ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
பொதுமைகளை மறந்து வேற்றுமைகளை பெரிதுபடுத்தினால் பிரிவினை கோஷத்தை தவிர்க்க முடியாது-(பீஷ்மர்) [15 - April - 2007] ஜனவரி முதலாம் திகதி எத்தனை சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் இலங்கையிலுள்ள தமிழர்கள், சிங்களவர்களுக்கு நமது வருடம் தான் வருடப்பிறப்பு, அதுதான் எங்கள் பண்பாட்டுத் திருவிழா. சிங்கள, தமிழ் மக்களுக்கு பொதுவாக அமையும் புதுவருடப் பிறப்பும் வைபவங்களும் பற்றிச் சிந்திக்கும் போது இலங்கை பற்றிய சில முக்கிய மத, சமூகவியல், அரசியல் உண்மைகள் புலனாகின்றன. இலங்கை நிலையில் வாழ்கின்ற எல்லோருமே முஸ்லிம்கள் உட்பட ஒரு உறவு முறையை கொண்டவர்கள் அதாவது எங்களுடைய சமூகங்களின் ஒழுங்கமைப்பு முறையில் அடிப்படையான ஒருமைப்பாடு உண்டு. மானிடவியல் துறையில் சமூக ஒழுங்கமைப்பில் உற…
-
- 0 replies
- 910 views
-
-
ஆட்சியை கவிழ்க்க ரணில் தீவிர முயற்சி -ஜோதிட எதிர்வு கூறலுக்கமைய காய்நகர்த்தல் [15 - April - 2007] [Font Size - A - A - A] யுத்தத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிய அரசியல் மோதலொன்று உருவாகி வருகின்றது. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜ யோகத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ராஜ்ய நிர்வாகத்திற்குமிடையிலான மோதலே இப்புதியதொன்று என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஆட்சிப் பொறுப்பு கிடைக்கும் என்ற ஜோதிடர்களின் ஆரூடத்தினால் உற்சாகமடைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அடுத்தமாதமளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். பல விவகாரங்கள் குறித்த…
-
- 0 replies
- 953 views
-
-
வெள்ளி 13-04-2007 18:12 மணி தமிழீழம் [செந்தமிழ்] தென்தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றிகள் விரைவில் அரங்கேறும் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா அரசாங்கம் போர்முனைகளில் இராணுவ வெற்றிகளை பெற்றுவருவதாக முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கான பதில் விரைவில் வழங்கப்படும் என விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்துள்ளார். களமுனைகளில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றியை ஈட்டியுள்ளதாக அரசாங்கம் முன்னெடுக்கும் பரப்புரைகளுக்கு விடுதலைப் புலிகள் செயற்பாடுகள் மூலம் பதில் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் மீது இ…
-
- 15 replies
- 4.8k views
-
-
புதிய அரசியல் பித்தலாட்டம் ` அரசியல்வாதிகள் என்றால் எதையும் எப்படியும் சொல்லலாம். அவரவர் வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்புடையதாகக் கூறலாம். தாம் முன்னர் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்மாறாகக் கருத்துக் கூறலாம். மக்கள் மறந்து விடுவார்கள்; அவர்கள் ஏமாளிகள்; அரசியல் மடையர்கள் என்று கருதியே எண்ணியே அரசியல்வாதிகள் இவ்வாறு நடக்கின்றார்கள். பெரும் சந்தர்ப்பவாதிகளாகத் திகழ்கின்றார்கள். அரசியல் என்பது வெறும் ஏமாற்றும், போக்கிரித்தனம் நிறைந்ததும் என்று அந்தச் சகதிக்குள் கால் வைப்பவர்களில் பலரும் நினைக்கின்றார்கள். தாங்கள் சொல்வதை எல்லாம், கேட்டுக் கேள்வி இல்லாமல், ஆய்வு ஆராய்ச்சி இல்லாமல், தேவாமிர்தம் என நினைத்து மக்கள் விழுங்கி விடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை அவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
எறிகணைவீச்சால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி மரணம். - பண்டார வன்னியன் Sunday, 15 April 2007 09:37 சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு கொழும்பில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆறுவயதுக் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். கன்னங்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து ஊறணி நலன்புரி மையத்தில் தங்கியிருந்த இந்தக்குழந்தை படையினரின் எறிகணைத்தாக்குதல் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சம்பரிசி தில்லையம்பலம் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. நலன்புரிநியைத்தில் வாழும் இந்தக்குழந்தையின் பெற்றோருக்கு சடலத்தை கொழு…
-
- 1 reply
- 815 views
-
-
'ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள்': நிமால் சிறீபால டீ சில்வா "ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா தெரிவித்த கருத்துக்கு சுதந்திர ஊடக இயக்கம், சிறிலங்கா ஊடகவியலாளர் தொழிற்சங்கம் என்பன தமது கடும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக அவர்களால் விடுக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "அரசாங்க மருத்துவமனைகளில் சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கு ஏதுவாக அமைச்சரினால் ஊடகத்துறையினருக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட கருத்தும் கண்டனத்துக்குரியது. சுகாதார சேவைகள் பிரிவில் ஏற்பட்ட சில குறைபாடுகளை சுட்டிக் க…
