Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம். அரசுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்தரத்தில் தொங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித்தாவலை அரசு ஊக்குவித்தால் இரு கட்சிகளினதும் புரிந்துணர்வில் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ரணில் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். கேம்பிரிட்ச் றெரசில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ரணில், உறுப்பினர்களின் கட்சித்தாவல், கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார். மேலும் உறுப்பினர்களின் கட்சித்தாவல் தொடர்பாக மகிந்தவுக்கு த…

  2. வடக்கு, கிழக்கு மாகாணங்களை இரண்டு நிர்வாகப் பிரதேசங்களாகப் பிரிப்பதற்குச் சார்பான நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் இது சம்பந்தமாக ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு வடக்கையும், கிழக்கையும் பிரிக்கும் ஷ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டுக்கான இந்திய அரசின் சம்மதத்தையும் ஷ்ரீலங்கா அரசால் பெறமுடிந்தது. எவ்வாறாயினும் வடக்கையும், கிழக்கையும் பிரிப்பதற்கு எதிராக இருப்பது புலிகள் இயக்கம் மட்டுமல்ல. புலிகள் அமைப்பின் எதிரிகள் கூட வடக்கு, கிழக்கு பிரிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இந்த வகையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய புலிகள் இயக்கத்துக்கு எதிரான தலைவர்களும் வடக்க…

  3. வவுனியாவில் குழுமோதலில் சிங்களவர் பலி, தமிழர்கள் இராணுவத்தால் அச்சுறுத்தல். வவுனியா நகரத்தில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் தெற்காக அமைந்தள்ள மதவடிக்குளம் பகுதிவாழ் தமிழ்மக்களை இன்று வியாழக்கிழமை காலை சிறீலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழுமோதலில் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து அவ்இடத்தை விட்டு விரட்டுவோம் என பயமுறுத்தியுள்ளார்கள். இக்கொலையானது முன்னர் 6 பொதுமக்கள் கடந்த செவ்வாய் கிழமை மதவடிக்குளம், மற்றும் மூன்றுமுறிப்பு பகுதியில் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட சிங்களவர் பி.எம். நிசங்க என இனம் காணப்பட்டுள்ளார். இதேவேளை வவுனியாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்ப…

  4. விஞ்ஞான ரீதியிலான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே விமானப் படையினர் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அஜந்த சில்வா தெரிவித்தார். கொழும்பு கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; "இராணுவத்தினருக்கு எதிராகவும் விசேட அதிரடிப்படையினருக்கு எதிராகவும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுக்கும் புலிகளின் இலக்குகள் பல அண்மைக் காலமாக விமானப் படையினரின் குண்டு வீச்சுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று, அவர்களின் பயிற்சி முகாம்கள் கடற்புலிகளின் படகுத்தளங்கள் ஆகியனவும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. …

  5. முப்படையினர், பொலிஸாரின் பிள்ளைகளுக்காக கொழும்பு கொம்பனித்தெருவில் தேசிய பாடசாலையொன்றை நேற்றுக் காலை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ சிறாருடன் பாடசாலைக்குள் பிரவேசிப்பதை காண்கிறீர்கள். ... தினக்குரல்

  6. கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்றும், தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்திருந்தது. இது குறித்து சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேட்டுக்கு கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசைய்யா இளந்திரையன், இந்தத் தகவலை எந்த ஆதாரத்தில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு கூறியது என்று தெரியவில்லை. நாங்கள் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எனினும் எப்போதுமே தயார் நிலையில்தான் நாம் உள்ளோம் எனக் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், 70-களில் நாம் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த போது கழுத்தில் மாட்டிய சயனைட்டை இன…

    • 0 replies
    • 829 views
  7. நாகர்கோவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பதில் எறிகணை தாக்குதலில் சிப்பாய் பலி. நேற்று மாலை வடபோர் முனை நாகர்கோவில் பகுதியில் சிங்களப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏறிகணைத் தாக்குதலையடுத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலில் சிங்களப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். புதன்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சையடுத்து படை நிலைகளை இலக்கு வைத்து மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இதன்போதே ஒரு சிப்பாய் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அறியவருகிறது. -Sankathi-

