ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
திங்கள் 28-05-2007 00:28 மணி தமிழீழம் [தாயகன்] ரணில், திஸ்ஸ முரண்பாடு - ஐ.தே.கட்சிக்குள் குழப்பம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கும் இடையில் முறகல்நிலை தோன்றியுள்ளதால், கட்சிக்குள் பாரிய குழப்பங்கள் தோன்றியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ரணிலிற்கு ஆதரவான உறுப்பினர்கள் பலர் திஸ்ஸ அத்தநாயக்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு வழங்கிய தமது ஆதரவை விலக்கியுள்ளனர். குண்டசாலையில் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் பாரிய பிரசாரக்கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, கட்சி உறுப்பினர்கள் பலரை அதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பினை அகிலா காரியவாசம், சாகல ரத்நா…
-
- 1 reply
- 1.1k views
-
-
விமலின் வியாபார இரகசியங்கள் வெளியிடப்படும்: மகிந்த Sunday, 27 May 2007 சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பாக 10 மில்லியன் டொலர்களை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், அவரது வியாபார நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பங்கு விற்பனை இரு நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. வனஸ்ப்பதி வர்த்தகம் தொடர்பாக விமல் என்னை சந்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஜூலையில் நாடு திரும்புகிறேன்: மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் [ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறிலங்கா திரும்ப உள்ளதாக மகிந்தவுக்கு சந்திரிகா குமாரதுங்க கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகாவுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் குறைத்துவிட்ட நிலையில் தனது பயணம் தொடர்பாக மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார். சிறிலங்கா திரும்பும் சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று வழமைபோல் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மகிந்தவின் அமைச்சரவையிலிருந்து மங்கள தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரிகாவுடன் லண்டனில் மங்கள ஆலோசனை ந…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 27-05-2007 01:41 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் இராணுவத் தளபதி நேரடிப் பார்வையில் நெடுந்தீவின் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் நெடுந்தீவின் தென்புற கடைற்படைத் தளம் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. கடற்கரையோரம் முழுவதும் காலவரண்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுந்தீவின் புதிய கடற்படைத் தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சனிக்கிழமையும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அத்துடன் கடல்ரோந்து நடவடிக்கைகளையும் கடற்படையினர் அதிகரித்துள்ளனர். இதே நேரம் தென்மராட்சியிலிருந்து ஒரு தொகுதி படையினர் நெடுந்தீ…
-
- 1 reply
- 795 views
-
-
மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும் -சி.இதயச்சந்திரன்- இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இனவாத வேர்கள் பரவிப்படர்ந்து சகல பெரும்பான்மையின அரசியல் சக்திகள் மத்தியிலும் ஆழமாக ஊடுருவி இன்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற எல்லைகளைக் கடந்து பேரெழுச்சி கொண்டுள்ளது. தமிழின விடுதலை எழுச்சியின் குறியீடாக விளங்கும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதென்கிற பேரினவாத உந்துசக்தி, சிங்கள இனத்தின் முழுமையான அரசியல் சக்திகளையும் இனவன்மக் கோட்பாட்டோடு இணைய வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் புரிந்துள்ளதென்பதை ஊகிக்கக் கூடிய சக்தியும் தமிழ் மக்களுக்கு உண்டு. ஜனநாயக வழியில் அதற்கான தீர்வினை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் தேர்தல் மூலமும் தமிழ்மக்கள் உலகிற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 27-05-2007 20:11 மணி தமிழீழம் [மயூரன்] அரசுக்கெதிராக செயற்படுபவர்களை கவனிக்க விசேட காவல்துறைப்பிரிவு சிறீலங்கா காவல்துறையினர் அரசியல்வாசிகளின் செயற்பாடுகள், பொதுசேவைகளில் ஈடுபடுபவர்கள், தொமிற்துறைசார்ந்தோர், ஊடகர்கள், வர்த்தக ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கான விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தப்பிரிவு கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துவிட்டதாகவும். இவர்கள் சந்தேகத்திற்கு இடமானமுறையில் செயற்படுபவர்களை கண்காணித்து அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகிறது. pathivu
-
- 0 replies
- 975 views
-
-
