Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்தவின் "புலிகளுடனான தேர்தல் உடன்பாடு" என்ன?: கொழும்பு ஊடகம் [ஞாயிற்றுக்கிழமை, 8 யூலை 2007, 08:06 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலின் போது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டதாக கூறப்படும் உடன்பாடு என்ன என்பது குறித்து கொழும்பு வார ஏடான சண்டே லீடர் தகவல் வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: இந்த உடன்பாட்டின் போது போலியான வீடமைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பல மில்லியன் ரூபாய்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாவிலாறு பகுதியில் 15,000 சிங்கள விவசாயிகள் நீரின்றி நெருக்கடிகளுக்கு உள்ளன போதும், பல நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் மூதூரில் இடம்பெயர்ந்த போதும், கடும் மோதல்களில் நூற்றுக்கணக்கான…

    • 1 reply
    • 998 views
  2. மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பிரதேச உயர்பாதுகாப்பு வலயத்தின் உள்நோக்கம் என்ன? 08.07.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு

  3. புலிகளை யார் ஆதரித்தாலும் என் சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்வேன்: அமைச்சர் மேர்வின் சில்வா. தமிழீழ விடுதலைப் புலிகளை யார் ஆதரித்தாலும் என்னுடைய சொந்தத் துப்பாக்கியாலேயே சுட்டுக்கொலை செய்வேன் என்று சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக மேர்வின் சில்வா தனது இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த நேசன்" வார ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்: 1989 ஆம் ஆண்டு ஜே.வி.பி. நடத்திய கலகத்தின் போது எனது குடும்பத்தினர் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். கடற்படையில் இருந்த என் இளைய சகோதரர், கர்ப்பிணி சகோதரி, அவரது கணவர் ஆகியோரை ஜே.வி.பி.தான் படுகொலை செய்தது. அவர்களின் இரண்டு பிள்ளைகளும் அநாதைகளாக்கப்பட்டனர். அந்தக்…

  4. கிழக்கில் முளைக்கும் புத்தர்களால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் கிழக்கில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை தோற்றுவிப்பதில் ஒரு சக்தி மிக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. காலத்துக்குக் காலம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஏதோவொரு திட்டத்தைத் தீட்டி கலவரங்களைத் தோற்றுவித்து வருகின்றனர். மிகக் கூடுதலாக சமய விவகாரத்தோடு சம்பந்தப்படுத்தியே பேரினவாத சிங்கள சக்திகள் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டிப்பார்க்கின்றன. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இந்த அவலம் இடையிடையே தலைதூக்கவே செய்கின்றது. பௌத்த இனவாதச் சக்தியொன்று அதிலும் தீவிரப் போக்குக் கொண்ட சக்தியொன்று சிங்கள சமூகத்தை முஸ்லிம் சமூகத்துக்கெதிராகத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றது. மு…

    • 1 reply
    • 1.2k views
  5. எரிக்சொல்ஹெய்ம் ஒரு திருடர் என்கிறது நோர்வே அமைப்பு [09 - July - 2007] இனப்பிரச்சினை சம்பந்தமாக ஷ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையேயான சமாதானப் பேச்சுக்களுக்கும் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கும் மத்தியஸ்த செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவரும் அமைச்சருமாகிய எரிக் சொல்ஹெய்ம் ஒரு திருடர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை "நேற்" (NAT) எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான நோர்வே நாட்டு அமைப்பு தெரிவித்து அவர்மீது குற்றஞ்சுமத்தியுள்ளது. மேற்படி, அதனுடைய அறிவிப்பு ஒன்றில் இவ்வாறு நோர்வே சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் பற்றி வெளிப்படுத்தியுள்ள தகவல்களுக்கேற்ப அவரை நோர்வே மொழியில் "நாமெயா" என்று குறிப்பி…

    • 2 replies
    • 2.7k views
  6. இலங்கை சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதில் நோர்வே மெத்தனப்போக்கு [09 - July - 2007] -அமந்த பெரேரா- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேசியவாத அரசாங்கத்திற்கும் தமிழினக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மத்தியஸ்த நாடு என்ற முக்கிய பாத்திரத்தை நோர்வே மீண்டும பொறுப்பேற்பதனால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள இவ்வேளையில், ஸ்கண்டினேவிய நாடான நோர்வேயின் அதிகாரிகள் இவ்விடயத்தில் மெத்தன போக்கை கடைபிடிக்கும் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏற்கனவே செய்திகள் வெளியானது போன்று, விசேட சமாதானத் தூதுவர் ஜொஹான் ஹன்ஸன் பவர் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்திற்கு செல்வதற்கானத் திட்டங்கள் எதுவும் இல்லை என்று நோர்வேத் தூதரகப் பேச்…

