ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
பிணையெடுக்க நாட்டில் எவருமில்லை தமிழ் இளைஞன் நீர்கொழும்பு சிறையில் [19 - April - 2007] - த. தர்மேந்திரா - தமிழ் இளைஞர் ஒருவரை பிணையில் விடுதலை செய்வதற்கு அவரது இரத்த உரித்துடைய உறவினர்கள் எவருமே நாட்டில் இல்லாததால் அவர் சிறையில் தடுத்து வைக்கப்படும் நிலையேற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரும் கடவுச்சீட்டு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவருமான வன்னியசிங்கம் இராஜசீலன் (வயது- 30) என்பவரே சரீரப் பிணையில் விடுதலையாவதற்கு இரத்த உரித்துடைய உறவினர்கள் எவரும் இலங்கையில் இல்லாததால் நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதிவான் காந்தி வணிகசேகர இவ்விளைஞனை 10,000 ரூபா காசுப் பிணையிலும் தலா 50,000 ர…
-
- 0 replies
- 967 views
-
-
சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணி ஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவு ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு. வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன. தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்…
-
- 5 replies
- 1.4k views
-
-
அனைத்துலக இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அரசு கடும் எச்சரிக்கை "சிறிலங்காவின் சட்ட விதிகளை மீறும் இராஜதந்திரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயங்க மாட்டாது" என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. நேற்று புதன்கிழமை நடைபெற்ற வாராந்த பாதுகாப்பு மாநாட்டிலேயே பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் சில இராஜதந்திரிகளின் (பெயர்கள் குறிப்பிடப்படவில்லை) நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. நாம் சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் விவகாரங்களில் தலையிட்டமைக்காக பிரித்தானியாவின் இராஜதந்த…
-
- 4 replies
- 991 views
-
-
கொழும்பு ஊடகத்தின் குற்றச்சாட்டு தவறானது: நோர்வே நோர்வே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே மக்கள் என்ற அமைப்பு தெரிவித்த கருத்தை நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளது. கொழும்பில் இருந்து வெளிவரும் 'சண்டே ரைம்ஸ்' வெளியிட்ட கட்டுரை தொடர்பாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சு ஒரு திறந்த கடிதத்தை அதன் தலைமை ஆசிரியருக்கு எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் தகவல் தொடர்பு தலைமை அதிகாரியான றோய் பிரெடி அன்டேர்சன் தெரிவித்துள்ளதாவது: சண்டே ரைம்சில் ஏப்ரல் 15 ஆம் நாள் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையில் நோர்வே பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக பயங்கரவாதத்திற்கு எதிரான நோர்வே மக்கள் என்ற அமைப்பு கருத்து தெரிவித்திருப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
நாகர்கோவிலில் ஒருவர் சுட்டுக்கொலை நாகர்கோவிலில் படையினரின் முன்னரங்கக் காவலரணுக்குள் பிரவேசிக்க முற்பட்டார் எனக் கூறப்படும் நபர் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக தேசிய பாதுகாப்பு ஊடகநிலையம் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 6.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட நபர் படையினரின் முன்னரங்கக் காவ லரணுக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றும், இவ்வாறு நுழைந்தவர் விடுதலைப்புலி உறுப்பினர் என்றும், இவர் மீது படையினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. (சி) உதயன்
-
- 0 replies
- 610 views
-
-
தமிழர்களின் அவலக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை சர்வதேசம் தனது அலட்சியப் போக்கை நீடிக்காது, தமிழர்களின் அவலக் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும். அவ்வாறின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும். இவ்வாறு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் இளம் சந்ததியினர் பெரும் எண்ணிக்கையில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். ஆனால், அத்தகைய அநீதிகள் வெளி உலகத்திற்குத் தெரியாதவாறு அரசினால் திட்டமிட்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துச…