-
- 12 replies
- 2.3k views
-
-
அனைத்துலக கண்காணிப்புக் குழு அமைக்கப்படுவதற்கு ஐ.தே.க ஆதரவு சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட வேண்டும் என்பதனை தாம் ஆதரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் கண்காணிப்பு குழுவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளுர் விசாரணைகள் போதுமானதாக இருக்காது எனில், நாம் அனைத்துலக நாடுகளின் உதவிகளை பெறுவோம் என அங்கு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் போன உறவினர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஒரு ச…
-
- 0 replies
- 664 views
-
-
] "சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு புதிதாக எந்த முயற்சிகளும் ஆரம்பிக்கப்படவில்லை" என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. "புதிதாக இங்கு ஒன்றும் இல்லை, கடந்த வாரம் விடுதலைப் புலிகளை நாம் சந்தித்த போது புதிய அணுகுமுறைகளோ அல்லது புதிய திட்டங்களோ விவாதிக்கப்படவில்லை. அது ஒரு வழமையான சந்திப்பு" என போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தொபினூர் ஓமார்சன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்காணிப்புக் குழுவினர் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளை சந்தித்த போது, மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதற்கு அரசாங்கமும் பேச்சுக்க…
-
- 0 replies
- 696 views
-
-
இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர…
-
- 0 replies
- 634 views
-
-
ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும்: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர். ஆட்சிக்கு வந்தால் தமிழ் அகதிகள் உள்ள 'நௌரு' தடுப்பு நிலையம் மூடப்படும் என்பதே எமது கட்சியான தொழிற்கட்சியின் நிலைப்பாடாகும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கெவின் றட் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக வந்துள்ள 83 பேரையும் அகதிகளாக ஏற்க உதவ வேண்டும் எனக்கோரி பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அனுப்பிய கடிதத்துக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அளித்த பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவுஸ்திரேலியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெவின் றட் பிறிஸ்பேர்ன் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்திற்கு…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழில் கடந்த வாரம் 9 இராணுவத்தினரைக் காணவில்லை யாழ் குடாநாடு மந்துவிலில் கடந்த வாரத்தில் மட்டும் 9 சிறீலங்கா இராணுவத்தினர் காணாமல்ப் போயிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6 சிறீலங்கா இராணுவத்தினரும், புதன்கிழமை 3 இராணுவத்தினரும் காணாமல்ப் போயுள்ளனர். இவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மந்துவில் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.3k views
-
-
"சிறிபதிக்கு நேர்ந்த கதியே உனக்கும்" ஜோன்ஸனுக்கு தொலைபேசி வழியாக கொலை மிரட்டல். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸன் பெர்னாண் டோவிற்கு தொலைபேசி வழியாக தொடர்ந்தும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன என்று அவரே தெரிவித்திருக்கிறார். கோத்தபாய ராஜபக்ஷவை விமர் சிப்பதை நிறுத்தாவிட் டால், சிறிபதிக்கு நேர்ந்த கதி உனக்கும் ஏற்படும் என்றும், இல்லாவிட்டால் கொலைசெய்து புதைத்து விடுவோம் என்றும் தொலைபேசி மூலம் தன்னுடன் பேசிய ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஜோன்ஸன் உதயனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் குரு நாகல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சபா நாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இது குறித்து அ…
-
- 1 reply
- 1.5k views
-
-
திருமலையில் 23 பேர் கைது. திருமலை நகரப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் போது 23 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் தமது அடையாளங்களை நிரூபிக்கத் தவறியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். தமிழ் - சிங்கள புதுவருடத்தின் போதான பாதுகாப்பை முன்னிட்டே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் முடிவில் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் நீதிமன்றத்தில்…
