ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142757 topics in this forum
-
உலக ஒழுங்குக்கு அமைய புலிகளின் தலைவர் விரைவில் முடிவுகளை எடுப்பார் Sunday, 28 January 2007 -மட்டு.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தெரிவிப்பு போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், உலக ஒழுங்குக்கு அமைய பொறுமை காத்து வந்த எமது தலைவர் விரைவில் சில முடிவுகளை அறிவிப்பாரென விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறைப் பெறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் மேலும் கூறுகையில்; "மூதூர் கிழக்கு மற்றும் வாகரைப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மனிதப் பேரவலம் போன்று மட்டக்களப்பிலும் பெரும் அவலத்தை உருவாக்க அரசு முயல்கிறது. கடந்த சில தினங்களாகக் க…
-
- 2 replies
- 2.7k views
-
-
உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை காலியில் ஆரம்பம் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை காலியில் உள்ள லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் இலங்கைக்கு உதவி வழங்கும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள.; மகிந்த எமது மக்கள் மீது குண்டைக் கொட்டப்போகிறான்.
-
- 0 replies
- 905 views
-
-
யாழ். குடாவில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை கடுமையாக அமுல்படுத்த பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் அறிவித்துள்ளது. படைத் தலைமையகத்தினால் நேற்றிரவு ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குடாநாட்டில் இரவு 7 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம் அதிகாலை நான்கு மணிக்கு நீக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறும் வகையில் வீதிகளில் நடமாடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஊரடங்கு நேரத்தில் வீதிகளில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்த்துக் கொள்…
-
- 0 replies
- 814 views
-
-
[28 - January - 2007] [Font Size - A - A - A] அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவையும் அரச நிறுவனங்களின் கணக்கு விபரங்களைக் கண்டறியும் பாராளுமன்றக் குழுவையும் இரத்துச் செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவை இரண்டையும் ஒன்றாக இணைத்து `நல்லாட்சி நிர்வாகக் குழுவை' உருவாக்கும் முயற்சிகள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தகவல்கள் கசியத் தொடங்கியதும் அரசாங்கம் அதனை முற்றாக நிராகரித்ததோடு குற்றவாளிகள் தப்புவதற்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது என்று அறிவித்தது. அரச துறையில் இடம்பெற்றுவரும் ஊழல் நடவடிக்கைகளை மூடிமறைப்பதற்கு மேற்படி குழுக்களை இரத்துச் செய்து ஊழல் பேர்வழிகள் தப்புவதற்கு வசதியாக திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்…
-
- 0 replies
- 748 views
-
-
கொழும்புத் துறைமுகம் மீதான தாக்குதல் முதலீட்டாளர்களுக்கான செய்தியே -பொருளியலாளர்கள் கொழும்புத் துறைமுகத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் சிறிலங்காவின் பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு வெளிநாட்டு முதலீட்டாளர்களிற்கான மிகப்பெரிய செய்தியாகவும் விளங்குகின்றது எனப் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்புத் துறைமுகம் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக பெருமெடுப்பில் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசு தாக்குதல் துறைமுகப்பகுதிக்கு அப்பால் வைத்தே முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்த ுவருகின்றது. ஆனால் அரசு வெளியிடும் தகவல்களுக்குள் இருக்கும் ஓட்டைகள், குழப்பங்கள், முரண்கள் என்பவையே நேற்று