Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக எமது மாணவர்கள் அறிவியல்துறையில் வளர வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 789 views
  2. பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதனை அடுத்து குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலம், காலம் தாழ்த்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பல சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஆராயும் குழு எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, ஜெனீவாவில் கூடவுள்ளது. அந்த கூட்டத்தின் போது சமர்ப்பிக்கக்கூடிய வகையில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த வரைவுத்திட்ட ப…

    • 0 replies
    • 696 views
  3. கிழக்கில் வாழும் 300-க்கும் அதிகமான அப்பாவி மக்கள் "கிழக்கின் விடியல்" என்ற போர்வையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 801 views
  4. மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியிலிருந்து கவச ஊர்திகள் சகிதம் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 710 views
  5. வீமல் வீரவன்ஸ தரப்பினர் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். இந்த மாநாட்டில் விமல் அணியை சேர்ந்த மேல் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பெல்லன, சபரகமுவ மாகாண சபையின் உறுப்பினர் பிரியஞ்சித் விதாரண ஆகியோர் ஜே.வீ.பீயின் மீது குற்றச்சாட்டுகiளை முன்வைத்ததை அடுத்து, ஊடக மாநாட்டில் குழம்பமான நிலையேற்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மெனராகலை மெதகம பிரதேச சபை உறுப்பினர் உமறு லெப்பே நியாஸ் இந்த ஊடக மாநாடு ஜே.வீ.பீக்கு எதிரான சூழ்ச்சி எனவும் மொனராகலை பிரதேச கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளக்கும் நோக்கில் தான் இங்கு அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தொண்டு அடிப்படையில், எதுவித பொருளாத…

    • 1 reply
    • 947 views
  6. கிழக்கு தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 807 views
  7. கிழக்கு மாகாண தேர்தலில் ஆயுதங்களை கொண்டு இயக்கும் பிள்ளையான் உள்ளிட்ட ஆயுதக்குழுக்களின் ஆயுதங்களை தேர்தலுக்கு முன்னர் களையுமாறு கோரி ராஜகிரிய தேர்தல் திணைக்களத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று காலை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் தற்போது ஜயவர்தனபுர கோடடை மாநகர சபையின், குப்பை காவி வண்டிகள் இரண்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், குப்பையும் கொட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மதியம் அந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் க…

    • 0 replies
    • 1.2k views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மலையகத்தைச் சேர்ந்த 15 பேர் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 545 views
  9. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க தெரவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 507 views
  10. இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறியிருப்பதால், இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் ஆதரவு வழங்கக்கூடாது என சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கொண்டிருக்கும் உறுப்புரிமையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கவேண்டாமெனக் கோரி 21 அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஐ.நா. உறுப்பு நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கப் படைகள் தொடர்ச்சியான படுகொலைகள், கைதுகள், காணாமல்போதல்கள் போன்ற ம…

    • 0 replies
    • 717 views
  11. நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகருத்திருக்கின்ற நிலையில், அரசாங்க செலவினங்களும் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் பொது மக்களின் பார்வை எவ்வாறு இருக்கிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றினை எல்.எம்.டி சஞ்சிகை வெளியிட்டுள்ளது. " நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு அபிப்பிராயங்கள் இருக்கின்றபோதிலும், எல்லோரும் ஒரு விடயத்தை மாத்திரம் ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களின் சமூக, மத, நம்பிக்கைகள் எவ்வாறிருப்பினும், எம்மிடம் பேசிய 80 வீதமான மக்கள் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனும் கருத்தில் ஒன்றுபடுகின்றனர்" என எல்.எம்.டி சஞ்சிகையின் மே மாத இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கைச் செலவினம் ஏற்றுக்கொள்ளத்தக்…

    • 1 reply
    • 737 views
  12. கஜநாயக்கவின் மீது கருணா குழுவின் உதவியுடன் தமிழர்களை கடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது [ புதன்கிழமை, 07 மே 2008, 05:49.13 AM GMT +05:30 ] இலங்கை வான் படையின் முன்னாள் உயர் அதிகாரியொருவர் தமிழ் வர்த்தகரை கடத்திய சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கொழும்பில் 7 இல் வசிக்கும் சீனி இறக்குமதியாளரான யோகராஜ் ஸ்ரீஸ்கந்தராஜ் மற்றும் அவரது வாகன சாரதியான ராமையா ஜெயராஜ் ஆகியோரை 2006 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி கருணா குழுவின் உதவியுடன் கடத்திச்சென்று பொலநறுவை வெலிக்கந்தையில் தடுத்து வைத்து 6 மில்லியன் ரூபாவை கப்பமாக பெற்றமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்…

    • 0 replies
    • 819 views
  13. சிறிலங்காவின் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையில் கொள்ளைக்கும்பல் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 715 views
  14. சிறிலங்கா நாடாளுமன்றம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் நேற்றிரவு ஒத்திவைக்கப்பட்டமை தனக்கு இன்று புதன்கிழமை காலை நாடாளுமன்றம் செல்லும் வரை தெரியாது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 606 views
  15. போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள் [07 - May - 2008] வ.திருநாவுக்கரசு அண்மையில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் அதிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. அவ்வாறாயின் வாழ்க்கைச் செலவு விஷம்போல் உயர்ந்துசெல்வதன் காரணமாக திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட ஏழை எளிய மக்கள் கூட யுத்த வெறியூட்டப்பட்டதன் பயனாக எவ்வளவு தூரம் மயங்கிப்போயுள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதாவது யுத்தத்தில் விரைந்து வெற்றியீட்ட முடியும். அண்மையிலும் அதற்கு முந்திய காலகட்டங்களிலும், உதாரணமாக ம…

