ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
7 Sinhala civilians shot and killed in Vavuniya Seven Sinhala villagers, including a boy and 6 women, all civilians, were shot and killed by unknown gunmen at Awaranthalawa, located 13 km southwest of Vavuniya around 5:30 p.m. Thursday, Police said. The Sinhala villagers who were settled in the village before 1983, had resettled in the village after the Ceasefire Agreement in 2002. The killings come a day after 3 Tamil civilians were gunned down in Vavuniya allegedly by paramilitary men. [TamilNet, Thursday, 12 April 2007, 13:42 GMT]
-
- 10 replies
- 1.9k views
-
-
மழை கொட்டுகிறது, உணவும் இல்லை மட்டக்களப்பில் அகதிகள் பெரும் அவலம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளைப் போல் எந்த விதமான உணவு விநியோகங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். மூன்று வேளையும் உணவை உட்கொள்ள வேண்டிய மக்கள் 100 தொடக்கம் 200 கிராம் அரிசியுடன் ஒரு நாளைக் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பால் மா வகைகளின் பற்றாக்குறையினால் சிறார்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
-
- 8 replies
- 1.6k views
-
-
வியாழன் 12-04-2007 18:37 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அல்லது அவரின் தலைமைத்துவத்தில் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் நாட்டில் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சி கொண்டுவரத் தயக்கப் போவதில்லை என இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார். ராஜபக்சவின் தலைமைத்துவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்பது வெறும் பகல் கனவாகவே அமையும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ராஜபக்சவின் ஆட்சி கவிழ்கப்பட்டால் இராணுவ ஆட்சி நடைமுறையில் வரும் …
-
- 6 replies
- 1.9k views
-
-
கிழக்கை சிங்களமயமாக்கும் நடவடிக்கைகள் கடும் தீவிரம் [12 - April - 2007] *தடுத்து நிறுத்த உதவுமாறு இந்தியாவிடம் அவசர வேண்டுகோள் * உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு இலங்கை- இந்திய உடன்பாட்டின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களை பிரித்தது மட்டுமல்லாமல் கிழக்கை துரிதமாக சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவதாக கடும் விசனம் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதனை தடுத்து நிறுத்த இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று புதன்கிழமை காலை சந்தித்தபோதே இந்த அ…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவில் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று ஒன்றில்லை. இருப்பது சர்வதேசத்தை ஏய்க செய்யப்பட்ட பத்திரப்பரிமாற்றமே என்று தமது பக்க உண்மைகளைக் கொட்டியுள்ளார் கோத்தபாய..! ‘There is no ceasefire agreement with LTTE’ - Gotabhaya [TamilNet, Thursday, 12 April 2007, 17:02 GMT] There is no ceasefire between the Liberation Tigers and the Sri Lankan government and the 2002 agreement was only being left in place to satisfy the international community, Defence Secretary Gotabhaya Rajapakse said Tuesday. "There is no cease-fire agreement. There is no meaning in that," said Rajapakse, who is the brother and a close-confidant of Sri Lankan President Mahinda Rajapakse…
-
- 0 replies
- 672 views
-
-
வவுனியாவில் நான்கு பொதுமக்கள் சுட்டுப்படுகொலை. வவுனியா கூமாங்குளத்தில் நேற்று மாலை 5.45 மணியளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வீதியால் சென்ற பெண்மணி உட்பட நால்வரை சிறீலங்கா படையினர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதன்போது வீடொன்றில் இருந்த சிறுவன் ஒருவனும் வயோதிபர் இருவரும் மற்றும் வீதியில் சென்ற பெண்மணியுமே கொல்லப்பட்டவர்களாவர். இவர்களை இராணுவத்தினர் படுகொலை செய்த போதும் காவல்துறையினர் இதனை மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -Pathivu-
-
- 3 replies
- 1.3k views
-
-
சித்தங்கேணியில் காணாமற் போனவரின் சடலம் சூட்டுக்காயத்துடன் அளவெட்டியில் சித்தங்கேணி, பிளவத்தை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போன இளம் குடும்பஸ்தரொருவரது சடலம் நேற்று புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அளவெட்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. பிளவத்தை சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகணேசன் (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றபோதும் பின்னர் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரைத் தாம் தேடி வந்ததாகவும் அவரது மனைவி மல்லாகம் நீதிவானிடம் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே இவரது சடலம் அம்பனைப் பகுதியிலுள்ள பாவனையற்ற…
-
- 0 replies
- 760 views
-
-
வவுனியாவிலிருந்து புறப்படும் பஸ்களில் பொலிஸார் தீவிர சோதனை வவுனியா பஸ் நிலையத்திலிருந்து வெளியிடங்களுக்கு புறப்படும் சகல பஸ்களும் பொலிஸாரினால் கடும் சோதனைக்குள்ளாக்கப்படுகின்ற
-
- 0 replies
- 828 views
-
-
அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது பாரபட்சம் வேண்டாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடியதாக நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபருக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்திலிருந்து படையினரின் திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களில் பாடசாலைகளிலும் தற்காலிகக் கொட்டில்களிலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களை உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் நிர்வகித்து வரும் அதேவேளை, உ…
-
- 0 replies
- 704 views
-
-
அமெரிக்கப் படைகளிடம் இராணுவப் பயிற்சி பெற்ற எனக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தவித தொடர்புகளுமில்லை அமெரிக்க படைகளிடம் முறையாக இராணுவ பயிற்சி பெற்ற தமிழ் இளைஞர் ஒருவர் புலிகள் இயக்கத்துடன் தனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தார். புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற சந்தேகத்தில் தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருப்பதை இம்மனுவில் கடுமையாக ஆட்சேபித்துள்ளார். மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மனுதாரர் கடந்த மார்ச் 13 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கடுவெலவிலுள்ள வீட்டில் வைத்து கம்பஹா பொலிஸாரால் புலிகளின் முக்…
-
- 0 replies
- 1.8k views
-
-
காணாமல்போன யாழ்.பல்கலைக்கழக மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுதலை -யாழ் நகர் நிருபர்- கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல்போன யாழ்.பல்கலைக்கழக இறுதியாண்டு கலைப்பீட மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எமது பல்கலைக்கழக இறுதியாண்டு சிறப்பு மாணவன் நாகேந்திரம் இராஜலஷ்மன் காணாமற்போயிருந்த நிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். எமது கற்றல் செயற்பாடுகளுக்கான சூழ்நிலை மிகவும் இறுக்கமாக உள்ள நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்…
-
- 0 replies
- 606 views
-
-
அரசாங்கம் 2010 வரை நீடிக்கும் ரணிலின் பகல் கனவு பலிக்காது தோழமைக் கட்சிகள் கூட்டாக தெரிவிப்பு [12 - April - 2007] - ப.பன்னீர்செல்வம் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டுவரை தொடருமென்றும் அதனை எவராலும் அசைக்க முடியாதென்றும் உறுதிபடத் தெரிவிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது என்றும் தெரிவித்தனர். கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இ…
-
- 0 replies
- 799 views
-
-
அரசியல் வங்குரோத்து [12 - April - 2007] மகிந்த சிந்தனை என்ற தனது 2005 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது எந்தவகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், அத்தேர்தலின் போது அவருடன் அணிசேர்ந்து நின்று அவரது வெற்றிக்கு காரணம் தாங்களே என்று இன்றும் உரிமைகோரிக்கொள்வதில் பெருமை காணும் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் தலைவர்கள் மகிந்த சிந்தனையைத் தவிர தங்களுக்கு வேறு சிந்தனையே இல்லை என்பதைப் போல பேசிக் கொண்டு திரிவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களுக்கே மகிந்த சிந்தனையில் இல்லாத அக்கறையையும் பற்றுதலையும் தாங்கள் கொண்டிருப்பதாக ஜே.வி.பி. தலைவர்…
-
- 0 replies
- 850 views
-
-
வியாழன் 12-04-2007 13:12 மணி தமிழீழம் [மோகன்] ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் பாராளுமன்ற உறுப்பினர் பெர்ணாண்டோவிற்கு கொலை அச்சுறுத்தல் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெர்ணாண்டோ அவர்களுக்கு அவர் அண்மையின் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலரும் சிறீலங்கா ஐனாதிபதியின் சகோதரருமான கோட்டபாய ராஜாபக்ஸவை விமர்சித்தது தொடர்பில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதா புதன் கிழமை முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் திரு.ஜோன்சன் பெர்ணாண்டோ அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த நபர் சிறீபதி சூரியாராச்சிக்கு நிகழ்ந்தது போல் நடைபெறும் என அச்சுறுத்தியுள்ளார்கள். http://www.pathivu.com/index.php?subaction..…
-
- 2 replies
- 804 views
-
-
வியாழன் 12-04-2007 13:25 மணி தமிழீழம் [மோகன்] நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் மோதல் யாழ்ப்பாணம் வடமராச்சி கிழக்கு நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் நேற்று நண்பகல் வரை அறிகணை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்டிலறி, பீரங்கி வேட்டுச்சத்தங்களும் துப்பாக்கிப் பிரயோக சத்தங்களும் இடையிடையே கேட்டவண்ணம் இருந்ததாக அறியமுறிகிறது. pathivu
-
- 0 replies
- 940 views
-
-
போரின் தோல்விக்கு பத்திரிகையாளர்களை பழிவாங்கும் அரசாங்கம். - பண்டார வன்னியன் Thursday, 12 April 2007 12:51 ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாகக் கேள்வியெழுப்பும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஸ்ரான்டட் நியூஸ்பேப்பர் லிமிட்டட் நிறுவனத்தால் வெளியிடப்படும் மௌபிம மற்றும் சண…
-
- 1 reply
- 881 views
-
-
தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் விடுக்கப்பட்டது (என நினைக்கிறேன்). CTV Newsnet இல் தொடர்ந்து 1/2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். மேலதிக தகவல் விரைவில்.
