க பலமாகவும் உயிர் காக்கும் அருமருந்தாகவும் இருக்க வேண்டியவர்கள் அவர்களின் உறவுகளாகிய புலம் பெயர் தமிழ் மக்களே. இப்படியான வேளையில் புலத்தில் வாழும் உறவுகளாகிய நாம் அரச பிரச்…

  4. கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளுமென நான் நம்புகிறேன் எம்.கே.நாராயணன் கூறுகிறார் கச்சதீவு ஒப்பந்தம் உறுதிசெய்த தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை அரச தயாராக இருக்கிறது என்று தான் நம்புவதாக இந்திய தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்றுச் சென்னையில் சந்தித்த பின்னர் நாராயணன் செய்தியாளர்களுடன் கலந்துரையாடியபோதே இந்தத் தகவலைக் கூறினார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் நாராயணன் சொன்னார். இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டவை வருமாறு: கொழும்பில் இடம்பெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செ…

    • 8 replies
    • 1.4k views
  5. தேர்தலுக்கு சவால் விடும் அரசு அதற்கு முன் அரசமைப்புக் கவுன்ஸிலை ஏற்படுத்தத் தயாரா? 26.08.2008 தமிழர் தாயகம் மீது தாம் தொடுத்திருக்கும் யுத்தத் தீவிரப் போக்கு, பெரும் வெற்றிகரமான பெறுபேறுகளைத் தமக்குத் தந்து வருகின்றது எனத் திருப்திப்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு, மேலும் நல்ல ஊக்க மருந்தாக வந்து அமைந்திருக்கின்றது வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள். பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகியவை குற்றம் சுமத்துவது போல நடந்து முடிந்த இத் தேர்தல்களில் அராஜகங்களும், அட்டூழியங்களும், குளறுபடிகளும், அதிகாரத்துஷ்பிரயோகங்களும் அளவுக்கு மீறி இடம்பெற்றன என்று வைத்துக் கொண்டாலும் கூட இத் தேர்தல் முடிவுகள், தமிழ…

  6. இன்று காலை தம்புள்ளையில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Tuesday, 26 August 2008 இன்று காலை 2.40 மணியளவில் தம்புள்ள கந்தளம சந்தியில் பாரியளவிலான சத்தத்தை எழுப்பிக் கொண்டு குண்டொன்று வெடித்துள்ளதாக அவ்விடத்தில் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவத்தில் உயிர்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தம்புள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர். http://www.ajeevan.ch/content/view/5303/1/

  7. மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரின் கோட்டையினை தாக்கியழித்த 205 ஆவது வெற்றிவிழா [செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2008, 08:15 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழத் தேசியத் தலைவரினால் 1996 ஆம் ஆண்டு முல்லைத்தீவு சிறிலங்காப் படைத்தளம் தாக்கியழிக்கப்பட்டு, மீட்கப்பட்ட முல்லைத்தீவு மண்ணில் 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் முல்லைத்தீவு ஆங்கிலேயப் படையினரின் கோட்டையினை மாவீரன் பண்டாரவன்னியன் தாக்கியழித்ததன் 205 ஆவது வெற்றிவிழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவைப் பொறுப்பாளர் சர்வன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், முள்ளியவளைக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மு.உம…

    • 0 replies
    • 696 views
  8. இந்தியாவிடம் தோற்றுப்போகாத தமிழ்த் தேசியம் ஒருபோதும் சிங்கள மேலாதிக்கத்திடம் தோற்றுப்போகாது என்ற யதார்த்தத்தினை சிங்கள அரசுகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மகிந்த அரசின் பக்கம் தமிழ் மக்கள் இல்லை. ஏனெனில் புலிகளின் போராட்டத்தின் ஆணிவேராக தமிழ் மக்களே இருக்கிறார்கள். இந்நிலையில் போர்க்கள வெற்றிகள் நிலையற்றவை என்பதனை மகிந்த அரசு உணர்ந்துகொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வன்னியில் தொடரும் இராணுவத் தாக்குதல்களையடுத்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தமிழ் மக்களின…

