ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142712 topics in this forum
-
யாழில் பட்டினியையும் மனிதஅவலத்தையும் பார்த்துக்கொள்ள முடியாதுள்ளது: - ஐ.நா.பிரதிநிதி கவலை. யாழில் இடம்பெறும் மனிதஅவலத்தையும் மக்களின் பட்டினிநிலையையும் தொடர்ந்து சகித்துக் கொண்டிருக்க முடியாமல் இருப்பதாக ருNர்ஊசு நிறுவனத்தின் யாழ்ப்பாணத்திற்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார். மக்கள் உணவுப்பொருட்களிற்கு நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் ஆனால் அவர்களின் தேவைகள் நிறையவே இருக்கின்றன. மக்களின் தேவைகள் நிறைவேற வேண்டுமாயின் ஏ-9நெடுஞ்சாலையை அரசாங்கம் முழுமையாக திறக்கவேண்டும் இதற்கு விடுதலைப்புலிகளும் ஒத்துழைக்க வேண்டும் யாழ் நிலைமைகள் நாளிற்கு நாள் மோசமடைந்து வருகின்றமை கவலை அளிக்கின்றது. நிலமை இவ்வாறு தொடர்ந்தால்நாங்களும் இருக்கமுடியாத நிலைமையே ஏற்படும் மக்களின் அவலத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
திங்கள் 11-12-2006 17:22 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளளது இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், உட்பட முக்கிய வெளிநாடுகள் அந்த திட்டதை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் சிறுபான்மை மக்களுக்கு ஒரளவு அதிகாரங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை சிங்கள அடிப்படைவாத கட்சிகள் முற்றாக நிராகரித்துள்ளன . இந்த நிலையில் அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளாதாக தெரியவருகின்றது …
-
- 5 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மற்றும் திருமலையில் படையினரால் மூர்க்கமான எறிகணைத் தாக்குதல். சிறீலங்காப் படையினரால் மட்டக்களப்பு வவுணதீவு படைமுகாமிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கி சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை இன்று நடத்தி வருகின்றனர். இதேநேரம் திருமலை மகிந்தபுர, கஜுவத்தை படைமுகாம்களிலிருந்து பால்சேனை, வம்மிவெட்டுவான், மற்றும் வாகரையை அண்டிய பகுதிகள் எங்கும் சிறீலங்காப் படையினரால் மூர்க்கமான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. www.pathivu.com
-
- 0 replies
- 769 views
-
-
படை நடவடிக்கையில் ஈடுபடும் சிறப்புச் சிறீலங்காப் படையினர். சிங்களக் கிராமங்கள் மீது விடுதலைப்புலிகள் பீரங்கிக் தாக்குதல்களை நடத்தி வருவதால் அவற்றை முறியடிக்கும் நோக்கிலும் இன்று ஆரம்பிக்கவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்கு சிங்கள மாணவர்கள் பயமின்றித் தோற்றும் வகையிலும் இடம்பெயர்ந்த சிங்களக் குடியேற்ற வாசிகள் மீள சொந்த இடங்களுக்குத் திரும்பும் வகையிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாரிய படை நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாக படைத்தரப்பு தனது இணையத்தின் வழி சொல்கிறது. மேலும் அது தனது செய்தியில் வாகரையில் காயப்பட்ட பொதுமக்களை ஐசிஆர்சி மூலம் இராணுவக் கட்டுப்பாட்டு மருத்துவமனைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக கடல்வழியாகக் கொண்டு வர பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்திருப்பதாவும் செ…
-
- 5 replies
- 2.9k views
-
-
திங்கள் 11-12-2006 14:33 மணி தமிழீழம் [நிலாமகன்] இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் நோர்வேயின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று முக்கிய தீர்மானங்கள் வெளியிடப்படலாம என எதிர்பார்க்கப்படுகின்றது நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் அரசாங்க தரப்பு மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பு நிலைப்பாடுகள் குறித்து இன்று நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் நோர்வேயின் எதிர்கால பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது ஹன்சன் பௌவருடனான சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்களை எரிக் சொல்ஹெய்ம் நோர்வே அரசாங்கத்தின் கவனத்திற்க…
-
- 2 replies
- 2.2k views
-
-
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணி உருவாக்க சந்திரிகா தீவிரம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாற்று அணியை அமைப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாத காலங்களின் பின்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ள சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க தனது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்தி வருகின்றார் நேற்று ஹொரகொல நகரில் சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களை சந்தித்து பேசியுள்ளார் இந்த சந்திப்பின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் அனுர பண்டாரநாயக்காவும் உடனிருந்துள்ளார். மூடப்பட்ட அறைக்குள் மிக இரகசியமான முறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பி…
