ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142818 topics in this forum
-
தமிழில் பேசினால் புலி முத்திரை குத்தப்பட்டு கைதாகும் அவலம் [06 - December - 2007] *யுத்தம் முழுநாட்டிலும் வியாபகம் என்கிறார் ஜோன்அமரதுங்க -எம்.ஏ.எம்.நிலாம் - தலைநகரின் நுழைவாயில்களிலும் பிரதான இடங்களிலும் படையினரின் சோதனைச் சாவடிகள் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட நிலையிலும் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் குண்டுகளும் தற்கொலைக் குண்டுதாரிகளும் எவ்வாறு நுழைகின்றனர் எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவதாகவும் அப்பாவி பொதுமக்கள் தண்டிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. சமிற் தொடர்மாடிப்பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகும். இதற்குள் வெளியார் யாரும் பாதுகாப்புக்கெடுபிடிகளை மீறி உள்ளே …
-
- 0 replies
- 868 views
-
-
சிறிலங்காவுக்கான உதவிகள் தொடரும்: அமெரிக்கத் தூதுவர் இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் வரை சிறிலங்காவுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகள் செய்யும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா இராணுவத்தின் சார்பில் நடத்தப்பட்ட மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பாக கருத்தரங்கை நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். வடக்கு-கிழக்கில் செயற்பட்டு வரும் இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்காக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கலந்து கொண்டுள்ளார்.
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா வான்படையின் பேச்சாளரும், வான்படைத் தளபதியின் பிரதம அதிகாரியுமான குறூப் கப்டன் அஜந்த சில்வா பாகிஸ்தானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 755 views
-
-
தந்திரிமலையில் நான்கு சிறீலங்கா படையினர் பலி : இருவர் காயம் தந்திரிமலையில் நான்கு சிறீலங்க படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று மதியம் 12.50 மணியளவில் சின்னப்புலம் தந்திரிமலை வவுனியா – அநுராதபுரம் எல்லைப்பகுதியில் உழவுஇயந்திரத்தில் பயணித்த படையினர் அமுக்கவெடியில் சிக்கியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.7k views
-
-
எதிர்காலத்தில் சிங்கள மக்கள் பாதுகாப்பு தேடி மேல் மாகாணத்துக்கு வரும் நிலை ஏற்படும் ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பூர்வீக பூமிக்கு அருகில் யால வனத்துக்குள் ஊடுருவி புலிகள் தாக்குதலை நடத்துகின்றனர். எதிர்காலத்தில் தென் பகுதியிலுள்ள சிங்களவர்கள் பாதுகாப்புக்காக மேல் மாகாணத்திற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. ஜோன் அமரதுங்க தெரிவித்தார். இலங்கை நிவாரண நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் யுனிசெப் நிறுவனம் புலிகளுக்கு உதவி வழங்கியமையானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் யுனிசெப் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எத…
-
- 0 replies
- 1.5k views
-
-
அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களைத் திருப்பி அனுப்பவேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் தகவல் வெளியிடப்பட்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 05-12-2007 19:56 மணி தமிழீழம் [கோபி] பாராளுமன்றத்தைப் படம் பிடித்தாகக் கூறி பாராளுமன்றில் பணிபுரிந்த தமிழ் பெண் கைது சிறீலங்கா பாராளுமன்ற கட்டத் தொகுதியைப் கைத் தொலைபேசி ஊடக படம் பிடித்ததாகத் தெரிவித்து தமிழ்ப் பெண் ஒருவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றில் தொழில்நுட்ப பகுதியில் கடமையாற்றும் இப் பெண் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண்ணின் கைத் தொலைபேசியின் காணொளிப் பகுதியில் எதுவித காட்சிகளும் இல்லாததை அடுத்தே இவர் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 05-12-2007 17:59 மணி தமிழீழம் [சிறீதரன்] கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர் காணமல் போயுள்ளார் தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணமல் போனவர் கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காணாமல் போனவர்களில் பெற்றோர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையீடு செய்துள்ளனர். வீட்டிற்கு அருகில் உள்ள காணி வெளியில் மாடு மேய்ப்பதற்காக சென்ற இவர் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் முறையிட்டுள்ளனர். இவரை படையினரே கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவர் கொடிகாம் ஜயனார் கோவிலடியைச் சேர்ந்த 22 அகவையுடைய நடராஜா சுரேஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...am…
-
- 0 replies
- 650 views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரால் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 663 views
-
-