-
- 0 replies
- 608 views
-
-
சடலம் மீட்பு ஏழாலை மத்தியில் வயல் கிணற்றிலிருந்து நேற்று (17.04.2007) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த பேரம்பலம் தங்கராசா (வயது 58) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை (16.04.2007) இரவு வயலுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தவர்கள் நேற்று வயலுக்கு சென்று கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர். உதயன்
-
- 0 replies
- 679 views
-
-
அல்லைப்பிட்டிக் காவலரணில் இருந்து தீர்க்கப்பட்ட வேட்டுக்குச் சிப்பாய் பலி! யாழ்ப்பாணம்,ஏப்.19 அல்லைப்பிட்டியில் கரையோரமாக அமைந்துள்ள படையினரின் காவலரண்களில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார். செவ்வாயன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கொல்லப்பட்ட சிப்பாயின் மரண விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் றொக்ஸி முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. படையினரின் காவல் நிலையை நோக்கி ஒருவர் வந்தார். அவரை யார் என விசாரித்தபோது சம்பந்தப்பட்டவர் குரல் கொடுக்காததையடுத்து, காவலரணில் நின்ற படையினர் வேட்டுக்களைத் தீர்த்தனர். அப்போது அவர் உயிரிழந்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. விசார…
-
- 0 replies
- 819 views
-
-
சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். எம்மைப் பொறுத்தவரை 60 ஆண்டுகளாக நீடித்து நிலவும் இப்பிரச்சினைக்கு தற்போதைய தருணத்தில் நிரந்தரத் தீர்வு காண்பதற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். மூன்று தசாப்த யுத்தம் மற்றும் வன்முறைகளாலும் உயிரிழப்புகள், சொத்து அழிவுகளாலும் மக்கள் மிகவும் களைப்படைந்துவிட்டனர். அன்றாட அவலங்கள் தொடர்பான எமது அக்கறையுடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கே அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். ஜனநாயகத்தையும், சமாதானத்தையும், அமைதியையும் நேசிக்கும் சாதாரண தமிழ் மக்களின் ஏக்கமும் இதுதான். சமூகத்தின் பல்வேறு மட்…
-
- 0 replies
- 779 views
-
-
திருத்தந்தையின் தரிசனமாவது திருந்தி நடக்க வழிசெய்யுமா? ` இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக மீறப்பட்டு வருகின்றமை இன்று சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. இக்குற்றச்சாட்டுகள் ஆயுதக்குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக மட்டுமல்லாமல், நாட்டின் அரசுக்கும் அதன் தலைமைக்கும் எதிராகவும் கூட பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதுதான் இங்கு முக்கிய பிரச்சினை. அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்கள், அச்சுறுத்திக் கப்பம் அறவிடுதல், ஆட்கள் காணாமற் போகச் செய்தல், படுகொலை செய்யப்படல் என்று அராஜகங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கின்றன. இக்கொடூரங்களைத் தடுப்பதற்கு அரசுத் தரப்பு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் உதாசீனமாக நடந்து…
-
- 0 replies
- 581 views
-
-
வவுனியாவில் சிறிலங்காப் படையினர் மீது கைக்குண்டு வீச்சு: ஒருவர் பலி வவுனியாவில் சிறிலங்காப் படைத்தரப்பினர் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா ஈரப்பெரியற்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற படையினர் மீது நேற்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் இக்கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் ஆவார். -புதினம்
-
- 1 reply
- 633 views
-
-
'அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்காவில் மோதல்கள் அதிகரிப்பதற்கு காரணம்': ஜெனீவா அறிக்கை "அமெரிக்காவினால் அனைத்துலக ரீதியில் முன்னெடுக்கபட்டு வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரே சிறிலங்கா போன்ற பல நாடுகளின் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமடையக் காரணம். இந்த நாடுகள் அமெரிக்காவின் சொற்பதத்தை பயன்படுத்தி உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு இராணுவத் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கியுள்ளன." நோர்வேயின் அகதிகளுக்கான சபையின் ஒரு பிரிவான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான கண்காணிப்பு மையம் ஜெனீவாவில் வெளியிட்ட தனது 2006 ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்திற்…
