ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142818 topics in this forum
-
http://www.dinakaran.com/dncgibin/kungumam...=2007/nov/29/97
-
- 2 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல்களை நடத்துவதற்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் 18,000 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், இந்தியாவும் நேற்று கூட்டாக இந்திய தலைநகர் புதுடில்லியில் கலந்து ஆலோசித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.8k views
-
-
இலங்கையில் குறிப்பாகக் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் சட்டரீதியான காரணம் ஏதுமின்றி, வகை தொகையில்லாமல் கைதுசெய்யப்படுவதால் எழுந்துள்ள பதற்ற நிலைமை குறித்து கொழும்பில் உள்ள இந்தியத்தூதரகம் புதுடில்லியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றது. இந்த நெருக்கடி மற்றும் மோசமான நிலைமை குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. போன்ற அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அலோக பிரசாத் இந்தியா சென்றிருப்பதால் மனோ கணேசன் எம்.பி. கொழும்புக்கான பிரதி இந்தியத் தூதுவர் மாணிக்கத்துடன் இவ்விடயம் குறித்து உரையாடினார் எனத் தெரிகின்றது.…
-
- 4 replies
- 2.2k views
-
-
மாவீரர் தின உரை முன்னிறுத்தும் செய்தி: இருவழிப் போரில் பிரவேசிக்க வேண்டிய காலம் [02 - December - 2007] -தாரகா- சாதாரண மக்களிலிருந்து ராஜதந்திர வட்டாரங்கள் வரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை இடம்பெற்று சில தினங்கள் கடந்துவிட்ட நிலையில் அவ்வுரை முன்னிறுத்தியிருக்கும் சில விடயங்கள் குறித்து எனது அவதானத்தை கோடிட்டு காட்டுவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம். இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தான் அவரது உரை இடம்பெற்றிருக்கிறது. சிங்களம், பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றை அரங்கேற்றிவரும் சூழலில் குறிப்பாக கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியதை தனது பெரும் வெற்றியென கொண…
-
- 7 replies
- 2.8k views
-
-
மட்டு., அம்பாறையில் விரைவில் சிங்களப் பிரதேச செயலகங்கள் [03 - December - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- கிழக்கு மாகாணத்தில் புதிதாக சிங்கள பிரதேச செயலகங்களை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிங்கள பிரதேச செயலகங்களை புதிதாக உருவாக்குவதில் தீவிரமாகச் செயற்படுவதாக கிழக்கு மாகாணத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் குடும்பிமலை (தொப்பிகல) மங்களகம மற்றும் சில பகுதிகளை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்து புதிய சிங்களப் பிரதேச செயலகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பகுதிகளை தீகவாவியில் இணைத்து மற்று…
-
- 2 replies
- 1.6k views
-
-
வெளிநாடு செல்வதற்கு முன் கோர்ட்டில் முன் அனுமதி பெற வேண்டும் என ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோவுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. அண்மையில், போலீசார் தடையையும் மீறி சுப.தமிழ்செல்வன் இரங்கல் பேரணியில் வைகோ கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில், பூந்தமல்லி கோர்ட், அவரது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க கூறியது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் முருகேசன் மற்றும் கருப்பையா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், வைகோ கோர்ட்டில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தேவையில்லை என்றும், ஆனால், வெளிநாடு செல்வதற்கு முன் பூந்தமல்லி கோர்ட்டில் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நிபந்தனை …
-
- 1 reply
- 2.7k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர் என்று சிறிலங்காவின் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
குடாநாட்டு கடற்பரப்பில் இராணுவமும் கடற்படையும் தீவிர போர்ப் பயிற்சி [03 - December - 2007] யாழ். குடா நாட்டு கடற்பரப்பில் கடற்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் பண்ணை, அராலி மற்றும் காரைநகர் கடற்பகுதியிலேயே நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வரை இப்பயிற்சி இடம்பெற்றது. இதனால், இப்பகுதியில் பெரும் குண்டு சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வல்வெட்டித்துறை, தொண்டமானாறு மற்றும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்திலும் கடற்படையினர் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். விடுதலைப் புலிகள் இப்பிரதேசத்திற்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் முயற்சியாகவே இப்ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
