Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 7 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சித்தப்பாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்தது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் 25 Sep, 2025 | 12:15 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான, பாதிக்கப்பட்ட சிறுமியின் சித்தப்பாவுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். அதன்படி, குறித்த நபருக்கு, அவர் செய்த முதலாவது குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்துக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறு த…

  2. கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்! மெல்சிரிபுர – பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறித்த போக்குவரத்தில் ஈடுபட்ட ஏழு பிக்குகள் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், காயமடைந்த ஆறு பிக்குகள் குருணாகலை போதனா வைத்தியசாலை மற்றும் பொல்கஹவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த துறவிகளில் மூன்று வெளிநாட்டு துறவிகளும் நான்கு இலங்கை துறவிகளும் அடங்குவதாக பன்சியகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் ருமேனியா, ரஷ்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து நேற்று (24) இரவு 9.30 மணியளவில் இடம…

  3. உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக 5000 ரூபாய்! உயர்தரப் பரீட்சைகளை முடிக்கும் மாணவர்களுக்கு திரைப்படம் பார்ப்பது அல்லது கடற்கரைக்குச் செல்வது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதேவேளை, மாணவர்கள் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களைப் பார்க்கவும், நல்ல இசையைக் கேட்கவும், கடற்கரைகளுக்குச் செல்லவும், கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினர் வயதுக்கு மாறும்போது இது ஒரு முக்கியமான படியாகும் என்பதால், இந்த விஷயத்தைப் பற்றி தான் ஒரு முறை பிரதமருக்கு நினைவூட்டினேன், என்று அவர் கூறினார். இந்…

  4. இரு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை Editorial / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 10:19 தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இருகுற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும்பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறுமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார். மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒருமகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல்துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார் இவ்வாறு கைது செய்யப்பட்டவரு…

  5. மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்…

  6. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்! adminSeptember 25, 2025 நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள…

  7. லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு adminSeptember 25, 2025 குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வா் உயிரிழந்துள்ளனா். அந்த விபத்து இன்று (25) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வானும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வான் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனவும் உய…

  8. 24 Sep, 2025 | 05:16 PM ( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவி தற்கொலை தொடர்பான விசாரணையில் சிவானந்தராஜா என்பவருக்கோ அல்லது ஏனைய பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினக்கு எதிராகவோ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயலுமை உள்ளதா என்பது தொடர்பில் சட்ட ஆலோசனை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது உரையி…

  9. 24 Sep, 2025 | 05:24 PM ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது. இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்…

  10. 24 Sep, 2025 | 05:09 PM தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுக…

  11. உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ந…

  12. யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் கீரைப்பிடி 200 ரூபா மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளதால், சந்தைகளில் கீரைப்பிடியின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக கீரைச் செய்கை அழிவடைந்துள்ளது. அறுவடைக்குத் தயாராக இருந்த கீரை வெள்ளத்தில் மூழ்கி அழிவடைந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தைகளில் கீரைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், கீரைப்பிடி ஒன்றின் விலை 200 ரூபாவைக் கடந்துள்ளது. கீரைப்பிடி 200 ரூபா

  13. Published By: Vishnu 24 Sep, 2025 | 07:06 AM இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30 மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பய…

  14. 24 Sep, 2025 | 03:14 PM (செ.சுபதர்ஷனி) கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் மார்பகப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக புதன்கிழமை (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விச…

  15. 24 Sep, 2025 | 03:07 PM ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது வணிக துறையின் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைத்து ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, கப்பல் மேலாண்மையை மேம்படுத்துதல், வருவாய் வளர்ச்சியை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், திறமை மேம்பாடு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல், செலவு சீரமைப்பு மற்றும் கடனை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் இன்ஜின், இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது 2024 ஆம் ஆண்டில் தங்களது சேவைகளை 69 சதவீதத்திலிரு…

  16. 24 Sep, 2025 | 05:04 PM கடந்த மாதம் 13ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் (ஓகஸ்ற்) 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களும் இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்னர். இதன்போதே அவர்கள் அனைவரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படனர். 6 வருடங்கள் ஒத்திவைக்கப்பட 2 வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையுடன் 7 மீனவர்களையும் விடுவித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் நளினி சுபாஸ்கரன் உத…

  17. 24 Sep, 2025 | 05:16 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கால்டன் இல்லத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இதன் போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் இரு தரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும் இலங்கையில் அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கொழும்பு – விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தங்காலை கால்டன் இல்லத்தில் தற்போது வசித்து வருகின்றார். மஹிந்த கொழும்பிலிருந்து வெளியேற முன்னர் சீன தூதுவரை …

  18. 24 Sep, 2025 | 04:01 PM தமிழர் தாயகப்பரப்பில் அரச கட்டமைப்புக்களினூடாக முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இந்திய அரசின் நிதி உதவியில் முன்னெடுக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலை நோயாளர் விடுதிஅமைக்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதுடன், முள்ளியவளை கலைமகள் வித்தியாலய வகுப்பறைத் தொகுதியின் கட்டுமானப்பணிகளை மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தம்மால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா மற்றும் இலங்கைத் தமிழ…

  19. புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கு…

  20. மன்னார் காற்றாலை திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 24 September 2025 யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்சப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்கள…

  21. இலங்கை - இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருங்கிய ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்த இந்திய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்ததாக அமைச்சர் விஜித ஹேரத் தமது எக்ஸ் கணக்கில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்கா சென்றுள்ளார். அதன்படி, இன்று (24) அமெ…

  22. செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான த…

  23. எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது! adminSeptember 24, 2025 எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2009 இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 16 ஆண்டுகளாக நீதிக்காக தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பிலேயே பலரை குழப்பம் செய்யும் விதத்தில் சிலரின் நடவடிக்கை காணப்படுகிறத…

  24. வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு! adminSeptember 24, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின்போது, மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/220737/

  25. இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு! 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியது. அதன்படி, குறிப்பிட்ட காலப் பகுதியில் மொத்த வருவாய் 11,554.32 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB) தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 6.61% வலுவான அதிகரிப்பை பிரதிபலிக்கிறது என்று EDB ஒரு அறிக்கையை வெளியிட்டு கூறுகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் மாத்திரம் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,607.58 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. இது 2024 ஆகஸ்ட் மாதத்தை விட ஆண்டுக்கு ஆண்டு 2.57% …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.