Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து மேலும் மூவர் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்திடம் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 687 views
  2. முப்படையினரையும் பலப்படுத்தி வடக்கில் பாரிய தாக்குதல்கள்: மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் முப்படையினரையும் பலப்படுத்தி வடக்கில் பாரிய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். நிக்கரவப்பிட்டியவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பேசியதாவது: விபரங்களுக்கு

    • 2 replies
    • 1k views
  3. சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த செப்ரம்பர் மாதம் மட்டும் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 29 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  4. உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு - விஸ்வலிங்கம் சிவலிங்கம் அன்பார்ந்த அரசியல் கட்சித் தலைவர்களே! பரந்து, விரிந்து செயற்படும் ஜனநாயக சக்திகளே! உங்களது சிந்தனைக்கும், விவாதத்திற்குமான கருத்து. உள்ளக - சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு இலங்கை இனப் பிரச்சனை ஓர் நிர்ணயமான காலகட்டத்தை நெருங்கியுள்ளது. பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இப் பிரச்சனையைத் தீர்க்க முடியாத நிலையில் மிக நீண்ட காலமாகவே உள்ளன. நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் தொடர்ந்து இழுபறியில் உள்ள இப் பிரச்சனையை நாட்டில் பதவிக்கு வந்த எந்த அரசினாலும் தீர்க்க முடியவில்லை. பதிலாக பிரச்சனைகள் மேலும், மேலும் உக்கிரமடைந்தே செல்கின்றன. நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் ஜனநாயக …

    • 1 reply
    • 1.1k views
  5. இடம்பெயர்ந்த தமிழர் வாழ்வாதாரங்களை கொள்ளையடிக்கும் சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த தமிழர்கள் கைவிட்டுச் சென்ற கால்நடை உள்ளிட்ட வாழ்வாதரங்களை சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் கொள்ளையடித்து சிங்களப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளால் செங்கலடி-பதுளை வீதி மற்றும் புலிப்பாய்ந்தகல், கிரான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் இடப்பெயர்வுக்குள்ளாகினர். இச்சூழலைப் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத்தினர், துணை இராணுவக் குழுவினர் மற்றும் திருடர்கள், கைவிடப்பட்ட தமிழர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். ம…

    • 0 replies
    • 658 views
  6. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த வேண்டும்: ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சில சரத்துகளைத் திருத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழின் பிரதம செய்தியாளர் என்.ராம் மற்றும் அதன் செய்தியாளர் பி.முரளீதர் ரெட்டி ஆகியோருக்கு கொழும்பில் ரணில் அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழ் வடிவம்:விபரங்களுக்கு

    • 0 replies
    • 710 views
  7. வியாழன் 04-10-2007 19:10 மணி தமிழீழம் [மயூரன்] வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்கள் மன்னார் மற்றும் மட்டக்களப்புப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மன்னார் விளாத்திகுளத்தில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலில் வீரச்சாவடைந்தோர்: 2 ஆம் லெப். தீக்கவி என்றழைக்கப்படும் பூலோகநாதன் சிவாகர் (சொந்த முகவரி: 155 ஆம் கட்டை, தொண்டமான் நகர், கிளிநொச்சி. தற்காலிக முகவரி: மணியன்குளம், விநாயகர் குடியிருப்பு, கந்தபுரம்) வீரவேங்கை பெருநம்பி என்றழைக்கப்படும் சக்திவேல் சங்கரலிங்கம் (இன்பன் கடை, செல்வா நகர், கிளிநொச்சி) …

    • 6 replies
    • 2.4k views
  8. மாளிகாவத்தையில் 50 வீடுகள் முழுமையாக எரிந்து நாசம் வீரகேசரி நாளேடு கொழும்பு மாளிகாவத்தை ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்திற்கு பின்புறமாகவுள்ள அப்பிள் தோட்ட குடியிருப்புப் பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 50 வீடுகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. இதன்போது சிலர் காயமடைந்துள்ளனர். வீடுகளின் மேற்பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பிகள் விழுந்ததினாலேயே இத்தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, வீடு ஒன்றிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்தமையே தீவிபத்து ஏற்படக் காரணம் என்றும் கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், விமானப்படையினர், பொலிஸார் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்து தீய…

