ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
புலிகளுக்கு டீசல் கடத்தல்-5 மீனவர்கள் கைது ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கு டீசல் விற்றதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையும், கடலோரக் காவல் படையினரும் கூட்டு ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகு இலங்கை கடல் பகுதியிலிருந்து இந்திய கடல் எல்லைக்குள் வேகமாக வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். இதையடுத்து அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர். படகில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குமார், அந்துக் கிழவன், பாக்கியராஜ், ராபர்ட், பல்தா ஆகிேயாரை கரைக்குக் ெகாண்டு வந்து விசாரித்தனர். அப்போது அந்தப் படகு அருளானந்தம் என்பவருக்குச் சொந்தமானது என்றும், படகில் டீசலை எடுத்துச் சென…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ் [புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 17:27 ஈழம்] [ப.தயாளினி] ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஆதரித்தும் ஹோல்ம்ஸ் ஒரு முழுமையான பயங்கரவாதி. பயங்கரவாதிகளை ஆதரிப்போரை நாங்கள் பயங்கரவாதிகளாகத்தான் கருதுவோம். ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி. சிறிலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க இந்…
-
- 26 replies
- 3.6k views
-
-
அவசியமாகத் தேவைப்படும் சமயத்தில் தடுக்கப்படும் மனிதாபிமானப் பணி யுத்தம் காரணமாகவும், ஆழிப்பேரலை அனர்த்தம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் காரணமாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய அவசர அவசிய மனி தாபிமானப் பணிகள் மிக நெருக்கடிக்குள்ளும், இக்கட்டுக் குள்ளும் சிக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய மக்களுக்கான மனித நேயத் தொண்டுப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 34 ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர் என்று கூறப்படும் பின்னணியில் ""மனித நேயத் தொண்டுப் பணியாளர்கள் தமது கட மையை ஆற்றுவதற்கு உலகில் மிக மோசமான இடமாக இலங்கை உள்ளது.'' என்று ஐ. நாவின் அவசரகால நிவா ரணப் பணி ஒருங்கிணைப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஜோன் ஹோம்ஸ் திறந்த மனதோடு கூறிய …
-
- 0 replies
- 790 views
-
-
குடாநாட்டிலிருந்து படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இன்று காலை முதல் சிறிலங்காப் படையினர் செறிவான பல்குழல் வெடிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை படையினர் அவசர, அவசரமாக பல்குழல் வெடிகணை செலுத்திகளை யாழ். முற்றவெளி விளையாட்டு மைதானத்துக்கு நகர்த்தி இந்த செறிவான வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். பலாலியிலிருந்து இன்று காலை இரண்டு பல்குழல் வெடிகணை செலுத்திகள் யாழ். முற்றவெளியில் பொது மைதானத்துக்கு படையினரால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வைத்து வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்தியுள்ளனர். வெடிகணைத் தாக்குதலை படையினர் நடத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து அதனைப் பின்னகர்த்துவதும் அதன் பின்னர் முன…
-
- 5 replies
- 2.2k views
-
-
சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட யாழ். எறிகணைத் தாக்குதல்: படைத்தரப்பு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பென்சேகாவின் உலங்குவானூர்தி பலாலியில் தரையிறங்கும் நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றதாகவும், எனினும் சீரற்ற காலநிலை காரணமாக சரத் பொன்சேகாவின் பயணம் தாமதமாகியதுடன் தாக்குதலின் பின்னர் அவர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தனது பயணத்தை கைவிட்டுள்ளதாகவும் படைத் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதன் பொருட்டு நேற்று காலை கட்டுநாய…
-
- 5 replies
- 1.8k views
-
-
சூத்திரதாரியான ஜீகாத் உறுப்பினரைக் கைது செய்யவும் பிடியாணை வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களான கொண்டையன்கேணி, கறுவாங்கேணி,மீராவோடை ஆகிய தமிழ்ப் பகுதிகளில் அரச காணிகளில் அத்துமீறிக்குடியேற்றம் மேற்கொள்ளப்டுவதற்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதின்றம் நேற்று முன்தினம் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது.இந்தப் பிரதேசத்தில் குடியேற்றங்களை மேற்கொள்வதன் பின்னணியில் சூத்திரதாரியாக நின்று செயற்படுபவர் எனக்கூறப்பட்ட 'ஜீகாத்" அமைப்பு உறுப்பினர் ஒருவரைக் கைது செய்யவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது, வாழைச்சேனை நீதிவான் மாணிக்கவாசகர் கணேஷராஜா இது தொடர்பான உத்தரவுகளை விடுத்தார். மேற்படி பிரதேசததில் அண்மைக் காலத்தில் சுமார் நூறு கு…