  8. அரசு - ஐ.தே.க. அதிருப்திக்குழு பேரப்பேச்சில் இழுபறி நிலை - அமைச்சரவை மாற்றம் தாமதமாகும் சாத்தியம் [18 - January - 2007] [Font Size - A - A - A] கரு ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு இவ்வாரத்தில் அரசுடன் இணையலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கடந்த திங்கட்கிழமை இரவு அரசு தரப்புக்கும் கரு ஜயசூரிய அணியினருக்குமிடையில் இடம் பெற்ற சந்திப்பு ஆரோக்கியமானதாக அமையாததன் காரணத்தால் அரசுடன் இணைவதில் தயக்கம் காட்டுவதாக தெரிய வருகின்றது. ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கும் தற்போது அரசு தரப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டுக்கும் பெரும் முரண்பாடுகள் காணப்படுவதால் கரு ஜயசூரிய அணியினர் ஆத்திரமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.…

  9. எலி ஹவுஸ் லேனில் ஆட்டோ சாரதி சுட்டுகொலை நிஷாந்தி கொழும்பு மோதரை எலி ஹவுஸ் லேனில் இன்று வியாழக்கிழமை காலை 7:55 மணியளவில் ஆட்டோ சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். ஆட்டோ சாரதியின் தலையில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.. இன்று காலை மோதர எலி ஹவுஸ் லேனில் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர் ஜெகத் சுசந்த பெரேரா (36) என இனங்காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் தனதுபிள்ளைகளை பாடசாலையில் விட்டு திரும்பும் வழியில் இவர் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.. ஆட்டோ சாரதியான இவர் கிம்புலாவில் பகுதியில் வசித்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாவட்ட நீதவான்…

  10. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் யாழ் நகரப் பகுதியில் திருட்டுக்கள் அதிகரிப்பு. நேற்று நள்ளிரவுவேளை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கையில் நல்லூர்க் கோயிலின் முன்றலிலுள்ள நாவலர் மணிமண்டபத்தின் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கு பெறுமதியான பொருள்கள் ஏதும் இல்லாததால் தமது முயற்சி களைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை கொய்யாத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஆலயப் பூசகர் வீட்டுக்குள் நேற்றுமுன்தினம் உட்புகுந்த திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் வானொன்றில் வந்திறங்கிய கொள்ளைக் கோஷ்டி ஆலயப் பூசகரின் மனைவியின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவர்களிடம் கத்தி, பொல்லு, வாள்கள் போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும் முகத்தைக் கற…

  11. புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க. கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடங்கப்பட்ட மாவிலாறுத் தாக்குதல் முதல் இப்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 561 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அத்தோடு, நேற்றுமுன்தினம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றிய சமயம் அவர்களிடம் சரணடைந்த 5 புலி உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஐவரும் ஊடகவிய…

  12. யாழில் வெள்ளை வான் கும்பலினால் குடும்பஸ்தர் கடத்தல். யாழ்ப்பாணம் காங்கேசன் துறைவீதியில் சுண்ணாகம் பகுதில் வெள்ளை வானில் வந்த சிறிலங்கா படையினரின் துணை இராணுவக்குழுவினரால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் கடந்தகால போர் நடவடிக்கையினால் காலொன்றை இழந்து அங்கவீனமுற்றவருமானவர். கடத்தப்பட்டவர் ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவரான டனியல் சாந்தரூபன் (30) என்பவராவார். இவர் தனது சொந்த விடயம் காரணமாக 11.00 மணியளவில் சுண்ணாகம் றெட்டிஆலையடியூடாக ஈருளியில் பயணித்துக்கொண்டிருக்கையில் அவ் வீதியால் சென்ற மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இவரது செயற்கைக் காலும் ஈருளியும் அநாதரவாக வீதியோரத்தில் கிடப்பதை அவரத…

  13. 'நான்கு தொண்டர் நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு' [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 06:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பற்றிய இரகசியங்கள் வெளியாகியிருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளின் மூலம் விடுதலைப் புலிகளின் முகாம்கள் பல கைப்பற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து குறிப்பிட்ட தொண்டர் அமைப்புக்கள் சில விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை அம்பலமாகியிருப்பதாகவும்…

