ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை தயாரிக்க முற்பட்டுள்ள போதும், வடபகுதியில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு மெதுவாகவும், உறுதியாகவும் இராணுவ தயார்படுத்தல்களில் அது ஈடுபட்டு வருகின்றது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
ஞாயிறு 09-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வுபிரிவின் உறுப்பினர் சுட்டுப்படுகொலை! சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தட்டாதெரு பகுதி பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப்புலிகளின் பிஸ்டல்குழு உறுப்பினர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்குறிப்பிட்ட சிறீலங்கா புலனாய்வு உறுப்பினர் பிரதானவீதியில் தட்டாதெரு பகுதியில் பிரயாணிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறீலங்கா படையினர் பெரும்எடுப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 1 reply
- 1.5k views
-
-
போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.4k views
-
-
நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை (10.09.07) நடைபெறவுள்ள நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ப் பெண்கள் முதற்தடவையாக போட்டியிடுவதன் மூலம் நோர்வே அரசியலில் பிரவேசிக்கின்றனர். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2k views
-
-
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்திற்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 938 views
-
-
யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள் தமிழர்களே !!! ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் தவித்துக்கொண்டிருக்கிறார்க
-
- 4 replies
- 2.8k views
-
-
அம்பலப்படுத்துகிற தமிழக 'தினமணி" தமிழர்களுக்குரிய பாராம்பரிய பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தின் புகழ்பெற்ற கலாசார நகரம் என வர்ணிக்கப்படும் யாழ். குடாநாடு கொடுக்கும் விலை அதிகமானது. இவ்வாறு தனது ஆசிரியர் தலையங்கத்தில் உணர்வுபூர்வமாக குறிப்பட்டிருக்கின்றது தமிழகத்தின் பிரபல நாளேடான தினமணி யாழில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் கொலைக் கலாச்சாரம், இலங்கை அரசினால் திமிட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பவற்றைக் கோடிட்டுக் காட்டும் தினமணி தனது நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தை வரைந்துள்ளது. அதன் முழு விவரமும் அந்த எழுத்து நடையிலேயே வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய தமிழ்ப் பெண்களை தமிழ்நாடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்ல…
-
- 3 replies
- 2.2k views
-
-
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் உணவுப்பொருட்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னையில் உள்ள இந்தியாவுக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் பி.எம்.ஹம்சா தெரிவித்துள்ளதுடன் படகு மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்லப்போவதாக கூறும் பழ.நெடுமாறன், இலங்கை கடல் எல்லைக்குக்கூட வரமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி தமிழின் 10 ஆவது ஆண்டு விழா கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
நாம் அனைவரும் குற்றச்சாட்டுக்களின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். நிரபராதிகளான எம்மை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். எமக்கு வேறொன்றும் வேண்டாம். விடுதலையே வேண்டும் என்று பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது பொதுக்கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 629 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் இலுப்படிச்சேனையில் அநாதரவாக நின்ற வாகனமொன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சிறிலங்கா இராணுவ அதிகாரியொருவர் கொல்லப்பட்டதுடன், ஆறு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 979 views
-
-
வவுனியா தம்பனை பகுதியில் நடைபெற்ற மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீன்பிடித் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 593 views
-
-
சிறிலங்காப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்த பின்னர் தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்த மாகாணம் முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
சிறிலங்காவின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய விடயங்கள் தொடர்பாக, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்துக்களை அறிய சிங்கள வார ஏடொன்று அவருடன் தொடர்பு கொண்ட போது, ஜெயராஜ் பலவித கேலிக் கதைகள் கூறுவதாகவும் அவற்றிற்கு பதிலளிக்க தனக்கு நேரம் இல்லை என்று சந்திரிகா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 724 views
-
-
பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் இந்த நாட்டு தேசிய பாதுகாப்பிற்கு அதிகளவில் தலையீடுகளை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டமையினால் இனிமேல் வெளிநாட்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு மூன்றுவருடங்களுக்கு மாத்திரம் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 838 views
-
-
புதன்கிழமை 5 செப்ரெம்பர் 2007 17:18 ஈழம் ப.தயாளினி யாழ்ப்பாணத்தில் அல்லற்படும் ஈழத் தமிழர்களுக்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகில் எடுத்துக்கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கொள்ள உள்ள "தமிழர் தியாக பயண"த்தை தடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. பழ.நெடுமாறனின் இந்த தமிழர் தியாகப் பயணம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சஇ மகிந்தவின் செயலாளர் பசில் ராஜபக்ச மற்றும் மகிந்தவின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் தெரிவி…
-
- 12 replies
- 1.9k views
-
-
மன்னார் மாந்தை மேற்குப் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் ஏறத்தாழ 1,200 ஏக்கர் நெற்செய்கை அறுவடை செய்ய முடியாததுடன் கால்நடைகள் பலவும் உயிரிழந்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 930 views
-
-
ஈழத் தமிழ் அகதிகள் தகவல் விடுதலைப் புலிகளை இலக்குவைத்துகத் தாக்குதல் நடத்தத் திராணியற்ற இலங்கை இராணுவம் அப்பாவிப் பொதுமக்கள் மீதே தாக்குதல் நடத்திவருகின்றனர் என ஈழத்தமிழ் அகதிகள் தகவல் தெரிவிக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த இரு பெண்கள், 4 குழந்தைகள் உட்பட 9 அகதிகள் தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இந்தியக் கடற்படையினராலும், 'கியூ' பிரிவுப் பொலிஸாராலும் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கபட்ட அவர்கள் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தனர். "இலங்கை இராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டன.…
-
- 1 reply
- 2.1k views
-
-
சனி 08-09-2007 02:25 மணி தமிழீழம் [மயூரன்] நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செறிவான எறிகணைவீச்சு வெள்ளி காலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் செறிவான ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறக எறிகணைவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தபொழுது உலங்குவானூர்திகள் இராணுவ முகாமிற்கும் சென்று திரும்பிவண்ணம் இருந்ததாகவும் விடுலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைகள் நாகர்கோவில் மற்றும் மணற்காடு ஆகியபகுதிகளில் இராணுவமுகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தினரும் பதிலுக்கு மணற்காடு இராணுவமுகாமில் இருந்தும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளில் இருந்தும் எறிகணைத் தாக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு: உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா – இலங்கை இடையில் ஓர் உயர்நிலைக்க…
-
- 1 reply
- 1k views
-
-
எதற்கும் அஞ்சேன் என்கிறார் வை.கோ குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த இலங்கையின் வவுனியா காட்டுப் பகுதியிலேயே உயிர் பிழைத்த நான், எதற்கும் அஞ்சப் போவதில்லை என தனது வழமையான கோபவேசத்துடன் உரை நிகழ்த்தியிருக்கின்றார் ம.தி.மு.கவின் பொதுச் செயலர் வைகோ. விருதுநகரில் புதனன்று இடம பெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்திய வேளையே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்ததுகையில் :- விருதுநகரில் நடக்கும் இச்செயல் வீரர்கள் கூட்டத்திற்கு புது உத்வேகத்தோடு வந்துள்ளீர்கள். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதற்கான காரணத்தை மாவட்டச் செயலரும், சிவகாசி எம்.பியும் என்னிடம் தெரிவித்தபோது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் வந்ததால் தான் இவ்வளவு க…
-
- 2 replies
- 2k views
-
-
சனி 08-09-2007 02:56 மணி தமிழீழம் [மயூரன்] வயதான தேநீர் கடை உரிமையாளர் சுட்டுப் படுகொலை இனம்தெரியாத ஆயுதாரிகளால் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் கைதடி பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் 24 மணிநேர கண்காணிப்பு உள்ள பகுதியில் அவரது தேநீர் கடையில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொல்லப்பட்டவர் 61 அகவையுடைய கைதடி வடக்கை சேர்ந்தசெல்லையா ஜெயபாலசிங்கம் எனத்தெரியவருகிறது. இவர் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் இராணுவத்தினர் இரவும் பகலும் நடமாடுவதாகவும் சுட்டவர்கள் இராணுவத்திடம் இருந்து இந்தபகுதியில் தப்பியிருக்க முடியாது எனவும் அவ்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா துணைப்படைக்குழுவினர் தென்மராட்சி பகுதியில் ஒரு கிராமசேகவர் உட்பட…
-
- 0 replies
- 998 views
-