-
- 12 replies
- 3k views
-
-
அமெரிக்கா, சீனாவுடனான இலங்கையின் நட்புறவினால் இந்தியா பீதி [04 - April - 2007] ஆசியாக் கண்டப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடாகவும் எமது அண்டைய நாடாகவும் அமைந்துள்ள இந்தியா, ஷ்ரீ லங்கா மீது வன்மையான முறையில் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா எப்பொழுதும் ஷ்ரீ லங்காவை தனது பிராந்தியக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முயன்று வந்துள்ளது ரகசியமான விடயமல்ல. ஆயினும், நாட்டை ஆளும் சுதந்திர அரசாங்கம் என்ற வகையில் ஷ்ரீ லங்கா இந்தியாவின் அழுத்தத்துக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவம் சேர் ஜோன் கொத்தலாவல ஷ்ரீ லங்காவின் பிரதமராக இருந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து விட்டது. அப்பொழுது இந்தோனேசியாவில் நடத்தப்பட…
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்தியா சென்ற 4 இலங்கை அகதிகள் பலி மு.சுப்பிரமணியம் இன்று அதிகாலை மன்னார் பகுதியூடாக இந்தியா சென்ற வன்னி பகுதியை சேர்ந்த அகதிகள் 4 பேர் விடத்தல் தீவு அருகாமை படகு கவிழ்ந்த்தில் பலியாகியுள்ளனர். சுமார் 8 பேர் வரை படகு பயணம் செய்திருந்த படகு எதிர்பராதவிதமாக பெரிய அலைகளினால் தாக்கப்பட்டு கவிழ்ந்த்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. வீரகேசரி
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட அனுமதிக்க கூடாது: சிங்கள தீவிரவாத கட்சி எதிர்ப்பு கொழும்பு, ஏப். 12- சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அமரசிங்கா நிருபர் களிடம் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். எத்தனை முறைகள் அவர்கள் இப்படி சொல்லப்படுவார்கள்ப எப்போ தெல்லாம் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் அரசுடன் பேச்சு வார்த்தைக்கு வருகிறார்கள். தற்போது சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இல்லை. கிழக்கு பகுதியை இழந்து விட்டனர். எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தால் பேசலாம் இல்லை என்றால் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது ராணுவ தாக்குதல் தொடர வேண்டும். விடுதலைப்பு…
-
- 0 replies
- 939 views
-
-
மிக் வானூர்தி கொள்வனவு ஊழல்: நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் [வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2007, 05:34 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களின் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவுக்கு நேற்று புதன்கிழமை தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாவது: "இந்த அச்சுறுத்தல் தொடர்பாக குருநாகல் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளேன். எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்கு பண்டாராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். எனக்கு நான்கு தடவைகள் மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் …
-
- 0 replies
- 909 views
-
-
'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
திரியாயில் படையினர் மீது துப்பாக்கிச் சூடு: இரு படைச் சிய்பாய்கள் காயம் திருகோணமலை திரியாய் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் காவலில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டகளப்பில் மோட்டார் தாக்குதல் படைச்சிப்பாய்கள் இருவர் படுகாயம் மட்டக்களப்பு கொடுவாமடு மற்றும் ஏறாவூர் பற்று பகுதிகளின் எல்லையோரப் பிரதேசத்தினுள் சிறீலங்காப் படையினர் ஊடுருவ முயன்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினனர் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று மதி…
-
- 1 reply
- 895 views
-
-
மாரவிலப் பகுதியில் மர்மப் படகுகள். மிகவும் அதிக வேகத்துடன் சந்தேகத்திற்கு இடமான ஒரு படகுத் தொகுதி மாரவில கடற்பரப்பில் நேற்று சென்று கொண்டிருந்ததனை தாம் அவதானித்ததாக அப்பகுதி கடல் தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். மிகவும் உயர் வலுக்கொண்ட இயந்திரங்களை உடைய நான்கு வேகப்படகுகள் நேற்று புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அப்பகுதியை கடந்து சென்றதாகவும், அது கடல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் படகுகளில் இருந்து வேறுபட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் படகுகள் கடலில் இருந்து 400 மீற்றர் தொலைவில் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினரால் எந்தவித தகவல்களையும…
-
- 0 replies
- 1.1k views
-
-
மார்ச் மாதத்தில் 76 பொதுமக்கள் படுகொலை - தமிழீழ சமாதானச் செயலகம். தமிழர் தாயகப் பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படையினராலும், ஒட்டுக் குழுக்களாலும் 76 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 57 பேர் காணாமல்ப் போயிருப்பதாக, தமிழீழ சமாதானச் செயலகம் அறிவித்துள்ளது. கடந்த மாதமும், கடந்த போர் நிறுத்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமல்ப் போனவர்கள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் விபரங்கள் சமாதானச் செயலகத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் 76 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 57 பேர் காணாமல்ப் போயுள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார். வவுனியா, திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்தப் படுகொ…
-
- 0 replies
- 770 views
-