ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
வெள்ளி 27-04-2007 15:22 மணி தமிழீழம் [சிறீதரன்] பல்கலைக்கழக மாணவர்களை இராணுவப் புலனாய்வாளர்களினால் விசாரணை. வெளி மாவட்டங்களில் இருந்த யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்கு கப்பலில் வரும் மாணவர்களை தெல்லிப்பளையில் வைத்து இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரனை மேற் கொண்டு வருகின்றனர். இராணுவப் புலனாய்வாளர்களின் விசாரணையின் பின்னரே இவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றனர் கப்பலில் வரும் மாணவ, மாணவிகள் காங்கேசன்துறையில் இருந்து கப்பலில் இருந்து இறங்கி தெல்லிப்பளைக்கு கொண்டுவரப்பட்டதும், அங்குவைத்து யாழ்ப்பாணத்திற்கு வந்தமைக்கான காரணம் கேட்டுப் பதியப்படுகின்றது. இதன்போது பல்கலைக்கழக கல்விக்காக வந்ததாக தெரிவித்ததும் குறிப்பிட்டவர்கள் தனிமைப்படு…
-
- 0 replies
- 743 views
-
-
சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை ஏப். 30 இல் மக்களுக்கு சமர்ப்பிப்பு தேசிய பிரச்சினைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மே தினக் கொண்டாட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுவிட்டத
-
- 2 replies
- 1.2k views
-
-
மாதகல் பகுதியில் குடும்பஸ்தர் கடத்தல் பண்டத்தரிப்பு மாதகல் பகுதியில் ஆயுதாரிகளால் குடும்பஸ்தர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கேணியடி மாதகலைச் சேர்ந்த செல்லத்துரை தவரட்ணம் (வயது-48) என்பவரே கடத்திச்செல்லப்பட்டதாக அவரது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தினகுரல்
-
- 0 replies
- 927 views
-
-
யாழ். ரயில் நிலையப் பகுதியில் இரவில் வேட்டுச் சத்தங்கள் யாழ். ரயில் நிலையப் பகுதி யில் நேற்றுமுன்தினம் கேட்ட துப் பாக்கி வேட்டுச் சத்தத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. யாழ். ரயில் நிலையப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணி யளவில் முதலில் ஒரு வெடிச் சத் தம் கேட்டது என்றும் அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை இந்தத் துப்பாக்கி வேட்டுக்கள் எதற்காக தீர்க்கப்பட் டன என்பது குறித்த தகவல் எதுவும் தெரிய வரவில்லை. உதயன்
-
- 1 reply
- 1.1k views
-
-
கிளிநொச்சியில் பாரிய குண்டு வீச்சு Written by Ramanan - Apr 26, 2007 at 09:52 AM கிளிநொச்சி மாவட்டம் திருவையாற்றுப் பகுதி மீது இன்று காலை 7.00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் தாக்குதல் வானூர்திகள் குண்டு வீச்சை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா வான்படையின் மூன்று தாக்குதல் வானூர்திகள் திருவையாற்றுப் பாடசாலையில் இருந்து 200 மீட்டர்கள் தொலைவில் 12ற்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளன. இதன் காரணமாக வீடு ஒன்று முற்றாக அழிந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல் காரணமாக பொதுமக்களிற்கு சேதங்கள் எதுவும் ஏற்படாதபோதும் குறித்த பகுதியில் கடுமையான பதற்றம் நிலவுகிறது. சங்கதி
-
- 4 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பில் மூடப்பட்ட நிலையில் 58 பாடசாலைகள் 17 ஆயிரம் மாணவரின் கல்வி நடவடிக்கை பாதிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக 58 பாடசாலைகள் இயங்காது மூடப்பட்டுள்ளன. இதனால் 17 ஆயிரம் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 38 பாடசாலைகள் இயங்கவில்லை. 8,500 மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 6 ஆயிரம் மாணவர்கள் பாடசாலை செல்லாது இருப்பதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் தெரிவித்துள்ளார். மூதூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள…
-
- 0 replies
- 790 views
-
-
""நாங்கள் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர்) என்ன தும்புத் தடிகளா, கூட்டிவிட்டு தூக்கி எறிந்து விடுவதற்கு? நாங்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. எங்களது உரிமைகளைத்தான் கேட்கிறோம்.'' இவ்வாறு அரசின் மீது சீறிப் பாய்ந்திருக்கிறார் இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான். நேற்று ஜனாதிபதியின் அலரி மாளிகையில் இடம்பெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசுகையி லேயே அவரது இந்தச் சீற்றம் வெளிப்பட்டது. மலையகத் தமிழ்ப் பாடசாலைகளில் முதல் முறை யாக அதிக எண்ணிக்கையில், 3 ஆயிரத்து 179 ஆசி ரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான முதல் கட்ட வைபவம் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றபோதே இ.தொ.கா. தலைவர் கோபம் கொப்புளிக்க இவ்வாறு பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கல…
