ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
கடத்தப்பட்ட மாணவருக்காக தியாகம் செய்வதற்குத் தயார் மாணவர் ஒன்றியம் அறிக்கை யாழ்ப்பாணம்,மே.24 கடத்தப்பட்ட எமது சகோதரர்களின் விடுதலைக்காக நாம் எத்தகைய தியா கத்தினையும் செய்வதற்கு குடாநாட்டு மாணவர் சமூகம் காத்திருக்கிறது. இவ்வாறு தெரிவித்திருக்கிறது யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம். மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட் டத்தை இடைநிறுத்துவது தொடர்பாக நேற்று விடுத்த அறிக்கையில் மேற் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது: கடந்த 04.05.2007 அன்று இரவு ஊர டங்கு வேளையில் எமது சக மாணவர் களான சுந்தரலிங்கம் யசோதரன், குக ராஜன் கண்ணன், நாகராசா வேணு காணன் ஆகிய மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து விசாரணைக்கென கூட்டிச் செல்ல…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஜே.வி.பி நேற்றுமாலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் 37ஜே.வி.பி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 981 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள்: சுவிஸ் தமிழர் பேரவை [வியாழக்கிழமை, 24 மே 2007, 17:29 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிஸ் வாழ் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என சுவிஸ் தமிழர் பேரவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை அடுத்த வருடத்திற்கும் நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதை அறிந்து, சுவிற்சர்லாந்து வாழ் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றிய…
-
- 0 replies
- 968 views
-
-
இனப்பிரச்சினைக்கு சீனத்தலைவர்களும் அதிகாரப் பரவலையே வற்புறுத்துகிறார்கள் ரணில் விக்கிரமசிங்க தகவல் கொழும்பு,மே24 இலங்கையில் தற்பொழுது நிலவும் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவ லாக்கல் மூலமே தீர்வுகாணப்படமுடியும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்களும் வலியுறுத்தினார்கள். எதிர்க் கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளு மன்றக் கட்டடத்தில் நடந்த தமது கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இவ் வாறு விளக்கினார். அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சீனாவில் மேற்கொண்ட விஜயம் தொடர் பாகத் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார். சீனா பூகோள அளவில் பெரிய நாடாக இருந்தபோதிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளித்திருப் பதன் மூலம் பிரிக்கப்படாமல்…
-
- 1 reply
- 982 views
-
-
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள்: ஜப்பானும் உன்னிப்பாக அவதானிக்கின்றது சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி தகவல் ரோக்கியோ, மே 24 இலங்கையில் மனித உரிமை மீறல் கள் தமிழீழ விடுதலைப் புலிகளாலோ அரசாங்கத்தாலோ அல்லது வேறு எந்த தரப்பினராலோ எவரால் செய்யப் பட்டாலும் ஜப்பான் அதனை கவ னித்தே வருகின்றது. கவலைப்படவும் செய்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங் கைக்கான ஜப்பானிய சமாதானத் தூது வர் யசூசி அகாஷி. டோக்கியோவில் வைத்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அகாஷி, இலங் கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாக அவ தானித்தே வருகின்றோம். இதை இலங்கை அரசும் அவதானத்தில் கொள் ளும் என்று கருதுகின்றோம் என்று கூறினார். மனித உரிமை மீறல்கள் தொடர் பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழில் இருந்து விடுமுறையில் சென்ற இராணுவ மேஜர் வாகன விபத்தில் பலி [வியாழக்கிழமை, 24 மே 2007, 06:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் மேஜர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ். வல்வெட்டித்துறையிலிருந்து விடுமுறையில் மாத்தறை தங்காலைக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தின் 3 ஆவது கெமுனு வோச் பிரிவின் தளபதியான மேஜர் ரசிக்க வெத ஆராச்சி என்பவரே வாகன விபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்தார். -புதினம்
-
- 6 replies
- 1.3k views
-
-