  9. அவுஸ்திரேலியாவில் தமிழர் பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக கொழும்பில் இரகசிய இடம் ஒன்றில் செய்மதி நிறுவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

  10. துரோகிகளுக்குத் துரோகம் தரும் பரிசு(!) -சபேசன் (அவுஸ்திரேலியா)- உலகில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள், தம்மை அடக்க முயலும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்ற அதேவேளையில், தம்மிடையே தோன்றியிருக்கின்ற துரோகிகளுக்கு எதிராகவும் போராடியிருப்பதையும், போராடி வருவதையும் வரலாறு பதிவு செய்துள்ளது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும், அந்த விடுதலைப் போராட்டத்தை அழிக்க முனைபவர்கள் அடிப்படையாகச் செய்கின்ற காரியம் என்னவென்றால், அந்தப் போராட்டத்திற்குள்ளேயே துரோகிகளையும், துரோகக் குழுக்களையும் உருவாக்குவதுதான்! அதாவது அந்தப் போராடுகின்ற இனத்துக்குள்ளேயே, அந்தப் போராட்டத்தை முன்னெடுத…

  11. இலங்கையின் தற்போதைய நிகழ்வுகளை ஒரு "யுத்தமாக" கருதி விவாதிக்காத வரை தற்போதைய நிலைமைகள் முடிவுக்கு வராது. அதுவரை யுத்த கால சட்டங்கள் அனைத்தும் மேசை மீதுதான் இருக்கும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கரேன் பார்க்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  12. அமைதி தான் எமது பிரதான நோக்கம், அது பக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலும் எட்டப்பட வேண்டும் என்று சிறிலங்காவிற்காக ஜேர்மன் தூதுவர் ஜூஜென் வீத் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  13. அனலைதீவில் பெரும் பட்டினி அவலம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கி தற்கொலை [04 - October - 2007] தீவகம் அனலைதீவுப் பகுதி மக்கள் கடும் பஞ்சம், பசி, பட்டினியை எதிர்நோக்கிவருவதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முகம் கொடுக்கமுடியாது மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் தூக்குப்போட்டு இறந்துள்ளதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவித்தன. யாழ்.குடா நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையையடுத்து அனலைதீவுப் பகுதி மக்கள் தொழில் வாய்ப்புகள் இன்றி பெரிதும் அல்லற்பட்டுவருகின்றனர். வர்த்தக நிலையங்களிலும் உணவுப்பொருட்கள் இருந்தாலும் அவற்றை வாங்குவதற்கு கையில் பணம் ஏதுமின்றி மக்கள் திண்டாடி வருவதாகவும் தெ…

  14. சிறிலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நிராகரித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 726 views
  15. யாழ்ப்பாணம் வடமராட்சியில் வர்த்தகர் ஒருவர் நேற்றுமாலை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 677 views
  16. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாயவை ஊடகவியலாளர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளக் கூடாது என்று சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 956 views
  17. மன்னார் மாவட்டம் விளாத்திக்குளம்- முள்ளிக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக தமிழிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான தாக்குதலில் படைத்தரப்பினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் வாசிக்க

  18. இலங்கைத் தீவில் தமிழரின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை ஏற்படுத்த முடியாது என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன கூறியுள்ளார். மேலும் வாசிக்க

