ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
'விளையாட்டு - அரசியல் - மொழி - நாட்டுப்பற்று!' உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டி விளையாட்டின் வெற்றியின்- ஊடே, தனது இனவெறி அரசின் அரசியல் பரப்புரையை, மேற்கொள்ள முனைந்த சிறிலங்கா அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் சிறிலங்கா அணியை, அவுஸ்திரேலிய அணி வெற்றி கொண்டுள்ளது. வெளிநாட்டில் இப்படிப்பட்ட ஒரு தோல்வியை, சிறிலங்கா அடைந்துள்ள அதே நேரத்தில், உள்நாட்டில்- சிறிலங்காவிலும் இன்னுமொரு மாபெரும் தோல்வியையும், இழப்பையும் அது அடைந்துள்ளது. சிறிலங்காவின் இரண்டு பிரதான பெற்றோலிய எரிபொருள் களஞ்சியங்கள்மீது வான் புலிகள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள். சிறிலங்காவின் பேரினவாத அரசுகள் தமிழீழ மக்களி…
-
- 1 reply
- 806 views
-
-
விமான தாக்குதல் தொடர்பில் ஜே.வி.பி.யும் ,ஹெல உறுமயவும் மௌனம் காப்பது ஏன்? நாட்டில் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏன் மௌனமாக இருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பினார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: விடுதலைப்புலிகள் நான்காவது தடவையாகவும் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டனர். ஆனால், அரசாங்கத்தினால் எந்தவொரு தாக்குதல்களையும் முறியடிக்க முடியவில்லை. புலிகள் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டதும் அரசாங்கம் அப்பகுதியில் மி…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழ் எம்.பி.க்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை: இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் பேட்டி மானாமதுரை, மே 1: இலங்கையில் தமிழ் எம்.பி.க்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தமிழர் தேசிய இயக்க மாநிலப் பொதுச்செயலர் கா. பரந்தாமன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் விடுதலைப் புலிகள் மூன்றாவது முறையாக விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இப்போது அவர்களது பலம் இலங்கை அரசுக்குத் தெரிந்திருக்கும். புலிகளை ஆதரிக்கும் தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென தமிழகத்தில் ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் பேசி வரும் நிலையில்…
-
- 1 reply
- 798 views
-
-
பிரான்ஸ் மே நாளில் 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு இன்றைய மேதின ஊர்வலம் Republique ல் ஆரம்பித்து Nation ல் முடிவடைந்தது இதில் 8000ற்கு மேற்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு கோசங்களை எழுப்பியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும், எமது தலைவர் பிரபாகரன் என்ற கோசங்களுடனும் பிரெஞ்சு மொழிகளிலான துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தும் சிறப்பித்தனர். இவ் ஊர்வலத்தில் தமிழ்ச்சங்கங்கள், இளையோர் அமைப்பு, விளையாட்டுக்கழகங்கள், வர்த்தக சங்கங்கள், உதைபந்தாட்டச்சம்மேளனம், தமிழ்ச்சோலைகள், ஏனைய பிற பாடசாலைகள், சங்கங்கள், வர்த்தகர்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வர்த்தகர்கள் மதியம் 1 மணியுடன் தமது நிறுவனங்களைப்பூட்டியும் கலந்து கொண்டனர். இறுதியாக பாதர். இம்மானுவேல் அடி…
-
- 4 replies
- 1.3k views
-
-
கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தற்போது நடைபெறும் மோதல்களை ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 01-05-2007 23:00 மணி தமிழீழம் [கோபி] சித்தாண்டித் தாக்குதல் இனப் படுகொலை தான் - ஜெயானந்தமூர்த்தி மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள சித்தாண்டி பகுதியில் மூன்று பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இப்படுகொலையைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது” மட்டக்களப்பு மாவட்டத்தில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்த வண்ணமே உள்ளது. சிறிலங்கா படையினராலும் மற்றும் ஆயுத குழுக்களாலும் பொதுமக்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் கண்மூடித்தனமான சூட்டுச் சம்பவங்களாலும் கொலை செய்யப்…
-
- 0 replies