தீவிரவாதத் தாக்குதல்கள் காரணமாக பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசு மேற்கொள்ளும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அனைவரும் அனைத்துத் தியாகங்களையும் செய்யவேண்டும்.'' இவ்வாறு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான ெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் படையினர் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து அவர் பி.பி.ஸியின் சிங்கள சேவைக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு: இப்போது நாட்டிலுள்ள நிலைமை வழமையான ஒரு நிலைமை அல்ல. அரச படைகள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் தனிநபருக்கோ அல்லது ஒரு ுழுவினருக்கோ எதிரான நடவடிக்கை அல்ல. ஆனால், மறுபுறத்தில் இது…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ். நகரப் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த கடைத் தொகுதியில் அமைந்திருந்த நகைக்கடை ஒன்றும், மின்சார உபகரணங்கள் விற்பனை நிலையம் ஒன்றுமாக இரண்டு வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நிசானந்தா நகைக்கடை மணியம் இன்பெக்ஸ் ஆகிய கடைகளே தீயி னால் முற்றாக எரிந்து சாம்பராகின. இதனால் இரு வர்த்தக நிலையங்களிலும் சுமார் ஒன்றரைக் கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2 மணியள வில் தீ விபத்து ஏற்பட்டதெனவும் தீயை அணைக்க யாழ். மாநகர சபையின் தீய ணைப்புப் பிரிவு வாகனங்கள் வராத நிலையில் மாநகர சபையின் தண்ணீர் பவுசர் ஒன்றின் உதவியுடன் அயலில் உள்ள வர்த்தக நிலையங் களைச் சேர்ந்தவர்களும் படையின ரும் தீயை அணைத்தனர் என்று அறிய வந்தது. க…
-
- 0 replies
- 1.7k views
-
-
தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டிய தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும், தமிழ் இளைஞர்கள், யுவதிகளை நேற்று இரண்டாவது நாளாகவும் பொலீஸார் கைது செய்தனர். இரண்டு நாள்களில் மொத்தம் 850 பேர் கைது செய்யப்பட்டு பொலீஸ் நிலை யங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளியன்று கைதுசெய்யப்பட்டவர்களில் 100பேர் விசாரணையின் பின்னர் பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளனர். சந்தேகம் என்ற பேரில் கைதுசெய்யப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் நேரில் கோரும் பொருட்டு அவரின் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு நேற்றுப் பாத யாத்திரையாக சென்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் காலிமுகத்திடலில் தடுக்கப்பட்டனர். இந்தப் பாதயாத்திரைக்கு பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனும் நாடாளுமன்ற உறுப்பினர…
-
- 3 replies
- 1.2k views
-
-
துரிதப்படுத்தப்பட்டுள்ள தமிழர் மீதான நடவடிக்கைகள் -அஜாதசத்ரு- யுத்தகால நெருக்கடியொன்றுக்குள் இழுத்துச் செல்லப்படும் இலங்கை அரசியல் நிலைவரங்கள் ஒவ்வொன்றும் பாரிய மனித அழிவுகளையும் பெருமளவிலான பொருளாதாரப் பின்னடைவொன்றையுமே தோற்றுவித்துக்கொண்டிருக்கி
-
- 1 reply
- 791 views
-
-
ரிசானாவுக்கு மரண தண்டனை இல்லை! மரண தண்டனை ஐந்துவருட சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது. சவூதிஅரேபிய நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் மூதூரைச் சேர்ந்த இளம்பெண் ரிசானா நபீக்கிற்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை 5 வருட சிறைத் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இலங்கை உட்பட அநேக நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்களினால் சவூதி அரேபிய அரசரிடம் ரிசானாவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைக்குமாறு தொடர்ந்தும் வேண்டுகோள்களை முன்வைத்து வந்தன.இவருக்கு ஆதரவாக பல்வேறு தமிழ் இணையத்தளங்களும் குரல்கொடுத்த வந்தன.இலங்கையின் கிழக்குப் பிராந்தியமான மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரிசான 19 வயதுடைய இளம் யுவதி ஆவார்…
-
- 3 replies
- 2k views
-
-