  19. குடாநாட்டின் கள நிலைமையை அறிய ராஜதந்திரிகள் குழு இன்று வருகிறது குடாநாட்டின் தற்போதைய கள நிலைமை கள் குறித்து நேரில் அறிவதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகளைக்கொண்ட உயர்மட்டக்குழு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வருகிறது. பிரிட்டன், கனடா, சுவிற்ஸர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் தூதர்களின் பிரதிநிதிகள் இன்று குடாநாட்டுக்கு விஜயம் செய்கின்றனர். சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம், உலகசுகாதார நிறுவனம், யு.எஸ்.எயிட்ஸ், சுவீடன் அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று வரும் குழுவில் இடம்பெறுகின்றனர். யாழ்.அரச அதிபர் உட்பட பல்வேறு அதிகாரிகளையும், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இக்குழு சந்தித்து கலந்துரையாட இருக்கிறது. சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான ம…

  20. ஐக்கிய நாடுகள் சபையின் தமிழர் தரப்பின் செயற்பாடின்மையால் அனைத்துலக நிலையில் பின்னடைவு ஏற்பட நேரிடும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 870 views
  21. யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் இன்று வியாழக்கிழமையும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். மேலும் வாசிக்க

  22. சிங்களரை நடுங்க வைக்கும் புலிகளின் நவீன ஆயுதங்கள்- சத்திரியன் இலங்கை இராணுவத்துக்கு எதிரான போரில் விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களை புதிது புதிதாக அறிமுகப் படுத்தி வருகின்றனர். அரசபடைகளுக்கு முன்னறிமுகம் இல்லாத ஆயுதங்களைக் கூடப் புலிகள் தற்போது பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு, வெருகல் பகுதியில் கடந்த 31 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடுதலின் போது தெர்மோபெரிக் (Thermobaric) றொக்கட் லோஞ்சர் ஒன்றைக் கைப்பற்றி யிருப்பதாக படைத்தரப்பு தெரிவித்திருந்தது. தெர்மோபெரிக் என்பது ஓர் அபாயகரமான போராயுதமாகும். பதுங்கு குழிகள் அல்லது கவசவாகனங்களின் மீது ஏவப்படுகின்றபோது உயர் அழுத்த வெப்பத்தை ஏற்படுத்துவதுடன் காற்றில் உள்ள உயிர்க்காற்றினை இது உறி…

  23. அதிகாரம்- பேரினவாதத்தின் ஏகபோக உரிமை அல்ல * மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இன்று கடுமையாக விமர்சித்தும் எதிர்த்தும் வரும் ஜே.வி.பி.யை தம்பக்கம் இழுத்து விடலாமென்ற நப்பாசை கொண்டே சமஷ்டித் தீர்வுக்கு ஐ.தே.க. விடை கொடுத்துள்ளதென்பது நன்கு புலனாகியுள்ளது. ஜே.வி.பி.யின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை வீழ்த்தி விடலாமென ஐ.தே.க. தப்புக்கணக்குப் போட்டு விட்டது. இது ஒரு வடிகட்டிய அரசியல் வங்குரோத்துத்தனமும், சாக்கடைச் சந்தர்ப்பவாதமும் ஆகும் வ.திருநாவுக்கரசு மறைந்த லங்கா சமசமாஜக் கட்சிப் பிரமுகர் கொல்வின் ஆர்.டி.சில்வாவின் 91 ஆவது ஜனன தின நினைவு கூரும் வைபவத்தின் போது உரையாற்றியவராகிய கம்யூனிஸ்ட் கட்சி…

  24. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 02.10.2007 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....eecd95b4009adf4

  25. திருகோணமலைக் நோக்கிச் சொன்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது தாம் தாக்குதலை நடத்தி அவற்றில் ஒன்றை அழித்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. இந்தமோதலில் தரைப்படையிரே ஆட்டிலறிகள், மற்றும் சிறியரக ஆயுதங்கள் மூலம் கடற்புலிகளின் படகுகளைத் தாக்கியதாக அரச தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் கடற்படையினர் இதில் பங்கு பற்றியதாக அரச தரப்பால் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்படவில்லை. சுமார் மூன்று மணிநேரம் இந்த மோதல் நீடித்ததாகவும் அரச தரப்புத் தெரிவிக்கிறது. செய்தி: மின்னல்(ஆதாரம்: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையம்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.