-
- 0 replies
- 775 views
-
-
பல்லின நிபுணர்கள் குழுவின் அறிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளின் வழி நடத்தல்களின் தயாரிக்கப் பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. சமஸ்டியை விட மோசமான திட்டம் ஒன்றை புத்திஜீவிகள் குழு முன்வைத்துள்ளதாகவும் இது இலங்கையின் இறைமையை முழுமையாக பாதிக்கும் என்பதோடு புலிகளின் கோரிக்கை வெற்றி பெற வழியினை ஏற்படுத்தும் என்று ஜாதிக ஹெல உருமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நன்றி : பதிவு இணையம்
-
- 0 replies
- 845 views
-
-
போர் நிருத்த ஒப்பந்தத்தை மீறும் மகிந்த சிந்தனையில் கூடிய அரசாங்கமும், இணைத்தலைமை நாடுகளின் மௌனமும் இந்தியாவோ இணைத்தலைமை நாடுகளோ தமிழர்களாகிய எமக்கு ஒருபோதும் அதாவது 2002 லிருந்து 2006 வரை இருந்த சமாதானம் ஒரு அங்குலம் கூட முன்னேற்றமடையாது தற்போது ஆறுலட்சத்தும் மேற்பட்ட மக்களை பட்டினி போட்டும், நாளாந்தம் கைது என்றும் கடத்தல் என்றும் விமானம் மூலமும் குண்டுகளை வீசியும், ஏறிகணை வீச்சினாலும் கொன்று அழித்துக் கொண்டிருக்கின்றது. எமது மக்களை இந்த அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகள் கண்ணை மூடிக் கொண்டிருப்பதால் மயிலே மயிலே இறகு போடு என்று சொன்னால் மயில் இறகு போடுமா இதனால் நாம் எமது தலைவர் கூறியது போல் ஒருமித்த தமிழர்களாகி நாம் இ…
-
- 1 reply
- 1k views
-
-
திங்கட்கிழமை, 11 டிசெம்பர் 2006, 14:35 ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயின் முயற்சிகள் நம்பகத்தன்மை உடையது என்று கூறி விட முடியாது. அதாவது அமெரிக்காவுக்கு இரு முகங்கள் உண்டு. அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நோர்வே என்று தமிழின உணர்வாளரும், தமிழீழ ஆதரவாளவருமான சு.ப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். பெங்களுரிலிருந்து வெளிவரும் "தற்ஸ் தமிழ்" இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய பேட்டி: ஈழத்தின் தற்போதைய நிலை? 1950-களில் அறவழியிலும், 1970-களிலிருந்து ஆயுதம் தாங்கியும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள் ஈழத் தமிழர்கள். இந்தப் பிரச்சினையை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்த நல்ல முடிவை எடுக்க அவர்களை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை. மாவீரர் நாளில் உரையா…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு- சந்திவெளியில் கருணாகுழுவினரால் 4 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்திவெளி- பாலையடித் தோனா பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நான்கு இளைஞர்களும் தமது வீடுகளில்; உறங்கிக்கொண்டிருந்தபோது இரவு 11மணியளவில் நீலநிற டொல்பின் ரக வானில் வந்த கருணாகுழு உறுப்பினர்கள் வீட்டுக்கதவுகளைத்தட்டி இவர்களது பெயர்களைக் கூப்பிட்டு துப்பாக்கிமுனையில் கடத்திச்சென்றுள்ளனர். மேசன் தொழிலாளர்களான வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் (வயது 16), கனகரட்னம் துசாந்தன் (வயது 16) மற்றும் மீன்பிடித் தொழிலாளியான வந்த அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி சிவராஜ் (வயது 15) மற்றும் மட்டக்களப்பு தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்த முத்துசாமி பத்மராசா (வய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு -ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யூனியன் அஷிரன்ஸ் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்புக் கிளையின் பிரதேச முகவராகக் கடைமையாற்றும் சிதம்பரப்பிள்ளை பத்மநாதன் (வயது 27) என்பவரே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். சம்பவதினத்தன்று இரவு 8.00 மணியளவில் நோய் வாய்ப்பட்டிருக்கும் தனது உறவினர் ஒருவரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது - பழைய மார்க்கட் வீதியில் இவரது வீட்டுக்கு அருகில் இவரை வழிமறித்த இரு கருணாகுழு உறுப்பினர்கள் இவருடைய மோட்டார்சைக்கிளைக் கேட்டு மிரட்டியதாகவும் கொடுக்கமறுக்கவே இவரைச்சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றதாகவும் அப்பிரதே…
-
- 0 replies
- 835 views
-
-