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 1 மணிமுதல் காலை 7 மணி கடந்த நிலையிலும் மோதல் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. 15-க்கும் மேற்பட்ட படகுகளில் முன்னேறி வந்த கடற்புலிகளுக்கும் தமது படையினருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக படைத்தரப்பு மேலும் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. http://www.eelampage.com/?cn=31923
-
- 42 replies
- 6.5k views
-
-
ஞாயிறு 27-05-2007 19:57 மணி தமிழீழம் [மயூரன்] மத்திய மாகாணம் போனகல எஸ்ரேற் பண்டாரவளை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சனிக்கிழமை மாலை சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது 11 தமிழ்பொதுமக்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது. தியத்தலாவ இராணுவப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினரும் மற்றும் காவல்துறையினரும் இணைந்தே இத்தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும். இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரயவருகிறது. பதிவு.com
-
- 0 replies
- 645 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:52 ஈழம்] [சி.கனகரத்தினம்] எதிர்வரும் ஜூலை மாதம் இறுதியில் சிறிலங்கா திரும்ப உள்ளதாக மகிந்தவுக்கு சந்திரிகா குமாரதுங்க கடிதம் அனுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திரிகாவுக்கான பாதுகாப்பு மற்றும் சலுகைகளை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் குறைத்துவிட்ட நிலையில் தனது பயணம் தொடர்பாக மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம் அனுப்பியுள்ளார். சிறிலங்கா திரும்பும் சந்திரிகா தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்று வழமைபோல் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மகிந்தவின் அமைச்சரவையிலிருந்து மங்கள தூக்கி எறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரிகாவுடன் லண்டனில் மங்கள ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரிகாவை…
-
- 0 replies
- 522 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 18:13 ஈழம்] [செ.விசுவநாதன்] மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உத்தி அவ்வளவு தெளிவானதாக இல்லை என கருதுகிறேன். வடபகுதியில் நாம் முன்னகர்வு முயற்சிகளில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் இராணுவம் முன்னேற்றமடைந்து எதுவித நேரடி மோதலுமின்றி சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது புலிகளுக்…
-
- 0 replies
- 609 views
-
-
ஞாயிறு 27-05-2007 17:40 மணி தமிழீழம் [கோபி] வவுனியா தவசிக்குளத்தில் இரு சடலங்கள் மீட்பு வவுனியாவில் பொதுமக்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று வவுனியா தவசிக்குளத்தில் வீதியோரத்தில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படதாத நிலையில் அடையாளம் காண்பதற்காக வவுனியா மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது pathivu
-
- 0 replies
- 982 views
-
-
குடும்பிமலை காட்டுக்குள் பிரவேசிக்க முனைந்த அதிரடிபடையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் 18 அதிரடைபடையினர் காயமடைந்தனர்.புலிகளின் மோட்டார் தாக்குதலால் மற்றும் ஆட்டிலெறி தாக்குதலால் காயமடைந்த 11 அதிரடிபடையினர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருகின்றனர் அத்துடன் 7 அதிரடி படையினர் மாகா ஓயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலிகள் இந்த சம்பவம் தொடர்பாக எந்த செய்தியையும் இன்னும் வெளியிடவில்லை ஆதாரம் -தமிழ் நெட் http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22284
-
- 1 reply
- 1.6k views
-
-
ஞாயிறு 27-05-2007 16:59 மணி தமிழீழம் சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா கண்டிக்கு விஜயம் செய்து கண்டி சிறீ தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன் கண்டி மல்வத்த பௌத்த பீடத்திற்கும் அஸ்கிரிய பீடத்திற்கும் சென்று ஆசி பெற்றுள்ளார். நேற்று சனிக்கிழமை தலதாமாளிகைக்குச் சென்ற சரத் பொன்சேகா மகாநாயக்க தேரரின் வடக்கு கிழக்கு பாதுகாப்பு நிலவரம் தொடர்பில் கேள்வியெழுப்பியபோது வடக்கு - கிழக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு மக்கள் மீளக் குயேற்றப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். பதிவு
-
- 0 replies
- 765 views
-
-