  7. கல்கிசையில் தேடுதல் 39 பேர் பொலிஸாரால் கைது [Monday July 09 2007 06:56:21 AM GMT] [pathma] கல்கிசை பிரதேசத்தில் நேற்று அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பhரிய தேடுதல் நடவடிக்கையின்போது தமது அடையாளத்தினை உறுதிப்படுத்த தவறிய 39 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பாரிய தேடுதல் நடவடிக்கை அதிகாலை 3.00 மணி முதல் காலைவரை இடம்பெற்றுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சிலர் தேசிய அடையாள அட்டையினை தம்வசம் த்திருக்கவில்லையெனவும் தெரியவருகின்றது.சந்தேகத்தின

  8. மக்கள் கவனத்தைத் திசை திருப்ப போரியல் போக்கை நாடும் அரசு இலங்கைத் தீவின் நிலைமை இன்று மிக மோசம். சகல துறைகளிலும் பெரு வீழ்ச்சி. பொருளாதாரம் படுத்துவிட்டது. வாழ்க்கைச் செலவு என்றுமில்லாதவாறு எகிறிவிட்டதால் மக்களின் அன்ற ?975; வாழ்க்கை அவலமாகி விட்டது. ஒரு புறம் விலைவாசி உயர்வு. மறுபுறம் ரூபாவின் பெறுமதி பெருவீழ்ச்சி. ஏற்றுமதி சரிந்து விட்டது. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன. அந் நிய முதலீட்டாளர்கள் மூடை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற ஆரம்பித்து விட்டனர். யுத்தச் செலவினம் எல்லை கடந்ததால் நாடு தடு மாறுகின்றது. தேசத்தின் வருமானமும் தேய்ந்துவிட்டது. வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர் கள் அங்கிருந்து வெளிநாட்டுப் பணத்தில் அனுப்பும் ஊதிய உழைப…

  9. சரிவை நோக்கிய திசையில் மகிந்த அரசு மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த நாள் தொடக்கம் தன் கட்சிக்குள்ளேயும், எதிர்க்கட்சிக் கட்சிகளுக்குள்ளேயும், தனக்கெதிராக செயற்பட முற்படுபவர்களை தந்திரோபாயமாக கையாண்டு வந்தார். ஜே.வி.பி. யினுடைய ஆதரவில் ஆட்சிக்கு வந்தாலும் பின்னர் ஜே.வி.பி உள்ளேயிருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்ததும், அதனை தந்திரமாக வெட்டிவிட்டார். நாடாளுமன்றத்தில் பலத்தை தக்கவைக்க ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்கினார். சிறுபான்மை கட்சிகளை விலைக்கு வாங்கினார். இதில் மூன்று இலாபங்கள் அவருக்கிருந்தன. ஒன்று ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவது, நாடாளுமன்றத்தில் தனக்கான பலத்தை தக்கவைப்பது, மற்றது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை பலவீனப்படுத்துவது. இவற…

  10. யப்பானின் நகர்வுகளும் அதற்கான பின்னணிகளும் -மனோகரன்- பொதுவாக யப்பானியப் பொருட்களுக்கு இலங்கை மக்களிடையே அதிக கவர்ச்சியுண்டு. யப்பானியப் பொருட்கள் தரமானவையென்ற நம்பிக்கை இந்தக் கவர்ச்சிக்கு அடிப்படையானவையாக இருக்கலாம். அடுத்தது கடந்த முப்பதாண்டுகால இலங்கைச் சந்தையை அதிகமும் யப்பானே வைத்திருந்ததும், ஏகபோகம் செய்ததும் இன்னொரு காரணமாக இருக்கலாம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னான காலத்தில் பிரித்தானிய மற்றும் ஐரோப்பியப் பொருட்கள்தான் இலங்கையில் அதிகமும் புழக்கத்திலிருந்தன. ஆனால், இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நிலைமைகளை தலைகீழாக மாற்றி விட்டன. அதிலும் ஐ.தே.க ஆட்சியில் மளமளவென்று யப்பான் இலங்கைச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியது. இதன் உ…