  9. ''சொத்து சுகங்களை இழந்து உயிர் பிழைத்தால் போதுமென்று இந்தியா வந்தால் இங்கேயும் நிம்மதி இல்லை. பேசாமல் முகாம்களை மூடிவிட்டு எல்லோரையும் சிறையில் போடுங்கள்!'' -அகதிகளாக வந்திருக்கும் ஈழத் தமிழர்களின் ரத்தக்கண்ணீர்தான் இந்தக் குமுறல். செங்கற்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 65 அகதிகள் கையெழுத் திட்டு, நமக்கு அனுப்பிய கடிதத்தில் வரிக்கு வரி வேதனை ரேகைகள்தான்! ''எமக்கு உணவுப்பொருட்கள் வாங்கித் தரவென்று இரண்டு தலையாரிகள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். காலை உணவை மாலை ஐந்து மணிக்குப் போடும் இவர்களும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். நாங்கள் பட்டினி யால் செத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் இதய நோயாளிகள், சர்க்கரை வியாதிக்காரர்கள், இரத்த அழுத்தம் உள்…

  10. தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் சுவிற்சர்லாந்தில் தடை செய்யப்படவில்லை எனவும், இவ்வாறான அமைப்புகளுடன் பேசி தீர்வைக்காண முன்வர வேண்டும் எனவும்,சுவிஸிசின் வெளிவிவகார அமைச்சர் மிஹலின் கல்மெ-றே (Micheline Calmy-Rey) கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் மட்டுமன்றி ஹிஸ்புல்லா, கொலம்பியாவின் FARC அமைப்பினர், உகண்டாவின் கிளர்ச்சி அமைப்பு (Lord's Resistance Army) என்பவற்றுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இன்று தலைநகர் பேர்ணில் வெளிநாடுகளில் பணியாற்றும் சுவிஸின் 170 வரையிலான தூதுவர்களுடனான சந்திப்பி்ல் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார். தேவையேற்பட்டால் அல்-கைடாவின் தலைவர் ஒஸாமா பின் லாடனுடன் (Osama bin Laden) நேரடியாகப் பேசுவதற்கும் …

  11. ”இலங்கையில் தமிழர்” வரலாற்று நூல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது திங்கள், 25 ஆகஸ்ட் 2008 [தாயகன்] ”இலங்கையில் தமிழர்” என்ற முக்கிய வராலற்று நூல் நேற்றும், நேற்று முன்தினமும் நெதர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இந்த நூல் முதன் முதலில் யேர்மனியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்சில் வெளியிடப்பட்டது. நெதர்லாந்தைத் தொடர்ந்து சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நூல் வெளியிடப்பட இருக்கி்ன்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றை ஆதராங்களுடன் முழுமையாக எடுத்துரைக்கும் இந்த நூலை, தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பதிவு இந்த நூலை …

  12. மட்டக்களப்பில் ஒட்டுக்குழுவினரால் இனங்களிடையே நல்லுறவை வளக்கும் அமைப்பு உருவாக்கம் திங்கள், 25 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பில் ஒட்டுக்குழுவின் தலைவரினால் இனங்களுக்கிடையிலான நல்லூறவை மேம்படுத்துவதற்கான அமைப்பு நேற்று ஒட்டுக்குழுவின் தலைவரின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர் பிரமுவர்கள், மத பெரியார்கள், முந்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பினால் மாவட்டத்தில் உள்ள தமிழ் முஸ்ஸிம் இனங்களிடையே ஏற்படும் முறுகல் நிலையை தவிர்ப்பதற்கான இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்ஸிம் இனங்களிடையே இனக்கலவரத்தினை ஏற்படுத்தும் பொருட்டு முஸ்ஸிம் வர்த்தகர்களையும், சாதாரண மக்களையும் ஒட்டுக…