-
- 1 reply
- 874 views
-
-
தாண்யடி கிராமத்தின் பெயரை சிங்களத்துக்கு மாற்றியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 17:02 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை தாண்டியடி கிராமத்தின் பெயரை சிறிலங்கா அரசாங்கம் சிங்களப் பெயராக மாற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா இரானுவத்தினரால் வன்பறிப்புச் செய்யப்பட்ட பிரதேசங்களின் தமிழ்ப் பெயர்களை சிறிலங்கா அரசாங்கமானது சிங்களப் பெயர்களாக மாற்றம் செய்து வருகிறது. கடந்த 28.07.07 அன்று இலுப்படிச்சேனை வீதிக்கு ராஜபத்திரன மாவத்தை என்று பெயர் சூட்டப்பட்டது. தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பிரதேச மக்களை நேற்று திங்கட்கிழமை ஒன்று கூட்டிய சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாண்டியடிப் …
-
- 4 replies
- 1.5k views
-
-
பலாலி காங்கேசன்துறை படைத்தளங்கள் மீது புலிகள் கடும் எறிகணை வீச்சு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 21, 2007 - 06:06 AM - GMT ] யாழ். குடாவில் உள்ள படையினரின் மூலத்தளங்களான பலாலி மற்றும் காங்கேசன்துறைப் பகுதிகளில் உள்ள படைத்தளங்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று காலை 9.30 மணிமுதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலடித் தாக்குதலை தாம் நடத்துவதாக படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்த மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ஈழத்தமிழ் http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 5 replies
- 3.3k views
-
-
சமஷ்டிமுறையை தவிர வேறு எந்த ஒரு தீர்வுத்திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் : த.தே.கூ Written by Ravanan - Aug 21, 2007 at 08:43 PM இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சமஷ்டிமுறையிலான தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்காவிட்டால் மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கவிருக்கும் யோசனைத் திட்டம் தொடர்பாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விசேட அறிக்கையொன்றை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இதற்குப் பதிலளித்து உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன், சமஷ்டிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வைத் தவிர வேறு எந்த ஒரு தீர்வுத்தி;ட்டத்தையும் தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 902 views
-
-
செவ்வாய் 21-08-2007 22:47 மணி தமிழீழம் [மயூரன்] இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியாளர் பகவதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு அனைத்துலக சுயாதீன குழுவின் தலைவரும் முன்னாள் இந்திய பிரதம நீதியாளருமான பி.என். பகவதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் அனைத்துல சுயாதீனக் குழு தொடர்பான விடயங்களே ஆராயப்பட்டன. சுயாதீனக் குழுவுக்கு சிறீலங்கா அரசாங்கம் சலக ஒத்துழைப்புகளையும் வழங்கும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். pathivu
-
- 0 replies
- 902 views
-
-
நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்சப்படுகின்றன : ரணில் Written by Ravanan - Aug 21, 2007 at 08:23 PM மக்களின் இறைமை, ஊடக சுதந்திரம் மற்றும் பாராளுமன்ற இறைமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பம் முதல் பாரிய மற்றும் விசேட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எமது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களின் இறைமை மீறப்படுவதனை பார்த்துக்கொண்டு இனியும் மௌனமாக இருக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பிரச்சினைகள் குறித்து சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட அச்ச…
-
- 0 replies
- 726 views
-
-
