Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடாநாட்டை ஆக்கிரமித்துவரும் `கசிப்பு' இளைஞர்களும் பெருமளவில் அடிமையாகின்றனர் யாழ்குடா நாட்டிற்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மதுபான வகைகள் எதுவும் தென்னிலங்கையிலிருந்து எடுத்துவரப்படாத நிலையில் குடாநாட்டுக் "குடிமக்களின்" ஒரே தெரிவாக இன்று கசிப்பே உள்ளது. இதன் காரணமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை என்றுமில்லாதவாறு களை கட்டியுள்ளது. குடாநாட்டின் மூலை, முடுக்கெங்கும் கசிப்பு உற்பத்தி, விற்பனை எவ்வித தடைகளும் இடையூறுகளுமின்றி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணத்தில் தற்போது வெளிநாட்டு, உள்நாட்டு மதுபான வகைகளைப் பெறுவதென்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது. திக்கம் வடிசாலையில் உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாராயம் மட்டும்தான் மதுப்பிரியர…

  2. மனித உரிமை மீறல்களில் இலங்கை அலட்சியம் பாப்பரசருக்கு `ஹியூமன் றைற்ஸ் வோற்ச்' கடிதம் அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான முன்னணி சர்வதேச அமைப்பான ஹியூமன் றைற்ஸ் வோற்ச் (Human rights watch) அமைப்பு இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய கடிதமொன்றை பரிசுத்த பாப்பரசருக்கு அனுப்பியுள்ளது. இலங்கையில் ஆயுதப் பிணக்குகளில் ஈடுபட்டுள்ள தரப்பான அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து அலட்சியப்படுத்தி நடந்து கொள்வதாக இக்கடிதத்தில் இவ்வமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை அலட்சியப்படுத்தி செயற்படுவதாக விடுதலைப் ப…

  3. பொதுமக்கள் மீதான மோசமான தாக்குதல்கள் உட்பட அனைத்து வகையான தாக்குதல்களையும் கண்டிக்கின்றோம் -அமைச்சர் போகொல்லாகமவிடம் இத்தாலிய உப பிரதமர் இலங்கையின் தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கு சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு யோசனையை சர்வகட்சி மாநாடு மூலம் ஏற்படுத்திக் கொள்வதோடு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இது அடித்தளமாக அமையுமென்றும் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இத்தாலிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம அந்நாட்டின் உப பிரதமரும் வெளிநாட்டமைச்சருமான பெசிமோ டி அலேமாவை நேற்று முன்தினம் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இதன்போது இத்த…

  4. வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாயும், மகனும் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2007, 16:18 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு வாகரையில் இராணுவத்தினரால் தாயும் மகனும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முத்தையா சிவமணி (வயது 58), அவரது மகன் முத்தையா பாஸ்கரன் ஆகியோரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். கொல்லப்பட்ட இருவரும் தமது சொந்த இடமாகிய வாகரைப் பகுதியில் உள்ள பனிச்சங்கேணி, கோவிற்குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனையில் வசித்து வந்த போது படையினரால் வாகரைக்கு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு…

  5. புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்] கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர். வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்காப் பட…

  6. விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் மன்னிப்புச் சபை போராட்டம் நடத்துகின்றது: மகிந்த சமரசிங்க அனைத்துலக மன்னிப்புச் சபையினால் 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' என்ற போராட்டமானது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் நடத்தப்படுவதாக சிறிலங்காவின் மனித உரிமைககளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையினால் நடத்தப்படும் போராட்டமானது சிறிலங்காவின் நற்பெயரை கெடுக்கும் முகமாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் அதிகளவில் பொது மக்களை கவர்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இதற்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம், அனைத்துலகத்தின் தரப்புக்களுடன் மனித உரிமை தொடர்பாக பேசி வருகின்றது.…

  7. இலங்கை விமானப்படை, கடற்படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் [18 - April - 2007] -கே.பி.மோகன்- இலங்கை விமானப் படைக்கும் ,கடற்படைக்கும் ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் போது எதிர்பார்த்த இலக்கு எட்டப்படாத நிலையிலேயே மீண்டும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை படை நடவடிக்கைகளுக்கு பெண்களிடமிருந்து அதிகளவு விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன

  8. இளைஞர்களின் சேஷ்டைகளைக் கண்டித்து குருநகர்ப் பகுதியில் மாணவர் ஆர்ப்பாட்டம் தமது சுதந்திரமான கற்றல் நட வடிக்கைக்கு இடையூறு விளைவிக்காமல் ஆதரவு வழங்குமாறு குருநகர்ப் பகுதியிலுள்ள இளைஞர்களிடம் கோரி குருநகர்ப்பகுதி யைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப் பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். இப்பேரணி திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு குருநகர் கடற்கரை வீதியில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலயத்திலி ருந்து ஆரம்பமாகி குருநகர் வீதிகளூடாகச் சென்று குருநகர் கல்விக் கழகம் முன்பாக அமைந் துள்ள குருநகர் புனித மலர்கள் கட்டடத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் அருட்சகோதரிகள், மாணவர்கள் என்று பலரும் கலந்துகொண்டனர். குருநகர் ஆறாம் குறுக்கு வீதியின் அருகில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் பெண் கள் பாடசாலையி…

  9. எதிர்ப்பின் மத்தியிலும் கிழக்கில் தமிழர்கள் வேறு இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர் கூட்டமைப்பு கூட்டத்தில் கண்டனம் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல், வேறு இடங்களில் தொடர்ந்தும் குடியேற்றி வருகிறது. நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக நீண்டநேரம் ஆராய்ந்தனர். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி மக்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் அரசாங்கம் குடியேற்றி வருகிறது. இது குறித்துப் பலதடவைகள் அரசிடம் எடுத்துக் கூறியும் அது செவிசாய்ப்பதாக இல்லை என்று திருமலை …

  10. உறுதிசெய்யப்படாத தகவல் குறித்து குழப்பமோ கவலையோ கொள்ளவேண்டாம் யாழ். ஆயர் சொல்கிறார் புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம், காணாமற்போன ஜிம்பிறவுண் அடிகளாரினது என்ற சந்தேகம் எந்த அடையாளத்தையும் வைத்து உறுதி செய்யப்படவில்லை. எனவே, அது சம்பந்தமான செய்திகளை முன்னிட்டு எவரும் கவலையோ குழப்பமோ அடையவேண்டாம். இவ்வாறு யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் நேற்று விடுத்த செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் கேட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (16.04.2007) அன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து மேற்படி சடலத்தை இனங்காண மரபணுச் சோதனை நடத்தவிரும்புவதாகவும், அதற்கு உதவ ஜிம்புறவுண் அடிகளாரின் பெற்றோரின் உதவியை நாடுவதாகவும் அதற்குத் துணைபுரிய…

  11. கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி [18 - April - 2007] - கே.பி.மோகன் - கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இனம் தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொட்டாஞ்சேனை கிரீன்லேன் பகுதியிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர் கொழும்பு, மட்டக்குளியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான ஹாஜா முஹம்மது அலி ஜின்னா (23 வயது) என அடையாளம் காணப்பட் டுள்ளார். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் 72 ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அங்கு உயிரிழந்துள்ளார். இவர்மீதான துப்பாக்க…

  12. புங்குடுதீவில் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் காணாமற்போன மதகுருவின் உடையதா? மரபணுப்பரிசோதனை வெள்ளியன்று ராகம ஆஸ்பத்திரியில்! புங்குடுதீவுப் பகுதியில் கடந்தமாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட சடலம், காணாமற்போன போதகர் ஜிம் பிறவுண் அடிகளாருடையதா என்பதைக் கண்டறிய மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இப்படிக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சடலம் ஊர்காவற்றுறை நீதிவானின் அனுமதியுடன் எடுத்துவரப்பட்டு ராகம வைத்தியசாலையில் எதிர்வரும் 20ஆம் திகதி மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கின்றது. மரபணுத்துறை நிபுணர் பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். இது விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் ப…