-
- 4 replies
- 1.2k views
-
-
பொலிஸாரின் அதிகாரங்களை படையினருக்கு வழங்குவதால் இராணுவ முகாம்கள் சித்திரவதைக் கூடங்களாக மாறும் அபாயம் ! ஆசிய மனித உரிமை ஆணைக்குழு எச்சரிக்கிறது பொலிஸாரின் சட்ட அதிகாரங்களை இராணுவத்தினருக்கும் வழங்கி ஜனாதி பதி அண்மையில் விடுத்த பிரகடனம், மீண்டும் 1980களில் இடம்பெற்றது போன்று படைமுகாம்களை சித்திரவதைக் கூடங்க ளாக்கப் போகிறது. இவ்வாறு எச்சரித்திருக்கிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு. மேற்படி சட்ட நடைமுறைப்படுத்தல் இலங்கை மிகுந்த நெருக்கடிக்கும் இடருக் கும் உள்ளாகிவரும் இச்சமயத்தில், இத்த கைய அதிகாரங்களை படையினருக்கும் வழங்கும் பின்னணியில், இவற்றால் பாதிக்கப்படுவோர் சட்டரீதியாக நிவா ரணம் பெறுவது மேலும் சாத்தியமற்ற தாகிவிடும். 2006ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி விடுக…
-
- 0 replies
- 731 views
-
-
பொருள்களை வாங்க முண்டியடிக்கும் மக்கள் யாழ். நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் நேற்று பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு அத்தியாவசியப் பொருள் களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. வடக்கில் அடுத்துவரும் தினங் களில் யுத்த நடவடிக்கைகள் முன் னெடுக்கப்படலாம் என்று செய்தி கள் வெளியாகியதை அடுத்துப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற் படலாம் என்ற ஊகத்தில் மக்கள் அத்தியவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக் கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அத்தியாவசி யப் பொருள்களின் விலைகள் திடீ ரென அதிகரித்தன. அத்தியவசியப் பொருள்கள் முடிவடைந்து விட்ட தாக சில வியாபார நிலையங்களில் தெரிவிக்கப்பட்டது. (அ8) நூல் வெளியீட்டு விழா திருமறைக் கலாமன்றத்தைச் …
-
- 0 replies
- 671 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார். சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள…
-
- 17 replies
- 4.1k views
-
-
தமிழ் மக்கள் ஏற்கக்கூடிய தீர்வு யோசனையை முன்வைத்தால் புலிகளை பலவீனமடையச் செய்யலாம் [26 - April - 2007] -சோசலிச மக்கள் முன்னணி தெரிவிப்பு -டிட்டோகுகன்- இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்து விடுதலைப் புலிகளை அதனுள் சிக்கவைக்கும்போதே, அவர்களை ஆயுதங்கள் மூலமும் பலவீனமடையச் செய்ய முடியுமென சோசலிச மக்கள் முன்னணி சுட்டிக் காட்டுகிறது. லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 5 கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் சோசலிச மக்கள் முன்னணி நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இக்கருத்து தெரிவிக்கப்பட்டது. பேராசிரியர் விதாரண …
-
- 11 replies
- 2.9k views
-
-
10 ஆயிரம் தொண்டர் படையினரை உருவாக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் சிறீலங்காப் படைகளில் 10 தொண்டர் படையினரை இணைக்கும் முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கான நேர்முகம் பரீட்சைகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. தொண்டர் படைக்கான ஆட்சேர்ப்புக்கள் அனைத்து படை முகாம்களில் பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் நேர்முகப் பரீட்சைகள் மூலம் இணைத்துக் கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. http://www.pathivu.com/
