ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
“சார்க்” நாடுகளின் ஆதரவைப்பெற அரசின் திட்டமிட்ட செயலே அம்பாறைக் குண்டுவெப்பு: சீராளன். - பண்டார வன்னியன் Tuesday, 03 April 2007 11:47 சிறிலங்கா அரசாங்கம் சார்க் மநாட்டில் கலந்து கொண்டு மேலும் ஆதரவைப் பெறும் முயற்றியாகவே பொதுமக்கள் மீதான கொலைகளை செய்வதாக நாங்கள் கருதுகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை துணைப்பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்கு தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இப்படியாக அப்பாவி மக்களைக் கொலை செய்வதன் மூலம் நாங்கள் இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்துவதில் அர்த்தமில்லை. இப்படியான படுகொலைகளைச் செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு போதிய ஆளணிகள் இருக்கின்றது.…
-
- 0 replies
- 888 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு. கடந்த வாரம் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் பிரியானி விஜயசேகர தெரிவித்துள்ளதாவது: நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்துள்ளோம். எனினும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அதனை தெரிவிக்க முடியாது. இது தொடர்பாக எல்லா கட்சி உறுப்பினர்களுக்கும் விளக்கும் முகமாக கட்சித் தலைவர்களை இன்று கூட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளோம். படையினரின் ஆலோசனைகளுடன் தேவைப்படும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம் என அவர் தெரிவித்தார். …
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறப்புப் பார்வை. நன்றி பதிவு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=300307
-
- 1 reply
- 1.2k views
-
-
புலிகளின் வான்படை தென்னாசியாவுக்கு அச்சுறுத்தல் என்பது இந்திய அரசை ஏமாற்றும் ஓரு உத்தி: ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை தென்னாசிய பிராந்தியதுக்கு ஓர் அச்சுறுத்தல் என சிறிலங்கா அரசாங்கம் கூறுவது, இந்திய அரசாங்கத்தை ஏமாற்றவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்களை ஏமாற்றவும் கைக்கொண்டிருக்கும் ஒரு உத்தி" என்று மூத்த அரசியல் ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.04.07) ஒளிபரப்பாகிய 'நிலவரம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துரைக்கையில் கூறியிருப்பதாவது: "சிங்கள அரசாங்கம் என்றுமே பிரதான எ…
-
- 0 replies
- 596 views
-
-
சிறிலங்கா அரசை எதிர்த்து தமிழ்நாட்டில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை நாகர்கோவில் ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்துக்கு முன்னர் திரண்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்த்து முழக்கமிட்டனர். புதுடில்லியில் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் சிறிலங்கா அரச தலைவருக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் கோரியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக…
-
- 0 replies
- 637 views
-
-
இந்திய பிரதமர் மன் மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர்கள் செயலாளர் பேச்சாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.. தற்போது டில்லியில் சர்க் மாநாடு சந்திப்புகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது. - வீரகேசரி
-
- 1 reply
- 921 views
-
-
கஞ்சிகுடிச்சாறு விவசாயக் குளத்தின் அணைக்கட்டு குண்டுவைத்து தகர்க்கப்பட்டமைக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம் வருமாறு: அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்துவரும் அரசானது தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவேதான் ஏப்ரல் 1ஆம் திகதி கஞ்சிகுடிச்சாற்று குளத்தை படையினர் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு குளத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தில் இடைப்போக, பெரும்போக நெற்செய்கைக்கான சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெற்செய்கை செய்ய முடியாமல் நாலாயிர…
-
- 1 reply
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசங்களை நோக்கி தினமும் 200க்கு மேற்பட்ட ஷெல்கள் வீழ்ந்த வெடிப்பதுடன் விமானப் படையினரின் போர் விமானங்களும் குண்டு வீச்சுக்களை மேற்கொள்வதால் பொது மக்களின் இருப்பிடங்கள் பாரிய அழிவுகளுக்குள்ளாகி வருவதாக விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.சீராளன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான படுவான்கரை கொக்கட்டிச்சோலைப் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்குப் பின்னர் மக்களின் வீடுகள், கடைகள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், ஆலயங்கள் போன்றவற்றில் உள்ள பொருட்களைப் படையினர் மற்றும் கொள்ளையர்…
-
- 0 replies
- 751 views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகள் தமது விமானங்களை பறக்க விட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக படையினர் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு தடவைகள் இரண்டு விமானங்கள் வானில் பறந்து பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அவதானித்துள்ள படையினரே இத்தகவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, பிற்பகலிலும் இரவிலும் புலிகள் தம்வசமுள்ள விமானங்களை வானில் பறக்க விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வானில் பறக்கும் விமானங்கள் பயிற்சி முடிவடைந்த பின்னர் பொதுப்போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அகலப் பாதையில் பாதுகாப்பான முறையில் இறக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விமானங்கள் எங்கிருந்து வானுக்கு ஏற்றப்பட்டுள்ளன என்பது குறித்து சரியாக …