-
- 0 replies
- 682 views
-
-
தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்திலே சிந்திய இரத்தத்துக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் கடும் குளிருக்குள் தங்கள் குருதியை உறைய வைத்து ஆற்றிய பணிக்குமான ?முதற் கட்ட அறுவடை? மிகச் சிறப்பான முறையில் நிறைவேறியுள்ளது. போராளிகள் மக்கள் என்னும் சமுத்திரத்துக்குள் நீந்தும் மீன்கள் என்பது பொருத்தமான நேரத்தில் புலனாகியுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இனஅழிப்பு நடவடிக்கை எல்லை மீறி இடம்பெற்றுக் கொண்டு இருந்தமையும் புலிகளின் அசாதாரண பொறுமையும் மக்களிடத்தில் பெரும் குழப்பங்களை உண்டுபண்ணியிருந்தது. புலிகளினுடைய பொறுமை தந்திரோபாய நகர்வா அன்றேல் உண்மையிலேயே போராளிகள் பலமிழந்து விட்டனரா என்ற ?இக்கட்டு சிந்தனை? சிறீலங்கா அரச புலனாய்வுத் துறை தொடக்கம் பென்ரகன் வரை நிலவியது. புலிக…
-
- 5 replies
- 2.7k views
-
-
'நீ ஒரு விபச்சாரி' ஊடகவியளாளர் மீது கோத்தபாய பாய்ச்சல் [புதன்கிழமை, 18 ஏப்ரல் 2007, 19:33 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியர் சம்பிக்க லியனாராச்சிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, இன்று தனது இத்தாலிய பயணத்திற்கு முன்னதாக சம்பிக்க லியனாராச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச நாளேட்டின் அசிரியரின் பாதுகாப்பில் கோத்தபாயா ராஜபக்ச எடுத்த அக்கறையை அவர் மிகைப்படுத்தி விட்டதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. நாளேட்டின் ஆசிரியர் மிரட்டப்பட்ட சம்பவம் எனது கவனத்துக்கு வந்துள்ளது. சிறிலங்கா இ…
-
- 5 replies
- 1.9k views
-
-
''17ஆவது ஆண்டில் புதிய பாய்ச்சலுக்காக காத்திருக்கும் சாள்ஸ் அன்ரனி படையணி'' - தெ.றஞ்சித்குமார்- விடுதலைப் போராட்டம் இன்று விடுதலைப்புலிகளின் படையணிகளோடும், புதிய படைணிகளின் அறிமுகங்களோடும் எதிரிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை ஆரம்பகால கட்டங்களில் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடாத்துவதற்கு ஈருருளிகளைக்கூட விடுதலைப்புலிகள் பயன்படுத்தியுள்ளனர். போராட்ட வளர்ச்சிக்கால கட்டங்களில் சிறிய குழுக்களாக பெரும் இராணுவ பலங்களின் நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் முகம் கொடுத்தார்கள். அதன் ஒரு தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் கெரில்லா ரீதியான நடவடிக்கையை மேற் கொண்டு, அடுத்த கட்டமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை தற்போதைய யுத்த நடவடிக்கைகள் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடையும் அபாயம் தோன்றியிருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் வெளிப்படுத்தியபோதும் இக் கணிப்பீட்டில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை. அப்பிரதேசங்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது எனத் தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர்கள், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பொருளாதாரக் கணிப்பீட்டில் சேர்க்கப்படுமிடத்து இன்று உள்ளதைவிட வித்தியாசமான பெறுபேறுகளே காணப்படும் எனத் தெரிவித்துள்ளனர். இன்று தொடரும்…
-
- 6 replies
- 1.5k views
-
-
யுத்தநிறுத்த உடன்படிக்கையை ரத்தாக்க மேன்முறையீட்டு மனு - ஜே.வி.பி., ஹெல உறுமய, சிங்கள மகா சபா உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் [18 - April - 2007] -த.தர்மேந்திரா- யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தனித்தனியாக 3 மேன்முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க, சிங்கள மகா சபையின் தலைவர் டாக்டர் பியசேன திசநாயக்க ஆகியோர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களுக்கு சட்டத் தகுதிப்பாடு கிடையாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆட்சேபித்தே உயர்நீதிமன்றத்தில் மேன்ம…
-
- 9 replies
- 1.4k views
-
-
