Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 02-09-2007 03:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] மன்னாரில் முஸ்லீம் கிராமத்தவர்களை மனிதகேடயமாக பயன்படுத்தும் சிறீலங்கா படையினர் முசலி பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தில் சுமார் 50 முஸ்லீம் குடும்பத்தவர்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி சிறீலங்கா படையினர் முன்னேற்ற நடவடிக்கையினை சனிக்கிழமை காலை மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதேவேளை முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கிராமத்தவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நானாட்டான் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் பகுதிநோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இப்பிரதேம் விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் பிரசன்னமாகியிருக்கும் பிரதேசமாக இருந்ததாகவும் இப்பிரதேசத்தினுள் சிறீலங்கா படையினர் முன்னகர்ந்தபோது…

    • 3 replies
    • 2.2k views
  2. சிறிலங்காவுக்கான உல்லாசப் பயணிகளைத் தடுக்க எந்த நாட்டுக்கும் அதிகாரம் இல்லை: சரத் என் சில்வா [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 19:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] அனைத்துலக நாடுகளுடன் ஒப்பந்தங்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ள நிலையில் சில நாடுகள் தமது நாட்டவர்களை சிறிலங்காவுக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவிக்க அதிகாரம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். உலக மயமாக்கல் குறித்து கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலக மயமாக்கலின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கும் உடன்படிக்கைகளுக்கு அமைய இந்நாட்டு உல்லாசப் பயண சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டு பயணிக்கு தடைகளை ஏற்படுத்த எந்த…

    • 4 replies
    • 1.5k views
  3. வெள்ளி 31-08-2007 16:18 மணி தமிழீழம் [மயூரன்] சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கு சந்திரிகா முழுமையான ஆதரவு சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியின் நிறுவனர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சந்திப்பு சந்திரிகா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என சந்திரிகா தெரிவித்துள்ளார். அத்துடன் தேசியக் கூட்டமைப்புக்கு நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவைத் தருவதாகவும் சந்திரிகா குமாதுங்க மங்கள சமரவீர, சிறீப…

  4. புலிகளின் நிலக்கண்ணிகளில் சயனைட், கந்தகம் [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 16:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளினால் கிழக்கில் புதைக்கப்பட்டிருக்கும் சில நிலக்கண்ணிகளில் சயனைட் மற்றும் கந்தகம் அடங்கியிருப்பதாக சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக "லக்பிம" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: நிலக்கண்ணிக்கு இலக்காகி சிறிலங்கா இராணுவத்தினரின் கால்கள் காயமடையும் போது அந்த காயங்களினூடாக சயனைட் உடலினுள் சென்று உடன் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கில் சயனைட் போடப்பட்டிருக்கலாம் என்பதே குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் கருத்தாகவுள்ளது. கந்தகம் அடங்கிய குண்டுகளால்…

  5. ஞாயிறு 02-09-2007 20:57 மணி தமிழீழம் [செந்தமிழ்] மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு : தம்பதியினர் காயம் மட்டக்களப்பு மாவட்டம் கன்னங்குடாவை சேர்ந்த வீடொன்றினுள் புகுந்த கருணாகுழுவை சேர்ந்த ஆயுததாரிகளால் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் அவ்வீட்டில் வசித்து வந்த விவசாயியை கடத்த முற்பட்டதாகவும் பின்னர் அவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் சிவநாதன் ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி விசு ஜெயசீலன் எனவும் தெரியவருகிறது. ஜெயசீலன் தற்போது மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. pathivu

  6. ஞாயிறு 02-09-2007 05:34 மணி தமிழீழம் [தாயகன்] இனப்பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் - மகிந்த ராஜபக்ஸ இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என சிறீலங்கா அதிபர் மகந்த ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இன்று வெளியாகியுள்ள ஹாட் ரோக் (Hard Talk) என்ற சஞ்சிகைக்கு மகிந்த ராஜபக்ஸ வழங்கிய நேர்காணல் ஒன்றில் இந்தக் கருத்தினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கை இனப் பிரச்சனையில் அயல்நாடு உட்பட எந்தவொரு நாடும் நேரடியாகத் தலையிடுவதை தாம் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ஸ இது முழுமையான ஒரு ஒப்பந்தம் இல்லை எனவும், பல்வேறு குறைபாடுகள் அதில் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட…

  7. இலங்கை சிங்களவருடையது என சொல்கின்றனர் சிங்கள பேரினவாதிகள் அத்துடன் 6 மாதம் காணுமாம் புலிகளை அழிக்க பகுதி- 1 http://youtube.com/watch?v=0qNeypXY0Qk பகுதி- 2 http://youtube.com/watch?v=MO530uHtY_g பகுதி- 3 http://youtube.com/watch?v=fDAWHlF3BfQ

