ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
வெலிஓயா ரணபாபுர பகுதியில் சிறீலங்கா ஊர்காவல் படையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதலிலே இவர் கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு.
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் அப்பாவி பொதுமக்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரி கைதடிப்பகுதியில் உள்ள இருவரினதும் வீட்டுக்குள் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த ஆயுததாரிகள் இருவரையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். கைதடி தெற்கைச் சேர்ந்த முருகேசு ராஜ்கண்ணா (வயது 30), கைதடி வடக்கைச் சேர்ந்த சண்முகவடிவேல் சித்திரவடிவேல் (வயது 39) ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆவர். கொல்லப்பட்ட இருவரும் உறவினர்கள் ஆவர். யாழ். பொது மருத்துவமனையில் இருவரினது சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. -புதினம்.
-
- 0 replies
- 885 views
-
-
உத்தேச தேர்தல் முறை சீர்திருத்தம் - தெரிவுக் குழு யோசனையை சர்வகட்சிக் குழு நிராகரிப்பு [08 - August - 2007] [Font Size - A - A - A] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்வைத்த உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு யோசனைகளை முழுமையாக நிராகரித்துள்ள சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு, சிறுபான்மையினங்கள் உட்பட சகல சமூகங்களுக்கும் பாதிப்பில்லாத ஜேர்மன் தேர்தல் முறையை ஒத்த முறைமையினை இன நெருக்கடிக்கு தீர்வு காணும் தனது இறுதி யோசனைகளில் உள்ளடக்கியுள்ளது. சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவானது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையினை 50 சதவீதமும் பழைய தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையினை 50 சதவீதமும் கொண்டதாக புதிய யோசனைகளை முன்வைத்திருக்கிறது. இதற்கு குழுவில் அங்கம்…
-
- 0 replies
- 846 views
-
-
வவுனியாவில் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் [புதன்கிழமை, 8 ஓகஸ்ட் 2007, 18:21 ஈழம்] [தாயக செய்தியாளர்] வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது இன்று கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வவுனியா தோணிக்கல்லில் இன்று புதன்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இராணுவத்தினர் தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியாவிலிருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இராணுவத்தினர் தமது தரப்பில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் தாக்குதல்களில் இராணுவத்தினர் தமது இழப்புக்களை மறைத்து வருவது குறிப்பிடத்த…
-
- 0 replies
- 847 views
-
-
யாழ் தபாற் கந்தோருக்கு முன்னால் புதிய காவல் நிலையம் Written by Pandaravanniyan - Aug 08, 2007 at 04:53 PM யாழ்ப்பாணம் முற்ற வெளியில் அமைந்துள்ள புதிய தபாற் கந்தோருக்கு முன்னால் இராணுவத்தினர் புதிய காவலரண் ஒன்றை சீமேந்தினால் அமைத்து வருகின்றார்கள். தற்போது குறிப்பிட்ட முற்ற வெளியில் இருந்து தனியார் சிற்றூர்திகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் என்பன தமது சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் . ஏற்கனவே இந்தப் பகுதிக்கு வாகனங்களின் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினரினதும் இராணுவப் புலனாய்வாளர்களினதும் ஒட்டுக் குழுக்களினதும் நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய நிலமையில் தபாற் கநதோர் மற்றும் வாகனத்தரிப்பிடம் மீன் சந்தை என்பவ…
-
- 0 replies
- 754 views
-
-
விடுதலைப் புலிகளிள் அமைப்பால் அரசை யுத்தத்தின் மூலம் வெற்றி கொள்ள முடியாது என்பததை ஜனாதிபதி மஹிந்தவின் அரசு உணர்த்தி விட்டது. எமது நாடடிற்கு மட்டுமன்றி சர்வதேசங்களுக்கும் வெளிப்படுத்திவிட்டது. ஆனால், அவ்வமைப்பை முற்றாக அழித்துவிட அரசால் இயலாது என்பதை அவர்களின் 'கொரில்லா" அணுகு முறை நிரூபித்திருக்கிறது. இவ்வாறு கூறினார் சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா. கொழும்பு ஹோர்ட்ன் பிரதேச சுமித்திரோ தொழில்பயிற்சி மண்டபத்தில் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய சமாதனப் பேரவையின் இணைப்பாளர் எஸ்.பி. நாதனின் தலைமையில், இச் செயலமர்வு நடைபெற்றது. நாடாளாவிய ரீதியில் தேசிய சமாதானப் பேரவையின் கிளை ம…