-
- 4 replies
- 2k views
-
-
கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீதான வான் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து தென்பகுதியில் விடுதிகளை முற்பதிவு செய்திருந்த உல்லாசப் பயணிகள் தமது பதிவுகளை பெருமளவில் இரத்துச் செய்து வருகின்றனர். இந்தத் தாக்குதலானது ஒரு தனியான தாக்குதல் என விபரிக்கப்பட்டு வந்தாலும், மிக அதிகமாக உல்லாசப் பயணிகள் வரும் இந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட முன் பதிவுகள் இரத்துச் செய்யப்படுவது தம்மை மிகவும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடலாம் என முன்னணி விடுதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க வான் தாக்குதலைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம் தனது பயணிகளை எச்சரித்துள்ளது. எனினும், ஏனைய நாடுகள் எச்சரிக்கைகளை விடுக்காதது ஒரு நல்ல அறிகுறி என இலங்கையின் சுற்றுலாத்துறை தலைவர் ரென்ரன் டீ அல்விஸ் …
-
- 3 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் தாய்லாந்திலிருந்து சட்ட விரோதமாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விஸ்தரிக்கப் போவதாகவும் பிராந்திய ரீதியில் பயங்கரவாத செயற்பாடுகளை முடக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் தாய்லாந்து பிரதமர் சுராயுட் சுலனொற் இலங்கைக்கு உறுதியளித்துள்ளார். தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த 30 ஆம் திகதி பாங்கொக்கில் அந்நாட்டுப் பிரதமர் சுலனொற்றை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்தச் சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் இரு நாடுகளும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இணக்கம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 646 views
-
-
கூட்டு கடல்ரோந்து பலத்த சந்தேகங்களுக்கு வழிகோலும் - கருணாநிதி இன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டு கடல்ரோந்துகளை மேற்கொள்வது பலத்த சந்தேகங்கள் எழுவதற்கு வழிகோலும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்களை குறிவைத்து சிறீலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்கள் பாரததேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/
-
- 7 replies
- 1.3k views
-
-
விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெறும் பெரும் திட்டத்துடன் மகிந்தா இந்தியா பயணம் இந்தியா சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்ளும் பெரும் திட்டத்துடனேயே இந்தியா சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மிகின் ஏயார் விமான மூலம் புதுடெல்லி சென்ற மகிந்த ராஜபக்சவை இந்திய, இலங்கை தூதுவராலய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். http://www.pathivu.com/
-
- 2 replies
- 1.3k views
-
-
போர் நிறுத்தம் 100 விகிதம் கடைப்பிடிக்கப்படும் போதே பேச்சுக்கான வாய்ப்பு: சு.ப.தமிழ்ச்செல்வன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசாங்கம் சம்மதிக்கும் வரையிலும் பேச்சக்களை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கம் போர்நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதனை மறுத்து வருமானால் அது முழு அளவிலான போர்ப்பிரகடனமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய மின்னஞ்சல் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் மேலும் முக்…
-
- 0 replies
- 682 views
-
-
சிறிலங்கா வான்பரப்பை காப்பதற்கு உதவும் அனைத்துலகம் சிறிலங்கா வான்பரப்பை காப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளதாக சிறிலங்கா செய்திகள் தெரிவிக்கின்றன. வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட…
-
- 2 replies
- 1.1k views
-
-
திங்கள் 02-04-2007 21:50 மணி தமிழீழம் [முகிலன்] மகிந்த ராஜபக்ச மணிசங்கர் ஜயர் பஞ்சாயத்து முறைமை தொடர்பில் கலந்துரையாடல் இந்திய பஞ்சாயத்து அமைச்சர் மணிசங்கர் ஜயரை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று புதுடெல்லியில் அமைந்துள்ள மயூரா சராட்டன் விடுதியில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மணிசங்கர் ஜயரின் பஞ்சாயத்து முறைமை கொண்ட அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆலோசனையைப் பெறுமுகமாகவே இச்சந்திப்பு இருவரும் கலந்துரையாடியுள்ளனர். பதிவு
-
- 9 replies
- 1.7k views
-
-
திங்கள் 02-04-2007 22:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] புலிகளுக்கு அவதூறை ஏற்படுத்தும் போலிப் பரப்புரையில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபடுகிறது - இளந்திரையன் விடுதலைப் புலிகள் மீது அவப் பெயரை ஏற்படுத்தும் பரப்புரைகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். மயிலாம்பாவெளியில் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்ட 6 சிங்கள தொழிலாளர்கள் மற்றும் இன்று மதியம் கொண்டவெட்டுவான் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடனும் விடுதலைப் புலிகளைத் தொடர்பு படுத்தி சிறீலங்கா அரசாங்கம் விசமப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறதை அடுத்து விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் சிறீலங்கா அரசின் இக்குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்துள்ளார். தமது விடுத…