    • 2 replies
    • 1.8k views
  8. சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 2 செப்ரெம்பர் 2007, 17:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர் என்று பிரபல ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் "த நேசன்" வார ஏட்டிற்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம்: எனது பாதுகாப்பை அகற்றியதற்காக என்னால் அவர்களுடன் வாதாட முடியாது. எனக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நான் அவர்களை நிர்ப்பந்திக்கவும் முடியாது. ஆனால் மறுபுறம் அரச சார்பான குழுவினர் எனது வீட்டிற்கு வெளியில் நடமாடுவதனால் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. தனக்கு நெருக்கடியான விடயங்களை தெரிவிக்கும் போது அவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவ…

  9. Posted on : 2007-09-02 மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதும் குற்றம்தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித் தீர்வு காண்பதிலும் நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்பு ணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண் டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் வகையிலும், இலங்கை மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக் கும் விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றது எனச் செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இதே காரணத்துக்காகத் தமது உதவித் திட்டங்களை இடைநிறுத் தியிருக்கின்றன. அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை இலங் கைக்கு தான் வழங்கி வந்த வரிச்…

  10. சூசையை சுற்றிய புனை கதைகளும் கிழக்கை சுருட்டும் புனை கதைகளும் -சி.இதயச்சந்திரன்- ஒளியைவிட அதிவேகமாகப் பரவும் பரப்புரையொன்று எதிரிகளால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள் என்று சகலத்திலும் முதன்மைச் செய்தியாகவும், மக்களின் அடிப்படைச் பிரச்சனை போன்றும் சோடிக்கப்பட்டு அலங்கார ஊர்தியாக பவனி வருகின்றது. சூசைக்கும் பொட்டம்மானிற்கும் லடாய். இரண்டு ஆதரவாளகளுக்கு இடையே நோர்வேயில் வாள்சண்டை. கடற்புலிகளின் பொறுப்பாளர் பதவியிலிருந்து சூசை விலக்கப்பட்டுள்ளார். அண்மையில் மூண்ட கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலித் தளபதிகள் இருவரின் இறுதி நிகழ்வில் சூசை கலந்துகொள்ளவில்லை என்றவாறு சுயதிருப்திப் பரப்புரைகள் மகிந்த விசுவா…

  11. மகிந்த அரசாங்கம் மீது விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 20:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வரவு - செலவுத்திட்டத்திற்கு முன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மகிந்த அரசாங்கத்தின் மாபெரும் ஊழல்கள், தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. "கோப்" அறிக்கையில் சிறிலங்கா பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல்கள் தொடர்பில் வெளியாகியிருக்கும் விடயங்கள், மிக் - 27 கொள்வனவு ஊழல், ரெலிகொம் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் 107 அமைச்சர்களை …

  12. சனி 01-09-2007 15:25 மணி தமிழீழம் [சிறீதரன்] ஆஞ்சிநேயர் ஆலயத்திற்கு செல்ல முற்பட்ட வயோதிபர் படையினரால் தாக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் அயலில் உள்ள ஆலயத்திற்கு செல்ல முற்பட்ட வயோதிபர் பல நூற்றுக் கணக்கான பொதுமக்கள் பார்த்துக் கொண்டு நிற்க்க இராணுவத்தினரால் தாக்கப்பட்டார். மருதனார்மடம் சந்தியில் வாகனக் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நிறுத்தப்பட்டு இருந்த பேரூந்தில் இருந்து இறங்கிய வயோதிபர் அயலில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்க்கு சென்ற வருவதாக கடமையில் நின்ற இராணுவத்திடம் தெரிவித்தார். வீதியைக் கடக்காது வயோதிபர் நின்ற பக்கத்தில் உள்ள ஆலயத்திற்க்கு செல்லவே இவர்…

  13. நான் தமிழ் தேசியம் பேசுவது ஏன்? - பழ. நெடுமாறன் செவ்வியின் ஒரு பகுதி மட்டுமே இங்குள்ளது.. குறிப்பாக ஈழப்பிரச்சனை தொடர்பானது.. எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் எ…

  14. அரசியலில் சந்திரிகா மகன்? [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 16:33 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த தனது மகனை தீவிர அரசியலில் சந்திரிகா இறக்கக்கூடும் என்று தெரிகிறது. சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறிலங்கா திரும்பினார். அவர் எதிர்வரும் காலத்தில் அரசியலில் இணைந்து கொள்ளக்கூடும் என்று அவரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தி அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து ஜனநாயக கட்சிகள் மற்றும் சக்திகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் போது சந்திரிகா தெரிவித்திருந்தார். அவரின் இந்த புத…