  13. பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், எதிர்பார்த்த காலப்பகுதிக்கு முன்னரே நிறைவடையலாம் என அரசாங்கத்தின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் கெஹலிய ரம்புக்வல கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னர் கைச்சாத்தான போர்நிறுத்த ஒப்பந்தம் காரணமாகப் பாதுகாப்புப் படைத் தரப்பினரின் மனோ நிலை பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனவே இதனைக் கருத்தில் கொண்டு நிறைவடைந்த மாகாணசபைத் தேர்தல்கள் மூலம் மக்கள் தமது எண்ணத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளர் தெரிவித்தார். www.tamilwin.com

    • 6 replies
    • 2.3k views
  14. யாழ்.கடனீரேரிப் பிரதேசத்தில் படையினரின் காவலரணுக்குச் சமீபமாக கடற்கரையில் ஆணினுடைய பிரேதம் ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளன. நீதிபதி வசந்தசேனன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு சடலத்தை யாழ்.வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். இச்சடலம் 20வயதிற்;கும் 30வயதிற்கும் இடைப்பட்ட ஒரு இளைஞருடையதாக இருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். கடனீரேரிப்பக்கமாக கடற்கரைப்பிரதேசத்தில் ஞாயிறு (24) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாகத் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/

  15. நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் காலமானார் [திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவரான தா.இராமலிங்கம் காலமானார். நவீன கவிதைகளின் உருவாக்கத்தில் முதன்மையானவராக இருந்த இவர் கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்களின் மீதான சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் முதல் இலக்கியப் பதிவான 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் வெளிவந்த இவரது கவிதைகள் ஆழமான வெளிப்பாடாக அமைந்தன. புதினம்

    • 0 replies
    • 1.1k views
  16. தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது: பா.நடேசன் [திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 05:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழினத்தின் வரலாறுதான் இனத்தின் முகவரியாக திகழ்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். வன்னி மன்னன் பண்டாரவன்னியனின் 205 ஆவது ஆண்டு சிறப்பு மலருக்கு வழங்கிய வாழ்த்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன். செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும். இந…

    • 0 replies
    • 950 views
  17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்துறை நிபுணர் கேணல் ராஜூ - த.தமயா - தமிழீழத் தேசியத் தலைவருடன் நீண்ட காலம் உடனிருந்து தலைவரின் போரியல் வடிவங்கள் பலவற்றிற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராஜூஃகுயிலன். முதலாவது சிறப்புக் கொமாண்டோப் படையணியை உருவாக்கியதுடன் விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார். விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்டிலறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இவர் 25.08.2002 அன்று சுகவீனம் காரணமாக வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாக இக் கட்டுரை பிரசுரமாகின்றது. தாய்மண் விடிவுக்காக வீரம் பொருந்திய பல மாவீரர்களை எம் தாய்த்திருநாடு இழந்திருக்கின்றது. பல மகத்தான வீரர்களை தமிழர் வரலாறு பத…

  18. இந்தப் பித்தலாட்டக்காரன் அப்பொதுமகனிடம் என்ன கூறியிருக்கக்கூடும்?

    • 3 replies
    • 2.7k views
  19. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினரின் கட்சி அலுவலகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது 8/25/2008 11:53:52 AM - ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினரான ஆணைமடுவில் அமைந்துள்ள பலித்த ரங்க பண்டாரவின் கட்சி அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்கியழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால் ரூபா 1 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  20. ஜப்பான் பிரதிநிதிகள் குழு நேற்று கொழும்பு வருகை ஜப்பான் நாட்டு நாடாளுமன்றப் பிரநிதிகள் குழு ஒன்று ஆறுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று கொழும்பு வருகை தந்திருக்கிறது. நான்கு பேர் அடங்கிய இந்தக் குழுவிற்கு ஜப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் கோல்சே நொறாட்டோ தலைமை தாங்கினார். இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது என்று ஜப்பான் தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜப்பான் பிரதிநிதிகள், இலங்கை அரசின் முக்கிய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவர். அத்துடன், இவர்கள் கண்டி தலதாமாளிகை மற்றும் சிகிரியா மலைக்குன்று ஆகிய இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வர் என்று அந…

