Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் பேரூந்து தீக்கிரை [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 08:09 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். மருதனார்மடம் விவசாயக் கல்லூரிப் பண்ணைக்கு அருகில் மாணவர் குழுவினரால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் சென்று கொண்டிருந்த 64 ஆம் இலக்க பாதைக்கான பேரூந்தினை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பயணிகளை இறக்கிவிட்டு எரியூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரூந்து எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரின் முகாம் உள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை துண்டு…

  2. புலிகளா? சர்வதேசமா? மக்களே தீர்மானிப்பர் -சி.இதயச்சந்திரன்- இலங்கையின் வான் பாதுகாப்பிற்கு இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன. விசேட தூதுவர்களின் இந்தியப் பயணம் சொல்லப்படாத செய்திகள் பலவற்றை இருபுறமும் காவிய வண்ணமுள்ளன. மீனவர் கடத்தல் தொடர்பான பிரச்சினையோடு, தமிழக எழுச்சியை மௌனமாக்கும் காரியங்கள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மீனவர்களை விடுவிக்கும் வரை, இராணுவ தளபாட உதவிகளை இலங்கைக்கு வழங்க வேண்டுமென 'தினமணி" செய்தி கூறுகின்றது. இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் சீராகச் செல்லும் இவ்வேளையில், நேரடிப் பிரசன்னத்திற்கான தடையாகவிருப்பது போர் நிறுத்த ஒப்பந்தம். அவ்வொப்பந்தம் உடைவதற்கு தானொரு மூல க…

  3. 'விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா தொடர்புகளைப் பேணுவது உபயோகமானது': முன்னாள் அமெரிக்க தூதுவர் "தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் 2003 ஆம் ஆண்டில் இருந்த நேரடி உறவு விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கையை வளர்த்து அவர்களை பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து விலகி வர வழிவகுத்திருந்தது. அவர்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்கும் அளவுக்கு அது முன்னேற்றமும் அடைந்திருந்தது." 'சிறிலங்காவின் அமைதி முயற்சிகளில் அமெரிக்காவின் பங்கு' என்ற தலைப்பில் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெஃரி லுன்ஸ்ரெட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: …

  4. செவ்வாய் 15-05-2007 04:16 மணி தமிழீழம் மயூரன்ஸ விடுதலைப்புலிகளுடன் அமெரிக்கா நேரடியாக தொடர்பு ஏற்படுத்தியிருப்பின் அது பயனுடையதாக அமைந்திருக்கும் - முன்னாள் அமெரிக்க தூதுவர் 2003 ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கா விடுதலைப்புலிகளுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை பயன்படுத்தியிருப்பின் அது அநுகூலமாக அமைந்திருக்கும் என முன்னாள் அமெரிக்க தூதுவர் திரு.லங்செட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நேரடித்தொடர்பு விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாத’ போக்கில் இருந்து விடுவித்திருக்கக்கூடிய அதேசமயம் அவர்களை வெளிநாட்டு பயங்கரவாத பட்டியலில் இருந்தும் விடுவித்திருக்கும் என்று கூறியுள்ளார். சிறீலங்காவிற்கு பாரிய இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்யாதிருப்பதை சுட்டிக்க…

  5. செவ்வாய் 15-05-2007 02:56 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் இருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் யாழ் குடாநாட்டில் இருவர் கடத்திச் செல்லப்பட்டு, காணாமல்ப் போயிருப்பதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் நேற்று முறையிடப்பட்டுள்ளது. வெள்ளை சிற்றூந்தில் சென்ற படைப் புலனாய்வு ஆயுத தாரிகள் இளைஞரான 22 வயதுடைய இராசலிங்கம் நாகராஜாவை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கடத்திச் சென்றுள்ளனர். காரைநகர் தோப்புக்காட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தற்காலிகமாக வட்டுக்கோட்டையில் வசித்துவந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்டார். இதேவேளை, கைதடி தபால் நிலையத்தில் தபால் விநியோகப் பணியாளராகப் பணிபுரிந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் சிவதர்ஸன் என்ற மற்றொரு இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை பட…

  6. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஊழியர்களுக்கு உயிர் அச்சுறுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரம் ஒன்று சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களினால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு ஒட்டப்ட்டுள்ளது. நாட்டைக்காக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்டள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த முறையில் எண்ணிக்கை ரீதீயாக கொலை செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துணைபுரிந்த குற்றத்திற்காக கலைப்பீடத்தில் 86 பேருக்கும், முகாமைத்துவப் பீடத்தில் 67 பேருக்கும், மருத்துவ பீடத்தில் 38 பேருக்கும், விஞ்ஞான பீடத்தில் 27 பேருக்கும், சித்த பீடத்தில் 7 பேருக்கும்,…

