Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலத்தை ஒப்படைக்க உதவுமாறு வேண்டுகோள் ஜசனிக்கிழமைஇ 3 மார்ச் 2007இ 03:41 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவனின் சடலத்தை அவரது சொந்த இடமான விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகிய விசுவமடுவிற்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இவ் வேண்டுகோளை அவரது குடும்பத்தினரின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவிற்கு கடிதம் மூலம் விடுத்திருக்கின்றனர். யாழ். பல்கலைக்கழக நிர்வாகம்இ கிளிநொச்சியில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் ஆகியவற்றிடமும் இதற்கு உதவுமாறு கோரிக்கை…

    • 2 replies
    • 1.3k views
  2. பூசா முகாமிலிருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை - கே.பி.மோகன் - காலி பூசா முகாமிலிருந்த தடுப்பு காவல் கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை 28 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தில் பம்பலப்பிட்டியை சேர்ந்த பஸீர் பாபு (வயது 28) என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளவராவார். மலசல கூடத்திற்குள்ளேயே இவரின் சடலம் தொங்கிக் கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக ரத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அருணலால் தெரிவித்தார். தனது விடுதலைக்காக காத்திருந்த இவர் மனம் தளர்ந்த நிலையில் காணப்பட்டிருந்தாரெனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தற்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். http://www.thinakkural…

  3. கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பாளரின் உறவினர் மீதும் துணை இராணுவக் குழுவினர் கைவரிசை. கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட முன்னணி வர்த்தகரும், கட்டட ஒப்பந்ததாரருமான இராஜகுலேந்திரன் மிகவும் ஆபத்தான நிலையில் வாரியபொல காவல்துறை பிரிவில் உள்ள எந்தராகல பகுதியில் வேசைட் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு அண்மையில் இருந்து கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொகுவல பகுதியை வசிப்பிடமாக கொண்ட இவரது நெருங்கிய உறவினரான மூத்த காவல்துறை சுப்பிரின்டன்ட் சரத் லூகொட சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொழும்புப் பிரிவின் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சரத் லூகொட தெரிவித்ததாவ…

  4. [24 - February - 2007] [Font Size - A - A - A] * எவருமே கனவு காணவேண்டாம் இந்தியாவின் நலனையும் பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகம் தலையிடுமென்று எவரும் கனவு காண வேண்டாமென்று எச்சரித்திருக்கும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் அரசியல்வாதிகளுக்கு இரகசிய கூட்டு இருக்குமேயானால் தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். தனது கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான முரசொலியில் `கேள்வி- பதில்' பத்தியிலேயே கருணாநிதி இந்த விடயம் தொடர்பாக விரிவாக தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கு தேவையான அலுமினியத்தை விநியோகிக்க…

    • 32 replies
    • 5.5k views
  5. சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமால் பன்சிகேவா குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மௌபிமா பத்திரிகையில் பத்திரிகையாளராக பணியாற்றிய தமிழ் பெண்மணி பரமேஸ்வரி முனுசாமியை தடுத்து வதை;திருப்பதற்கான காரணத்தை மார்ச் மாதம் 20 ம் திகதிக்கு முன்னர் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக இவரை கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கான தகுந்த காரணங்களை திரு.பன்சிகேவாவிடம் தெரிவிக்கத் தவறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இக்கைதில் ஈடுபட்ட காவல்துறையினர் எதிர்வரும் விசாரணையில் இதற்கான போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தனர். இவ்விசாரணையின் போது மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனும் உடன் இருந்தமை கு…

  6. அரசாங்கத்திடம் இருக்கின்ற தைரியத்தின் காரணமாகவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுடன் நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்கும் இடையூறாக இருக்கின்ற பயங்கரவாத செயற்பாடுகள் இன்று வடக்கில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்துவதற்கு எனது அரசாங்கத்திற்கு மட்டுமே முடிந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி குவஞ்சூ நகரத்தில் நேற்று இடம்பெற்ற முதலீட்டு மற்றும் அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:சுனாமி அனர்த்தத்தின்போது ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொது மக்களின் வாழ்க்கை இரண்டு…