சனி 01-12-2007 18:30 மணி தமிழீழம் [மோகன்] மன்னாரில் உக்கிர மோதல்கள்: 3 படையினர் பலி! 10 படையினர் காயம் மன்னார் முன்னரங்க நிலைகளில் சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. மன்னார் மாந்தை தெற்கு அடம்பன் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலின் போது அரசாங்கப் படைகள் தரப்பில் 3 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 10 படையினர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 6 replies
- 6.4k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்று ஒரு பிரதேசம் இருக்கிறதா? -டிட்டோ குகன்- "விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்" என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கான எதிர்ப்பால் கடந்த வார பாராளுமன்றம் அதிர்ந்தது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஏனைய சந்தர்ப்பங்களில் போலல்லாது, சற்று அவதானத்துடனேயே பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த வார பாராளுமன்ற அமர்வு 26 ஆம் திகதி ஆரம்பமாகி 30 ஆம் திகதியுடன் முடிவடையும் வரை வரவு - செலவுத் திட்டம் மீதான அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதமே நடைபெற்றது. முதல் நாள் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) சபாநாயகர் டபிள்யூ ஜே.எம்.லொக்கு பண்டார தலைமையில் சபை கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் க…
-
- 1 reply
- 1.2k views
-
-
மகிந்தவின் சகாசங்களும் தந்திரங்களும் எதுவரை? மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக அவருடைய பிறந்த நாளிலேயே பொறுப்பேற்றார். இப்போது பட்ஜெட் வாக்கெடுப்பும் அவருடைய பிறந்த நாளுடனேயே வந்திருக்கிறது. முன்னைய பிறந்தநாளை அவர் உச்ச மகிழ்ச்சியோடு கொண்டாடினார். இன்னொரு பிறந்த நாளில் அவர் பதற்றத்தோடு இருந்தார். பொதுவாகவே மகிந்த ராஜபக்ச ஒரு சாகசக்காரனைப் போலவே இருக்கிறார். அவர் அப்படித்தான் தன்னையும் கருதிக் கொள்கிறார். அதன்படியே அவர் நடந்தும் கொள்கிறார். ராஜபக்சவின் அரசாங்கம் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற மாதிரியே ஆட்சியிலிருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் இந்தநிலையை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. தன்னுடைய ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால் தொடர்ந…
-
- 0 replies
- 1.8k views
-
-
நா.யோகேந்திரநாதன் எழுதிய "முதல் மாவீரர் நாள் - சில நினைவுகள்" 1989 நவம்பர் -27 அது வன்னி மண் தன்னை ஒரு மகத்தான புனிதத்தால் அலங்கரித்துக் கொண்ட நாள். கோணாவில் பாடசாலை மைதானமெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகள் காற்றில் பறக்கின்றன. அலங்கார மேடை. அதன் பின் திரையில் பொறிக்கப்பட்ட புலிச்சின்னம். அதன் கீழே மாவீரர் தினம் 1989 எனப் பொறிக்கப்பட்ட பதாதை. ஒரு புனிதம் அந்த மைதானத்தில் மட்டுமல்ல அதன் சுற்றாடலிலும் கோலோச்சி வலம் வருகிறது. ஆம். அங்கே முதல் மாவீரர் தினத்திற்கான தயாரிப்புக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி, பரந்தன் பகுதிகளிலுள்ள அத்தனை வாடகைக் கார்களும், வேன்களும் ஒவ்வொன்றாக வந்து சேர்கின்றன. சகல மின்பிறப்பாக்கிகளும் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. எல்லா ஒலிபரப்…
-
- 0 replies
- 2.1k views
-
-
சி.இதயச்சந்திரன் எழுதிய '' மாவீரர்தின உரை உணர்த்துவதென்ன? '' இலக்கு நோக்கிய பயணத்தை வழி நடத்தும் மூல, தந்திரோபாய உத்திகள், அரசியல் வடிவம் பெறும் உரையே மாவீரர் தினச் செய்தியாகும். எல்லைப் படை, துணைப்படை, விசேட அதிரடிப்படை உள்ளடங்கலான பெரும் படையணியுடன் நவீன போர்க்கலங்கள், அதியுயர் தொழில்நுட்ப வளங்களுடன் கூடிய இராணுவ வல்லாண்மையுடன், நவீன மயமான போரியல் உத்தியுடன் ஒட்டுமொத்த தாயக, புலம்பெயர் உறவுகளின் ஒன்றிணைந்த பலத்துடன் எதிரியை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என தமிழீழ விடுதலைப் புலிகள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கூறுவதை உன்னிப்பாக நோக்க வேண்டும். தேசிய இனக் கட்டமைப்பின் மொத்த உருவமாக அவர் தன்னை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துகிறார். உரையின் மொழி ஆளுகை, மி…
-
- 0 replies
- 990 views
-
-