  11. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இந்திய அதிகார வர்க்க ஊடகங்களின் சதி! ஈழப்பிரச்சினையும் இந்தியாவும்... - கலைஞன் கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனைச் சந்தித்துள்ள நிலையில், இலங்கைக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்க வேண்டுமென இந்திய அதிகார வர்க்க ஊடகங்கள் மத்திய அரசை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இலங்கை தனக்கு தேவையான உதவிகளை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ பெறக்கூடாதென கண்டித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியாவே இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமென அறிவித்தார். இதையடுத்து இலங்கையிலும் இந்தியாவிலும் வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்து பின்ன…

  12. துணை இராணுவக்குழுவின் சிறார் படைச்சேர்ப்பு: ஐ.நா. செயலாளரிடம் அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் சிறார் படைச்சேர்ப்பு தொடர்பான புதிய அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகமான பான் கீ மூனுக்கு அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறார் படைச்சேர்ப்பு தொடர்பாக கருணா குழுவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் பாதுகாப்பு அமைப்பான யுனிசெஃப்பிற்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் யுனிசெஃப்பின் கொழும்புப் பகுதியின் பாதுகாப்புத் தலைவரான அன்டி புறூக்ஸ் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் சிறார்களின் உரிமைகளுக்கு எதிரா…

  13. கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் குண்டு வெடிப்பு? கட்டுநாயக்கா விமானப்படை தளத்தில் சற்றுமுன்பு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக அறிந்தேன். இது தாக்குதலா அல்லது விபத்தா என்று தெரியவில்லை.

    • 7 replies
    • 2.9k views
  14. சர்வதேசத்தின் அரசியல் முற்றுகைக்குள் மகிந்த அரசு சிக்குகின்றதா! ஒன்றரை வருட மகிந்தரின் ஆட்சியில் சிங்கள அரசு நெருக்கடிகள் பலவற்றை எதிர்கொண்டுள்ளது. சர்வதேசத்தில் இருந்துவரும் அரசியல் நெருக்கடி களாலும் - உள் முரண்பாட்டால் எழுந்த அரசியல் சிக்கல்களாலும் மகிந்த அரசு தடுமாறுகின்றது. தமிழருக்கு எதிரான இனக்குரோதச் செயற்பாடுகள் என்ற நிலையைத் தாண்டி வெளிநாடுகள் மீது வெறுப்புணர்வு காட்டல் என்ற கட்டத்திற்கு மகிந்த அரசுசென்றுள்ளது. இதனால், சர்வதேச நாடுகள் கொழும்பு அரசாங்கம் மீது சீற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் எல்லை கடந்துள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகிற்குக் கூறிக்கொண்டு தமிழரை இன அழிப்புச் செய்…

  15. மக்களை ஏமாற்றுவதற்கே யுத்தம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கே பேச்சு வீரகேசரி நாளேடு சமாதான செயற்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் இரட்டைவேடம் போட்டுக்கொண்டிருக்காமல் பேச்சுவார்த்தையா ? அல்லது யுத்தமா ? என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும். எதிர்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்குமாயின் தற்போது ஏன் யுத்தம் செய்யப்படவேண்டும் ? என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான தகவல்கள் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அரசாங்கம் மக்களை ஏமாற…

  16. ஞாயிறு 08-07-2007 22:40 மணி தமிழீழம் [செந்தமிழ்] கருணா - ஈ.பி.டி.பி குழுவிற்கு இடையில் சிறீலங்கா இராணும் சமரசம் கிழக்கில் இயங்கி வரும் ஸ்ரீலங்கா அரச துணை ஆயுதக் குழுக்களான கருணா குழுவிற்கும் ஈ.பி.டி.பியிற்கும் இடையில் தோன்றியுள்ள முறுகல் நிலையை சமரசம் செய்வதில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபட்டு வருகின்றது கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.டி.பி அமைப்பு செயல்படுவதை கருணா குழு தடை செய்துள்ளதுடன் அந்த குழுவின் உறுப்பினர்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது இந்த இரு துணை ஆயுதக் குழுக்களுக்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதலில் கருணா குழுவின் உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் இதனை அடுத்து ஈ.பி.டி.பியினர் மீது பெருமெடுப்பில் தாக்குதல் நடத்துவதற…