Written by Ellalan - May 27, 2007 at 12:12 PM சிறிலங்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகள் விற்பனை தொடர்பாக 10 மில்லியன் டொலர்களை அரசின் உயர் அதிகாரி ஒருவர் கையாடியுள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், அவரது வியாபார நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அமைச்சர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பங்கு விற்பனை இரு நிறுவனங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை அதில் அரசு ஒன்றும் செய்ய முடியாது. வனஸ்ப்பதி வர்த்தகம் தொடர்பாக விமல் என்னை சந்தித்திருந்தார். என்னிடம் அதற்கான …
-
- 0 replies
- 585 views
-
-
சிறிலங்காவிற்கான அனைத்துலகத்தின் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம். சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசு மனித உரிமை மீறல்களை தடுக்காது போனால் அரசுக்கான அனைத்துலகத்தின் உதவிகளை அந்த நாடுகளின் ஊடாக தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்போவதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குனர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளதாவது: எமது அமைப்பு சிறிலங்கா தொடர்பான விடயங்களில் செயற்திறனுள்ள நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, யப்பான் உட்பட பல நாடுகளுடன் சிறிலங்காவில் உள்ள தற்போதைய நிலை தொடர்பாக தொடர்புகளை கொண்டுள்ளது. எனினும் நாம் சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்தும்…
-
- 0 replies
- 817 views
-
-
May 27, 2007 at 12:25 PM ஆள்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் மனிதப் படுகொலைகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி உடன் தலை யிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்வலியுறுத்தி உள்ளது. நேற்று இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட் டத்தில் இது சம்பந்தமான பல யோசனைகள் நிறைவேற் றப்பட்டன என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஹால் ஜெயமான தெரிவித்தார். ஆள்கடத்தல்கள், காணாமற்போதல் மற்றும் மனிதப் படுகொலைகள் ஆகியவற்றைத் தடுக்க ஜனாதிபதி நட வடிக்கை எடுக்கும் அதேவேளை, இவ்வாறான செயல் களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண் டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுள்ளதாகவும் நிஹால் ஜெயமான தெரிவித்தார்…
-
- 0 replies
- 534 views
-
-
கொழும்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, துறைமுகத்தில் இறக்கப்பட்ட ஆயுதங்களுக்கு குறிவைக்கப்பட்டதா?: படைத்தரப்பினர் சந்தேகம். சிறிலங்கா தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இருந்து இறக்கப்படும் ஆயுதங்களுக்கு குறிவைக்கப்பட்ட குண்டா? என படைத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இத்தகவலை தனது பாதுகாப்பு ஆய்வில் வெளியிட்டுள்ள 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண்டிய பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இது…
-
- 0 replies
- 861 views
-
-
ஞாயிற்றுக்கிழமைஇ 27 மே 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் ஆயுதக்கப்பலில் இருந்து இறக்கப்படும் ஆயுதங்களுக்கு குறிவைக்கப்பட்ட குண்டா? என படைத்தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இத்தகவலை தனது பாதுகாப்பு ஆய்வில் வெளியிட்டுள்ள 'சண்டே ரைம்ஸ்' வார ஏடு மேலும் தெரிவித்துள்ளதாவது: நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதான தாக்குதல் நடந்த சில மணிநேரங்களுக்குள் கொழும்பு துறைமுகத்திற்கு அண்டிய பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இது தூர இயக்கி மூலம் வெடிக்க வைக்கப்படும் குண்டு. படையினரின் பேரூந்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் படைத்தரப்பை…
-
- 0 replies
- 575 views
-
-
ஞாயிற்றுக்கிழமைஇ 27 மே 2007 அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை கண்காணிக்க விசேட பொலிஸ் குழுவொன்று அமர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் குழு கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார். அரசையும் அதன் அபிவிருத்தித் திட்டங்களையும் பாதுகாப்பு நடைமுறைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்யும் அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், ஊடகங்கள், அரச ஊழியர்கள், தொழிற் சங்கங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இப் பொலிஸ் குழுவின் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இப்பொலிஸ் குழு சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரியவர்கள் தொடர்பு வைத்திருப்போர், அவர்கள் செல்லும் இடங்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடய…
-
- 0 replies
- 591 views
-
-