-
- 1 reply
- 985 views
-
-
தமிழருக்கு சர்வ சித்திகளும்தரட்டும் சர்வசித்து ஆண்டு! எக்கணமும் தரிப்பின்றி, முன்னோக்கிச்சீரா கச் சுழன்று கொண்டிருக்கின்றது நேரச் சக்கரம். தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கின்றது காலநதி. காலதேவனின் இந்த நெறி தவறா இடை யறா அசைவியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக நியதி; தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம்; மாறாத யதார்த்தம். மனித இருப்பு என்பதும் வாழ்வு என்பதும் காலத்தின் பாதையில் இடம்பெறும் ஒரு பயணம். ஜீவனுள்ள அசைவியக்கம். இந்தப் பயணத்தில் ஒரு கணமும் தரித்து நிற்க முடியாதவாறு மனிதனை நகர்த்திச் செல்கிறது காலம். காலத்தில் மிதந்து கொண்டு நமது வாழ்வுப் பயணம் நகர்கிறது. நடந்து முடிந்தது இறந்தகாலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும், நடப்பது நிகழ்காலமாகவும் நம…
-
- 1 reply
- 788 views
-
-
வத்திக்கான் செல்கிறார் மகிந்த [வெள்ளிக்கிழமை, 13 ஏப்ரல் 2007, 14:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] வத்திக்கானில் பாப்பரசர் பெனடிக்ட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச உள்ளார். வத்திக்கானுக்கு எதிர்வரும் வாரம் மகிந்த் ராஜபக்ச பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாப்பரசர் விடுத்திருந்த ஈஸ்டர் திருநாள் செய்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் வன்முறைகளை நிறுத்தி பேச்சுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கத்தோலிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு பாப்பரசரை மகிந்த சந்திக்க உள்ளார். இக்குழுவில் வெளிவிவகார அ…
-
- 13 replies
- 2.4k views
-
-
‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... ‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’ தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு! போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம். ‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கபட்டு இருக்கிறீர்கள்? ஆனால், இதே சட்டத்தில் வழக்குப் போடப…
-
- 0 replies
- 670 views
-
-
வெள்ளி 13-04-2007 21:52 மணி தமிழீழம் [மகான்] ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் படையினரால் உழப்பட்டு தென்னமரங்கள் நாட்டப்படுகின்றன வாகரை ஆக்கிரமிப்புக்கு பின்னர் வாகரை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிறீலங்காப் படையினரால் உடைக்கப்பட்டு நிலம் உழப்பட்டு அங்கு படையினரால் தென்னமரங்கள் நாட்டப்படுவதாக தெரியவருகிறது. இதேநேரம் வாகரையில் பழைய விகாரை ஒன்று இருந்ததாகத் தெரிவித்து படையினர் வெள்ளரசம் மரம் ஒன்றை அங்கு கொண்டுவந்து நாட்டியுள்ளதாக திருமலைச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் தற்பொது தமிழர்ர் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருதை அவதானிக்கக்கூடியதாக தெரியவருகிறது. மூலம் - பதிவு
-
- 1 reply
- 1.7k views
-
-
இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது ஏப்ரல் 12, 2007 தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த 12 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தூத்துக்குடிக்கு கிழக்கே மன்னார் வளைகுடா பகுதியில் 12 பேர் கொண்ட மரியா என்ற படகு வந்தது. அதை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அதிலிருந்த அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கடல் கொள்ளையர்களா அல்லது தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வந்தவர்களா என ப…
-
- 44 replies
- 8k views
-
-
ஹாட்லியில் 6 மாணவர்களுக்கு 10 ஏ 8 பேருக்கு 9 ஏ, 13 பேருக்கு 8 ஏ கடந்தவாரம் வெளியான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 6 மாணவர்கள் 10 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சிறப்பாகத் தேறியிருக்கிறார்கள். மேலும், 8 மாணவர்கள் 9 பாடங்களிலும் 13 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகள் பெற்றிருப்பதாக கல்லூரி அதிபர் நடராஜா தெய்வேந்திரராஜா அறிவித்திருக்கிறார். சண்முகரத்தினம் கோகுல், சுபேந்திரன் பிரசாந், சிவராஜா ராகுலகீதன், ரவீந்திரன் செந்தூரன், கதிரமலை உமாசுதன், ஞானசம்பந்தன் அபிராம் ஆகிய மாணவர்களுக்கு 10 பாடங்களிலும் ஏ சித்தி கிடைத்திருக்கிறது. 9 பாடங்களில் ஏ சித்தி பெற்றவர்களின் விபரம் வருமாறு: அரியரத்தினம் அஜந்தன், தர்மகுலசி…
-
- 15 replies
- 3.1k views
-
-
