ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு சென்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் இவான் பெய்கன்பாம், சிறிலங்கா அரச தலைவர் உட்பட அரசின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 500 views
-
-
கிளிநொச்சியில் இன்று மணிக்கு கரும்புலி மாவீரர்களின் நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 677 views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை நலன்புரி நிலையங்கள் என்ற பேரில் தடுத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தின் செயலை நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 626 views
-
-
எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை தோற்கடிப்பேன்! சிறிலாங்கா ஜனாதிபதி அப்பாவிப் பொது மக்களை விட்டுவிட்டு என்னை பயங்கரவாதிகள் தமது இலக்காகக் கொள்வார்களானால் அதனை ஒரு சவாலாக நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன் என ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதகாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மததிய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். அ…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறிய தேர்தல்களை நடத்தி மக்களுக்கு சுமைகளை ஏற்படுத்தாது, முடிந்தால் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டார். தேவையற்ற தருணத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றி பெற்று, இந்த இரண்டு மாகாணங்களில் அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை வெளிகாட்டுவதே அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இந்த தேர்தலுக்கு 40 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.…
-
- 0 replies
- 482 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உடலில் தொழுநோய் ஏற்பட்டுள்ளதால், அவர் எதனையும் உணராது இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே நாட்டு மக்கள் குறித்து அவர் எதனையும் அறியாது இருப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அசௌகரித்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதாக ஜனாதிபதி கூறியுள்ளதை நினைவூட்டிய ரங்கே பண்டரா, அவ்வாறாயின் அமைச்சர் மேர்வின் சில்வா ரூபவாஹினிக்குள் புகுந்து, ஊடகவியலாளர்களை தாக்கியது, அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 588 views
-
-
நெருக்கடியான சூழலிலும் மாணவர்களின் கல்வி பெரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேரவாக்கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
சத்தியதின் சுவர்கள் கரும்புலிகள் நாள்
-
- 2 replies
- 808 views
-
-
ஊடகவியலாளர்கள் உட்பட சிலர் அரசியல் தஞ்சம்கோரி நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக தம்மீது தாமே தாக்குதல்கள் நடத்துவதாக அரசாங்கத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது என பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிநாட்டுக்குச் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கும் ஊடவியலாளர்கள் தொடர்பான பெயர்களும், விபரங்களும் அரசாங்கத்துக்குக் கிடைத்திருப்பதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறியுள்ளார். 'நேஷன்' பத்திரிகையின் இணை ஆசிரியர் கீத் நொயர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட பின்னரே நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகவியலாளர்கள் கூறியமைக்குப் பதிலளித்த அமைச்சர், நொயரின் விடயம் அவ்வாறு இல்லையெனவும், வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக…
-
- 4 replies
- 885 views
-
-
துணுக்காய்: கிளைமோர் தாக்குதலில் வேட்டைக்குச் சென்றவர் பலி [வியாழக்கிழமை, 03 யூலை 2008, 05:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் வேட்டைக்குச் சென்ற ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதல் துணுக்காய் ஐயன்கன்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் வேட்டைக்குச் சென்ற இராஜகோபால் ஜீவிதன் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். புதினம்
-
- 0 replies
- 476 views
-
-
புலம் பெயர்ந்து வாழ் நிலையில் தமிழ் மக்களாகிய நாம் பல விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது. குழப்ப நிலையில் உள்ள நாம் பல விடயங்களை தவறாக உணர்ந்துள்ளோம். இந்திய அரசு வடக்கையும் கிழக்கையும் இணைத்தே அரசாள வேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆனாலோ, இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பி¡¢த்து ஒரு 21ம் நூற்றாண்டு சா¢த்திரத்தைப் படைத்திருக்கின்றது. இதன் குறிக்கோள் என்ன? கிழக்கில் உள்ள தமிழ் மக்களை இன ¡£தியாக சிங்கள இனத்தினுள்ளே உறிஞ்சி எடுப்பதுதான். அது மாத்திரமல்ல; குடி ஏற்றுவதன் மூலம் கிழக்கை சிங்கள மயமாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள். ஒரு சில கால கட்டத்தில் கிழக்கே வாழ் தமிழர் தங்களுடைய பெயா¢ல் ஒரு இரு எழுத்துக்களை நீக்கி விட்டு தாங்களும் சிங்கள மக்கள் என்று கூறத் தயங…
-
- 0 replies
- 814 views
-
-
35 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம். 01.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 35 கைதிகளை 10-05-2008 அன்று மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு கைதிகளுக்கான போதிய வசதிகள் இன்மையாலும் கைதிகளின் உறவினர்களோ, சட்டத்தரணிகள் எவரையும் சந்திக்கமுடியாத நிலை காணப்படுவதால் அவர்களின் பிரச்சினை குறித்து கவனத்தில் எடுக்கப்படாததால் மீண்டும் தங்களை கொழும்பிலுள்ள சிறைச்சாலை ஒன்றிற்கு மாற்றம் செய்யக்கோரியும் அல்லது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரப்போவதாக மேற்கண்ட 35 கைதிகளும் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்களது சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை (02-07-2008) காலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். sankathi.com
-
- 29 replies
- 3.3k views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பொதுமக்களை நலன்புரி நிலையங்கள் என்ற பேரில் தடுத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறிலங்கா இராணுவத்தின் செயலை நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-
-
அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந…
-
- 49 replies
- 6.7k views
- 1 follower
-
-