-
- 0 replies
- 685 views
-
-
மட்டு மயிலாம்பாவெளியில் 6 சிங்களத் தொழிலாளர்கள் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு மயிலாம்பாவெளியில் 6 சிங்களத் கட்டிடத் தொழிலாளர்கள் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 937 views
-
-
புலிகளால் ஆபத்தில்லை: இந்திய விமானப்படை ஏப்ரல் 02, 2007 குவாலியர்: விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலோ, ஆபத்தோ இல்லை என்று தென் பிராந்திய விமானப்படை தளபதி யஷ்வந்த் ராவ் ராேன கூறியுள்ளார். குவாலியரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அவர்களது பலத்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இருப்பினும் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையிலுிம் நமது படைகள் தயாராகவே உள்ளன. என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. போதிய அளவில் ரேடார் வசதிகள் நம்மிடம் உள்ளன. போர் விமானங்கள், நவீன சாதனங்கள் என நமது …
-
- 6 replies
- 1.8k views
-
-
[Monday April 02 2007 01:40:51 PM GMT] [யாழ் வாணன்] வான்காப்பு கட்டமைப்பை நவீனமயப்படுத்தல், செய்மதி தகவல்களை வழங்குதல், புலனாய்வுத் தகவல்களை வழங்கல் ஆகியன இதில் அடங்கும் எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் கட்டுநாயக்க வானூர்தி நிலைய வான்பரப்பை பாதுகாக்க வான்காப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பழுதாகியுள்ள டி.எம் - 02 ராடாருக்கு பதிலாக டி.எம் - 04, டி.எம் - 06 வகை ராடார்களை பெறுவது தொடர்பாக சீனா, பாகிஸ்தானுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளையில் எந்தவொரு வானூர்தியும் வான்படையினருக்கு அறிவிக்காமல் பறக்கக் கூடாது என சிறிலங்கா வான்படைத்தளபதி எயார் வைஸ் மார்சல் ரொசான் குணதிலக்க பணி…
-
- 4 replies
- 1.7k views
-
-
[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007, 18:09 ஈழம்] [புதினம் நிருபர்] சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டும் என்றும், இந்தியா - இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும், இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளதை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: '1983…
-
- 2 replies
- 1.1k views
-
-
புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்படுவார்ளேயானால், அத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான சரியான பாதுகாப்பு முறைமை அரச கடற்படையினரிடம் உள்ளது என்று கடற்படைப் பேச்சா ளர் கொமாண்டர் டி.கே.பி. தஸ நாயக்க நேற்று உதயன் நாழிதழுக்கு தெரிவித்துள்ளார். புலிகள் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கலாம். அல்லது வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யலாம் என்று இந்திய கடற்படை அதிகாரி சௌ ஹான் கூறியிருந்தார். இது தொடர்பாகக் கருத்துக் கூறிய இலங்கை கடற்படைப் பேச்சா ளர் மேலும் தெரிவித்ததாவது: புலிகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தயாரிக்கவுள்ளனர். அல் லது கொள்வனவு செய்யவுள்ள னர் என்று இந்தியக் கடற்படை அதிகாரி சௌஹான் கூறியுள்ளார். புலிகள் அவ்வாறு செய்வார் களேயானால் அது நாட…
-
- 7 replies
- 2k views
-
-
[Monday April 02 2007 09:57:36 AM GMT] [tharan] பாக்கு நீரிணைக் கடற் பரப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய மீனவர்கள் ஐவரை சுட்டுக் கொன்ற இலங்கைப் படகுகளை தேடும் நடவடிக்கையில் இந்திய கடற்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பாக்குநீரிணைக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டனர். எனினும், இலங்கை கடற்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தவில்லையென இலங்கை அரசும் கடற்படையினரும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாக்கு நீரிணையில் இலங்கை இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் அண்மைக்காலமாக தங்கள் கண்காணிப்புப் பணிகளையும் ரோந்த…
-
- 9 replies
- 2.6k views
-
-
4 கப்பல்கள், 11 படகுகளில் ஒரு வருடத்தில் புலிகள் ஆயுதக் கடத்தல் [02 - April - 2007] கடந்த சுமார் ஒரு வருட காலத்தில் அதாவது 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் புலிகள் இயக்கத்தினரின் 4 ஆயுதக்கப்பல்களும் 11 பெரிய ஆயுதப்படகுகளும் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 2 ஆயுதப் படகுகள் கடற்படையினரால் தாக்கி கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணம் செய்த புலிகள் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட ஆயுதக்கப்பல்கள் பற்றிய தகவல்களுக் கேற்ப 2006-09-17 ஆம் திகதி கல்முனையை அண்டிய கடற்பரப்பில் வைத்து ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றும் 2007-02-27 ஆம் திகதி தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்து பு…
-
- 1 reply
- 1.9k views
-
-
அம்பாறையில் பஸ்சில் குண்டுவெடிப்பு என்றும், 12 பேர் பலியாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
- 7 replies
- 2.5k views
-