  15. Posted on : 2007-09-01 கோமாளிக் கூத்தாகத் தொடரும் சர்வதேசக் கையாள்கைப் போக்கு சர்வதேச சமூகத்தைக் கையாள்வதில் மோசமான இராஜதந்திரத் தவறுகளை இழைப்பதன் மூலம் கொழும்பு அரசு தனது தலையில் தானே மண் அள்ளிக் கொட்டி வருகிறது என்பதைப் பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அதுவே தொடர்கதையாகத் தொடர்கின்றது. இப்போது, அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் கலாநிதி ரஜீவ் விஜேசிங்க "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி' போல தேவையில்லாத விவகாரத்தைக் கிளறிக் குழப்பி அடித்திருக்கின்றார். அவர் இப்பொறுப்பை ஏற்று சில மாதங்களே ஆகின்றன. அதற்கிடையில் மேற்குலகுக்கு குறிப்பாக மேற்குலக மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எதிராக ஓர் அறிக்கைப் போரைத் தொடங்கி ஆல…

  16. சர்வதேச சமூகமும் அரசியல் குருடர்களும் [01 - September - 2007] இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்று தொடர்பில் தென்னிலங்கையில் கருத்தொருமிப்பைக் காண்பது அவசியமென்று கூறிக்கொண்டு கடந்தவருடம் சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்போது அந்த மகாநாட்டை என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது. தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியில் கருத்தொருமிப்பைக் காண்பதற்கு முயற்சிப்பதென்பது ஒன்றும் புதியவிடயமல்ல. அத்துடன் ஒப்பேறக்கூடியதுமல்ல.கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்தக் கருத்தொருமிப்புக்காணும் முயற்சிகள் சகல அரசாங்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அடிப்படையில் அவை தமிழ் மக்களுக்கு எந்தளவுக்குக் குறைவா…

  17. வங்காள விரிகுடாவில் ஒரு படை ஒத்திகை இலங்கைத்தீவின் எதிர்காலம் -புரட்சி (தாயகம்)- வருகின்ற செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவானது பாரிய கடற்படை ஒத்திகை ஒன்றினை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வங்களா விரிகுடாவில் மேற்கொள்ளவுள்ளது. ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள இந்த போர் ஒத்திகையில் இந்தியா தவிர அமெரிக்கா, யப்பான், சிங்கப்ப+ர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன. அமெரிக்காவின் இரண்டு அணு ஆயுத விமானம் தாங்கிக் கப்பல்களான ருளுளு நிமிட்ஸ், ருளுளு கிற்றி ஹோக் மற்றும் இந்தியாவின் ஐNளு விராட் உட்பட இருபது வரையிலான கடற்படைக் கப்பல்கள் பங்கேற்கவுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற ஒத்திகையொன்று யப்பானிய கடற்பரப்;பில் மேற்கொள்ளப்பட்டது. இந்த…

  18. மக்கள் விரோத செயற்பாடுகளின் உறைவிடமாக மாறிவரும் இலங்கை [01 - September - 2007] காலகண்டன் ஒரு காலத்தில் நல்ல பல விடயங்களுக்காக உலக நாடுகளில் பெயர் பெற்று விளங்கிய இலங்கை இன்று தீய விடயங்களினதும் மக்கள் விரோத செயற்பாடுகளினதும் இருப்பிடமாகி பெயர் மங்கி வரும் நாடாகக் காட்சி தருகின்றது. முப்பது வருட இன முரண்பாட்டு யுத்தம் அரசியல் தீர்வு மறுக்கப்பட்ட நிலையில் தொடரப்படுகின்றது. அதன் எதிர் விளைவுகள் சகல துறைகளிலும் பாதக நிலைமைகளைத் தோற்றுவித்து நிற்கின்றமை இன்றைய யதார்த்தமாகும். யுத்த அழிவுகள், இடப் பெயர்வுகள் மட்டுமன்றி அன்றாடம் கொலைகளும் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களும் பாரிய மனித உரிமை மீறல்களாகத் தொடர்கின்றன. அதேவேளை பொருளாதார நெருக்கடிகளும் வாழ்க்கைச் செலவி…

  19. தொண்டர் அமைப்புப் பணியாளர்களை போராளிகளாகப் பார்க்கும் அரசுகள்: "ரொய்ட்டர்ஸ்" [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 10:36 ஈழம்] [பி.கெளரி] இனப்பிரச்சினை நிகழும் நாடுகளில் பணியாற்றும் தொண்டர் அமைப்புப் பணியாளர்களைப் போராளிகளாகவே அரசாங்கங்கள் சந்தேகிக்கின்றன என்று அனைத்துலக செய்தி ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்சிற்காக நேற்று வெள்ளிக்கிழமை (31.08.07) பீற்றர் ஆப்ஸ் எழுதிய செய்தி ஆய்வின் தமிழ் வடிவம்: தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்கள் தம்மை ஒரு நடுநிலையாளர்களாகவே கருதுவதுடன், மிகவும் முனைவாக்கப்பட்ட களமுனைகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர். எனினும் அவர்கள் ஒரு தரப்பிற்கு சார்பானவர்கள் என்றே குற்றம் சுமத்தப்படுகின்றனர். அதனால் அவர்களின் நடவட…