- 847 views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்தது பிரித்தானிய நாடாளுமன்றம். இலங்கையில் தமிழர்கள் நீதியான அமைதியுடனும் கண்ணியத்துடனும் வாழவும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அனைத்துக் கட்சிக் குழு ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் அமைத்துள்ளது. தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஜ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். லண்டனில் சிறிலங்கா அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்பு பங்கேற்கும் மாநாடு ஒன்றை லண்டனில் நடத்துவதற்கான செயற்பாடுகளையும் இந்நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும். இலங்கையின் நிலைமைகளை குறிப்பாக இனப்பிரச்சனையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்ப…
-
- 15 replies
- 2.7k views
-
-
செவ்வாய் 01-05-2007 20:05 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னியில் வான்தாக்குதல் வன்னியில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான வான்கலங்கள் நேற்றுக் காலையும், பிற்பகலிலும் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் வான்வழித்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. ஏ-9 வீதிக்கு சமீபமாகவே குண்டுவீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. விடுதலைப்புலிகள் மீதும் அவர்களது இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்துவதாக கூறிக்கொண்டு பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக தெரியருகிறது. pathivu
-
- 1 reply
- 1.6k views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது கடும் நடவடிக்கை கோரி சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய உளவுப் பிரிவு தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து இந்த மூன்று எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இது குறித்து ராமநாதபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான ஹசன் அலி நிருபர்களிடம் பேசுகையில், எனக்கும் ஞானசேகரன், சுதர்சனம் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவு மாநில அரசுக்கு தகவல் தந்துள்ளது. இதை மாநில அரசு எங்களிடம் தெரிவித்தது. ேமலும் எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் அரசு…
-
- 6 replies
- 2.3k views
-
-
புலிகளின் வானூர்திகளை இலங்கை விமானப் படை விமானங்களால் வழி மறித்து தாக்கமுடியாது: முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க. சிறிலங்கா வான்படையிடம் உள்ள கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளினால் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது என்று சிறிலங்கா வான்படையின் முன்னாள் தளபதி ஹரி குணதிலக்க தெரிவித்துள்ளார். "ஹிந்துஸ்தான் ரைம்ஸ்" ஏட்டுக்கு அவர் தெரிவித்துள்ள கருத்து விவரம்: மரங்களை அழிக்க அவற்றின் கீழ்ப்புறத்தை வெட்டுவது போல புலிகளின் வானூர்திகளை தரையில் வைத்து அழிக்க வேண்டும். கிபீர்களாலும் மிக்குகளாலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை இடைமறித்து தாக்கமுடியாது. அந்த வசதிகள் அவற்றுக்கு கிடையாது. ஆனால் அவற்றால் குண்டுகளைப் போடமுடியும். விடுதலைப்…
-
- 15 replies
- 2.8k views
-
-
இடம்பெயர்ந்தோர் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் மூவரை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது. ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டியில் ஒரு பெண் உட்பட மூவரை ஞாயிற்றுக்கிழமையயன்று சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்தது. குடாவெட்டை இறால்குளத்தைச் சேர்ந்த பொன்னுசாமி செல்லதுரை (வயது 46), சித்தாண்டி பெருநாவேலியைச் சேர்ந்த நாகலிங்கம் திருச்செல்வம் (வயது 42) பூபாபல பிள்ளை பூமணி (வயது 30) ஆகியோர் தங்களது விவசாய செயற்பாடுகளை பார்க்கச் சென்றபோது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். மூவரின் உடல்களும் சிறிலங்கா இராணுவ காவலரண் அர…
-
- 0 replies
- 747 views
-
-
மனித உரிமை மீறல்கள்: பாதுகாப்புப் பிரிவின் 30 பேர் கைது [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 15:13 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்க இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பவ்ரெல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் பொதுநலப் பணிகளில் ஈடுபட்ட தலைவர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புடைய 452 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பான எமது அமைப்பின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது. இதுவரை பொதுமக்களிடமிருந்து ஆயிரக…
