ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142786 topics in this forum
-
செவ்வாய் 05-06-2007 19:08 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தலைமையிலான துதுவராலய அதிகாரிகள் இன்று மட்டக்களப்புக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சிறீலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுடன் சென்ற இவர்கள் மட்டக்களப்பின் அரச படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டக்களப்பு நிலவரங்கள் மற்றும் யுத்த முன்னெடுப்புக்களால் இடம்பெயர்ந்த மக்களை மீளவும் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவே மட்டக்களப்பு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு
-
- 0 replies
- 751 views
-
-
செவ்வாய் 05-06-2007 18:42 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் பல்கலைக்கழகத்தில் குருதிக்கொடை நிகழ்வு சிறீலங்காப் படையினரால் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவாக, யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று குருதிக்கொடை நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் குருதிக்கொடை நிகழ்வில் 90ற்கும் மேற்பட்ட மாணவர்களும், பேராசிரியர்களும், பல்கலைக்கழக பணியாளர்களும் கலந்துகொண்டனர். சிறீலங்காப் படையினரின் நேரடி அச்சுறுத்தல் மத்தியிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. pathivu
-
- 1 reply
- 1k views
-
-
சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க யசூசி அகாசி சிறீலங்கா சென்றடைந்துள்ளார். சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் ஜப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறீலங்கா சென்றடைந்துள்ளார். சமாதான முயற்சி, மற்றும் சிறீலங்காவின் தற்போதைய நிலை பற்றி யசூசி அகாசி சிறீலங்கா அரசுடன் பேச்சு நடத்துவார் என, கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யசூசி அகாசி, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பலரைச் சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பைக் காரணம்காட்டி அகாசியின் கிளிநொச்சிக்கான பயணம் சிறீலங்கா அரசால் தடுத்து நிறுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வே தூதுவர் உட்பட வெளி…
-
- 1 reply
- 891 views
-
-
செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் படுகொலை: ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கண்டனம். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு பணியாளர்கள் இருவர் கொழும்பில் கடத்திக் கொலை செய்யப்பட்டதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி-மூன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தப் படுகொலை பற்றிய விசாரணை உடனடியாக உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும், பான்-கி-மூன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அழைப்பு விடுத்திருக்கின்றார். கொல்லப்பட்ட பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ள பான்-கி-மூன், பொதுமக்கள், மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பு பற்றிய தனது கரிசனையை வெளியிட்டுள்ளார். அத்துடன், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம்…
-
- 2 replies
- 815 views
-
-
கொழும்பை 3 வலயங்களாக பிரித்து புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல் [05 - June - 2007] கே.பி.மோகன் கொழும்பு நகரில் நேற்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீதிகளிலும் அருகருகே கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு இராணுவத்தினரும் சந்திகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ள புலிகள் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்பதாக கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே கடும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக படை அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிரஜைகள், பாதுகாப்புக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகளின் விழிப்புக் குழுக்கள், …
-
- 3 replies
- 1.8k views
-
-
``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும். அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும். இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல…
-