வவுனியா: சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் பலி வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பாலமோட்டை குஞ்சுக்குளப்பகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9 மணியளவில் நடைபெற்றது. சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல் காரணமாக சொந்த இடத்தில் இருந்து வெளியேறிய ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த இருவர் தங்களுடைய வீட்டினைப் பார்வையிடுவதற்காக உந்துருளியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் இவர்களின் உந்துருளியை இலக்கு வைத்து தாக்குலை நடத்தியுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான செல்வராசா …
-
- 1 reply
- 999 views
-
-
தேர்தல் சீர்திருத்த யோசனை: பேரினவாதப் பொறி! சிறுபான்மை இன மக்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக் கும் அற்ப,சொற்ப பிரதிநிதித்துவத்துக்கும் ஆப்பு வைக்கும் வேலை மும்முரமாக நடக்கின்றது. தேர்தல் சீர்திருத்தம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக அரசு மேற்கொள்ளும் காய்நகர்த்தல் பேரினவாத ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தி, வலுப்படுத்தும் மற்றொரு முயற்சியே என்பது தெளிவு. 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின் மூலம் இலங்கை யின் ஆட்சி அதிகாரம் ஜனாதிபதி என்ற தனிமனிதரிடம் ஒப் படைக்கப்படும் நிர்வாக முறைமை கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினரின் குறிப்பாகத் தமிழரின் பங்குபற்று தலோ, இசைவோ, இணக்கமோ இன்றி அவர்கள் மீதும் வலோற் கரமாகத் திணிக்கப்பட்ட அந்த அரசமைப்பு முழுமையாகப் பேரினவாத மேலாண்மை…
-
- 1 reply
- 1.3k views
-
-
விமானம் பறந்தது; மின்சாரம் நின்றது! யாழ்ப்பாணம்,மே 24 குடாநாடு முழுவதும் நேற்றிரவு 7.55 மணிக்கு திடீரென மின்சாரம் நிறுத்தப்பட் டது. குடாநாட்டு வான் பரப்பில் விமானம் ஒன்று பறந்ததும் மின்சாரம் திடீரென வெட் டப்பட்டதும் மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியது. மின்சாரம் சுமார் 16 நிமிடங்களில் மீண் டும் வழங்கப்பட்டதால், மக்களின் பதற் றம் தணிந்தது. விமானம் பறந்து சில வினாடிகளில் மின் சார விநியோகம் தடைப்பட்டதால் மக்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் தோன்றின. மின்சாரம் மீண்டும் திரும்பும்வரை என் னவோ ஏதோ என்ற பீதியும் மக்கள் மனங் களை பீடித்திருந்தது. (அ1) உதயன்
-
- 3 replies
- 3.2k views
-
-
புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்க அதிசக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங்கள் தேவையா? அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகின்றது? - ஐ.தே.க. அதி சக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங் கள் நான்கை கொள்வனவு செய்வதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை அழிப்பதற்கு இவ்வாறான அதிசக்தி வாய்ந்த விமானங்கள் தேவையா? ஒரு விமானம் 160 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.இவ்வாறான அதி சக்திவாய்ந்த விமானங்களை கொண்டு அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகிறது? இந்தியாவுடன் யுத்தம் செய்வதற்கு இவ்வாறான விமானங்கள் போதுமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெவித்தார். அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொண்ட…
-
- 2 replies
- 762 views
-
-
புலிகளின் நிருவாகப் பகுதிக்கு ஊடகர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் - அமெரிக்க ஊடக நிபுணர் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதிக்கு ஊடகர்கள் செல்வதற்கு சிறீலங்கா அரசு விதித்துள்ள தடையை அமெரிக்காவின் அனைத்துலக தகவல்தொடர்பு நிகழ்ச்சித்திட்டப் பிரிவைச் சேர்ந்த ஊடக நிபுணரான ஷெரி றிச்சியார்டி கண்டித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் “டெய்லி மிரர்” பத்திரிகை இணையத்தளம் ஊடாக நடத்திய நேரடி நேர்காணலில், ஷெரி இந்தக் கருத்தினை முன்வைத்திருப்பதுடன், எங்கு சென்று செய்தி சேகரிக்க வேண்டும் என்பதை ஊடகர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும், அரசு அல்ல என்றும் கூறியுள்ளார். சிறீலங்கா அரசு ஊடகங்கள் மீது விதித்துள்ள இந்தத் தடை பற்றி அனைத்துலக கவனத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதேவே…
-
- 2 replies
- 923 views
-
-