செவ்வாய் 21-08-2007 15:29 மணி தமிழீழம் கோபி விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்சில் சிறீலங்காப் படையினர் பலர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் வவுனியா மற்றும் தம்பனைப் பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். மோட்டார் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் பலர் காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்த படையினரில் ஒருவர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை சிறீலங்காப் தேசிய பாதுகாப்பு ஊடக மையமும் உறுதி செய்துள்ளது. நன்றி : பதிவு
-
- 1 reply
- 1.1k views
-
-
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலிருந்து தாம் இன்று விலகியதாக ஐ.தே.கட்சி இன்று அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடத்தப்பட் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்கா அறிவித்தார். சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரான திஸ்ஸ விதாரனையின் செயற்பாடுகளைப் பற்றி கெல உறுமையவின் பாரளுமன்ற அமைச்சர் சம்பிக்க குறை கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜானா
-
- 0 replies
- 712 views
-
-
பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்தும் முயற்சிகள் இலங்கையில் தொடர் கதை [21 - August - 2007] வ. திருநாவுக்கரசு * கடும் போக்காளர்களுக்கு வளைந்து கொடுக்காமல் ஆளுங்கட்சி செயற்படுவதே அவசியத்தேவை "எனது செல்வாக்கு சரிந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால் மக்கள் பேச்சைக் கேட்பதற்குப் பதிலாக எனது ஆலோசகர்கள் பேச்சை நம்பி விட்டேன்"- முஷாரப். மனிதாபிமான பணியாளர்கட்கு இலங்கை உலகிலேயே மிகப் பயங்கரமான நாடுகளில் ஒன்று என ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் சேர். ஜோன் ஹோம்ஸ் அண்மைய இலங்கை விஜயத்தின் போது தெரிவித்த கருத்து தொடர்பாக பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், பின்னர் பொதுக் கூட்டமொன…
-
- 0 replies
- 764 views
-
-
இராமேஸ்வரம் மீனவர் மீது துவக்கு சூடு [21 - August - 2007] இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் மீன்களையும் கொள்ளையடித்து சென்றதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இவற்றை நம்பி பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடல் அட்டையை பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 ஆம் திகதி முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டுவிட்டு சனிக்கிழமை மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவ்வாறு 775 விசைப் படகுகள் மீன்துறையினரின்…
-
- 0 replies
- 950 views
-
-
செவ்வாய் 21-08-2007 03:10 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் ஆட்டிலெறி பரிமாற்றம் விடுதலைப்புலிகளும் சிறீலங்கா படையினரும் திங்கட்கிழமை மாலை கடுமையான ஆட்டிலெறி எறிகணைப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா படையினர் கோப்பாய் பகுதியில் இருந்து பூநகரி, முகமாலை பகுதிநோக்கி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் விடுதலைப்புலிகள் உசன், மிருசுவில் தென்மராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவ முகாங்களை நோக்கி எறிகணைத்தாக்குதல்களை நிகழ்த்தியதாகவும் தெரியவருகிறது. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. இதனையடுத்து கோப்பாய் பகுதியில் பதற்றம் நிலவியதாகவும் தெரியவருகிறது. இருதரப்பில் இருந்தும் உத்தியோகபூர்வ…
-
- 2 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு இன்னும் பாடம் புகட்டுவோம் என்கிறார் கோதாபய ராஜபக்ஷ `எந்தவிதமான கலாசாரமும் தெரியாதவர்களிடம் மனித உரிமைகள் தொடர்பாக கற்க வேண்டிய தேவை தமக்கில்லையெனத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ 4, 5 மணித்தியாலங்கள் மட்டும் இலங்கையில் இருந்துவிட்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன, அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட முடியாதுள்ளதென கூறும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை' என்றும் கூறினார். தனியார் தொலைக்காட்சி சேவையான `தெரண'வுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மேலும் கூறியதாவது; "எமது நாட்டில் ஒரு பிரச்சினை உள்ளது. அந்த பிரச்சினைகளினால்…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை இந்தியா தடுத்து நிறுத்தவேண்டும் * தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது -பி.ரவிவர்மன் - இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணத்தை தனித்தனியாக பிரித்து கிழக்கு மாகாணத்தில் தேர்தலொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அர சாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர முயற்சிகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்திக் கோரப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பின…