நடைபெற்ற சம்பவத்தின் உண்மை நி…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 28-01-2007 00:33 மணி தமிழீழம் [மோகன்] தமிழீழ இலக்கத்தகடு நடைமுறை அமுலுக்கு வருகிறது தமிழீழ விடுதலைப்பலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களுக்கான தமிழீழ இலக்கத்தகடு வழங்கும் நடைமுறை அமுலுக்கு வரப்படவிருக்கிறது தமிழீழ போக்குவரத்து கண்காணிப்பு பிரிவின் ஊர்திப் பகுதியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பிரதேசங்கங்களில் தற்போது பாவனையில் உள்ள வாகனங்களுக்கு, தமிழீழத்தில் அச்சிடப்பட்ட இலக்கத்தகடுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சகல விதமான இயந்திர ஊர்திகளும் தமிழீழ இலக்கத் தகடுகளையே பயன்படுத்தும் என்று தமிழீழ போக்குவரத்து பிரிவின் ஊ…
-
- 5 replies
- 2.1k views
-
-
வியட்னாம் கற்றுத்தந்த பாடம் -சி.இதயச்சந்திரன்- அமெரிக்கா பற்றி யாராவது பேசினால் வியட்னாமின் ஞாபகம் எல்லோருக்கும் வரும். போராட்டங்கள் குறித்து அலசும் போது, வியட்னாமிய விடுதலைப் போரை உள்நுழைக்காது போனால் ஆய்வு செய்பவர்கள் தடுமாறிப்போவார்கள். இந்த வியட்னாம் தரும் படிப்பினைகள், காலங் கடந்தாலும் சில விடயங்களை எமக்குப் புலப்படுத்தியபடியே சென்றிருக்கின்றன. வியட்னாம் மக்களோடு அன்று போர் புரிந்த அமெரிக்கா இன்று தனிப்பெரும் உலக வல்லரசு. இன்றைய நவீன உலக ஒழுங்கில், அமெரிக்காவைப் புறந்தள்ளி அரசியல் பேசுவதென்பது நகைப்பிற்கிடமாகத் தென்படும். சிறிலங்கா விவகாரத்திலும் இந்த உலக ஜனநாயகக் காவலனின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படும். இந்த…
-
- 0 replies
- 3.5k views
-
-
தொப்பிகலையை இலக்கு வைத்த படையினரின் நகர்வுகள்! -விதுரன் கிழக்கில் முழு அளவிலான படை நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வாகரையை கைப்பற்றியதன் மூலம், மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள ஏனைய பகுதிகளையும் கைப்பற்றி விடமுடியுமென அரசு கருதுவதால் அடுத்து வரும் நாட்களில் உக்கிரமான போர் வெடிக்கப் போகிறது. திருகோணமலைத் துறைமுகத்துக்கு மூதூர் கிழக்கில் சம்பூரிலுள்ள புலிகளின் ஆட்லறிகளால் பெரும் ஆபத்தேற்பட்டுள்ளதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இன்று பாரிய படை நடவடிக்கையாக கிழக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையிலும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வடக்கு - கிழக்கிலிருக்கையிலுமேயே இந்தப் பாரிய படை நடவடிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாய்மூடி மௌனியாக...! மிகப் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தி வாகரைப் பிரதேசத்தைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அதாவது, யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியாக இருந்த வாகரைப் பகுதியை தமிழ் மக்களைக்கொன்றும், காயப்படுத்தியும், பட்டினிக்கு உள்ளாக்கியும், வைத்திய சேவையை முடக்கியும் சிறிலங்கா அரசு காரியத்தைச் சாதித்துக் கொண்டுள்ளது. இங்கு இருவேறு சம்பவங்கள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. ஒன்று யுத்த நிறுத்த உடன்பாட்டைச் சிறிலங்கா அரசாங்கம் அப்பட்டமாக மீறியுள்ளமையாகும். அதாவது, யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதிஃ கட்டுப்பாட்டுப் பகுதி என ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேசத்தின் மீது தனது ஆயுதப் படைய…