-
- 3 replies
- 1.6k views
-
-
மேல் மாகாண சபையில் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப்பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியுள்ளது. ஜே.வி.பி.யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. வாழ்க்கைச்செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியே மேல் மாகாண சபையில் இந்த நம்பிக்கையில்லாப்பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தது. ஐக்கிய தேசியக் கட்சி குழுவின் சார்பில் மேல் மாகாண சபை அமைப்பாளர் லக்ஷ்மன் அபேரத்ன நம்பிக்கையில்லாப்பிரேரணையை தாக்கல் செய்தார். விவாதத்தையடுத்து சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரேரணைக்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இடதுசாரி உ…
-
- 0 replies
- 778 views
-
-
கொழும்பு மாநகர சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்படவுள்ளதாகவும் நம்பகரமான மாநகர சபை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. இது விடயம் தொடர்பாக மேலும் அறியவருவதாவது, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களால் பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் கொழும்பு மாநகர சபை நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் நாணயக்கார தலைமையில் தனி நபர் குழுவொன்று அமைக்கப்பட்டு ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்றதோடு நாளை 9 ஆம்திகதி இவ்விசாரணைக்குமுன் மாநகர ஆணையாளர் டாக்டர் ஜயந்த லியனகே ஆஜராகி சாட்சியமளிக்கவுள்ளார். இந்தச் சூழ்நிலையிலேயே அவசரகாலச் சட்டத்த…
-
- 0 replies
- 933 views
-
-
திருகோணமைலையில் கடற்படையினரால் ஆயுதங்கள் மீட்பு வீரகேசரி இணையம் திருகோணமலை சாம்பல் தீவில் கடற்படையினர் நேற்று பிற்பகல் மற்றும் வெடி பொருட்களை கைப்பற்றுயுள்ளனர்.பொதுமக்கள
-
- 0 replies
- 1.7k views
-
-
07.08.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவன்
-
- 0 replies
- 1.5k views
-
-
Posted on : Wed Aug 8 8:05:13 EEST 2007 எம்.பிக்களை லஞ்சம் கொடுத்து வாங்கி ஆட்சியைக் கவிழ்ப்பதற்குச் சதி! பின்னணியில் புலி ஆதரவாளராம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் தரப்புக்கு மாறி அமைச்சர்களான ஐ.தே.க. ஜனநாயக அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல கோடி ரூபாவை லஞ்சமாகக் கொடுத்து, அவர்களை விலைக்கு வாங்கி, மீண்டும் அணி மாறவைத்து, அதன்மூலம் இந்த ஆட்சியைக் கவிழ்க்கும் சதி சூழ்ச்சி திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுகின்றது. இப்படி நாடாளுமன்றில் நேற்று அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டார் மேற்படி ஐ.தே.க. ஜனநாயக அணியின் தலைவரும் பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சருமான கரு ஜயசூரிய. இந்தச் சதித் திட்டத்தின் சூத்திரதாரியாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான சார்ள்ஸ் ஞானக்கோ…
-
- 1 reply
- 1k views
-
-
Posted on : 2007-08-08 குற்றச்சாட்டுக்கு இலக்கானவரே விசாரணையையும் நடத்தும் நியாயம் இலங்கையில், இலங்கைஅரசுத் தரப்பின் ஆசீர்வாதத் தோடு அரசுப் படைகளும், அதற்கு ஒட்டுறவாகச் செயற்படும் துணைப்படையான கருணா குழுவும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மேற்கொள்ளக்கூடிய மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களைக் கண்காணித்து, விசாரித்து, அறிக்கையிடக் கூடிய ஆணையோடு ஐ.நாவின் கண்காணிப் புக்குழு ஒன்றை இங்கு நிறுவவேண்டும். அத்தகைய செயற் பாட்டை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட இவ்விடயத்தில் சிரத்தையுள்ள அரசுகளும் மற்றும் இலங்கை அரசுத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும். நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அவதானிப்பு மையம் (Human Rights Watch) என்ற அமைப்பு இலங்கை நிலைவரம் தொடர்பான தனத…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியாவில் இன்று நன்பகல் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில், இராணுவத்தினரால் பின்தொடரப்பட்ட ஒரு உந்துருளியில் சென்ற ஆயுததாரி தன்னைத்தானே வெடிக்கவைத்துள்ளதாக இராணுவ இணையத்தளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்கள் தெரியவில்லை.