அமெரிக்காவின் தடை! சங்கரன்- சிவலிங்கம் அமெரிக்க அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததற்குப் புறம்பாக தற்போது தமிழ் மக்கள் மத்தியில் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரேயொரு தொண்டர் அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையும் தடைசெய்துள்ளது. புலிகள் ஆயுதம் வாங்குவதற்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உதவி செய்து வருகின்றது. என்பதையே இதற்குக் காரணமாக கூறியுள்ளது. இத்தடை தந்த ஊக்குவிப்பில் இலங்கை அரசாங்கமும் இதைத் தடைசெய்யும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. போரினால் பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் வன்னி மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்கக் கூடிய வகையில் இருக்கின்ற ஒரேயொரு அமைப்பு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தான் என்பது அமரிக்கா உட்பட உலகநாடுகள் எல்ல…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்ச்செல்வன் விவகாரத்தால் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு! -கலைஞன்- தமிழ்ச்செல்வன் இரங்கல் கவிதை விவகாரம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியிடையே பனிப்போரை ஏற்படுத்தியள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்குமிடையில் நடக்கும் மோதல்கள் தமிழக அரசை தர்மசங்கடத்துக்குள்ளாக்கிய
-
- 0 replies
- 1k views
-
-
தெற்கின் பாதுகாப்புக்காக தனிமைப்படுத்தப்படும் வடக்கு -விதுரன்- போர்நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வரப்போகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்வதன் மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை முறித்து விடவும் சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிடவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முழு அளவிலான போரில் இறங்கியுள்ள அரசு, வடக்கை முழுமையாக மீட்கப் போவதாகவும் சூளுரைத்து வருகிறது. வடக்கில் பாரிய தாக்குதலை நடத்தியவாறு தெற்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு முயல்கிறது. வடக்கில் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் தகவல்களை மறைத்து, தெற்கில் இடம்பெறும் சிறிய சம்பவங்களுக்கும் அரசு முக்கியத்துவம் கொடுக்க முற்படுகிறது. தெற்கின் பாதுகாப்பெ…
-
- 0 replies
- 661 views
-
-
தமிழ்ச்செல்வன் - ஓர் அதிசய ஆளுமையின் வீழ்ச்சி - திருமலை “தமிழ்ச்செல்வன் அண்ணா வீரச்சாவு அடைந்து விட்டார்” செய்து கேட்டு இடிந்து போனோம். அதிர்ந்தோம், அழுதோம், பொய்யாக இருக்கக் கூடாதா என்று நப்பாசை கொண்டோம். ஆனாலும் உண்மை என்றாகிப் போனபின்னர் சோக மயமானோம். மாலைகள், ஊர்வலங்கள், பாமலைகள், அஞ்சலிகள், இறுதியில்…. விதைத்தோம். பின்னரும் கவி புனைந்தோம். உலகத் தமிழர்களின் மனங்களிலே தமிழச்செல்வன் அவர்கள் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தார், உலகத் தலைவர்களின் மனங்களிலே எவ்வளவு ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தார் என்பதை தொடர்ந்து வந்த நாட்களில் விளைந்த உணர்ச்சிமயமான எழுச்சியிலே, அஞ்சலிச் செய்திகளிலே இரங்கல் உரைகளிலே கண்ணுற்று மெய்சிலித்துப் போனோம். ஆனாலும் இன்னும் சில வ…
-
- 0 replies
- 637 views
-
-
இனவாத அடிப்படையிலான கைதுகள் மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம் சர்வதேசம் தலையிட வேண்டும் என்று கூட்டமைப்பு அழைப்பு வீரகேசரி நாளேடு கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகை தொகையின்றி இனவாத அடிப்படையில் கைது செய்யப்படுவது மனிதஉரிமை மீறலின் உச்சக்கட்டமாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் நேரடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.இதுகுறித்து மாவை சேனாதிராஜா எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மைக்காலங்களில் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வரும், தங்கியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட…
-
- 1 reply
- 838 views
-
-
ஞாயிறு 02-12-2007 23:06 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கு அனைத்துலக சமூகம் பின்நிற்கின்றது - பா.நடேசன் யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அவர்களுக்கும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணியளவில் கிளிநொச்சியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் போது சிறீலங்கா அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கு அனைத்துலக சமூகம் பின்னடிக்கின்றது. தமிழ் மக்களின் அவலங்களை வெறும் பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்துலகம் சிறீலங்கா அரசாங்கத்தின் வன்முறைகளையும் தாக்குதல்களையும் கண்டிப்பதற்கு பின் நிற்பதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா அசராங…
-
- 0 replies
- 742 views
-