- 7 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பு அம்பலாந்துறையில் கிளைமோர் தாக்குதல்: படையினர் ஒருவர் பலி! மட்டக்களப்பில் சிறீலங்காப் விசேட அதிரடிப் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணியளவில் மட்டக்களப்பு அம்பலாந்துறையில் வீதியால் சென்ற விசேட அதிரடிப் கால்ரோந்து அணியினர் மீது இலக்கு வைத்து வீதியோர கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் சிறீலங்கா விசேட அதிரடிப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -Pathivu-
-
- 0 replies
- 806 views
-
-
வன்னிப் பகுதியில் இருவேறு வான்வெளித் தாக்குதல்கள். வன்னிப் பகுதியில் சிறீலங்கா விமானப் படையினர் இருவேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 9.20 மணிக்கு மாங்குளப் பகுதி வான்பரப்புக்குள் நுழைந்த இரு கிபிர் விமானங்கள் அங்கு தாக்தலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில் வணிக நிலையம் ஒன்று சேதமடைந்துள்ளது. அத்துடன் மாங்குளம் மாகாவித்தியாலயம் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது விமானக்குண்டின் சிதறுதுண்டுகள் வீழ்ந்துள்ளன. இதேபோன்று இன்று பிற்பகல் 1.00 மணியளவில் வன்னியில் பகுதி வான்பரப்பினுள் நுழைந்து இரு மிக் 27 யுத்த விமானங்கள் கிளிநொச்சி நகரப் பகுதியில் பேரிரச்சல் சத்தத்துடன் வட்டமிட்டதோடு கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியில் நான்கு தடவைகள் அங்கு தாக்குதலை நடத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தில் ஆயத்தமின்றி பேசுவதற்கு தயாரென கூறினால் போதுமா? [05 - June - 2007] * கம்போடியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயம் இது மனிதனால் மனிதனுக்கு இழைத்தாகிய ஈனம். இன்று எம்முன் உள்ளது. ஒரு அழிந்து போன நாடு.நாம் மறக்க முடியாத சில பாரதூரமான படிப்பினைகள் மற்றும் மிக முக்கியமானதொரு கேள்வி; சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து செல்லும் கட்டத்தினை அடைந்து விட்டார்களா? இது (1958 இனக்கலவரத்தில் தமிழர் ஆளாக்கப்பட்ட அட்டூழியங்கள் முதலியவற்றினை சித்திரித்து அன்றைய முன்னணி பத்திரிகையாளரும் சண்டே ஒப்சேவர், பத்திரிகை ஆசிரியருமாகிய ராசி. வித்தாச்சி எமெஜன்சி 58 என மகுடமிட்டு எழுதிய நூலிலிருந்து எட…
-
- 1 reply
- 800 views
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்த ஒருவரை கைது செய்த அரசு ஏனைய மூவரையும் என்ன செய்யப் போகின்றது [05 - June - 2007] * ரணில் கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ஷ சார்பில் பெருந்தொகை பணத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதில் இடைத் தரகர்களாக செயற்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள அரசு ஏனைய மூவர் தொடர்பில் என்ன செய்யப் போகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெ…
-
- 0 replies
- 2.2k views
-
-
தலைமறைவான புலிகளின் பெண் முகவர் டோக்கியோ "சிறீலங்கா வாரம்" நிகழ்வில் [05 - June - 2007] புலிகள் இயக்கத்தின் சர்வதேச ஊடக வலையமைப்புகள் மூலமான பிரசார நடவடிக்கைகளில் பங்குபற்றி வந்த பிரபல பெண் அறிவிப்பாளர் ஒருவரை அண்மையில் டோக்கியோவில் நிகழ்ந்த "சிறீலங்கா வாரம்" விழாவில் அறிவிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏற்பாடு இறுதி நேரத்தில் "சிறீலங்கா வாரம்" விழா நிகழ்ச்சி நிரலிலிருந்து தூதரக அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. குறித்த புலிகள் அமைப்பின் பெண் பிரசார அறிவிப்பாளர் சில வருடங்களுக்கு முன் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் எனவும் அவர் அதன் பின்னர் தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரால் புலிகளின் முகவர…
-
- 0 replies
- 2k views
-
-
அரசாங்கத்தின் இரட்டைவேட செயற்பாட்டினால் நாடு பலவீனமடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது வீரகேசரி நாளேடு பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு செயற்பாட்டில் அரசாங்கம் இரட்டைவேடம்போட்டுக்கொண்டிர
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : Tue Jun 5 7:48:41 EEST 2007 அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கொலை ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அரசுக்கும் வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியா ளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது ஜனாதிபதி செயலகம். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும், அவரது அரசுக்கும், ஒட்டுமொத்தத்தில் இலங்கைக்கும் மனித உரிமைகள் தொடர்பில் வெளி நாடுகளில் …