அக்கரைப்பற்றி;ல் மேசன் தொழிலாளி ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று -7- வீரமகாளிஅம்மன் கோவில் வீதியில் வசித்து வரும்இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை நவரட்ணம் (வயது 23) என்பவரே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். நேற்று முன்தினமிரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் இரவு உணவை உட்கொண்டிருந்தபோது இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு கருணாகுழு உறுப்பினர்கள் இவரை அழைத்து சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவர் அக்கரைப்பற்று அஷ்ரப் வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது தலையிலும் மார்பிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித…
-
- 0 replies
- 852 views
-
-
இலங்கை: புலிபாய்ந்தகல் நோக்கிய உடுருவல் முயற்சி முறியடிப்பு: இரு கருணா குழுவினர் பலி! 10 பேர் காயம் 3 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் நோக்கி சிறீலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னெடுத்த ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். இன்று கலை 7.30 மணியளவில் கிண்ணியடி பிரம்படித்தீவுப் பகுதியின் ஊடாக ஊடுருவிய இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் குடும்பிமலை கோட்டப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்டுகள்சேனையில் இருந்த போராளிகள் மீது தாக்குதலைத் தொடுத்த போது இருதரப்பினரிடை உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது.…
-
- 0 replies
- 988 views
-
-
புலிகளை தடைசெய்யக் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் [Monday December 11 2006 06:33:08 AM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளை தடை செய்து, விடுதலைப்புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்ய கோரி கொழும்பில் இன்று திங்கட் கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப் படவுள்ளது. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பல் 2 மணியளவில் லிப்டன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும். இதேவேளை புலிகளை தடைசெய்ய கோரி தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது http://www.tamilwin.com/art…
-
- 0 replies
- 893 views
-
-
மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது: சு.ப.தமிழ்ச்செல்வன். மிக மோசமான மனித உரிமை மீறல்கள் புரியப்படும்போதும் அனைத்துலக சமூகம் அமைதியே காத்து வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனித உரிமைகள் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை: மானுட நாகரிகத்தின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு மைல் கல்லாக 1948 ஆம் ஆண்டு இன்றைய நாள் அமைகிறது. அன்று, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தை (Universal Declaration of Human Rights) ஐ.நா பொதுச் சபை வெளியிட்டது. இந்நாளை நாம் இன்று அனைத்துலக மனித உர…
-
- 3 replies
- 1.3k views
-
-
இராமேஸ்வரம் பகுதி கடலுக்குள் மரப் பெட்டியில் றொக்கெட் குண்டு! அடுத்தடுத்து இரு தடவைகள் வலையில் சிக்கின இராமேஸ்வரம் கடற்பகுதியில் இரண்டாவது முறையாக றொக்கெட் குண்டுகள் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் கடற்பரப்பில் வழமையாகத் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை களில் அவர்கள் விரித்த வலைகளில் இரண்டு தடவைகளும் மரப்பெட்டிகள் அகப்பட்டன. அவற்றை கரைசேர்த்துத் திறந்து பார்த்தபோது அவற்றுக்குள் றொக்கெட் குண்டுகள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டாவது தடவையாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மீனவர்களின் வலையில் மரப்பெட்டி சிக்கியது. அதற்கு முதலில் கடந்தவாரம் இராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில் முதல் தடவையாக மரப்பெட்டி ஒன்று சிக்கியது. அந்தப் பெட்டி…
-
- 0 replies
- 1k views
-
-
ஆயுதங்களை அகற்றித் தாக்குதலை நிறுத்த புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கண்காணிப்புக் குழுவிடம் வேண்டுதல். வாகரைப் பகுதியில் இருந்து ஆயுதங்களை அகற்றி படையினர் மீது தாக்குதலை நிறுத்தும்படி விடுதலைப் புலிகளுக்கு அழுத் தம் கொடுக்குமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தாம் கேட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவ்வாறு முடியாவிடின் இவ்விடயத்தை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும்படியும் தாம் கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்தார். கிழக்கில் தாக்குதல் நடக்கும் பகுதிக்கு செல்வதற்குப் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த இடங்களுக்கு செல்வதற்கான அனும…