  20. மன்னார் மதவாச்சியில் காடொன்றில் ஆயுதங்கள் மீட்பு வீரகேசரி இணையம் மன்னார் மதவாச்சி வீதியிலுள்ள காடொன்றிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சில மீட்க்கப்பட்டுள்ளதாக சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இச்சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.. நேற்று இரவு 9.30 மணிமுதல் இன்று காலை 4 மணிவரை குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் 12 தோட்டாக்கள் என்பன மீட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மெலும் தெரிவித்தனர்.. அதேவேளை மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் மேற்கொண்ட தேடுதலில் பாதுகாப்பு படையினர் பெரு தொகையான அயுதங்கள் வெடிப்பொருட்களை மீட்…

  21. பிரித்தானிய உள்துறை அமைச்சு ஏற்பாடு பிரிட்டனின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இளவாளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கைக்குத திருப்பி அனுப்ப பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்குத திரும்பி அனுபினால், உயிர் அச்சுறுததலுக்கு ஆளாக நேரிடும், எனவே தம்மை திருப்பி அனுப்ப வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதப் போரட்டம் நடத்திய இளவாலையைச் சேர்ந்த ஜூட் கிறிஸ்டி என்ற இளைஞரே நாடுகடத்தப்பட உள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமை அவரை நாடு கடத்தத் தேவையான பயண ஏற்பாடுகளை உள்துறை அமைச்சு செய்துள்ளது. ஜூட் கிறிஸ்டியை நாடு கடத்துவதற்காக அவருக்கான பயணச்சீடட்டு பயணப்பதிவு ஆகியவற்றை அந்த அமைச்சு பூர்த்தி செய்து விட்டது. …

  22. ஆடை ஏற்றுமதிக்கான வரி விலக்கு ரத்தாகும்? இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித்தீர்வு காண்பதிலும், நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்புணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண்டிருக்கும் ஐரோபிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் விதமாக அழுத்தம் ஒன்றை இலங்கை மீது பிரயோகிக்கும விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. பெரும்பாலும் வர்த்தக விவகாரங்கள் தொடர்பான சில வரிச்சலுகைகளை விலக்கி, இலங்கைக்கு அழுத்தத்தைக் கொடுக்க அது தீர்மானிப்பதற்கு, வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. இலங்கையின் பெரும் அந்நிய செலவாணி வருமானம் இப்போது ஆடைத…

  23. சனி 01-09-2007 04:45 மணி தமிழீழம் [மயூரன்] வாழைச்சேனையில் ஆயுதக்குழுக்கள் கடைக்கு தீவைப்பு வியாழன் இரவு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தியாவெட்டுவான் பகுதியில் இருகடைகளுக்கு இனம்தெரியாத ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் தீவைத்துள்ளதாக தெரியவருகிறது. இத்தீயினால் நான்கு கட்டடங்கள் முற்றாக நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. இவ் கடை உரிமையாளர்கள் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை வழமையாக கடைகளை திறந்திருப்பதாகவும் இவர்கள் கடையை மூடியபின் இவர்களது கடைக்கு தீவைத்துள்ளதாக தெரியவருகிறது நன்றி பதிவு.

  24. அதிகமான காணாமல் போதல்களுக்கு இராணுவமும், கருணா குழுவுமே காரணம்: அனைத்துலக மன்னிப்பு சபை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 20:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பொதுமக்கள் காணாமல் போன சம்பவங்களில் அதிகமானவை சிறிலங்கா இராணுவத்தினராலும் அதன் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 2006 ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 1,000 பேர் காணாமல் போனதாக பதிவுகள் கூறும் நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக ஓகஸ்ட் மாதம் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 21 பேர் காண…

  25. ஜனாதிபதி மஹிந்த சந்திரிகாவுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்த அலவி முயற்சிஎதிர்வரும் செவ்வாயன்று சந்திப்புக்கும் ஏற்பாடு வீரகேசரி நாளேடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மேல் மாகாண சபை ஆளுனர் அலவி மௌலானா ஈடுபடவுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னாள் ஜனாதிபதியை ஆளுனர் சந்தித்து பேச்சுவாத்தைகளை நடத்தவுள்ளதாகவும் நம்பத்தக்தகுந்த அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இவ்விடயம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருவதாவது, நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவுடன் மேல் மாகாண சபை ஆளுனர் பல முறை தொலைபேசி மூலம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.