    • 1 reply
    • 942 views
  16. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்களுக்கு.............................. http://isoorya.blogspot.co…

    • 4 replies
    • 1.5k views
  17. இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது பாராளுமன்றம் மட்டுமல்ல இலங்கையின் ஜனநாயகத்தின் கதவுகளும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் காணப்பட்ட ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த விவாதத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் இன்று 10.30 அளவில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு பாராளுமன்ற வளாகத்திற்கு சென்ற வேளையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும

    • 0 replies
    • 715 views
  18. * பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பு உறுதியான நம்பிக்கை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இவர்கள் என்ன தான் தலைகீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் ச…

    • 1 reply
    • 887 views
  19. தமிழ் வர்த்தகர் ஒருவரை கடத்திச் செல்லல் மற்றும் 60 லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக முன்னாள் வான்படை அதிகாரி நிசாந்த கஜநாயக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்களின் போது நிசாந்த கஜநாயக்க ஒன்றிணைந்த நடவடிக்கை தலைமையகத்தில் கடமையாற்றியுள்ளார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வான்படையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிசாந்த கஜநாயக்க, 2006ம் ஆண்டு ஜூன் 18ம் திகதியும், ஜூலை 28ம் திகதியும் கறுவாத்தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பகுதியில் வைத்து நடராஜா ஸ்கந்தராஜா என்ற தமிழ் வர்த்தகரை கடத்திச் சென்ற…

    • 0 replies
    • 622 views
  20. அப்பாவி பொதுமக்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மந்திரிகளையும் இலக்கு வைத்துக் கொல்லாமல் முடிந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதிப்பார் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். Rajapaksa challenges Prabhakaran to direct clash Irish Sun Wednesday 7th May, 2008 (IANS) Sri Lankan President Mahinda Rajapaksa Tuesday challenged the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Velupillai Prabhakaran to 'clash with him directly' and declared that his government would continue in its bid to flush rebels out of their stronghold in the north. 'I will challenge Prabhakaran to clash …

  21. தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கின்றோம் என்று சிறிலங்காவின் தரைப் படைத்தளபதி சரத் பொன்சேகா மார் தட்டிக்கொண்டு மறுபக்கம் வெளிநாடுகளுக்கு உதவிக்கு ஓடுகின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  22. புதன் 07-05-2008 11:00 மணி தமிழீழம் [புகழ்] வவுனியாவில் சுடுகலன் தாங்கிய கும்பல் மூன்று வீடுகளில் கொள்ளை. வவுனியா குவாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை இரவு மூன்று வீடுகளில் சுடுகலன் தாங்கிய கும்பல் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது. வவுனியாவிற்கு மேற்கே குவாங்குளத்தில் அடுத்தடுத்து இருக்கும் மூன்று வீடுகளில் இரவு 7மணியளவில் நுழைந்த கும்பலே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. முகத்தை கறுப்பு துணிகளால் கட்டியவாறு சுடுகலன்களுடன் நுழைந்த ஐந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்கள். குடும்பத் தலைவர்களே இவர்களது பலத்த தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். இதன் பின்னர் வீடுகளில் இருந்தவர்களை அறைகளுக்குள் கொண்டு சென்று அடைத்துவிட்டு வ…

  23. புதன் 07-05-2008 10:37 மணி தமிழீழம் [புகழ்] தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது. - மனோ கணேசன் நாட்டில் சமாதான வலயங்களை உருவாக்குவதற்கு பதிலாக தமிழர் பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக உருவாக்குவதிலேயே அரசாங்கம் அதிக அக்கறைகாட்டி வருகின்றது என்று மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று தினம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது தமிழர்கள் பிரதேசத்தை சிங்கள மயமாக…

  24. மியான்மாரிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி 06.05.2008 / நிருபர் எல்லாளன் மியான்மார் நாட்டிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சூறாவளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகவும் உலகநாடுகளின் உதவி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் மியான்மார் அறிவித்துள்ளநிலையில் சிறிலங்காவின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை மியான்மாரிலிருந்து வரவிருந்த அரிசிக்கப்பல்களை அவசரமாக எதிர்பார்த்திருந்த கொழும்பு அரசாங்கத்திற்கு அங்கே ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுகள் ஒரு பின்னடைவை கொடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் பேரழிவிற்குள்ளாகியுள்ள இடங்களுள் இரண்டு நெல் உற்பத்தியில் பிரதான மையங்களாகும். http://www.sank…

    • 8 replies
    • 1.8k views
  25. மன்னாரில் படைக்காவி தகர்ப்பு! 9 படையினர் பலி! மேலும் பலர் படுகாயம் மன்னார் கறுக்காய்க்குளம் பகுதியில் இருந்து வட்டக்கண்டல் நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிரமான வழி மறிப்பு தாக்குதலில் ஈடுபட்டு படையினரை பழைய நிலைகளுக்கு பின்வாங்கச் செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணிக்கு பலத்த கனரக சூட்டாதரவுடன் முன்னேறிய படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து சிறீலங்காப் படையினர் டாங்கிகள் மற்றும் படைக்காவிகளையும் களமிறக்க முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டனர். இதன் போது ஒரு படைக்காவி புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி தகர்ந்துள்ளது. இதில் பயணித்த 9 படையினர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். …

    • 7 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.