-ேசா.ஜெயமுரளி- இலங்கையின் இனக்குழும சிக்கலை தீர்த்து வைப்பதற்கு பிரித்தானியா எவ்வாறு உதவலாம் என்கின்ற வகையில் கடந்த மே மாதம் 02 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மூன்று மணிநேரம் சூடான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முக்கிய பகுதிகளை `ஞாயிறு தினக்குரல்' தந்து வருகின்றது. அந்த வகையில் பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அன்று லவ், இலங்கையில் ஐ.நா.வின் அனுசரணையுடன் அமைக்கப்பட வேண்டுமென சர்வதேச அமைப்புகளால் வலியுறுத்தப்படும் மனிதஉரிமைகள் கண்காணிப்பு ஆணைக்குழு குறித்த பிரித்தானிய அரசின் கருத்துப் பற்றி கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பிரித்தானிய இணை வெளிவிவகார அமைச்சர் கலாநிதி குவெல்ஸ் பதிலளித்திருந்தார். அமைச்சர் தனது பதிலில் மேலும் க…
-
- 0 replies
- 1k views
-
-
நாடுபூராவும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், அரசியல் பழிவாங்கல்கள், கைது, காணாமல் போதல் போன்ற மிக மோசமான சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் அது தொடர்பாக சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் கண்டனங்கள் எழுப்பப்படும் நிலையில் அதனை தட்டிக்கழிக்கும் போக்கொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதையே காணக்கூடியதாகவுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் மிக மோசமான வன்முறைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்தி நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையொன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் அயல்நாடான இந்தியா மற்றும் அமெரிக…
-
- 0 replies
- 719 views
-
-
சனி 26-05-2007 19:40 மணி தமிழீழம் [மயூரன்] யார் எதைக்கூறினாலும் அரச படைகள் வடகிழக்கில் வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள் - ஜனாதிபதி தற்போது சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் யுத்த முன்னெடுப்புக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்லது அது விடுதலைப் புலிகளுக்கு எதிரானது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனை சர்வதே உடங்கள் தவறாகப் புரிந்து தமிழ் மக்களுக்கு எதிரான யுத்த முன்னெடுப்புகளால் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை அரசாங்கம் புரிந்து வருவதாக பாரியளவில் பரப்புரைகளை மேற்கொண்டுவருதாகத் குறிப்பிட்டுள்ளார். யார் எதைக்கூறினாலும் அரச படைக…
-
- 5 replies
- 1.6k views
-
-
இன நெருக்கடிக்குத் தீர்வுகாண இந்திய மத்தியஸ்தம் அவசியம் - இலங்கையர்கள் நம்புவதாக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஹக்கீம் [27 - May - 2007] சென்னையிலிருந்து எம்.ஏ.எம்.நிலாம் இலங்கைப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்தியஸ்தமும் அவசியமென இலங்கையர்கள் நம்புவதாக, தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழகத் தலைநகர் சென்னையில் தற்பொழுது இடம்பெற்று வரும் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இலங்கையில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வைக் காண்பதற்கு இந்தியாவின் ஆதரவும் மத்தியஸ்தமும் தேவை என இலங்கை முழுவதும் நம்புவதாகவும் அவர் அங்கு சுட்…
-
- 0 replies
- 779 views
-
-
ஜனாதிபதியின் ஆலோசகர்களுக்கு மட்டும் மாதம் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபா சம்பளம்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் ஆலோசகர்களுக்கு அரசாங்கம் மாதாந்தம் எட்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்குகின்றது. மேலும் அவரது ஒருங்கிணைப்பு செயலாளர்களுக்கு இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 410 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகின்றது. மேலும் தொலை பேசி மற்றும் எரிபொருள் செலவினங் களுக்கும் வழங்கப்படுகின்றன. இவர்களில் வண.மாத்தனே அமர வன்ச தேரர், ஜயந்த தனபால, ஜயரத்ன பி.விஜயக்கூன், ஹரீந்திர விதானகே, வண வல்பொல பியானந்ததேரர், காமினி குணரத்ன மஞ்சு ஹொட் தொட்டுவ மற்றும் அனுரா சொலமன்ஸ் என்போர் ஜனாதிபதியின் ஆலோ சகர்களாக கௌரவ நிலையில் பணி யாற்றுகிறார்கள். சஜின் வாஸ் குணவர்த் தன மாத்திரம் ஒருங்கிணைப்புச் செ…
-
- 1 reply
- 870 views
-
-
ஒரு புறம் ராஜபக்ஷ சகோதரர்கள் அன்கோ, மறுபுறம் புலிகள் நாட்டை அழிப்பதாக ஐ.தே.க. தலைவர் குற்றச்சாட்டு [27 - May - 2007] * பலவீனமான நிலையில் புலிகளுடன் பேசமுடியாதென்கிறார் -ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் இணைந்து கொண்டு ஓரு புறம் நாட்டை அழிவுப்பாதையிலிட்டுச் செல்கின்றனர். மறுபுறம் புலிகள் நாட்டை அழிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதுபோன்றதொரு சூழ்நிலையில் ஒருபோதும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென தெரிவித்தார். பிட்ட கோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கல்விச் சேவையாளர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் கலந்துகொண்டு …
-
- 0 replies
- 826 views
-