    • 1 reply
    • 1.4k views
  17. இலங்கை அரசு ஒரே நேரத்தில் பலமுனைகளில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் மீது மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளின் மீதும் அது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது சிங்கள அரசின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது ‘சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு’ (IIGEP) என்ற அமைப்பாகும். இந்தக் குழு இலங்கை அரசால் அமைக்கப்பட்டதுதான். இதன் தலைவராக இருப்பவர் இந்தியாவின் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி ஆவார். ஆள் கடத்தல், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இலங்கை ராணுவத்தின் மீதும், போலீஸ் மீதும் கூறப்பட்டு வருகின்றன. அப்படி கூறப்பட்டவற்றில் நவம்பர் 2005-&க்குப் பிறகு நடந்த பதினாறு சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரச…

  18. Posted on : Sun Jul 8 7:45:31 EEST 2007 அரசு, புலிகளின் இப்போதைய போக்குத் தொடரின் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேமாட்டாது கண்காணிப்பு குழு எச்சரிக்கிறது இப்படி அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் இப் போதைய போக்கும் அணுகு முறையும் தொடருமானால் இலங் கையில் போருக்கு முடிவே வரமாட்டாது. அதனைப் என்றைக் கும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இவ்வாறு எச்சரித்துள்ளது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு. எமக்கு மீண்டும் மீண்டும் அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்கு மாறாக இரண்டு தரப்புகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறிவரு கின்றன ஆகையால் இலங்கையில் 30 வருடங்களாக நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தி யம் அருகிவருகிறது இரண்டு தரப்புகளுக்கும் இட…

    • 10 replies
    • 2.3k views
  19. இலங்கைதீவின் இனப்பிரச்சினையில் தேர்வுகள் அற்றநிலையில் பன்னாட்டு சமூகம் -புரட்சி (தாயகம்)- சிங்கள அரசுகள் காலத்திற்கு காலம்;, தமது தேவைக்கேற்றபடி அமைதித் தீர்விலே மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாகவும் கௌதம புத்தரின் அகிம்சை, சமாதானம், நல்லிணக்கம் போன்ற அன்புவழிக் கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களில் தாம் முதன்மையானவர்களாகவும் உலகத்திற்கு நாடகமாடி வருவது வழமையான ஒன்றாகும். அதாவது தமக்கெதிராக பன்னாட்டு சமூகமோ அல்லது பிராந்திய வல்லரசுகளோ இனப்பிரச்சினைக்கு ஒரு நீதியான நியாயமான தீர்வினை முன்வைக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளின் போதும், உள்நாட்டிலே அரசியல் சிக்கல்கள் கொந்தளிப்புக்கள் ஏற்படும்போதும் அல்லது பாரிய பின்னடைவுகளை படைத்துறை…

  20. ஆள் இல்லா ஊருக்குப் பாதை போடும் ஜப்பான் ஏ-9 பாதையை வழிமறிக்கும் மஹிந்தர் -சி.இதயச்சந்திரன்- சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை அழுத்தம் கொடுக்காதவாறு இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்தில், மிக நேர்த்தியான காய் நகர்த்தலை ஜப்பானிய அரசு மேற்கொண்டுள்ளது. பொருளாதார உதவி வழங்கும் நிரந்தரமான நட்பு நாடென்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. நிதி உதவிகள் வழங்குவதை நிறுத்திக் கொண்டால் வேகமாக வளர்ந்து வரும் இந்திய முதலீடு இலங்கையில் அதிகரித்து, தனது இல்மனைட் வியாபாரத்தில் மண் விழுந்து விடுமோ என்கிற கரிசனையோடு கூடிய பதற்றம்தான். ஆயுத உதவிகளோடு உளவுத்தகவல் பரிமாற்றம் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ளும் இந்தியாவும், காலியில் துறைமுகம் நிர்மாணிப்பதோடு ஆயுத தளபாடங்களை கடனடிப்படையில் வழங…