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழீழ வான்படை எமது தேசத்திற்கான ஒரு அங்கீகாரமாகும்: விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டுள்ள தமிழீழ வான்படையானது தமது தேசத்தின் முழுமையான கட்டமைப்பிற்கும் அதன் மீதான அனைத்துலகத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவும் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து வெளியாகும் 'ஹிந்துஸ்தான் ரைம்ஸ்' என்ற ஆங்கில ஊடகத்திற்கு தொலைபேசியூடாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் அரசியல், இராணுவ, இராஜதந்திர மட்டங்களில் புதிய எதிர்வுகூறல்களை ஏற்படுத்தியுள்ளது. எங்களிடம் நிலப்பரப்பு, நிர்வாகம், சட்ட…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவுக்கான இராணுவ உதவிகளை மட்டுப்படுத்துக - மனித உரிமை அமைப்புகள் அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் கியூமன் ரைட்ஸ் வோச் மற்றும் அம்னிஸ்ரி இன்ரநசனல் அமைப்பு ஆகியன அமெரிக்க அரசாங்கத்தை சிறீலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகளையும், இராணுவ சாதனங்களையும் வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. சிறீலங்கா அரசு சிறுவர்களை படைக்கு இணைப்பதால் குற்றச்சாட்டப்பட்ட மற்றய நாடுகளுடன் சேர்த்து சிறீலங்காவிற்கான உதவிகளை மட்டுப்படுத்தப்படவேண்டும் என கோரியுள்ளன. இதேவேளை சிறுவர்களை படைக்கு இணைப்பதை தடுப்பதற்கு எதிரான 2007 சட்டத்தை அமெரிக்க அரசு செயற்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நாடுகளாக ஆப்கானிஸ்தான், புறூண்டி, சாட், கொலம்பியா…
-
- 0 replies
- 646 views
-
-
தமிழகத்தில் ஈழ ஆதரவும், இந்திய உளவுத்துறையினரின் திட்டமிட்ட சதிகளும் நேற்று 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாருக்கு வீரவணக்கமும் நாட்டுப்பற்றாளர் தினமும் சிட்னியில் நடைபெற்ற போது பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளரும் 'புரட்சி பெரியார் முழக்கம்' ஏட்டின் ஆசிரியருமான 'விடுதலை' க.இராசேந்திரன் அவர்களின் உரையில் இருந்து தமிழகத்தில் இன உணர்வு இன்னும் மங்கிவிடவில்லை என்று எடுத்துக் கூறியதுடன், அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளையும் அதன் பின்னணி விவரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உணர்வினை சுட்டிக்காட்டியதுடன் அண்மையில் இந்தியா - சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு உடன்பட்ட முதல்வரை அ…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை. சிறீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசாரத்திற்கு, பிரித்தானியாவின் மூன்றாவது பெரும் கட்சியான லிபறல் டெமோகிறட்ஸ் என்றழைக்கப்படும் தாராண்மைவாத ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணக் கிறிக்கட் போட்டியில் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரசாரம் செய்து வருகின்றது. இந்த பிரசாரத்திற்கு எதிராக சிறீலங்கா அரசு கருத்து வெளியிட்டு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கட்டுநாயக்கா மீதான முதலாவது தாக்குதல் வழக்கில் மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை கட்டுநாயக்க விமான நிலையம் மீதான விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமறு கொழும்பு மேல் நீதிமன்றம் மூவருக்கு நேற்று புதன்கிழமை அழைப்பாணை பிறப்பித்தது. புலிகளால் 2001 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இவ்வழக்கின் எதிரிகள் ஐவரில் ரட்ணசிங்கம் புஸ்பகுமார், விக்டர் அல்பிரட் டொமினிக், சுப்பிரமணியம் தவராசசிங்கம், நாகேந்திரம் நாகேந்திரகுமார் ஆகியோர் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். ஐந்தாவது எதிரியான த. ஜெயலெட்சுமி தலைமறைவாகியிருக்கிறார் …
-
- 1 reply
- 1.7k views
-
-
உலகில் மிகவும் பலமுள்ள இராணுவப் படை விடுதலைப் புலிகள் வசம் உள்ளது : ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:04 PM தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியுமானால் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பணிப்புரையின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். பலாலி கூட்டுப்படைத்தளத்துக்குச் சென்று, விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்கள் நடத்திய இடங்களை பார்வையிட்டார். நேற்று கொழும்பு திரும்பிய அவர்…
-
- 22 replies
- 5.2k views
-
-
வத்திக்கான் தூதுவரின் கிழக்கு விஜயத்தின் பின்னணியில் சர்வதேசத்தின் சூழ்ச்சித் திட்டம்? பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரின் இலங்கைப் பிரதிநிதியான மரியா செனாரியோவின் கிழக்கு மாகாண விஜயத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் சர்வதேச ரீதியிலான பிரிவினை வாதத்திற்கு சார்பான சூழ்ச்சித் திட்டம் இருக்கலாமென சந்தேகத்தைக் கிளப்பும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் மனிதாபிமான ரீதியாக இவ்விஜயம் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மத ரீதியானதாக இருக்குமானால் அதனை எதிர்க்கின்றோம் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக எல்லாவெல மேதானந்த தேரர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; இனம், மதம், மொழி பேதமின்றி மக்கள் மீது அன்பு…