  13. அமெரிக்க இன்ரெல்சற் செய்மதி சேவைக்குள் புலிகள் ஊடுருவல் [18 - April - 2007] அமெரிக்காவிலிருந்து சர்வதேசம் முழுவதும் ஒளிபரப்பாகி வரும் பிரபல செய்தித் தொலைக்காட்சி வலையமைப்பாகிய "இன்ரெல் சற்"(Intel Sat) செய்மதிச் சேவையை ஷ்ரீலங்காவிலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பு சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாகவும் குறித்த செய்மதி சேவையின் அனுமதியின்றி இன்ரல்சற் செய்மதி வலையமைப்புக்குள் புலிகள் அமைப்பு அதன் செய்மதித்தொடர்பைப் புகுத்தியுள்ளதாகவும் இன்ரெல் சற் செய்தி சேவையின் பிரதிநிதி பிலிப்ஸ்பெக்ரர் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பினர் இவ்வாறாக அமெரிக்காவின் இன்ரெல் சற் செய்மதி வலையமைப்புக்குள் ஊடுருவியிருப்பது அமெரிக்க சட்டவிதிகளை மீறும் செயலெனவும் அத்துடன் ஷ்ரீலங்காவிலிருந்து…

  14. மன்னார் மீனவர்கள் புங்குடுதீவில் கைது யாழ்ப்பாணம்,ஏப்.18 புங்குடுதீவு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த ச.சந்திரகுமார், ந.சுதர்சன், செ.கோபிநாத், த.சுரேஷ் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர். பள்ளிமுனையில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்பிடிக்கச் சென்று காணாமற்போனதாகக் கூறப்படும் 13 மீனவர்களில் இந்த நான்கு மீனவர்களும் அடங்கலாம் உதயன்`

  15. யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் படையினரே பொறுப்பாளிகள். - பண்டார வன்னியன் Wednesday, 18 April 2007 08:59 தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை சிதைப்பதன்மூலம் இனவாத யுத்தம் ஒருபோதும் வெற்றி பெறாது என்ற வரலாறுகள் தரும் உண்மையினை புரிந்து,தமிழ் பேசும் மக்களின் மனித கௌரவத்தினை மதித்து நடக்குமாறு மாணவர்கள் சார்பாக படைகளை வேண்டி நிற்கின்றோம் என யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவம்.. யாழ்ப்பாணக்குடாநாட்டில் கடத்தி காணாமல் போகவைக்கப்படும் செயற்பாடுகளுக்கும் கொலைகளுக்கும் யாழ் மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள படையினரும் அவர்களை வழிநடத்துப…

  16. புதன் 18-04-2007 06:10 மணி தமிழீழம் [சிறீதரன்] 38 பில்லியன் ரூபாக்கள் அச்சிடப்பட்டுள்ளன – ஐதேக குற்றச்சாட்டு சிறீலங்கா அரசாங்கம் தனது மிகஅதிகளவு எண்ணிக்கையான அமைச்சர்களை கொண்ட அமைச்சுக்களது தேவைகளையும் செலவீனங்களையும் ஈடுசெய்யும் வகையில் 38 பில்லியன் ரூபா பெறுமதியான பண நோட்டுக்களை அச்சிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் அலுவலகங்கள் வழங்கப்படாது வீட்டு ஓதுக்கீடாக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு இலட்சம் ரூபா செலவு செய்வதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் நகர்புறங்களில் மக்களின் பொருட்களை கொள்வனவு செய்யும் திறன் 30 வீதத்தாலும் கிராமப்புறங்களில் 50 வீதத…

  17. இராணுவத் தீர்வு பற்றிய நம்பிக்கையில் தெற்கு! ` "எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கின்றது!' பகவத்கீதை சாராம்சத்தின் ஒரு வாசகம் இது. இலங்கை அரசை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் தலைமையை பொறுத்தவரை காரியங்கள் இப்படித்தான் நடக்கின்றன. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் படைப்பலத்தின் அடிப்படையில் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிக்க மஹிந்தரின் அரசு எண்ணுகின்றது. இராணுவப் பலத்தை வைத்துக் கொண்டு பௌத்த, சிங்கள மேலாண்மையை உறுதிப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, நிலைநிறுத்த கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது அரசு. அந்தத் திசையில் தான் விடயங்கள் நன்றாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதி முறையில் நியாயமான தீர்வு ஒன்றை கொழ…