  7. நெதர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள தமிழர்கள் எவரையும் எதிர்வரும் ஜூலை வரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில்லையென அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நேற்று இடம்பெற்ற நெதர்லாந்து அரசின் அமைச்சரவை மாநாட்டிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் யுத்த நிலைமைகள் மீண்டும் தோன்றியுள்ளதாலும் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்துள்ளதாலுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நெதர்லாந்து அமைச்சரவை தெரிவித்துள்ளது.. முக்கியமாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வன்முறைகளினால் தமிழ் மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்படுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி வரை நெதர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள தம…

    • 7 replies
    • 1.6k views
  8. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று தமது கற்றல் செயற்பாடுகளை புறக்கணித்துள்ளனர். 2 ஆம் வருட கலைப்பீட மாணவன் செல்வரத்தினம் சிவரஞ்சன் (வயது 23) கடந்த புதன்கிழமை சாவகச்சேரி வைத்தியசாலை வளவில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டமையை கண்டித்தே மாணவர்கள் வகுப்புக்களை பகிஷ்கரித்துள்ளனர். இவ்வகுப்பு புறக்கணிப்பில் யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களும் கலந்துகொண்டதுடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளித்திருந்த போதும் கற்றல் செயற்பாடுகள் நடைபெறவில்லை. இம்மாணவனின் கொலையை கண்டித்து அடுத்த வார முழுவதும் யாழ். பல்கலைக்கழகத்தில் துக்கவாரம் அனுஷ்டிக்க…

  9. உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்துங்கள் - துணைவேந்தர் யாழ்பல்கலைக்கழகத்தில் நேற்று கைலாசபதி கலையரங்கில் நடந்த சுட்டுக்கொல்லப்பட்ட மாணவன் சிவரஞ்சனுக்கான நினைவுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நீங்களே உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் கல்வியை தொடர்ந்து கற்கையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேற்று கைலாசபதி கலையரங்கில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நினைவுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக சமூகத்தினர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/

  10. இவர்களுள் 132 ஆண்களும்,46 சிறுவர்களும்,107 பெண்களும், 47 சிறுமிகளும் அடங்குகின்றனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகளை அரசாங்கம் சந்தை பகுதியருகே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.. இவர்களுக்கான வீடுகளை 14 அகதி முகாம்களில் நிர்மாணிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது. என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர் http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  11. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை வீழ்ச்சி. - பண்டார வன்னியன் Saturday, 03 March 2007 10:06 சிறிலங்காவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வாண்டில் பெரும்வீழ்ச்சி கண்டுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலா நகரமாகி நுவரெலியாவிற்குக் கடந்த ஆண்டுகளைவிட இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 75 விழுக்காட்டால் வீழ்ச்சியடைந்துள்ளதாகச் சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒகஸ்ட் மாதம் சுற்றுலாக் காலம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள வலப்பனை, கிங்குறான் கொத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை மிகவும் க…

    • 1 reply
    • 791 views
  12. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 01-02-2007 அன்று ஒளிபரப்பாகிய ''காலக்கணிப்பு'' www.tamils.info/index.php?subaction=showfull&id=1172798989&archive=&start_from=&ucat=&

  13. பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிறிலங்கா அரசைக் கோரும் வெளிநாட்டு தூதுவர்கள். மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தமது தூதரகங்கள் மற்றும் வதிவிடங்களின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வெளிநாட்டு தூதுவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மட்டக்களப்பு சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பதற்கான சந்திப்பு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவினால் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டப்பட்டது. வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறிய அவர், தூதுவர்கள் முன் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்தததாவது: "தூது…