-
- 6 replies
- 2.7k views
-
-
"சுயநிர்ணய உரிமையும், தமிழீழத் தனியரசும்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தைகள், கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் யாவுமே இன்று பயனற்றுப் போயுள்ளன. முன்னைய சிங்கள அரசுகள் போன்றே மகிந்த ராஜபக்சவின் தற்போதைய அரசும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் போக்குவரத்துத்தடை, பொருளாதாரத்தடை, உணவு, மருந்துத்தடை, மீன்பிடித்தடை, கொலை, ஆட்கடத்தல் என்று தமிழின அழிப்பைச் சிங்கள அரசு தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இத்தகைய நிலையில், தமிழீழத் தனியரசு ஒன்றுதான் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையைத் தீர்க்க கூடியது என்கின்ற யதார்த்தம் நிரூபணமாகி…
-
- 1 reply
- 1.4k views
-
-
புதன் 08-08-2007 06:36 மணி தமிழீழம் [மயூரன்] ஜ.தே.க அதிருப்திக் குழுவினரை இணைக்கும் முயற்சியில் தமிழ் வர்த்தகர் சார்ள்ஸ ஞானக்கோன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி மாற்றுக் குழுவின் உறுப்பினர்களை மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைப்பதற்கு முயறச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவின் தலைவரும் பொது விவகார உள் நாட்டு அலுவல்கள் அமைச்சருமான கரு ஜெயசூரிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசாங்கதில் இருந்து விலகி ஐக்கிய தேசிய கட்சியில் இணையும் ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒரு கோடி ரூபா வழங்குவதாக பிரபல தமிழ் வர்த்தகரான சாள்ஸ் ஞானக்கோன் தமது கட்சியின் உறுப்பினர்கள் சிலரிடம் பே…
-
- 0 replies
- 785 views
-
-
புதன் 08-08-2007 06:43 மணி தமிழீழம் [சிறீதரன்] ஜ.நா விசேட பிரதிநிதிக்கு யாழ் அவலத்தை எடுத்துக் கூறமுடியவில்லை - மக்கள் பிரதிநிதிகள் கவலை நேற்று செவ்வாய்கிழமை யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் துணை ஆயுதக் குழுவின் தலைவரும் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புகளின் போது யாழ் குடாநாட்டில் இயல்பு நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் ஜோன் ஹோல்சுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதன் பின்னர் படை அதிகாரிகள் மற்றும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவின் தலைவர் ஆகியோருடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும…
-
- 0 replies
- 792 views
-
-
இலங்கைக்கான நிதியுதவி யுத்தத்துக்கே பயன்படுத்தப்படுமென கடும் எச்சரிக்கை [07 - August - 2007] * நிறுத்துமாறு ஜப்பானிடம் அவுஸ்திரேலிய அமைப்பு வலியுறுத்தல் இலங்கைக்கான நிதி உதவிகள் யாவும் தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் யுத்தத்திற்கே பயன்படுமென்பதால், இலங்கைக்கான நிதி உதவியை நிறுத்துமாறு நிராதரவானவர்களின் மனித உரிமைகளுக்கான அவுஸ்திரேலிய அமைப்பு ஜப்பான் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்நாட்டு அரசிடம் முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு இந்த அமைப்பு அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. `இலங்கையில் தமிழினப் படுகொலையும் மனித உரிமை மீறல்களும்' எனும் தலைப்பில் அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப…
-
- 5 replies
- 2.1k views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரின் கடத்தலுடன் இராணுவத்தினருக்கு தொடர்பு: அனைத்துலக மன்னிப்புச் சபை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போது கடத்தப்பட்டிருந்தார். அவர் கடத்தப்பட்ட பகுதி இராணுவத்தின் பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியாகும். எனவே கடத்தல்காரர்கள் இராணுவத்தினருடன் தொடர்புள்ளவர்களாக இருக்கலாம் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள மாதாந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கையில் பலவந்தமாக கடத்தப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் தொடர்பான 5,749 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிங்கள மக்களை குடியேற்றி இன மோதல்களை உருவாக்க அரசு திட்டம் : முஸ்லிம் கார்டியன் கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னர் அங்குள்ள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுவதாக முஸ்லிம் கார்டியன்’ எனும் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினர் தமக்கு ஆதரவான பத்திரிகைகளை முஸ்லிம்களிடம் பலவந்தமாக விற்பனை செய்வதாக அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கப் படைகளால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டப்பட்…
-
- 5 replies
- 1.6k views
-
-