-
- 1 reply
- 2.2k views
-
-
பல்கலைக்கழக அனுமதியில் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு பெரும் அநீதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக தமிழ், முஸ்லிம் மாணவர் தரப்பில் குற்றச் சாட்டுக்கள் கூறப்படுகிறதேயென அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து உயர்கல்வி பிரதியமைச்சர் மேலும் தகவல் தருகையில்; பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்யும் அதிகாரம் ஒரு தனி நபரிடமே காணப்படுகிறது. அவர் தான் விரும்பியவாறு செயற்படுகிறார். பல்கலைக்கழக மாணவர் அனுமதி தொடர்பாக எத்தகைய முறைகேடுகளும் இல்லையென்றால் ஏன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி தொடர்பான விபரங்களை வெளியிட மறுக்கிறது? அந்த அடிப்படையில் எந்தப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்…
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் நேற்றிரவு கடும் மின்னலால் நான்கு இடங்களில் தீ விபத்துகள் [26 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பில் நேற்று புதன்கிழமை இரவு மழையுடன் கூடிய கடும் மின்னல் தாக்குதலால் நான்கு இடங்களில் தீ விபத்துச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். வீடுகள் மூன்றிலும் கடையொன்றிலுமே இத்தத் திடீர் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன் தீயணைப்பு படையினர் உடன் அந்த இடங்களுக்குச் சென்று தீயை கட்டுப்பதுத்தியுள்ளனர். கொழும்பு புஞ்சி பொரளை, கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளிலேயே மின் ஒழுக்கு காரணமாக வீடுகளில் தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. பஞ்சிகாவத்தையில் கடையொன்று தீப் பற்றி எரிந்துள்ளது. இந்த நான்கு சம்பவங்களும் மழை பெய்து கொண…
-
- 0 replies
- 1.2k views
-
-
17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று …
-
- 0 replies
- 887 views
-
-
மறுக்கப்பட்ட உரிமைகளை தமிழருக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை' [26 - April - 2007] * பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட வேண்டும் ஜே.வி.பி. பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், ஆயுதமேந்திய பிரிவினைவாத பயங்கரவாதத்தை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. அது அழித்தொழிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கும் ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச, இன,மத, ரீதியாக நாட்டை துண்டாடும் நிபுணர்களின் யோசனைகளால் உண்மையான சமாதானத்தை அடைய முடியாதென்றும் தெரிவித்தார். "சமாதான முன்னெடுப்புக்கான வர்த்தக முயற்சி என்ற தலைப்பில் " வர்…
-
- 0 replies
- 886 views
-
-
ஜனாதிபதி, மங்கள சமரவீர நீண்ட நேரம் பேச்சுவார்த்தை -அமைச்சரவையில் மீண்டும் இணையும் சாத்தியம்? [26 - April - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா , ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்த இக்கலந்துரையாடலில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் மங்கள சமரவீர இச்சந்திப்பை அடுத்து மீண்டும் அமைச்சராவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரம…
-
- 0 replies
- 715 views
-
-
அடையாளம் காணப்படாத நிலையில் வவுனியா ஆஸ்பத்திரியில் 3 சடலங்கள் கோவில்குளம் வீதியில் சிவன்கோவிலுக்கு சற்று தொலைவில் கடந்த திங்கள் காலை கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம் சுமார் 25 இற்கும் 30 வயதிற்கும் உட்பட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலத்திற்கு உரிமை கோரி எவரும் வரவில்லை என வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை வவுனியா முதலாம் குறுக்குத் தெருவிலும், கண்டி வீதியிலும் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களிற்கும் எவரும் உரிமைகோரி வரவில்லை. வயோதிபர்களான இவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளனர். ஆனால் சடலங்கள் அனாதவரான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்…
-
- 0 replies
- 827 views
-