    • 1 reply
    • 829 views
  14. விடுதலைப் புலிகளை தடைசெய்யுமாறு இலங்கை அரசு விடுத்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதுடன் சட்டவிரோதமாக அந்நாட்டுக்குள் நுழையும் இலங்கையர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளதாக அங்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று வியாழக்கிழமை `தினக்குரலுக்கு ' தெரிவித்தார். அவுஸ்திரேலியா சென்றுள்ள அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுனரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; புலிகளின் பயங்கரவாதச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில…

    • 6 replies
    • 2.7k views
  15. சடுதியான மாற்றங்கள் நிகழப்போகின்றன - நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள் தமிழ் நாட்டு மக்கள் எமக்கு உதவும் வழிகள் இவைதான். 1. அங்கேயுள்ள எமது மனிதர்களை மதியுங்கள். மனிதர்களாய். 2. ஈழத்தமிழர்களின் விருப்பத்துக்கு எதிரான முடிவுகளை இந்திய அரசு எடுக்காமல் முடிந்தவரை தடுத்து நிறுத்த முயலுங்கள். 3. நாம் எமது தேசத்தினை பிரகடனப்படுத்தும்போது அதனை அங்கீகரியுங்கள். இந்திய அரசின், உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெற்றுத்தருவதற்கான அழுத்தங்களை மக்கள் கூட்டமாக வழங்குங்கள். வரலாற்றின் ஓட்டத்தின் குறித்த காட்சியின் சாட்சிகளாய் நிற்கிறோம். அவரவர் அரசியல் கடமைகளை உணர்ந்தாகவேண்டும். அறிவுமதியின் வலி "இந்தியாவின் அரசியல் நிலைப்பாடுகள…

    • 0 replies
    • 1.3k views
  16. சனி 03-03-2007 04:38 மணி தமிழீழம் ஈழமைந்தன் சிறீலங்கா அரசும் படைகளும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை பயன்படுத்தி பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதைகள், படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டத்திற்கு மாறான தடுத்து வைப்புக்களை மேற்கொண்டு வருவதாக அனைத்துலக சட்டநிபுணர்கள் சபை கடும் விசனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றை பிரயோகிப்பதாக கூறிக்கொண்டு எவருக்கும் இலகுவில் அவலத்தை வழங்கக்கூடிய வகையில் சிறீலங்கா அரசாங்கமும் படைகளும் செயற்பட்டு வருகிறது என்று இவ் அமைப்பு (ICJ) தெரிவித்துள்ளது. இந்நிபுணர்கள் இலங்கைக்கான உண்மை நிலையை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். நன்றி : பதிவ…

    • 0 replies
    • 800 views
  17. நோர்வேயை வெளியேற்றுவது இலங்கை அரசுக்குசர்வதேச மட்டத்தில் பாதகமான நிலையை ஏற்படுத்தும் அவுஸ்திரேலியாவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா போர்நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிவதும் சமாதான செயற்பாடுகளின் ஏற்பாட்டாளரான நோர்வேயை வெளியேற்றுவதும் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மட்டத்தில் பாதகமான நிலைமையை தோற்றுவித்துவிடும் என்று அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். மெல்பேனில் அண்மையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது: நோர்வேயை வெளியேற்றக் கோருவதும் போர்நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிய கூறுவதும் குஷியான விட…

    • 0 replies
    • 636 views
  18. 'இராஜதந்திரிகளின் உயிராபத்துக்களுக்கு கோத்தபாயவே காரணம்': மங்கள "கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் தாக்குதல் இடம்பெற்ற பகுதி மிகவும் உயரதிகாரிகள் செல்லக்கூடிய பாதுகாப்பான பகுதியல்ல. எனவே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இராஜதந்திரிகளுக்கு உயிராபத்தை விளைவிக்கக்கூடிய இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்" நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "அண்மையில் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மூலம் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றி விட்டோம் என பாதுகாப்பு அமைச்சரும், செ…