  14. 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியரை, அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதியில் வலுக்கட்டாயமாகக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டுவந்துள்ள சிறிலங்கா அரசு, அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேரவிருந்ததாகவும், தாம் காப்பாற்றி விட்டதாகவும் ஊடகங்களிடம் பொய்த் தகவல் பரப்பியுள்ளனர். விடுதலைப் புலிகளின் முகாமிலிருந்து இவர்களைக் காப்பாற்றினோம் என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த சிறார்களிடம் நிருபர்கள் நேரடியாகக் கேள்வி கேட்டபோது, தாம் எந்தப் பயிற்சியிலும் ஈடுபடவில்லை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இணையவும் இல்லை, அவர்கள் எம்மைக் கடத்தவும் இல்லை, நாம் வீடு செல்ல விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லைப்புற…

  15. அரசின் ஒத்துழைப்பின்மையால் வெறுங்கையுடன் திரும்பும் அவுஸ்திரேலிய விசாரணைக் குழு [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 01:36 ஈழம்] [காவலூர் சங்கீதன்] கிழக்கில் இயங்கி வந்த, பட்டினிக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே மனிதநேய நிறுவனத்தின் 17 ஊழியர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்தமை தொடர்பாக விசாரணை நடாத்த, விசேட பிரேத பரிசோதனை ஆய்வுக் குழுவொன்று சிறீலங்கா வந்திருந்தது. சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்குடன் சிறீலங்காவுக்கு அழைக்கப்பட்ட இந்த விசேட விசாரணைக் குழுவினர், 20 நாட்கள் தங்களது முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரச தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை செய்யும் நபர்கள் மற்றும் சாட்சியம் சொல்ல முன்வரும் நபர்களின் முழு விப…

  16. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீதிமன்றத்திற்கு வருகிறது [புதன்கிழமை, 17 சனவரி 2007, 23:07 ஈழம்] [து.சங்கீத்] 2002ம் ஆண்டு பெப்ரவரி 22ம் திகதி கையொப்பமிடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம், நாட்டின் அரச சாசனத்திற்கு முரணாக உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டுடன், ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய கட்சிகள் தொடுத்த வழக்கு, மார்ச் 6ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. சிறீலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை கொண்டுவரப்பட்ட வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுமா என்பதற்கான தீர்வை, மார்ச் 6ம் திகதி தான் வழங்கவிருப்பதாக, மேன்முறையீட்டு நீதிபதி எஸ்.சிறீஸ்கந்தராஜா தெரிவித்தார். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தல…

  17. புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து இருகட்சிகளும் விலக வேண்டாம் - இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் வில வேண்டாம் என இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துள்ளன ஐக்கிய தேசிய கட்சியின் மாற்று குழுவை சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து சுதந்திர கட்சிகும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி விலகும் என எதிர்வு கூறப்பட்டிரந்தது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டால் ஒப்பந்தம் கிழத்தெறியப்படும் எ…

  18. புலிகளையும் பொதுமக்களையும் இனம்காணும் திறன் படையினருக்கு இல்லை: மகிந்த ராஜபக்ச. புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவி மக்களை ஸ்ரீலங்கா படைகள் படுகொலை செய்து வருவதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் நேற்று கொழும்பில் நடைபெற்ற கஜபா இராணுவ படையணியின் விருத வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி இது குறித்து ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளார் புலிகளையும் சாதாரண மக்களையும் இனம் காணும் திறன் ஸ்ரீலங்காவின் முப்படைகளுக்கும் இருக்க வேண்டியது அவசியம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார் இதன் மூலம் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அப்பாவிகளை ஸ்ரீலங்காவின் முப்படைகளும் படுகொலை செய்வதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவதானி…

    • 2 replies
    • 1.6k views
  19. வெல்லாவெளியில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு. மட்டக்களப்பு வெல்லாவெளிப்பகுதியில் சிறிலங்காப் படையினர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்பில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் வெல்லாவெளி, காக்காச்சிவெட்டை மாலையர்கட்டு 39 ஆம் கிராமப் பகுதியூடாக துணை இராணுவக்குழுவினர் சகிதம் முன்னேற்ற முயற்சியினை படையினர் மேற்கொண்டனர். முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஒரு…