.மனிதாபிமானச் சட்டங்களை மீறுவதாக இலங்கை மீது ஆஸ்திரேலியா கண்டனம் மெல்பேர்ண், மே 24 இலங்கையில் ஆட்கடத்தல்களும் நீதிக் குப் புறம்பான கொலைகளும் தினசரி இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்தி ரேலியா, இலங்கை அரசு மனிதாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு கின்றது எனக் குற்றம் சுமத்தியிருக்கின்றது. இலங்கை அரசு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விமர்சன நிலைப்பாட்டை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்ஸாண்டர் டௌனர் கடுமையாக்கியிருக்கின்றார் என ஆஸ்திரேலிய ஒலிப ரப்புக் கூட்டுத்தாபன செய்தியாளர் கிரேம் டொபல் தெரிவிக்கிறார். இலங்கை அரசுக்கும் தமிழ்ப்புலிகளுக் கும் இடையிலான பிணக்கில், சம்பந்தப் பட்ட தரப்புகள் அனைத்துமே சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு…
-
- 0 replies
- 760 views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளன: அனைத்துலக மன்னிப்புச் சபை மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. நேற்று புதன்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை வெளியீட்டின் போது அதன் பொதுச் செயலாளர் இரீனி ஹான் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றன…
-
- 2 replies
- 825 views
-
-
யாழ். பல்கலைக்கழக தற்போதைய நிலைமை தொடர்பாக பேரவை கவலை Thursday, 24 May 2007 யாழ்.பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகப் பேரவையினர் எவ்வித தடங்கலும் இன்றி பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தொடந்து முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே தமது விருப்பமெனவும் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக பேரவைக் கூட்டம் பதில் துணைவேந்தர் பேராசிரியர் இரா.குமாரவடிவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமுகமளிப்பது குறித்து மாணவர்களே தீர்மானிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட பேரவை உறுப்பினர்கள் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடு…
-
- 0 replies
- 694 views
-
-
காணாமல்ப் போனோர் பற்றிய மக்கள் கண்காணிப்புக் குழுவின் முறைப்பாட்டை ஐ-நா ஏற்றுக்கொண்டது ஐக்கிய நாடுகள் சபையில் காணாமல்;ப் போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிற்கு, கொழும்பு மக்கள் கண்காணிப்புக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட காணாமல்ப் போனோர் தொடர்பான பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. “மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு” நூற்றுக் கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், காணாமல்ப்போன 11 பேரின் விபரங்கள் முதற்கட்டமாக ஐ-நா அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமக்கு கிடைக்கப்பெற்ற இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என, ஐ-நாவின் ஜெனிவா அலுவலக மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் கிளவ்டியா டி லா பொன்ரே “மக்கள் கண்காணிப்புக் குழு…
-
- 2 replies
- 916 views
-
-
அமைதி முயற்சியிலிருந்து நோர்வே விலகவில்லை: எஸ்.ஜெயானந்தமூர்த்தி Thursday, 24 May 2007 அணுசரணையாளர் நிலையில் இருந்து எந்த ஒரு காரணத்துக்காகவும் தாம் விலகமாட்டோம் என்று இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் தன்னிடம் தெரிவித்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி கூறினார். தற்போது நோர்வேயில் தங்கியிருக்கும் மட்டக்களப்பபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியிலேயே இதனை தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயரை சந்தித்து ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஜெயானந்தமூர்த்தி ஒரு மணிநேரம் உரையாடியுள்ளார். …
-
- 0 replies
- 705 views
-
-
மீண்டு வந்த மீனவர்கள்... விலகாத மர்மங்கள்! அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும், அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை. ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜி, ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோ, அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள். மீண்டு…
-
- 3 replies
- 1.6k views
-
-