"திருட்டு அரசன்' எனும் பெயரில் ரணில் குறித்து புத்தகம் வீரகேசரி நாளேடு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் வைத்துக் கொண்டு ஆட்டுவிக்கும் ஹேமந்த நிஷாந்த யார் அவரது பின்னணி என்ன? என்பது தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக எச்சரிக்கும் ஜாதிக ஹெல உறுமய திருட்டு அரசன் என்ற பெயரில் ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக மிக விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தது. நுகேகொடையிலுள்ள ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அதன் சட்ட ஆலோசகர் உதய கம்மான்பில இதனைத் தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமயத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மோதானந்த தேரரின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
பங்களாதேஷ் - இலங்கை! -சோலை நமது அண்டை நாடான பங்களா தேஷில், ஒரு பொம்மை அரசை முன்னிறுத்தி, ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அந்த ராணுவம், ஆட்சி அதிகார ருசி கண்டது. எனவே, எந்த ஜனநாயக அரசும் நீடித்து நிலைத்திருப்பதை அந்த ராணுவம் அனுமதித்ததில்லை. பாகிஸ்தானின் ஓர் அங்கமாக கிழக்குப் பாகிஸ்தான் இருந்தது. மொழியால், கலாசாரத்தால் மேற்குப் பாகிஸ்தானோடு எந்த வகையிலும் அதனால் இணங்கிப் போக முடியவில்லை. வங்க மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கிழக்குப் பாகிஸ்தான் மக்களால் உருது மொழியின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவே பங்களாதேஷ் என்ற நாடு உருவானதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இன்று இலங்கையில் ஈழம் என்ன நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில்தான் அன்றைய கிழக்குப் பாகிஸ்த…
-
- 3 replies
- 2.6k views
-
-
உலக நாடுகளால் கைவிடப்பட்ட மிக்-27 ரக வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்ததில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச பெருந்தொகையான மில்லியன் டொலரை கொள்ளையடித்தது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய ஆய்வு அறிக்கையை கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏடு வெளியிட்டுள்ளது. அதன் தமிழாக்கம்: கடந்த வருடம் ஒவ்வொன்றும் 2.462 மில்லியன் டொலர்கள் பெறுமதியான 4 மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகளை பாதுகாப்பு அமைச்சு கொள்வனவு செய்திருந்தது. எனினும் இந்த கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா மில்லியன் டொலர் பணத்தை ஊழல் செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூர…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐ.நா.ச. மனிதஉரிமைகள் கண்காணிப்புக்குழு ஒருபோதும் தேவையில்லை. - ரம்புக்வெல Written by Pandaravanniyan - Aug 07, 2007 at 08:51 PM ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கண்காணிப்புக்குழு ஒருபொழுதும் சிறிலங்காவுக்குத் தேவையில்லை என சிறிலங்காவின் பாதகாப்பு தொடர்பான அமைச்சரவைப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எமது முப்படையினர் மீதும் எமக்கு பூரணமான நம்பிக்கை உள்ளது. பெரும் கட்டுப்பாடுடனும், நன் நடவடிக்கையுடனுமே எமது முப்படையினரும் செயல்பட்டுவருகின்றனர். சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்று சேர்ந்தே தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் மீதும், இராணுவத்தினர் மீதும் அவதூறான பிழையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். …
-
- 0 replies
- 868 views
-
-
இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத பெண் புலிகள்: அல்ஜசீரா [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 15:13 ஈழம்] [பி.கெளரி] தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களது தாயக விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத வகையில் மகளிர் படையணிகளை பெற்றுள்ளனர் என்று அல்ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தொடர்பாக அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பத்தி எழுத்தாளர் கெய்லி கிரே கிளிநொச்சியில் இருந்து எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்: விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தமது நோக்கம் மற்றும் உரிமைகளுக்காக போராடுவதுடன், தமது படையணியையும் மேன்மைப்படுத்தியுள்ளார்கள். சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு இறுதித் தாக்குதலுக்கு தம்மை தயா…
-
- 12 replies
- 6.2k views
-
-
ஈ.பி.டி.பி.யிலிருந்து கி.பி. எனப்படும் முன்னைநாள் ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்தியகுழு உறுப்பினர் கிஸ்னபிள்ளை தப்பி ஓட்டம். ஜ செவ்வாய்கிழமைஇ 7 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ யாழ்ப்பாணத்திலிருந்து ஈ.பி.டி.பி. குழுவின் முக்கிய ஒட்டுக்குழு உறுப்பினரான கி.பி. தோழர் டக்ளசுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் தப்பியோடி இந்தியாவில் உள்ளார். (கி;.பி க்கு இந்தியாவில் வேறு மனைவிகள் பிள்ளைகள் உண்டு.) டக்ளசின் ஒட்டுக்குழு குண்டர்களின் அட்டகாசத்தை நேரில் பார்த்த கி.பி,. படுகொலை நடவடிக்கைகளை நிறுத்தும்படி சாள்ஸ், உதயன் ஆகியோருடன் வாய்த்தர்க்கப்பட்டுள்ளார். இதன்போது மதிப்பிழந்த கி.பி. தப்பியயோடி இந்தியாவில் உள்ள வரதராஜப்பெருமாளைச் சந்தித்து யாழ்ப்பாணத்தில் நடக்கும் படு கொலைகளின் பின்னணிபற்றிக் கூறியுள்ளா…
-
- 0 replies
- 2.2k views
-