    • 4 replies
    • 1.6k views
  19. இலங்கை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்கள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியைச் சென்னையில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இந்திய மாதிரியிலான அரசியலமைப்பு முறையின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும் என்று தான் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாக ஆனந்த சங்கரி அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார். தனி நாடு கோரிக்கை என்பதை சர்வதேச சமூகமும், இந்தியாவும் ஏற்காது என்பதால், இந்தப் பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தான் கருணாநிதியிடம் வலியுறுத்தியதாகவும் ஆனந்த சங்கரி கூறினார். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  20. வவுனியாவில் உயர்பாதுகாப்பு பகுதியில் கிளைமோர் தாக்குதல் வவுனியா சிறிலங்காப் படையினரின் உயர்பாதுகாப்பு பகுதியான ஈரப்பெரியகுளத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரப்பெரியகுளம் தொடரூந்து நிலையத்தில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரின் நிலை மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இக்கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது காவல்துறையினரின் நிலையில் காவல்துறையினர் இருவரும் சிங்கள ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் காவல் கடமையில் இருந்தனர். இவர்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவரும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவருமாக இருவர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா இராணுவத் தலைமையகமும் விமானப் படைத்தளமும…

    • 0 replies
    • 706 views
  21. சிறிலங்காவின் 'வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்': ஜேர்மனிய நாளேடு [வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்] "மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது". இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெ…

    • 6 replies
    • 1.9k views
  22. சிறிலங்கா அரசின் பிரச்சாரப்போரின் மீது வீழ்ந்த எறிகணைகள் -அருஸ் (வேல்ஸ்)- சிறிலங்கா அரசின் வாகரை ஆக்கிரமிப்பின் பின்னர் கிழக்கில் நிலவிவரும் இராணுவச் சமவலுச் சமன்பாடுகளில் சர்வதேசம் கொண்டிருந்த குழப்பநிலை கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பின் இதயப்பகுதியில் நடைபெற்ற மோட்டார் தாக்குதலுடன் மேலும் குழப்பமடைந்துள்ளது. அரசின் அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் உற்சாகம் அடைந்த மகிந்தாவின் சகோதரரும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச விடுதலைப் புலிகளை முற்றாக கிழக்கில் இருந்து வெளியேற்றப் போவதாக சூளுரைத்திருந்தார். அவரின் கூற்றின் அறியாத்தன்மையை அனைத்துலக சமூகம் தெளிவாக புரிந்து கொண்ட நாளாக கடந்த 27.02.2007 ஆம் நாள் அமைந்து விட்டது. தனது இராணுவ மேலான…

    • 0 replies
    • 677 views
  23. மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட சடலத்தை திருப்பி அனுப்பிய படையினர். - பண்டார வன்னியன் Friday, 02 March 2007 11:27 யாழ்ப்பாணம் தகனக்கிரிகைக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தினையும், விறகினையும் எடுத்துச் செல்லப் படையினர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இச் சம்பவம் அராலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அராலி பூவோடை இந்துமயானப் பகுதியிலேயே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த வயோதிபர் ஒருவரை அடக்கம் செய்வதற்காக முன்கூட்டியே படையினரின் அனுமதியைப் பெற்று விறகும் இறக்கப்பட்டு இறுதிக்கிரியைக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் அங்கு வந்த படை அதிகாரிகள் சிலர் சடலத்தையும் வறகையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற …

  24. வடக்கு கிழக்கும் பகுதிகளுக்கு தொலைதொடர்பு விநியோகத்திற்கு பாதுகாப்பு அமைச்சு தடைவிதித்துள்ளது. விடுதலைப்புலிகள் இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கு இவைபயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனால் இத்தடை உத்தவு நடைமுறைப்படுத்தப்படுவதாகவு

  25. சற்று நேரத்திற்கு முன் அனுராதபுரம் விமானப்படையினரின் தளத்துள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. இருவர் மரணித்துள்ளதாக இராணுவ பேச்சாளன் அறிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்டுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.