யாழ். நல்லூர் செம்மணி வீதியில் வெய்யில் உகந்த பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இளைப்பாறிய அதிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், மூவரை கோடரியால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் அங்கு சென்ற கொள்ளையர்கள் பெரும் சத்தமிட்டு வீட்டைத் திறக்குமாறு அதட்டினர். வீட்டைத் திறக்க மறுத்ததையடுத்து கோடரியால் வீட்டுக்கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்ற கொள்ளையர் வீட்டில் இருந்தவர்களை வெட்டிக் காயப்படுத்தினர். அதன் பின்னர் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் கோடரி வெட்டுக்கு இலக்கான யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அ. சிறிக்குமரன் (வயது 62), அவரது மனைவ…
-
- 0 replies
- 816 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் நிகழும் வகை தொகையற்ற கைதுகளுக்கு எதிராக அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கிளர்ந்தெழுமாறு மேலக மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 25 replies
- 4.8k views
-
-
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகத்திற்குரியவர்கள் எனக் கருதப்படுவோர் தவிர்ந்த ஏனைய அனைத்துத் தமிழர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உறுதியளித்தார் என கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.(பத்மநாபா) அணியின் பொதுச் செயலாளர் தி.ஸ்ரீதரன் ஆகியோர் தெரிவித்தனர். தாங்கள் நேற்று ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியமை தொடர்பாக அவர்கள் மூவரும் கூட்டாக விடுத்த அறிக்கையிலேயே இப்படி அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவுக்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்கும்படியும், அப்பாவிகளைக் கைது செய்வதை நிறுத்தி, தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதுகாக்கும்படியும் தாங்கள் ஜனாதி பதியைக் கோ…
-
- 0 replies
- 569 views
-
-
தலைநகரில் கைது செய்யப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களில் ஆயிரத்து 800 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய சுமார் 360 பேர்வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே நேற்று நாடாளுமன்றில் இந்த விவரத்தைத் தெரிவித்தார். தமிழர்களின் கைது தொடர்பாக ஐ.தே.கட்சியின் எம்.பியான தி. மகேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நேற்றும் சபையில் சர்ச்சையை ஏற்படுத்தினர். அச்சர்ச்சையின்போதே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: தமிழர்கள், அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்திற்காகக் கைதுசெய்யப்படவில்லை. புலிகளையும் அப்பாவிகளையும் பிரித்து அடையாளங்காண முடியாததன் காரணத…
-
- 0 replies
- 491 views
-
-
அண்மைக் காலத்தில் இலங்கையில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கும் சுதந்திர ஊடக இயக்கம், விசேட ஐ.நா. பிரதிநிதி சுட்டிக்காட்டியபடி கைதானோரின் நலன்களைக் கவனிப்பதற்காக சுயாதீனமான மனித உரிமைகள் பாதுகாப்புப் பொறிமுறையை (அமைப்பை) நிறுவும் படியும் வற்புறுத்தியிருக்கின்றது. "தமிழ்ப் பொதுமக்கள் நூற்றுக் கணக்கில் கைது மற்றும் தடுத்து வைப்பு சுதந்திர ஊடக இயக்கம் தனது கவலையை வெளியிடுகின்றது' என்ற தலைப்பில் அந்த அமைப்பு நேற்று விடுத்த அறிக்கையிலேயே இந்த விட யம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 564 views
-
-
கொழும்பில் தமிழர்கள் காரணம் தெரிவிக்கப்படாமல் வகை தொகையின்றிக் கைதுசெய்யப்படும் கொடுமைக்கு எதிராக அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. காரணமற்ற கைதுகளை உடன் தடுத்து நிறுத்துவதற்கான இடைக்காலத் தடை விதிக்குமாறு அந்த மனுவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. காரணமின்றிக் கைதுசெய்யப்பட்டோரை உடன் விடுவிக்குமாறு உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் இந்த மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவில் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, விமானப் படைத் தளபதி ஏயர் மார்ஷல் குணதிலக, …
-
- 0 replies
- 552 views
-
-
செவ்வாய் 04-12-2007 18:48 மணி தமிழீழம் [மயூரன்] யால வனச் சரணாலயத்தில் படையினர் புலிகள் மோதல் யால வனச் சரணாலயப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற மோதலின் அரச படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 2.2k views
-
-
புலிகள் இயக்கத்தை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் புலிகள் இயக்கத்தை தடை செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி பிரசார செயலாளர் விமல் வீரவங்ச பாராளுமன்றில் இன்று கோரிக்கை விடுத்தார். புலிகள் இயக்கத்தை அரசாங்கம் தடை செய்யாமல் இருப்பதனாலேயே, சர்வதேச புலிகளுக்கு சார்பான அறிக்கைகளை விடுத்து வருவதாகவும் அவர் கூறினார். புலிகளின் குரல் வானொலி மீது விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தன் மூலம், ஐக்கிய நாடுகள் புலிகளுக்கு சார்பாக செயற்படுகின்றமை ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டினார்.