-
- 7 replies
- 1.5k views
-
-
பெண்களை ரகசிய இடங்களில் வைத்து விசாரிக்கும் படையினர். Written by Ellalan - May 01, 2007 at 12:46 PM பண்ணை அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி ஊடாக பயணம் செய்யும் ஆண்களை படையினர் சோதனை என்ற பெயரால் சேட்டுகளை கழற்றி சோதனை செய்வதுடன் பெண்களை ரகசிய மறைவிடங்களுக்கு அழைத்துச்சென்று சோதனை செய்வதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள் உளவியியல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் படையினரின் பாலியல் சேட்டைகளுக்கும் உள்ளாகுவதாகவும் அடையாள அட்டைகளை கேட்கும் படையினர் அடையாள அட்டைகளுடன் பெண்களின் கைகளை சேர்த்து பிடிக்கும் அநாகரிகமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன்; பெண்கள் மீதான மீதான பாலியல் வன்முறைகளிலும், ஆண்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளிலும் ஈடுபட்ட இரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
வேலனையில் இனந்தெரியாதோரால் கடற்படையினர் இருவர் வெட்டிக்கொலை. வேலனை முடிப்பிள்ளை கோயிலுக்கு அண்மையாக உள்ள பகுதியில் வைத்து கடந்த ஞாயிறு காலை இரண்டு கடற்படையினர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொல்லப்பட்டதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிவில் உடையில் ஈருளியில் சென்றுகொண்டிருந்த போதே மறைந்திருந்த இனந்தேரியாதோர் வாள்களால் கடற்படை சிப்பாய்கள் இருவரையும் சம்பவ இடத்தில் வெட்டிக் கொன்றதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் ஆறு அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இவ்வுடல்களை கொடூரமாக வெட்டி சிதைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-
-
- 1 reply
- 1.4k views
-
-
மலையக சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் [01 - May - 2007] பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் 90 சதவீதமான சிறுவர், சிறுமியர்கள் பல தரப்பட்ட துன்புறுத்தல்களுக்குள்ளாக்
-
- 0 replies
- 807 views
-
-
மே தினத்தை கொண்டாட அரசுக்கு அருகதையில்லை [01 - May - 2007] * அடைக்கலநாதன் எம்.பி. தற்போதைய அரசு தொழிலாளர் தினமான மே தினத்தைக் கொண்டாடுவதற்கு எவ்வித அருகதையும் அற்றது என்பது எனது கருத்தாகும். இலங்கை வாழ்மக்கள் யாவரும் நாளாந்தம் துன்பத்திற்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 744 views
-
-
ராஜபக்ஷ அரசின் மீது நம்பிக்கை இல்லை புதிய ஆட்சியை அமைக்க அணிதிரள்வோம் [01 - May - 2007] [Font Size - A - A - A] * மே தினக்கூட்டத்தில் ஜே.வி.பி.அழைப்பு ப.பன்னீர்செல்வம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினருக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப்போவதில்லையென்பது நிரூபணமாகியுள்ளதென ஜே.வி.பி.யின் தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ரி.லால்காந்த தெரிவித்துள்ளதுடன் தொழிலாளர் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு ஆட்சியைக் கைப்பற்றி, எமது உரிமையை பெற்றுக் கொள்ளும் அரசாங்கத்தை உருவாக்கும் போராட்டத்துக்காக நாம் அணி திரளவேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம் நேற்று திங்கட்கிழம…
-
- 1 reply
- 1k views
-
-
படுகொலைகள் மந்துவிலில்... யாழ்ப்பாணம், மே, 01 தென்மராட்சி மந்துவில் பகுதியில் நேற்றுமுன்தினம் நண்பகல் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தர்மகுலசிங் கம் (வயது48) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிவான் பூர்வாங்க மரண விசாரணைகளை மேற்கொண்டார். (சி) * * * மீசாலையில்... யாழ்ப்பாணம், மே 1 மீசாலை வங்களா வீதியில் நேற்றுக்காலை 6.15 மணியளவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மீசாலை மேற்கைச்சேர்ந்த இராசமுத்து கிரிதரன் (வயது25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். (சி) * * * நாரந்தனையில்... யாழ…
-
- 0 replies
- 875 views
-
-
அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக பணியாற்றும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் ஈ.பி.டி.பி. கொலைகளைக் கண்டித்து அறிக்கை யாழ்ப்பாணம். மே 1 ஊடகவியலாளர்கள் மட்டுமன்றி அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாகப் பணியாற்றவும், வாழவுமான சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும். இதற்குத் தடையாக உள்ள மக்கள் விரோதச் சக்தி கள் இனங்காணப்படவேண்டும். இவ்வாறு படுகொலைகளைக் கண் டித்து ஈ.பி.டி.பி. நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின் றது. அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது: வடக்கு கிழக்கில் அன்றாடம் தொட ரும் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். தொழிலையும், தரா தரத்தையும் பார்த்து கொலையைக் கண் டிக்க நாம் தயாரில்லை. எம்மைப் பொறுத் …
-
- 11 replies
- 2.6k views
-
-
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இல்லை: தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்க அறிக்கை [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 22:03 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 30.04.2007 தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெள…
-
- 5 replies
- 1.6k views
-
-
கொலன்னாவவில் குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும்: முன்னாள் வான்படை அதிகாரி டிர்க்சி [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 10:18 ஈழம்] [அ.அருணாசலம்] கொலன்னாவ எண்ணெய்க்குதங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்குண்டுகள் துல்லியமாகத் தாக்கியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் வான்படை அதிகாரியான விங் கொமாண்டர் சி.ஏ.ஓ டிர்க்சி எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு "புலிகளின் வான்வழித் தாக்குதல்களை முறியடிப்பது" தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான்தாக்குதல் அதன்பின்னர் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப…
-
- 0 replies
- 895 views
-
-
பலத்தைக் காட்ட புலிகள் நடத்தும் வான்தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம்: சிறிலங்கா பிரதமர். தங்களது பலத்தைக் காட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் வான் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவோம் என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் மேதின கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குண்டு துளைக்காத கண்ணாடி கூட்டுக்குள் நின்று அவர் பேசியதாவது: நாட்டில் இன்று புதிய அரசாங்கம் ஒன்று இருக்கும் என்று கடந்த காலத்தில் கூறப்பட்டது. சிலர் புதிய அரசாங்கத்தை அமைப்போம் என்று கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் சிறிலங்காவில் நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைதான் இருக்கின்றது. அரசாங…
-
- 0 replies
- 823 views
-
-
தொடர் கதையாக நீளும் உதயன் மீதான கொடூரம் "உதயன்' பத்திரிகையின் மற்றொரு செய்தியாளர் சுட்டுக் கொல் லப்பட்டிருக்கின்றார். "உதயன்' அலுவலகத்துக்குள் ஆயுததாரிகள் குழுவொன்று முகங்களை மறைத்துக்கொண்டு இயந்திரத் துப்பாக்கிகளு டன் புகுந்து நாலாபுறமும் சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்து, இரண்டு ஊழியர்களை அங்கேயே சுட்டுப் படுகொலை செய்து, பலரைக் காயப்படுத்தி, ஊடக உபகரணங்களை நாசப்படுத்தி, பெரும் அட்டூழியம் புரிந்த கொடூரத்தின் முதலாம் வருட நிறைவு நினைவு தினம் நாளையாகும். கடந்த வருடம் சர்வதேச ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் சமயத்தில் ஊடக அலுவலகம் மீதான இந்த அலங்கோலம் அரங்கேறியது. அடுத்த ஊடக சுதந்திர தினம் வருகின்ற இந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் மட்டும் பல்வேறு நெருக்கடிகளை உத…
-
- 0 replies
- 868 views
-
-
விமான தாக்குதல் பற்றிய அலசல் http://www.pathivu.com/?ucat=alasal&file=300407
-
- 2 replies
- 2.2k views
-
-
நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம்: இராணுவப் பேச்சாளர் [திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 14:45 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள நவீன தளபாடங்களைக் கொள்ளவனவு செய்ய முயற்சிக்கிறோம் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல்: தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது புதிய பரிமாணமாகும். நாம் மேலதிகமான நவீன தளபாடங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிக்கிறோம். அவர்களை வானிலும் தரையிலும் அழிக்க அது தேவை. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 14 விடுதலைப் புல…
-
- 6 replies
- 1.6k views
-