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள் சங்கத்தின் யோசனையொன்றை முன்வைக்க கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர். மேலும், எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு 50 லட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கொடுப்பனவாக 30,000 ரூபாவும், தொலைபேசி…
-
- 3 replies
- 962 views
-
-
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கக் கூடாது என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து க்யூ பிரிவு…
-
- 1 reply
- 846 views
-
-
பொதுமக்களுக்கு காவல்துறையினரால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாக பொதுமக்கள் பாதுகாப்பு இணைப்பு குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாலித் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கீழ் மட்டம் முதல் உயர் மட்டம் வரையிலான காவல் துறை அதிகாரிகள் உரிய முறையில் தமது கடமைகளை மேற்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தராதரம் பார்க்காது பாரபட்சமற்ற ரீதியில் பொதுமக்களுக்கு காவல்துறையினர் சேவையாற்றுவதனை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், காவ…
-
- 0 replies
- 596 views
-
-
கச்சத்தீவுக் கடற்பகுதியில் நேற்று சுமார் 200 படகுகளில் உள்ள ஆயிரம் இந்திய மீனவர்கள், இலங்கைப்படையினரால் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர். இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்தார்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சிறிது நேரத்தில் படகுகளும் மீனவர்களும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்
-
- 0 replies
- 906 views
-
-
இடம்பெயர்ந்து வரும் அப்பாவித் தமிழ் மக்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்படும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.வடக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 400க்கும் மேற்பட்ட சிவிலியன்களை அரசாங்கம் நியாயமற்ற ரீதியில் தடுத்து வைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. 2008ம் ஆண்டு மார்ச் முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இடம்பெயரும் மக்களை சமூக நலத்திட்டங்கள் என்ற போர்வையில் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளது. இலங்கை இராணுவப்படையினர் குறித்த இடம்பெயர்ந்த மக்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக நாளொன்றுக்கு 30 பேருக்க…
-
- 0 replies
- 551 views
-
-
வெள்ளை வானில் ஆட்களைக் கடத்தும் நபர்கள் குறித்த விபரங்களை வெளியிட நாம் தயாராக வுள்ளோம். அரசியல்வாதிகளுக்கு அடிபணியாது அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த புதிய பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண தயாரா? என்று ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த பண்டார கேள்வி எழுப்பினார். பொறுப்பு மிக்க அதிகாரியான பொலிஸ்மா அதிபர் வெள்ளை வானை பார்க்க தானும் ஆவலாக உள்ளதாக தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியதாகும். இத்தகைய கருத்தினை வெளியிடும் இவர் கடத்தல் சூத்திரதாரிகளை கைது செய்யும் வகையில் எவ்வாறு செயற்படுவார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெ?வித்த போ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா போர்ப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம். கட்சிகளைக் கடந்து கூட இந்தக் குரல் தமிழ் நாட்டிலிருந்து எழுப்பப்படுகிறது. தமிழ்நாடு அரசும் இந்தத் திசையில் கருத்துகளை எடுத்துக் கூறி வந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் அத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட மாட்டாது என்றும், ஆயுதங்களை இந்தியா வழங்காது என்றும் இந்திய அரசு கூறி வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அத்தகு பயிற்சிகள் கூடாது என்றால், வேறு மாநிலத்தில் அத்தகைய பயிற்சிகளை இந்திய இராணுவம் அளித்து வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய அரசு நம்பகத் தன்மையில் நடந்துகொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்கும், கண்டனத்துக்கும் உரியதாகும்.இப்பொழுது வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியூ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்;அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'' என்று பாடிய எம்.ஜி.ஆரின் புகழை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. எட்டாவது வள்ளல்' என்றே தன் விசுவாசிகளால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனது மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன்கள், மகள்கள் பெயரில் எழுதிய உயிலே ஒரு பிரச்னையாகி, கடந்த மாதம் ஒரு கொலையில் முடிந்து பரபரப்புச் செய்தியானது இந்த நிலையில், ஹஎம்.ஜி.ஆரின் கௌரவத்துக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் பிரச்னையை உருவாக்கி வரும் அந்த உயிலை எம்.ஜி.ஆர்.எழுதவே இல்லை.அது முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்டது'என்ற பகீர் புகார் முன்வைக்கப்பட்டிருக…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைத் தாக்குதல்களும் சர்வதேச மட்டம் வரை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.மீண்
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர் மகேந்திர ரத்னவீர ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதரகமும்,அமெரிக்க தூதுவராலயமும் கண்டனம் தெரிவித்துள்ளன.இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் திட்ட இணைப்பாளர் மற்றும் பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.அத்துடன் பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்தும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரித்தானிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தை…
-
- 0 replies
- 740 views
-
-
இலங்கையில் இருந்து மேலும் 18 தமிழர்கள் நேற்று அகதிகளாக தமிழகம் சென்றடைந்துள்ளனர். இதில் 7 பெண்கள் உள்ளடங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இவர்கள், நேற்று முன்தினம் பேசாலையில் இருந்து புறப்பட்டு நேற்று தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரையைச் சென்றடைந்துள்ளனர். இலங்கையில் படையினர், தமிழர்களுக்கு எதிராகப் பாரிய சித்திவதைகளையும் கொலைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக நாட்டில் இருந்து பலர் வெளியேற முயற்சிக்கின்ற போதும் இலங்கையின் கடற்படையினர் அதனை தடுத்து வருவதாகவும் அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். நன்றி தமிழ்வின் இணையம்
-
- 0 replies
- 441 views
-