  7. இலங்கை சென்ற நோர்வே தமிழ் இளைஞரைக் காணவில்லை [திங்கட்கிழமை, 14 மே 2007, 17:58 ஈழம்] [அ.அருணாசலம்] நோர்வே நாட்டின் குடியுரிமை பெற்ற சௌந்தரராஜன் தம்பிராஜா (வயது 31) என்ற தமிழ் இளைஞர் கடந்த மார்ச் 31 ஆம் நாளில் இருந்து இலங்கையில் காணாமல் போய் உள்ளார். காணாமல் போவதற்கு முன்னர் இவரை சிறிலங்காப் படையினர் விசாரணை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 1993 ஆம் ஆண்டில் இருந்து 13 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்த சௌந்தரராஜன் தம்பிராஜா, கடந்த வருடம் தனது திருமண விடயமாக இலங்கை சென்றிருந்தார். அவ்வேளையில், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் உக்கிரமடைந்த மோதல்களைத் தொடர்ந்து கிளிநொச்சியில் தங்கியிருந்தார். இந்நிலையிலேயே கடந்த மார்ச் மாதம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்க…

  8. க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை. இலங்கையில் இறுதியாக நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை என்று சிறிலங்காவின் கல்விப் பொதுப் பரீட்சைகள் ஆணையாளர் அனுரா எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 2,98,358 பாடசாலை மாணவர்கள் உட்பட 5,25,000 மாணவர்கள் இந்த பரீட்சையில் தோற்றி இருந்தனர். இதில் 48.7 வீதமான மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு தெரிவாகி உள்ளனர். பரீட்சைக்கு தோற்றியவர்களில் 21,813 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதில் 4,128 பேர் கொழும்பு மாவட்டம், 3,564 பேர் மத்திய மாகாணம், 3,404 பேர் தென் மாகாணம், 2,668 …

    • 5 replies
    • 1.9k views
  9. ஜனாதிபதி பதவி ஒழிப்பு நெடுகிலும் ஒரு பகிடிப் பேச்சு [14 - May - 2007] இலங்கை 29 வருடகாலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இருந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அந்த ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் அல்லது காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், ஒருபோதுமே அது தொடர்பில் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சிகள் மானசீகமாக முன்வந்ததில்லை. கடந்தவாரம் கூட பாராளுமன்றத்தில் சபை முதல்வரான சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்து அதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுக்…

  10. யாழ்நகரில் முக்கிய சந்திகளில் படையினரின் சோதனைகள் தீவிரம் யாழ்நகரின் முக்கிய சந்திகள் மற்றும் வீதிகளில் கடந்த சில தினங்களாக வாகனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துவிச்சக்கரவண்டிகள் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பயணிப்போர் வழிமறிக்கப்பட்டு உடற்சோதனைகள், ஆள் அடையாள அட்டை பரிசோதனைகளுக்குட்படுத்தப்ப

  11. மகனை விடுதியில் மறைத்து வைத்துவிட்டு காணாமல்போனதாக நாடகமாடிய தந்தை கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சிறுவனான தனது மகனை தங்க வைத்துவிட்டு, மகன் இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டுள்ளாரென பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த ஒருவரை வத்தளை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளனர். இதேவேளை, இந்த நபர் இந்தியாவிலுள்ள தனது மனைவியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மகன் கடத்தப்பட்டுள்ளாரெனவும் அவரை மீட்க 8 இலட்சம் ரூபா கோரப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரஜையான குறித்த சந்தேக நபர் இலங்கையில் உள்ள தனது சட்டபூர்வமற்ற மனைவிக்காக நாட்டில் தற்போது நிலவும் உண்மைக் கடத்தல் சம்பவங்களுடன் சம்பந்தப்படுத்தி மகனை மறைத்து வைத்து பொலிஸாரையும்…

    • 3 replies
    • 3.3k views
  12. இந்திய மீனவர்களின் படுகொலை; கூட்டு விசாரணைக்கு இலங்கை தயார் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து கூட்டு விசாரணைகளை மேற்கொள்ளத் தயாரென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். `எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. நாங்கள் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக நடந்து கொள்வோம்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 1991 முதல் 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை இலங்கை கடற்படை 77 இந்திய மீனவர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பாலித கோஹண இதனை குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு…