கடற்படையினரால் பத்து வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:31 தீவகத்தில் உள்ள மண்கும்பான் பகுதியில் சிறுமி மீது கடற்படையினர் பாலியல் வல்லுறவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற பத்து வயது சிறுமி மீது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இந்தப் பாலியல் வன்செயல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனை இரண்டு கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ள மண்கும்பான் பகுதியில் இருந்து இந்த குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் சிறுமியின் பெற்றோர்கள் தமது வீட்டிலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதிலும் கடற்படையினர் அவர்களை பயமுறுத்தி யாழ்ப்ப…
-
- 7 replies
- 2.8k views
-
-
வான்புலிகள் வீசியது 6 குண்டுகள்: சிறிலங்கா அரசாங்கம். கட்டுநாயக்க சிறிலங்கா வான்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் 6 குண்டுகளை வீசியதாக சிறிலங்கா அரசாங்க ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், 6 குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றில் 5 வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிலங்கா வான் படையினரோ முன்னர் 4 குண்டுகளையே வான்புலிகள் வீசியதாகத் தெரிவித்திருந்தனர். வான் புலிகளின் தாக்குதல் தொடர்பான வான்படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படக்கூடும் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. -Puthinam
-
- 4 replies
- 2.4k views
-
-
கிழக்கு மாகாணம் இரு மாதங்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும் - படைத் தளபதி. தமிழர் தாயகத்தின் கிழக்குப் பகுதியை இன்னும் இருமாதங்களுக்குள் சிங்களப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர் என கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத் தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார். தற்பொழுது கிழக்கின் பகுதிகளில் கைப்பற்றி படிக்படியாக முன்னேறும் நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். இதேநேரம் கிழக்கு மாகாணத்தை தமிழ் சி்ங்களப் புத்தாண்டுக்குள் கைப்பற்றிவிடுவோம் என சீறீலங்கா அதிபர் தெரிவித்திருந்த போதும் கிழக்கு மாகாண தளபதி தயா ரட்ணநாயக்க தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. -Pathivu-
-
- 12 replies
- 2.7k views
-
-
வெள்ளி 13-04-2007 17:00 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கு மாகாணத்தில் பணிகள் இரட்டிப்பு - உலக உணவுத் திட்ட அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமது பணிகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மூவாயிரம் தொன் அரிசியை நிவாரண உதவியாக வழங்கியிருப்பதாகவும், உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் அன்பளிப்புச் செய்த 17 இலட்சம் அமெரிக்க டொலர் நிதியுதவியில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக, உலக உணவுத் திட்ட அமைப்பின் அறிக்கையில் க…
-
- 0 replies
- 718 views
-
-
கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேசம் உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - செ.கஜேந்திரன். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 17:10 யாழ்குடாநாட்டில் தொடரும் ஆட்கடத்தல்களையும் கொலைகள், பாலியல்வல்லுறவுகள் போன்ற சம்பவங்களைத் தடுத்துநிறுத்தக் கோருவதுடன் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க சர்வதேசம் உண்மையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்குடாநாட்டில் ஏப்ரல் மாதம் 01ம் திகதிக்குப் பின்னர் 10நாட்களில் மட்டும் 05பேர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 06பேர் கடத்தப்பட்டுமுள்ளனர். இவை அனைத்தும் சிங்கள இராணுவத்தினராலும் துணைஇராணுவக்குழுவினரான ஈ.பி.டி.பி யினராலுமே மேற்கொள்ளப்பட்ட…
-
- 0 replies
- 661 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற ஒன்று இல்லை எனவும், ஒப்பந்தம் இருப்பதாகக் கூறுவதில் அர்த்தம் இல்லை என்றும், சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வார்த்தை அளவில் மாத்திரமே அர்த்தமற்ற ஒப்பந்தமாக இது இருக்கின்றது என்றும், அசோசியேட் பிறஸ் ஊடகத்துடனான நேர்காணலில் கோதபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். கடந்த சில மாதங்களில் கிழக்கில் விடுதலைப் புலிகளுடனான போரில் கணிசமான வெற்றிகளை தமது இராணுவம் பெற்றது என்றும், இந்த வெற்றி தற்பொழுது வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் கோத்தபாய மேலும் கூறினார். சிறீலங்கா அரசுத் தலைவர் ம…
-
- 9 replies
- 2.1k views
-