  18. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய ஈழத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற முடிவு அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாகப் பிரவேசித்து அடைக்கலம் கோரிய 83 தமிழர்களையும் அமெரிக்காவில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. புதிய உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையிலேயே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் 'த அவுஸ்திரேலியன்' என்ற நாளேடு செய்தி வெளியிட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியிருக்கும் இவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கும் அதற்கு பதிலாக குவந்தனாமோ குடாவில் உள்ள கியூபா நாட்டு அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும் புகலிடம் கோருவோர் பரிமாற்றம் என்னும் உடன்படிக்கையின் மூல…

  19. 'பொய்ப் பரப்புரைகள் மூலம் தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்': சுரேஸ் பிரேமச்சந்திரன் சிறிலங்கா அரசாங்கமானது பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை தவறாக வழி நடத்துகின்றது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 59.2 வீதமான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என தமது வாக்கெடுப்பில் தெரிவித்ததாக கொள்கை வகுப்புத் திட்ட கற்கைக்கான ஆய்வு நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது: "இந்த கற்கை நிலையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் கி…

    • 0 replies
    • 690 views
  20. புதன் 18-04-2007 03:20 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் கடற்றொழிலாளர்களின் அவலம் யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாடுகள் காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் குடாநாட்டிலுள்ள கடற்றொழிலாளரின் நிலை பற்றி அறிவதற்காக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் தர்மரத்தினத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கடின உழைப்பை மேற்கொண்டு தொழில் ஈடுபட்டுவந்த கடற்றொழிலாளர்கள் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாடுகள் காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தி…

  21. ரணிலின் இரட்டை வேடம் [17 - April - 2007] -வி.திருநாவுக்கரசு- ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடி…

    • 4 replies
    • 2.1k views
  22. அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்கு விஜயம் இலங்கையிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் மேலும் 6 அமைச்சர்கள் செல்லவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற முறையிலேயே இவ் அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் மேலும் பல அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் வெளிநாடு செல்லுமுன் ஜனாதிபதிக்கு அதனை அறியப்படுத்துவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெறும் காலங்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு மாத்திரமே அரசாங்க நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிப…

  23. ஊடகவியலாளர் பரமேஸ்வரி நாட்டைவிட்டு வெளியேற்றம்? புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் மூன்று மாதகாலம் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருந்த பின்னர், குற்றமற்றவர் எனத் தெரிவித்து விடுவிக்கப்பட்ட ஊடகவிய லாளர் முனுசாமி பரமேஸ்வரி இந்தியா புறப்பட்டுச் சென்றார். இரண்டுவார கால ஊடகப் பயிற்சி நெறி ஒன்றை மேற்கொள்ளவே அவர் இந்தியாவுக்குச் சென்றார் எனக் கூறப்பட்ட போதிலும், பயிற்சி நெறி முடிந்து அவர் நாடு திரும்புவாரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவர் வேறு ஒரு நாட்டுக்குச் செல்லக்கூடும் என ஊகம் தெரிவிக்கப் படுகின்றது. ஊடகவியலாளர் பரமேஸ்வரி ந…

  24. 'நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு'-சபேசன் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினiவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம், ஆக்கிரமிப்புப் …

  25. வவுனியாவில் தமிழ்ப் படைப்பாளி சுட்டுக்கொலை. வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ்ப் படைப்பாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். திருநாவற்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் நுழைந்த இராணுவத்தினர், தரையில் தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர், சந்திரபோஸ் சுதாகர் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சுட்டுச் சத்தத்தினைக் கேட்ட கொல்லப்பட்டவரின் 8 வயது மகன் விழித்த போது, இராணுவத்தினர் சிங்களத்திலும் தமிழிலும் அவரது அப்பா தூங்குவதாகவும் அவரை பக்கத்து வீட்டுக்குச் செல்லுமாறும் மிரட்டியுள்ளனர். இராணுவத்தினரின் மிரட்டலைத் தொடர்ந்து வெளியேறிய சுதாகரின் மக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.