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கிலும் புலிகளைத் தாக்குவோம்: கோத்தபாய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 00:18 ஈழம்] [காவலூர் கவிதன்] விடுதலைப் புலிகள், 2002ல் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு கிழக்கை தமது ஆளகைக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத தளபாடங்களை சிறிலங்கா அரசு தாக்கியழித்து வருகிறது. கிழக்கில் மட்டுமல்லாது, வடக்கிலும் அவர்களது ஆயுத நிலைகள் தாக்கியளிக்கப்படும் என்று கோத்தபாய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடம் ஆயதத் தளங்கள் இருக்கும்வரை, தாக்குதல் நடத்தவே முயற்சிப்பாhர்கள், கடற்படைத் தளங்கள் அவர்களிடம் இருந்தால், தாக்குதல்கள் தொடரும், அதனால் இலங்கையின் எந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளம் இருந்தாலும், அதன்மீது சிறீலங்கா படைகள் தாக்குத…
-
- 50 replies
- 8.1k views
-
-
யாழில் வெட்டுக்காயங்களுடன் மற்றொரு இளைஞனின் உடலம்வலிகாமம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இனம்தெரியாத இளைஞன் ஒருவரது உடலம் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டள்ளது. இவரது உடலமானது சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிசார்தகவலின் படி யாழ்பாணம் பகுதியில் வேறு ஒருஇடத்தில் இருந்து கடத்தப்பட்டு சுன்னாகம் பகுதிக்கு வெள்ளை வாகனத்தில் மாலை 5 மணியளவில் கொண்டுவந்து கந்தரோடை வித்தியாலயப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் வீசியுள்ளதாக அறியமுடிகிறது. படுகாயமடைந்த நிலையில் அவ்இளைஞன் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தபோது அயலவர்கள் அச்சம்காரணமாக அவரைகாப்பற்ற முயலவில்லை என மேலும் அறியமுடிகிறது. ஊரடங்கு சட்டம் காரணமாக பொதுமக்களது நடமாட்டம் சிறீலங்கா இராணுவத்தால் க…
-
- 0 replies
- 924 views
-
-
வாகரை மற்றும் கிழக்கு மாகாணப் பிரதேசங்களில் அரச படையினருக்கு பெருவெற்றி கிடைத்திருக்கும் இந்த நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களுக்கேற்ப, கடந்த எந்தவொரு காலகட்டத்திலும் எந்தவொரு யுத்த முனை நடவடிக்கையிலும் பிரபாகரனுக்குக் கிடைக்காத தோல்வியும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அரச படையினர் மேற்கொண்டிருக்கும் தற்போதைய வெற்றிகரமான தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் முன்னர் இந்திய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட `ஒபரேஷன் பவன்' (Operation Bawan) இராணுவ நட…
-
- 8 replies
- 2.6k views
-
-
வவுனியா கணேசபுரம் பகுதியில் தந்தை, மகன் சுட்டுக்கொலை . வவுனியா கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு தந்தையும் மகனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். கணேசபுரம் அம்மன்கோவிலடிப் பகுதியில் வீடொன்றினுள் இரவு 9 மணியளவில் நுழைந்த ஆயுத பாணிகளே அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். இதனால் தந்தையும் அவரது மகனும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ஆயுதபாணிகள் வீட்டை அடித்து நொருக்கி பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில், கட்டிட தொழிலாளியான முருகையா (வயது 50) என்பவரும், இந்தியாவுக்கு அகதியாகச் சென்று அண்மையில் நாடுதிரும்பிய இவரது மகனான சசிதரன் ( வயது23) என்பவரும் உயிரி…
-
- 0 replies
- 809 views
-
-
யாழ்ப்பாண மக்களை சுரண்டும் ஈவிரக்கமற்ற கப்பல் வாணிபம் -யாழின்மைந்தன்- Sunday, 28 January 2007 "யாழ்ப்பாண மக்களின் பசி பட்டினியைப் போக்க துணிச்சலுடன் கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதாகக் கூறும் கொழும்பு வர்த்தகர்கள் குடாநாட்டு மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டும் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வணிகத்திலே ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடாநாட்டு நிர்வாக அதிகாரிகளினதும், படைத்தரப்பினரதும் ஆத்திரத்துக்குள்ளாகி வருகின்றனர்." பொருட்கள் கொழும்பு விலை யாழ்ப்பாணத்தில் விலை யாழ். குடாநாட்டுக்கான ஒரே தரைவழிப்பாதை மூடப்பட்டு இன்றுடன் நூற்றி எழுபது நாட்கள் முடிந்து விட்டன. ஏ-9 தரைவழிப்பாதை மூடப்பட்டதால், குடாநாட்டு மக்களுக்கான வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007, 09:45 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ஷ அமைச்சர்களின் கடமைகளில் தலையிடுவதுடன் கொள்முதல்களுக்கும் திட்டங்களுக்குமான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகளிலும் மிக அதிகளவில் குறுக்கீடு செய்கிறார் என சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கின்றார