  13. இலங்கைக்கான ஆயுத விற்பனையை இவ்வருடம் நாற்பது மடங்காக அமெரிக்கா அதிகரித்துள்ளது இலங்கைக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா இவ்வருடம் நாற்பது மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்டியங்கும் சுயாதீன நிபுணர் குழுவான பாதுகாப்பு தகவல் நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா இலங்கைக்கு 1.4 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த் தளபாடங்களை விற்பனை செய்திருந்தது. இவ்வருடம் இந்த ஆயுத விற்பனை நாற்பது மடங்கால் அதிகரிக்கப்பட்டு இதுவரை 60.8 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுத விற்பனை இவ்வருடம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. இலங்கையில் போர்ச் சூழல் அதிகரித்து வருவதால் இலங்கைப் ப…

    • 5 replies
    • 1.6k views
  14. உலகில் எந்த நாடு எம்மை எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் உலகில் எந்த நாடு எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போரை கைவிடமாட்டோமென சூளுரைக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மிக விரைவில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கெதிராக உயிர் நீத்த படையினரின் அபிலாஷைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றுமென்றும் உறுதியளித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற "விருமபவ சுரகிமு" (வீரமகனின் தாயைப் பாதுகாப்போம்) என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார். யுத்த களத்தில் மரணமாகும் படையினரின் தாய்மாருக்கு நிதியுதவி வழங்கும் திட்டம…

  15. இந்திய மீனவர்கள் படுகொலை: இலங்கையின் மறுப்புக்கு இந்தியப் பதில் மெளனம் புதுடில்லி, மே 14 கடந்த காலங்களில் தமிழக மீனவர் கள் படுகொலைகளில் இலங்கைக் கடற் படையினர் தொடர்புபட்டிருந்தனர் என்று புதுடில்லி தெரிவித்த கருத்துகளை மறுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளி யிட்ட கருத்துகளுக்கு இந்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றது. இது விடயங்களைத் தெளிவுபடுத்து மாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு 48 மணிநேரத்திற்கு மேலாகியும் புதுடில்லி எந்தவிதமான பதிலையும் தெரிவிக்கவில்லை என்று ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டில் இதுவரை இந்திய மீனவர்கள் 77 பேர் கொல்லப்பட்டமைக்கு இலங்கைக் கடற்படையே பொறுப்பு என்று இந்தியப் பாதுகாப்பு அம…

  16. மட்டக்களப்பு அகதிகளை மீளக்குடியமர்த்தும் பணி இன்று ஆரம்பமாகிறது கொழும்பு,மே14 மட்டக்களப்பு அகதிகள் இன்றுமுதல் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். முதற்கட்டமாக வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் பேரை இன்று முதல் இம்மாதம் 24 ஆம் திகதி வரை குடியமர்த்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்படுகிறது. அகதி முகாம்களில் இருந்து அகதிகளை அவர்களது சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 17 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. குடியமர்த்தப்படும் பகுதிகளில் வீடு கள் சேதமடைந்திருப்பின் அவ்வீடுகளுக் குப் பதிலாக தற்காலிக கூடாரங்கள் வழங் கப்படும் என்றும் பிறகு மதிப்பீடு செய்து வீடுகள் திருத்த…

  17. இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அமெரிக்கா விசேட பிரதிநிதியை நியமிக்கும்? வாஷிங்ரன்,மே14 இலங்கை விவகாரத்துக்கென, விசேட தூதுவர் ஒருவரை அமெரிக்க அரசாங்கம் விரைவில் நியமிக்கலாம். இதற்கான சாத் தியக்கூறுகள் நிறையவும் உண்டு என்று ராஜாங்கத் திணைக்கள வட்டாரங்கள் இங்கு தெரிவித்துள்ளன. இலங்கை இனப்பிரச்சினையில், அதிக அளவில் பங்காற்றும் பொருட்டு விசேட தூதுவர் ஒருவரை நியமிப்பது அவசிய மென அமெரிக்க ராஜாங்க வட்டாரங்கள் கருதுகின்றன. இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு அழைத்துவர வேண் டும் என்பதே எமது அக்கறையாகும். கடந்த பல வருடங்களாக பேச்சுக்கள் நடை பெறுவதும், முறிவடைந்து தடைப் படுவதும் பெரும் சிக்கலாக மாறிவிட்டது. இந்த …

  18. இலங்கைக்கான உதவிகளை முடக்க மற்றும் பல வெளிநாடுகள் முஸ்தீபு! ஜப்பானும் சுவீடனும் தயாராகின்றன இலங்கைத் தமிழர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மறுத்து வருவதுடன், மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் தவறி வரும் கொழும்பு அரசுக்கு எதிராக பூர்வாங்க நடவடிக்கையாக அந்நாட்டுக்கான தமது உதவித் திட்டங்களை முடக்கும் நடவடிக்கைகளில் மேலும் பல வெளிநாடுகள் தயாராகி வருகின்றன என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மன், பிரிட்டன், அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபடவிருக்கின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் மோசமாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் …