-
- 3 replies
- 1.2k views
-
-
மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு விசனம் யுத்தத்தால் இலங்கைக்குள் இடம் பெயர்துள்ள ஆயிரக்கணக்கானோர் அகதி முகாம்களில் அவல வாழ்வில் உழன்று கொண்டிருக்கின்றனர். இதே தருணத்தில் முன்னைய வதிவிடங்களுக்குச் செல்லுமாறு தமது விருப்பத்துக்கு மாறாக இம்மக்கள் நிர்ப்பந்திக்கபட்டு வருகின்றனர். இவ்வாறு மனித உரிமைகளுக்கான தெற்காசியர்கள் அமைப்பு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளளது இந்த அகதிகள் உள்நாட்டுக்குள் இம் பெயர்ந்த நபர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளளார்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்தவின் பிரத்தியேக செய்தியுடன் வன்னி செல்கிறார் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்: கொழும்பு இணையத்தளம் [திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007, 18:57 ஈழம்] [க.திருக்குமார்] இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஜெகத் அபயசிங்க சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்புச் செய்தியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்திக்க வன்னிக்கு இன்று செல்வதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் ஜெகத் அபயசிங்க, அனுராதபுரத்தில் உள்ள தமது கிளை அலுவலகத்திற்கு இன்று திங்கட்கிழமை சென்றுள்ளதாகவும், ஆனால் அவர் அங்கிருந்து வவுனியா செல்வாரா என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மகேஸ் ஜெயசிங்க தெரிவித்துள்ளார் …
-
- 1 reply
- 1.5k views
-
-
பொருளாதார நெருக்கடியால் சிறிலங்கா அரசின் படை நடவடிக்கை பாதிப்பு: "லக்பிம" வார ஏடு பொருளாதாரப் பின்னடைவு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், மூத்த படை அதிகாரிகள் மீதான நம்பிக்கையீனம் போன்ற காரணிகள் மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: மடு தேவாலய திருவிழாவை முன்னிட்டு இரு தரப்பினரும் உத்தியோகபூர்வமற்ற போர் நிறுத்தத்திற்கு இணங்கியதனால் கடந்த வாரம் வன்னி களமுனை அமைதியாக இருந்தது. எனினும் இந்த அமைதி ஆபத்தானதாக இருக்கலாம். இரு தரப்பும் தாக்குதலுக்கு தயாராக உள்ளபோதும் யார் முதலில் தாக்குதலை ஆரம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ், முஸ்லிம்களை பொலிஸ் புலனாய்வு பிரிவில் இணைக்க செங்கலடியில் நேர்முக பரீட்சை - நியமனம் பெற்றதும் யாழ்பாணத்தின் யுத்த முனையில் வேலை. ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் இழைஞர்களை இனைத்து காவல்துறை நிர்வாக சேவையினை மேலும் உளவுத்துறை தொடர்பில் வினைத்திறன் மிக்கதாக மாற்றும் விதத்தில் காவல் திணைக்களம் நடவடிக்கைகள் பலவற்றினை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்புப் பிரதேச உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் பொருட்டு தமிழ் - முஸ்லிம் காவல் உத்தியோகத்தர்களை புதிதாக உளவுத்துறைப் பிரிவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்திலுள்ள இளைஞர், யுவதிகளை காவல் சேவையில் சேர்த்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கள் 20-08-2007 20:50 மணி தமிழீழம் மயூரன் தாய்லாந்திருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்காப் படையினரால் சித்திரவதைகளுக்கு உள்ளாகலாம் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் சிறீலங்கா விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா குற்றத் தடுப்பு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவேவேளை இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஸ்தாபனத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த போதும் இவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பபதாகத் …
-
- 0 replies
- 1.5k views
-
-
ஓமந்தை மேற்கு மோதலில் 8 புலிகள் பலி- ஊடக மத்திய நிலையம் நிஷாந்தி வவுனியா ஓமந்தை மேற்கே நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காயமடைந்த இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரகேசரி
-
- 2 replies
- 1.9k views
-
-
-
- 5 replies
- 1.9k views
-