-
- 0 replies
- 591 views
-
-
கிழக்கு மகிந்தவின் மகுடமா? முள்ளா?-சேனாதி- நவம்பர் 22 ஆம் திகதி அம்பாறை வக்குமுட்டியா சிறப்பு அதிரடிப்படைத் தளத்தின் வெளிக்காவல் நிலைமீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், கிழக்கு பற்றி அவதானிகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் தீர்த்து வைத்துள்ளது. அங்கே விடுதலைப் புலிகளின் அணிகள் கட்டமைப்போடு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர் என்ற யதார்த்தம் ஒரு மாதத்திற்குள் அம்பாறையில் மட்டும் மூன்று தடவை தாக்குதல் நடத்தப்பட்டதினால் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் இருந்து அம்பாறை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அரச படைகளால் புறக்கணிக்க முடியாத பல படைத்துறைச் செயற்பாடுகளில் புலிகள் ஈடுபட்டு வருகின்றார்கள். ஒக்ரோ…
-
- 0 replies
- 649 views
-
-
நேற்று இரு முதியவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது தெறித்த வார்த்தைகள் இவ்வாறாக என் காதில் வந்து விழுந்தன. 'மூண்டு வருசத்திற்கு மேலாக கொழும்பில் குடும்பமா இருந்த எங்கட சனத்தையும் பிடிச்சு பூசாவுக்கு அனுப்பியிருக்கிறாங்கள்" 'மூண்டு வருசமா இருந்தா என்ன முப்பது வருசமா இருந்தா என்ன தமிழனா இருந்தா மட்டும் போதும் வேறு ஒரு காரணமும் தேவையில்லை" மிகவும் அனுபவப் பாடமான அந்தப் பதில் வார்த்தைகள் ஒவ்வொரு ஈழத்தமிழனின் மனதிலும் ஆழப் பதிந்திருக்கிறது என்ற ஒன்றேபோதும் அவன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள. இலங்கைத்தீவு பல இனங்களை உள்ளடக்கிய ஒரு நாடென்று சிங்கள பேரினவாத அரசுகள் உலகிற்கு கூறிவருகின்ற பொய் நிலைப்பாட்டை மறுதலிக்கும் விதமாக அந்த அரச இயந்திரமே இனவாத மமதை கொண்டு செயற்படு…
-
- 0 replies
- 863 views
-
-
04.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....554571fbd180e1c
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகாரங்களுக்கான குழுவிலிருந்து அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை விலகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்காவில் அண்மைக்காலத்தில் 11 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று 7 ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 814 views
-
-
பாம்புகள் ஏற்படுத்திய குண்டுப்புரளி [05 - December - 2007] அளவை ரயில் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பயணப் பை ஒன்றினுள்ளிருந்த இரு பாம்புகளால் குண்டுப்புரளியேற்பட்டதுடன் ரயில் சேவையும் சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்திற்கு வந்த நாடோடியொருவர் தனது பயணப் பொதியை ரயில் நிலையத்தின் ஓரிடத்தில் வைத்துவிட்டு காலை நேரத்திலேயே மது அருந்துவதற்காக ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று விட்டார். இந்தப் பொதி குறித்து சந்தேகமேற்படவே ரயில் நிலையத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரவ பயணிகள் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறினர். இது குறித்து அளவை ரயில் நிலையத்திலிருந்து ஏனைய ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட கொழ…
-
- 0 replies
- 1.5k views
-
-
கிளிநொச்சி தருமபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து கடந்த 25.11.2007 அன்று காலை 6:30 மணிக்கு சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் நடத்திய வான் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த க.தனயோகம் (வயது 18) என்ற பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 724 views
-
-
சர்வதேச தலையீட்டுக்கான அழைப்பின் பின்னணி நிலை 05.12.2007 கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழ்பேசும் மக்கள் அப்பட்டமாக பகிரங்கமாக இனஒடுக்கல் செயற்பாட்டுப் போக்கில் கைது செய்யப்படுவதும், ஆடு, மாடு மந்தைகள் போல அடைக்கப்படுவதும் கடுங் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. அரசுத் தரப்பின் நியாயப்படுத்தப்பட முடியாத இந்தக் கொடுங்கோன்மைப் போக்குக் குறித்து நாடாளுமன்றத்திலேயே ஜே.வி.பி., ஐ.தே.கட்சி போன்றன பகிரங்கமாகக் கண்டிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது. ஏற்கனவே கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களைப் பலவந்தமாக ஏற்றி வவுனியாவுக்குக் கடத்த முயன்ற நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றத்திடம் அரசுத் தரப்பு வாங்கிக்கட்டி மூக்குடைபட்டிருப்பதை ஜே.வி.பி. சுட்டிக் காட்டியிர…
-
- 0 replies
- 1.2k views
-