  21. தேர்தல் முடிவு வாயிலாக யுத்தத்திற்கு தெற்கு அங்கீகாரம் 25.08.2008 தீர்க்கமான தேர்தல் என்று நாம் சுட்டிக்காட்டிய தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காத்திரமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளுக்காக நடத்தப்பட்ட இத்தேர்தல் வெறும் பிரதேச மட்டப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது இது என்று சுட்டிக்காட்டியிருந்தோம். பெரும் தேர்தல் வன்முறைகளுக்கு மத்தியில் வாக்களிப்பு மட்டும் ஓரளவு அமைதியாக நடந்தேறத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தமிழர் தாயகம் மீது தமது அரசு தொடுத்…

  22. யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்களை காணவில்லையென முறைப்பாடு 8/25/2008 11:23:59 AM - யாழ் குடாநாட்டில் இரு இளைஞர்களை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. சண்டிலிப்பாய் மேற்கை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றும் தேவசேனாபதி சுகந்தன் (வயது 26) மற்றும் வியாபாரியான முருகானந்தன்(வயது 33) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் மானிப்பாய் பொலிஸில் முறப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் பொன்னாலை வரதராஜ பெருமாள ஆலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளநிலையில் இருவரும் இதுவரி வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  23. 8 கிலோகிராம் வெடிபொருட்கள் கிராண்ட்பாஸ் பகுதியிலிருந்து மீட்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 9:14:48 AM - கொழும்பு14, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள அநாதரவான வீடொன்றிலிருந்து சீ4 வகையை சேர்ந்த சுமார் 8 கிலோகிராம் வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்தே இந்த வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. மாதம்பிட்டி ஹேனமுல்ல வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 8 கிலோகிராம் நிறையை கொண்ட சீ4 வகையை சார்ந்த வெடிபொருட்கள்,டெட்டனேட்டர்க

  24. அடுத்துவரும் வாரங்களில் வன்னியில் போர் வெடிக்கும்? பெரும் அழிவுகள் நேரலாம் என அச்சம் - ஏ.எவ. பி. கிளிநொச்சியை நோக்கி இராணுவம் நகர்ந்துகொண்டிருப்பதால் எதிர்வரும் நாட்களில் தீவிரமான மோதலையும் இரத்தக்களரியையும் நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென இராணுவ ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ஏ.எவ. பி. செய்தி வெளியிட்டுள்ளது. அரசபடையினர் தமது முக்கிய இலக்கான கிளிநொச்சியை நெருங்கும் வேளை கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்த இராணுவ ஆய்வாளர்கள் இராாணுவத்தினரின் ஆட்லறி விமான பல்குழல் பீரங்கித் தாக்குதல்களால் வடக்கில் பெரும் அழிவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளனர். இராணுவம் கிளிநொச்சியை நெருங்கிவரும் வேளை அவர்கள் அதிகளவு காலாட்படையினரையே நம்பியிக்க…

    • 1 reply
    • 2.1k views
  25. புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிராக செயற்பட அமெரிக்க நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசு 6 லட்சம் டொலர்கள் செலவு [திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 10:42 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] அமெரிக்காவில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிராக செயற்படுவதற்கு 6 லட்சம் அமெரிக்க டொலர் வழங்கி அமெரிக்க நிறுவனம் ஒன்றை சிறிலங்கா அரசு பணிக்கு அமர்த்தியுள்ளதாக தெரியவருகிறது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச, அவரது கசோகதரர் பசில் ராஜபக்ச, சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடியுரிமை உடையவர்களுக்கு எதிராக அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் புரூஸ் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.