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : Tue Jun 5 7:49:45 EEST 2007 தொண்டர் நிறுவனங்களின் பணிகள் மட்டக்களப்பில் முடங்கும் அபாயம்! செஞ்சிலுவைப் பணியாளர்கள் இருவரின் படுகொலைகளால் ஏனையோர் மத்தியில் அச்சம் போரினாலும், ஆழிப்பேரலையினாலும் பெருமளவில் பாதிக்கப்பட்டு மனிதாபிமானப் பணிகள் பெரும் அளவில் தேவைப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் முடங்கிப்போகும் அபாய நிலை தோன்றியுள்ளது. மட்டக்களப்புச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கொழும்பில் கடத்தப்பட்டுப் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் வெளிநாட்டு, உள்நாட்டுத் தொண்டர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் மத்தியில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது. அரசசார்பற்ற மற்றும் தொண்டர் நிறு வனங்களில் பணியாற…
-
- 0 replies
- 684 views
-
-
Date: 2007-06-05 அளவுக்கு மீறிய நம்பிக்கை! இலங்கையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய தரப்புகளில் ஒன்றான இலங்கை அரசுப் பக்கத்திலிருந்து அந்த யுத்த நிறுத்தம் குறித்து வெளியிடப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் மக்களைக் குழப்பமடைய வைப்பனவாக இருக்கின்றன. ""போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டிய காலம் கனிந்துவிட்டது. ஒப்பந்தம் கைச்சாத்தான காலத் துக்கும் இன்றைய தள கள நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதா என்பது குறித்து அடுத்த வாரத்தில் விசேட கலந் துரையாடல்களை அரசு நடத்த உள்ளது'' என்று அரசின் சார்பில் அதன் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் அழைத்திருக்க வேண்டும்: மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆழிப்பேரலை அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசெல்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதிநிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக்குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் த…
-
- 0 replies
- 779 views
-
-
ஞாயிறு 03-06-2007 06:15 மணி தமிழீழம் [கோபி] துணைவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.? கடந்த டிசம்பர் மாதம் 15ம் திகதி கடத்தப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராதந்திர வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. துணைவேந்தர் வெலிக்கந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரின் சடலம் வெலிங்கந்தைப் பகுதியில் மறைந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. « முன்னைய பக்கம்
-
- 11 replies
- 3.1k views
-
-
சிறீலங்காவில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - பிரித்தானியா ஆழ்ந்த கவலை. சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமை மிகவும் மோசமடைந்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக பிரித்தானியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் நேற்று கொழும்பில் ஊடகர்களைச் சந்தித்து பேசும்போது இந்தக் கவலையை வெளியிட்டார். இலங்கையின் உள்நாட்டுப் போரும், வன்முறைகளும் அமைதியை சீர்குலைத்து வருவதாகக் கூறிய சில்கொட், அமைதிப் பேச்சு மூலமான தீர்வுக்கான வாய்ப்புக்கள் குறைவடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இரத்மலானையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் 7 பொதுமக்கள் பலியானமை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இரண்டு பணியாள…
-
- 2 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 05-06-2007 03:12 மணி தமிழீழம் [மயூரன்] காங்கேசன்துறை துறைமுகம் இந்தியாவால் புனரமைப்பு : பாக்குநீரிணையில் கூட்டுரோந்து திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையில் இந்திய அரசாங்கம் யாழ்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்யவுள்ளதாகவும் பாக்கு நீரிணையில் சிறீலங்கா அரசாங்கத்துடன் கூட்டாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரியவருகிறது. காங்கேசன்துறை துறைமுகத்தை முழுமையான வசதிகளுடன் யாழ்குடாநாட்டுக்கான விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் இந்தியாவில் இருந்து கூட விநியோகத்தை மேற்கொள்ளக்கூடியதாகவும் அமையவுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் போகல்லாகம தெரிவிக்கையில் இந்தியா சிறீலங்காவின்…
-
- 5 replies
- 1.3k views
-
-