  20. பெப்ரவரி 9-க்கு முன்னர் அலன் றொக் அறிக்கை சமர்ப்பிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா தொடர்பான அலன் றொக்கின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாததற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்றும் அதற்கு எந்த அழுத்தங்களும் காரணமல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. எனினும் பெப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற உள்ள கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கு என றொக் தனது இறுதிக்கட்ட அறிக்கையை தயார் செய்து வருவதாக ஐ. நாவின் போச்சாளர் ஓலா கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சிறப்பு ஆலோசகரும், சிறுவர் மற்றும் ஆயுத மோதல்களுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான அலன் றொக் 10 நாள் பயணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் சிறிலங்கா வந்தபோது அவரால் அறியப்பட்ட விடயங்…

  21. அப்பாவி மக்கள் யுத்தத்தின் விளைவுகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எம்மைப் போலவே ஐநாவும் சிந்தித்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நோக்கி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளது..! இதனை சம்பந்தப்பட்டவர்கள் மதித்து நடவடிக்கைகள் எடுக்க அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்..! ************************ பாதுகாப்பு வலயமாக்க ஐநா சபையின் செயலர் கோரிக்கை. புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கியநாடுகள் சபையின் செயலர் பன் கி மூன் சிறிலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், கோவில்கள் போன்றன தாக்கப்படாதிருக்கும் அனைத்துலக விதிகளுக்கமைவாக இவற்றை ‘பாதுகாப்பான வலயங்கள்’ ஆக பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் மாதத்தி…

  22. அரசுடன் இணையும் எண்ணம் யாருக்கும் இல்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன் [Wednesday January 17 2007 06:05:44 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார். இவ்வாறான தகவல்கள் எதனையும் தான் அறியவில்லை எனவும் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி, பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவினால் அவிழ்த்து விடப்பட்டுள்ள மற்றொரு கட்டுக்கதையே தவிர வேறொன்றுமல்ல எனவும் தெரிவித்தார். …

    • 0 replies
    • 760 views
  23. ஈழநாதம் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளார் காலமானார் நிஷாந்தி மூத்த பத்திரிகையாளர் வல்லிபுரம் அருள்ஜோதி நாதன் (56) நேற்று செவ்வாய் கிழமை மாலை 3 மணியளவில் வன்னியில் காலமானார். கான்சர் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ந் திகதி கிளிநொச்சியில் அனுமதிக்கப்பட்டார். திரு அருள்ஜோதி நாதன் 1993ம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையின் ஊடகவியலாளராக இணைந்து பணியாற்றினார். இவர் 5 பிள்ளைகளின் தந்தையுமாவார். இவர் சிறந்த ஒரு சமூக ஆர்வலராகவும் திகழ்ந்துள்ளார். தேசத்தின் விடிவிற்க்கு, ஈழநாத பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாடுபட காலஞ்சென்ற வல்லிபுரம் அருள்ஜோதிநாதனிற்க்கு தமிழீழ "விடுதலைப்புலிகள் நாட்டுப்பற்றாளர்" விருதளித்து கெளரவித்துள்ளது. …

  24. புதன் 17-01-2007 10:10 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைவு? சிறீலங்கா அரசாங்கத்துடன் முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைந்து கொள்ளவுள்ளது.சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைவதற்கு முன்வைத்த 9 கோரிக்கைகளும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு அமைச்சரவை அந்நதஸ்தற்ற இரண்டு அமைச்சுக்களும் ஒரு பிரதி அமைச்சு பதவியும் முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படவுள்ளன. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் பொறுப்பேற்றபார் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியினை ஏற்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்…

  25. * மேல் மாகாண மேல்நீதிமன்றம் நடவடிக்கை ஹெரோயின் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை பெற்றுக்கொடுக்க முன்வந்த மூவர் வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள மேல் மாகாண மேல்நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாகினர். இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்திற்கு இருவரும், 18 மாத கடூழிய சிறைத்தண்டனை, 5 ஆயிரம் ரூபா தண்டப்பணத்திற்கு ஒருவருமாக இவர்களுக்கு நீதிமன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. இத்தண்டனைகளைப் பெற்றுக்கொண்ட மூவரும் ஹெரோயின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள சந்தேக நபர்களுடன் எந்த வித தொடர்போ, அறிமுகமோ இல்லாதவர்களாவர். இவர்கள் வீதியிலிருந்து பணம் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்று தெரியவந்ததையடுத்து, நீதிவான் இத்தண்டனையை இவர்களுக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.