-
- 0 replies
- 859 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்தின் பக்கத்துக்கு கட்சிதாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லீம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று அரசில் இணைய உள்ளனர். அதேவேளையில், இவ்வாறு அரசுடன் இணைந்துகொள்பவர்களையும் உள்ளடக்கிய அமைச்சரவை மறுசீரமைப்பும் இன்று நடைபெற உள்ளது. ஐ.தே.க. தலைமையில் திருப்தியடைந்துள்ள சுமார் பதினேழு வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசில் இணைந்து கொள்வார்கள் என அரசு எதிர்பார்க்கின்றது. ஆனால் 13 உறுப்பினர்களே ஐ.தே.க.வில் இணைந்து கொள்ள உள்ளனர் என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் விஷேட வைபவம் ஒன்றில் இவர்கள் அனைவரும் அர…
-
- 0 replies
- 772 views
-
-
] "சிறிலங்காவினால் தற்போது மீறப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு இணைப்பு பற்றிய இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்த விவகாரத்தை, இந்தியாவினால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குவிதிகளின், ஆறாவது அதிகாரத்தின், சாரம் 34, 35, 36 க்கு அமைய, முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு." பிரான்சை தலைமையகமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் நாள் கையெழுத்தான சிறிலங்கா - இந்தியா அனைத்துலக உடன்படிக்கையின் பிரகாரம், சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தல…
-
- 1 reply
- 904 views
-
-
* பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ -ராய்ட்டர் செய்திச்சேவை- விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு அவர்களுடைய இராணுவ கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராய்ட்டர் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சமாதானம் குறித்து நேர்மையான அக்கறை கொண்டுள்ளதை விடுதலைப்புலிகளின் தலைவர் தனிப்பட்ட ரீதியில் வெளிப்படுத்தினால் மாத்திரமே இராணுவத்தின் திட்டங்களை கைவிடச் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் இராணுவக் கட்டமைப்புகளை அழிக்க விரும்புகின்றோம், அவை எங்கிருந்தாலும், வடக்கு, கிழக்கு, தெற்கில் இருந்தால…
-
- 0 replies
- 960 views
-
-
பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு உலகின் ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் எமது தேசியக் கொடியின் கீழ் விமான சேவைகள் ஏனைய நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திலேயே "மிஹின் லங்கா" விமான சேவை ஆரம்பிக்கபட்டதாகத் தெரிவிக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூடிய விரைவில் இதுபோன்ற தேசிய கப்பல் சேவையொன்றும் ஆரம்பிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற "ஜாதிக சவிய" திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றும் போதே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கென தனித்துவமான விமான சேவை இருந்தது. ஆனால், இ…
-
- 0 replies
- 856 views
-
-
மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக நூற்றாண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் வெளிவிவகார அமைச்சு செயலாளர் பாலித கோஹணவும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். காந்தி சத்தியாக்கிரக நூற்றாண்டு விழாவை இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது. அகிம்சைக் கோட்பாட்டை போதித்து அதன் வழி நடந்த காந்தியைப் பற்றி பேசுவதற்கும் அவர் தொடர்பாக இடம் பெறும் உரைகளை செவிமடுக்கவும் இலங்கைத் தமிழர்கள் டில்லிக்கு வருகை தருகின்ற போதும் இலங்கையில் உக்கிரமடைந்து வரும் மோதல்கள் தொடர்பாக இந்தியத் தலைவர்களுடன் இவர்கள் கலந்தாராய்வார்களென எதிர் பார்க்கப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை ந…
-
- 0 replies
- 767 views
-
-
ஞாயிறு 28-01-2007 01:01 மணி தமிழீழம் [மோகன்] பரிசோதனை என்ற போர்வையில் பெண்கள் மீது கெடுபிடி யாழ்நகரில் சிறீலங்கா காவல்நிலையத்தின் வணிக மையத்திற்கு இன்று பொருட்களை கொள்வனவிற்காக சென்ற பொதுமக்கள், பெண்கள் சோதனை என்ற போர்வையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். பெண்களை வழிமறிக்கும் ஆண்காவல்துறையினர் அவர்களை நடுவீதியில் வைத்து உடற்கோதனைக்கு உட்படுத்தி இம்சைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். இதேவேளை சிறீலங்கா காவல்துறையினரால் உடற்பரிசோதனைக்கு பெண்கள் உட்படுவதை காவல்துறையின் மற்றொருபிரிவினர் ஒளிப்படக் கருவிகள் மூலம் பதிவு செய்தனர். http://www.pathivu.com/
-
- 1 reply
- 869 views
-
-
~வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல~ -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள…
-
- 3 replies
- 1.1k views
-
-
மணலாறு மாவட்டத்தில் மோதலில் போராளி வீரச்சாவு கடந்த 24ம் திகதி நிகழ்ந்த மோதலின் போது விரவேங்கை மணிமொழி என்றழைக்கப்படும்இ வவுனியா ஓமந்தைப் பகுதியை சொந்த இடமாக கொண்ட இராஐரட்ணம் ரஐனா என்ற போராளி வீரச்சாவை அணைத்துக் கொண்டுள்ளார். அதேநாளில் மணலாறு ஜானகபுரத்தை அண்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் சிறீலங்கா படையினர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது யாழ் இணையத்தளம் சார்பாக வீரச்சாவைத்தழுவிக்கொண்ட ஒவ்வொரு போராளிக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துவோம்
-
- 0 replies
- 772 views
-
-
கொழும்பு துறைமுகத் தாக்குதல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? [ஞாயிற்றுக்கிழமை, 28 சனவரி 2007, 04:49 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகம் மீது நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலானது அரசினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தாக்குதலில் தாக்குதலாளிகளால் 4 கடற்கலங்கள் அழிக்கப்பட்டதாக நேற்று மாலை கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சிறிலங்கா கடற்படையினர் தாம் சந்தேகத்திற்கு இடமான 3 படகுகளை அழித்ததாக நேற்று காலை தெரிவித்திருந்தனர். பின்னர் துறைமுகப்பகுதியிலிருந்து தப்பியோடிய சந்தேகத்திற்கு இடமான 9 பேரை கைது செய்திருப்பதாக நேற்று கடற்படையினர் தெரிவித்தனர். தாக்குதலின் பின்னர…
-
- 1 reply
- 928 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள துறைமுகப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் முயற்சி சிறிலங்காவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்தும்" என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொருளியல் நிபுணர் கலாநிதி ஹர்சா டீ சில்வா தெரிவித்துள்ளதாவது: "இத்தாக்குதல் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகையை அதிகரிக்கச் செய்வதுடன் இறக்குமதி ஏற்றுமதி வர்த்தகத்திலும் பாதிப்பை ஏற்படத்தலாம். அதாவது சிறிலங்காவின் துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் காப்புறுதித் தொகை அனைத்துலகத்தில் அதிகரிக்கலாம். கொள்கலன்களை இறக்கும் கப்பல்களின் உரிமையாளர்கள் அதிகளவிலான கட்டணங்களையும், அதிகளவிலான காப்புறுதித் தொகையையும் செ…
-
- 0 replies
- 800 views
-