எமது பணியாளர்களின் படுகொலை தொடர்பாக முழு விசாரண தேவை: செஞ்சிலுவைச் சங்கம் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுவோரால் கடத்திக் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட தமது பணியாளர்கள் இருவரினதும் படுகொலை தொடர்பாக முழு விசாரணை தேவை என்று சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது இயக்குநர் நெவில் நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது: இது தொடர்பாக முழு அளவிலான விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துலகத்தின் விதிகளுக்கு அமைய இப்படுகொலைகள் தடை செய்யப்பட்டவை என்பதனை மோதலில் ஈடுபடும் தரப்புக்கள் தமது கருத்திற்கொள்ள வேண்டும். மனிதாபிமான அமைப்புக்களின் பணிகளுக்கு சிறில…
-
- 0 replies
- 687 views
-
-
திங்கள் 04-06-2007 16:37 மணி தமிழீழம் [தாயகன்] நல்லூரில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை யாழ் நல்லூரில் இன்று மதியம் 12.45 அளவில் மூன்று இளைஞர்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நல்லூர் வீதியில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிய சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்கள், அவர்களிடம் இருந்து உளவுத் தகவல்களைப் பெற்ற பின்னர் சுட்டுக் கொன்றிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை. pathivu
-
- 1 reply
- 1.2k views
-
-
திங்கள் 04-06௨007 20:48 மணி தமிழீழம் [சிறீதரன்] கல்லுடைக்கும் தொழிலாளர்கள் விரட்டியடிப்பு யாழ்ப்பாணம் மட்டுவில் சரசாலைப் பகுதிகளில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்ட சுமார் இரண்டாயிரம் வரையான தொழிலாளர்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப் பட்டுள்ளார்கள் கடந்த இரண்டு நாட்களுக்குத் தென்மராட்சிப் பகுதிக்குச் சென்று கல்லுடைக்கும் தொழிலில் ஈடபட்டு வந்த சுன்னாகம், சூராவத்தை, மயிலணி, அராலி மற்றும் சரசாலை மட்டுவில் பகுதித் தொழிலாளர்கள் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளையில் இந்த இடத்திற்கு வருகைதந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து அந்தப் பகுதியில் கல்லுடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது எனக் கூறி விரட்டியடித்து உள்ளார்கள் . யாழ…
-
- 0 replies
- 888 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் தேவை அரசுக்கில்லை: ரோகித்த போகொல்லாகம. போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையென்று வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில்இடம்பெறுகின்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் போகொல்லாகம வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கான எந்தவிதமான தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை. சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு புலிகள் இணங்கினால் அதனை எந்தநேரமும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயா…
-
- 1 reply
- 1.7k views
-
-
கரேன் பார்க்கர் கனடாவைச் சேர்ந்த சட்டநிபுணர். மனித உரிமைகள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் தேர்ந்தவர். பொருளாதார ஒதுக்கீடுகள், ஆயுதங்கள் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து உலகளாவிய சட்டங்கள் உருவாக காரணமாக இருந்தவர். 1982இல் மனித உரிமைக்கான வழக்கறிஞர்கள் அமைப்பை உருவாக்கி;ச் கடந்த 20 ஆண்டு காலமாக அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். இலங்கை இனச் சிக்கலுக்கு நல்ல முறையில் தீர்வு காணும் நோக்கத்தோடு, மனித உரிமை சட்டங்கள் குறித்த ஜெனிவா தீர்மானங்களை பின்பற்றும் வகையில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பல சுற்று பேச்சுக்கள் நடத்தியுள்ளார். கடந்த மார்ச் 2007இல் கரேன் பார்க்கரை "தமிழ் மிர்ரர்" இதழ் கண்ட பேட்டி கே : அண்மையில் மீண்டும் திரிகோணமலையில் …
-
- 4 replies
- 2.1k views
-
-
திங்கள் 04-06-2007 18:24 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவு தேவை - றோஹித போகொல்லாகம விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவைக் கோரிவரும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தமது அரசு வெளியேறாது என முரண்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள வர்த்தகர்களையும், அரசையும் சிறீலங்காவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகின்ற போகொல்லாகம, றொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். விடுதலைப் புலிகளை பேச்சு மேசையில் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பேச்சு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை வரவேற்பத…
-
- 2 replies
- 1.2k views
-