இலங்கையில் யே.வி.பி யினரின் பின்னணியில் புதிய ஆயதப்படை ஒன்று உருவாகியுள்ளது. தேசிய மக்கள் படை என்ற பேரில் உருவாகியுள்ள இந்தப் படையினருக்குப் பொறுப்பாக மேஜர் றத்னபிரிய என்பவர் பொறுப்பாக இருப்பதாகவும், கல்கிரியகம என்ற இடத்தில் இந்தப் படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அறிய முடிகிறது. இந்தப் படையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.nitharsanam.com/?art=22553
-
- 14 replies
- 3.6k views
-
-
கருணா குழுவினர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லை. Wednesday, 18 April 2007 கொழும்பில் வெளிவரும் ஆங்கில நாளிதழான டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராய்ச்சிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. டெய்லி மிரர் பத்திரிகையில் கருணாகுழுவினர் பற்றிய செய்திகளை பிரசுரிக்க வேண்டாமென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ள அதேவேளை கருணா குழுவினர் டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தல் அதற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளர் சுனந்த தேஷப்பிரிய தெரிவித்…
-
- 9 replies
- 2.6k views
-
-
'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை "எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை கா…
-
- 8 replies
- 1.9k views
-
-
புதன் 18-04-2007 21:03 மணி தமிழீழம் [மயூரன்] 3 மாதத்திற்கு பின்னரே படுவான்கரை மக்கள் மீள்குடியேற்றப்படுவர் - பசில் ராஜபக்ச படுவான்கரை மக்களை மீளவும் குடியேற்றுவது தொடர்பில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவின் தலைமையில் கொழும்பு அரச செயலகத்தில் மட்டக்களப்பு அரச அதிபர் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் சந்தி்ப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் மட்டுக்களப்பு படுவான்கரை மக்களை மூன்று கட்டங்களாக மீளவும் குடியேற்ற சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ் மீள் குடியேற்றங்கள் எதிர்வரும் யூலை 30 நாளுக்குப் பின்னரே சாத்தியப்படும் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முதலாவது மீள் குடியேற்றம் வெல்லாவெளிப் பிரதேசத்திலும், இரண்டாவது மீள் குடியேற்றம் பட்ட…
-
- 0 replies
- 921 views
-
-
ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அரசாங்க அமைச்சர்களின் வார்த்தை பிரயோகங்கள் உள்ளன: சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம். - பண்டார வன்னியன் Wednesday, 18 April 2007 15:35 அமைச்சர்கள் மற்றும் பங்காளிகளின் வார்த்தைப் பிரயோகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அரசின் பங்காளர்களுடைய வார்த்தைப் பிரயோகம், அவர்களின் நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது அரசாங்கத் தலைவர்களும் அரசில் அங்கம் வகிப்பவர்களும் சுதந்திரமான ஊடகச் செயற்பாடுகளைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சுதந்திர ஊடக இயக்கம் கூறுகிறது. கருணா குழுவினர் தொடர்பான செய்திகளை வெளியிடுவது பற்றி …
-
- 1 reply
- 881 views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு மிக் - 27 ரக வானூர்திகள் இன்றும் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. [Wednesday April 18 2007 02:41:03 PM GMT] [யாழ் வாணன்] புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் மிக் - 27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. தமிழ்வின்
-
- 0 replies
- 732 views
-
-
ஏறாவூர் சந்திவெளி பகுதியில் இறங்குதுறை படகொன்று கவிழ்ந்ததில் சிலர் உயுரிழந்து இருக்கலாம் என நம்பபடுகிறது. [Wednesday April 18 2007 02:12:22 PM GMT] [யாழ் வாணன்] படகு கவிழ்ந்த்தில் சிலர் உயிரிழந்ததாகவும் சம்பவ ஸ்தளத்திற்கு பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏறாவூர் பொலிஸ் நிலைய இடத்திலிருந்து 3 கூலங்கள் மீட்கப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்வின்
-
- 0 replies
- 629 views
-
-
விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம் நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை. படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல் வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல். வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்…
-
- 5 replies
- 1.9k views
-