  19. போர்வெறிப் போக்கால் பொருளாதாரச் சீரழிவு! மீண்டும் ஒரு தடவை கடந்த வெள்ளிக்கிழமை யன்று சத்தம் சந்தடியின்றி எரிபொருள்களின் விலை யைக் கூட்டியிருக்கின்றது இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம். ஆறு வார காலத்துக்குள் மூன்றாவது எரிபொருள் விலை அதிகரிப்பு இது. இது மாத்திரம் அல்ல. எரிபொருள் விவகாரத்தில் இன் னும் விலை அதிகரிப்புகள் வரிசையாக வருவதற்குக் காத்தி ருக்கின்றன என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கின்றார் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல். மோசமடைந்து, அதலபாதாளத்துக்குள் வீழ்ந்து கொண் டிருக்கும் இலங்கைத் தீவின் பொருளாதார நிலைவரத்தால் தொடர்ச் சங்கிலி நிகழ்வுகளாக இன்னும் பல மோசமான பின்னடைவுகள் இடம்பெறப் போகின்றன என்பதை பொரு ளியல் நிபுணர்கள் முன்கூட்டியே எ…

  20. சிறிலங்காவில் தேசிய அரசு அமைக்க மகிந்த சம்மதம். மூத்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கு அமைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் இந்த திட்டத்தை கடந்த ஜனவரியில் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சரான தனது நண்பரின் ஊடாக பிரேரித்திருந்தார். இரு பெரும் அரசியல் கட்சிகளினாலும் இனப்பிரச்சனைக்கு ஒரு தெளிவான தீர்வை முன்வைக்க முடியவில்லை. எனவே புதிதாக ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்தவை இணங்க வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கட்சி தாவிய உறுப்பினர்…

  21. எமது பிரச்சினையில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை: ரட்ணசிறி [திங்கட்கிழமை, 14 மே 2007, 05:41 ஈழம்] [அ.அருணாசலம்] பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என்று சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க அனைத்துலக ஞபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது அவர் மேலும் தெரிவித்ததாவது: நாம் மனித உரிமைகளை மீறுவதாக சில நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் அந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை யாரும் குற்றம் சாட்டுவதில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் அரசு கைவிட முடியாது. எமது படையினரின் தியாகங்க…

  22. புலிகள் மீதான தடை சரியா? தவறா? -சோ.ஜெயமுரளி- இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம். `இலங்கைத் தம…

  23. புலிகளின் விமானப்படை இந்தியாவுக்கு வலிப்பது ஏன்? (கலைஞன்) ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் தனது ஜென்ம விரோதியான பாகிஸ்தானின் விமானப் படையைவிட விடுதலைப் புலிகளின் விமானப் படை ஆபத்தானதென காட்டிக் கொள்வது போல் இந்திய அரசின் அண்மைக் கால நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன் புலிகளின் விமானப் படையால் தமது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தாக்கப்படலாமென கூறிவருவது தொடர்பில் இராணுவ ஆய்வாளர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது ஒருவகையில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டு வரும் இந்திய மத்திய அரசு தற்போது விடுதலைப் புலிகளின் விமானப்படை தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலிகளின் விமானப் படை தொடர்பாக கடந்த ப…

  24. தமிழர் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கூடமுன் வைக்க முடியாத நிலையில் அரசு -(பீஷ்மர்) சென்ற வாரத்து மழை வெள்ள `புதினத்தினால்' அரசாங்கத்துக்கு சில நன்மைகள் கிடைக்காமலில்லை. கொழும்பின் வெள்ளப் பிரச்சினை காரணமாக சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனை பற்றிய ஆழமானதொரு விவாதம் நடக்காமலேயே போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கஜேந்திரன் எம்.பி. பாராளுமன்றத்துக்குள் காட்டிய எதிர்ப்பைத் தவிர தமிழ் மக்களின் நிலைபாடு பற்றி எதுவுமே அறிய முடியாது போய்விட்டது எனலாம். சுதந்திரக் கட்சியின் ஆலோசனைகள் பற்றிய போதாமையும் நிச்சயமின்மையும் பற்றிய அம்சங்களை மீளமீள பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிங்களத்துவ குரலின் நிச்சயமான பிரதிபலிப்புகளிலொன்று என…

    • 0 replies
    • 670 views
  25. உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் புதுடில்லி விரைவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் புதுடில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதி

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.