  21.  ஞாயிறு 08-07-2007 02:41 மணி தமிழீழம் [சிறீதரன்] இலங்கை பௌத்த தேசம் என்பதை உறுதி செய்யும் காலம் நெருங்கி வருகிறது - ஜாதிக ஹெல உருமய இலங்கை பௌத்த தேசம் என்பதை உறுதி செய்யும் காலம் நெருங்கி வருவதாக ஜாதிக ஹெல உருமய தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இருக்கும் போது இலங்கையின் ஏனைய பாகங்களை போன்று பௌத்த அடையாளங்களை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த முடியாதிருந்ததாகவும் எனினும் தற்போது படையினரின் கடுமையான முயற்சியால் வடக்கு கிழக்கை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் கருத்து வெளியிட்டுள்ளார் கொழும்பில் உள்ள வானொலி ஒன்றிற்கு வழங்கி…

  22. நிதி உதவி கோரி மிலிந்த மொறகொட அமெரிக்கா பயணம் [ஞாயிற்றுக்கிழமை, 8 யூலை 2007, 07:03 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்காவின் உல்லாசத்துறை அமைச்சர் மிலிந்த மொறகொட அமெரிக்காவுக்கு நேற்று சனிக்கிழமை பயணம் மேற்கொண்டார். உலக வங்கியின் புதிய தலைவரான றொபர்ட் பி.சொய்லிக் மற்றும் அமெரிக்காவின் அனைத்துலக அபிவிருத்தி சபையான யு.எஸ்.எய்ட்டின் புதிய தலைவரான ஹெனிரித்த எச்.ஃபோரே ஆகியோரை மிலிந்த மொறகொட சந்திக்க உள்ளார். உலக வங்கி மற்றும் அமெரிக்காவின் உதவி வழங்கும் சபையின் புதிய தலைவர்கள் இருவருமே தமக்கு நீண்ட நாள் நண்பர்கள் என்றும் அவர்களைச் சந்தித்து சிறிலங்காவின் நிலைமைகளை விளக்க உள்ளதாகவும் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உ…

  23. Posted on : 2007-07-08 நெருப்பாறுகளை நீந்தி கடக்க வேண்டிய ஊடகங்கள் இலங்கையில் ஊடகவியலாளர்களின் மோசமான நிலைமை குறித்து அப்பட்டமாக அம்பலப்படுத்தி யிருக்கின்றார் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பா ளர் சுனந்த தேசப்பிரிய. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். * ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் புலிகள் தரப்பிலிருந்தும் பார்க்க அரசுத் தரப்பு மற்றும் அரசுப் படைகள் தரப்பிலிருந்தே பெரும்பாலும் வருகின்றன. * அரசையும் படை நடவடிக்கைகளையும் விமர்சிக்கும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு "துரோகி' பட்டம் குத்தப்படுகின்றது. * அரச படையினர் ஊடகவியலாளர்களைத் தாக்கும் போது அரச சார்பு …

  24. குடும்பிமலைப் பகுதியில் கடும் சமர்- 6 இராணுவத்தினர் பலி: பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க [வெள்ளிக்கிழமை, 6 யூலை 2007, 14:53 ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் குடும்பிமலையை (தொப்பிக்கல) நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலை மேற்கொண்ட சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேஐர் தர அதிகாரி ஒருவர் உட்பட 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: இன்று காலை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. முன்னேறிச்செல்ல முயன…

  25. ஞாயிறு 08-07-2007 03:49 மணி தமிழீழம் [சிறீதரன்] மகிந்த ரணிலிடம் ரூ2 பில்லியம் பணம் நட்டஈடுடாக கோரிக்கை சிறீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ரூ2 பில்லியன் ஐ கேகாலையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறீலங்கா ஜனாதிபதியை குறைவாக பேசியமைக்கு நட்டஈடாக செலுத்துமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளார். மகிந்தவின் சட்டத்தரணியின் கருத்துப்படி எதிர்கட்சிதலைவரின் கருத்துக்கள் லங்காதீப பத்திரிகையில் பிரசுரமாகியிருந்ததாகவும் அப்பத்திரிகை மீது ரூபா 2 பில்லியம் பணம் நட்டஈடாக வழங்கமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதுதொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி தலைவரின் சட்டத்தரணி கருத்துத்தெரிவிக்கையில் அக்கடிதத்திற்கு தகுந்த பதில் அளிக்கப்படும் எனத்தெரிவித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.