-
- 0 replies
- 875 views
-
-
புலிகள் பொது மக்களைக் கேடயமாக பயன்படுத்துவதாக அரசு குற்றச்சாட்டு. மட்டக்களப்பு, வாகரையில் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி படை யினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் களைத் தொடுக்கின்றனர் என்று படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், தாம் பொதுமக்கள் இலக்கு களை நோக்கி தாக்குதல்களை நடத்துவதை இயன்றளவு தவிர்த்து வருவதாகவும் அரசின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடி யர் பிரசாத் சமரசிங்க கூறினார். எனினும் தமது பாதுகாப்பின் நிமித்தம், எந்த இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறதோ அந்த இடங்களை நோக்கித் தாங் கள் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறினார். நேற்று முற்பகல் மட்டக்களப்பு வாகரை நோக்கி படையினர்நடத்திய பல்குழல் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்…
-
- 0 replies
- 807 views
-
-
துணை இராணுவக்குழுவின் முக்கிய உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அதன் நிதித்துறைப் பொறுப்பாளருமான இனியபாரதி அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு பெரிய கல்லாறு மகாவித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் இனியபாரதியும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் சிறீலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் சிறீலங்கா துணை இராணுவக் குழுவினர் இரண்டு லட்சம் ரூபா பணம் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வெளிநாட்டுக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு துப்பாக்கிகளுடன் சென்று கொலை அச்சுறுத்தல் விடுப்பதோடு இரண்டு இலட்சம் ரூபாக்கள் கட்டாயத்தின் பெயரில் கேட்டுள்ளனர். சிறீலங்கா இராணுவத்தினரின் துணையுடன் இயங்கும் புளொட் அமைப்பினரே பணப் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியாவில் உள்ள வெளிநாட்டுக் குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று தம்மை புளொட் அமைப்பினர் என தெரிவித்து பணம் பறிப்பில் இவ் ஒட்டுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டு இலட்சம் பணத்தினை கேட்பதோடு பணத்தினை பெறுவதற்கு கால வரையறையும் வழங்கப்படுகின்றது. இவ்வா…
-
- 1 reply
- 974 views
-
-
கொழும்பு அரசியலும் குளறுபடி நடவடிக்கையும் காணொளியில் பார்வையிட http://www.pathivu.com/?ucat=nilavaram&file=101206
-
- 0 replies
- 863 views
-
-
இன்று இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் க.போ.த சாதாரணதர பரீட்சைகள் நடைபெறுகிறது. ஆனாபோதும் மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக அப் பிரதேச சுமார் 500 மாணவர்கள் க.போ.த சாதாரண தர பரீட்சை எழுதமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு
-
- 0 replies
- 744 views
-
-
இராணுவத்தின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு:- எழிலன். சிறீலங்கா அரசாங்கத்தால் வாகரையின் தெற்கு கரையோர பகுதி வழியாக பனிச்சங்கேணி நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் 19 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் 50 பேர் காயங்களுக்கு உள்ளானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 27 பொதுமக்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தனது உதவியை வழங்க தயாராக இருந்தபோதும் சிறீலங்கா இராணுவம் அதற்கு இடமளிக்கவில்லை. இதேவேளை போர்நிறுத்த கண்காண…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிபாய்ந்தகல் நோக்கிய உடுருவல் முயற்சி முறியடிப்பு: இரு ஒட்டுக்குழுவினர் பலி! 10 பேர் காயம்: 3 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் நோக்கி சிறீலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னெடுத்த ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். இன்று கலை 7.30 மணியளவில் கிண்ணியடி பிரம்படித்தீவுப் பகுதியின் ஊடாக ஊடுருவிய இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் குடும்பிமலை கோட்டப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்டுகள்சேனையில் இருந்த போராளிகள் மீது தாக்குதலைத் தொடுத்த போது இருதரப்பினரிடை உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
(2 ஆம் இணைப்பு) மகிந்தபுரவில் சிறிலங்காப் படையினரின் நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 17:44 ஈழம்] [திருமலை விசேட நிருபர்] திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகா…
-
- 20 replies
- 3.8k views
-