வியாழன் 24-05-2007 02:05 மணி தமிழீழம் [மயூரன்] ஏறாவூர் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் தளவை சவுக்கங்காடு கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற மோதல்சம்பவத்தில் விடுதலைப்புலிகளில் மூவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் சிறீலங்கா படையினர் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் மற்றும் ஒரு விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இம்மோதல் சம்பவமானது புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது இறந்தவர்களின் உடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதன் 23-05-2007 18:25 மணி தமிழீழம் [மயூரன்] யுத்தகளத்தில் புலிகளின் கைகள் மேலோங்கும் போதே ஆக்கபூவமான சமாதான நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்வரும் - கஜேந்திரகுமார் யுத்த களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகள் மேலோங்கும் போதுதான் சமாதான நடவடிக்கைகளை ஆக்கபூர்வமான முன்னெடுக்க சிறீலங்கா அரசாங்கம் முன்வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி சிறீலங்காவுக்கான அனைத்துலக நிதியுதவிகளை நிறுத்தியுள்ள சர்வதே சமூகம் மறுபுறத்தில் சிறீலங்காவுக்கான யுத்த தளபாடங்களை வழங்கி அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருத முடியும் எனத் குறிப்பி…
-
- 3 replies
- 1.6k views
-
-
வட பகுதியில் பதற்றமான சூழ்நிலை மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் வீரகேசரி நாளேடு வடபகுதி பிரதேசங்களான யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மற்றும் வன்னியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னரங்க நிலைகளில் பரஸ்பரம் இருதரப்பும் மேற்கொள்ளும் படைக்குவிப்பு மற்றும் கடும் எறிகணைத் தாக்குதல்கள் என்பன மீண்டும் போர் வெடிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கண்காணிப்பு குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் மேலும் கூறியதாவது, . மன்னார், மடுப் பிரதேசத்தில் இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. இரு…
-
- 3 replies
- 2.1k views
-
-
உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:14 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை: யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் - யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள் - பாடசா…
-
- 7 replies
- 1.3k views
-
-
மகாவம்சம் - சில செய்திகள் -சபேசன் - மெல்பேர்ண் - ஒஸ்ரேலியா சிறிலங்காவின் புதிய அதிபராக, அன்று மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்;தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும். “முதலில் மகாவம்சம…
-
- 0 replies
- 904 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சில தீர்மானங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு இடையூறாக அமைகின்றது – நோர்வே வெளிநாட்டமைச்சர் “நோர்வேயின் வெளிவிவகாரக் கொள்கையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையுடனான ஒத்துழைப்பும்” என்ற தொனிப்பொருளிலான வருடாந்த ஐரோப்பிய மாநாடு நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹகஹர் ஸ்ரோ (Jonas Gahr Støre) சிறிலங்காவின் சமாதானப் பேச்சுவார்தைகள் குறித்தும் உரையாற்றியிருந்தார். நோர்வேயும் ஐரோப்பிய ஒன்றியமும் பல செயற்பாடுகளில் கருத்து ஒற்றுமையைக் கொண்டுள்ளபோதிலும் சிலவற்றில் வேறுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த …
-
- 0 replies
- 736 views
-
-
பாகிஸ்தானிடம் இருந்து எஃப்-7 ரக வானூர்திகளை கடனாக பெற சிறிலங்கா முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக எஃப்-7 ரக இடைமறிப்பு தாக்குதல் வானூர்திகளை கடனாகப் பெறுவதற்கு சிறிலங்கா அரசு எடுத்த முயற்சியை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள இந்திய ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசிடம் வான் எதிர்ப்பு ஆளுமை குறைவாக உள்ளதனால் சோவியத்தின் மிக்-21 ரக வானூர்தியின் பிரதி வடிவமாக சீனாவினால் தயாரிக்கப்பட்ட எஃப்-7 ரக வானூர்திகளை பாகிஸ்தானிடம் இருந்து கடன் அடிப்படையில் பெறுவதற்கு சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருந்தது. எனினும் தாக்குதல் வானூர்திகளை வழங்க மறுத்த பாகிஸ்தான், 22 அல் சாரார் வகை டாங்கிகளை சிறிலங்…
-
- 1 reply
- 828 views
-
-
படையினரின் வன்முறைகளை அரசு கண்டுகொள்வதில்லை: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு. சிறிலங்கா அரச படையினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசு விரும்புவதில்லை என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையின் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள சட்டவிதிளை பல வருடங்களாக நாம் அவதானித்து வந்ததில் இருந்து அங்கு ஒரு சமநீதியான சட்டவிதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. அங்கு நடைபெற்று வரும் கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் என்பன சட்ட ஒழுங்கின் குறைபாட்டிற்கான க…
-
- 2 replies
- 1.2k views
-