ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
சிறிலங்கா இராணுவம் மனிதாபிமானப் பிரச்சினைகளை போராயுதமாக்குகிறது: த.தே.கூ. குற்றச்சாட்டு மனிதாபிமானப் பிரச்சினைகளை போராயுதமாக சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வருடம் 2005, மே மாத காலப் பகுதியில் மட்டக்களப்பு எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்த இராணுவம், சீமெந்து, எண்ணெய் மற்றும் முக்கிய கட்டுமாணப் பொருட்களை பொதுமக்கள் எடுத்துச் செல்வதற்குத் தடை விதித்து, வாகரைப் பகுதியில் ஆழிப்பேரலை புனர்நிர்மாணப் பணிகள் நடைபெறாது முடக்கியது. பின்னர் ஒரு வருடம் கழித்து 2006 ஆம் ஆண்டில் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக, உத்தியோகபூர்வமாக தடையை அமுல்படுத்தியது. தாக்குதல…
-
- 0 replies
- 644 views
-
-
நளினி விடுதலையாகிறார்? வேலூர் சிறையில் 14 ஆண்டு தண்டனை முடித்த ராஜீவ்காந்தி கொலைக்கைதி நளினி உற்பட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது பற்றி நீதிபதிகுழு ஆலோசனை நடத்தியுள்ளது. வேலூர் தொரப்பட்டியில் உள்ள ஆண்கள் சிறை, பெண்கள் சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளில் 14 ஆண்டு தண்டனையை ஒழுங்காக முடித்தவர்கள் ஆண்டு தோறும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் வேலூர் ஆண்கள் சிøறயிலும் பெண்கள் சிறையிலும் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது பெண்கள் சிறையில் உள்ள கைதிகளில் 14 ஆண்டு தண்டனை முடித்தவர்களில் நன்னத்தையுடன் நடந்து கொண்டவர்களை விடுதலை செ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வாகரையில் எறிகணை- வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள். வாகரையில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் எறிகணைத் மற்றும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். கல்லாறு, கரடிக்குளம் மற்றும் வாழைச்சேனை சிறிலங்காப் படை முகாம்களில் இருந்து படையினர் இன்று சனிக்கிழமை தொடரான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். வான்படைக்குச் சொந்தமான இரு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் 9.30 மணியளவில் தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்கள் சேதமாகியுள்ளதுடன் கால்நடைகளும் கொல்லப்பட்டுள்ளன. www.puthinam.com
-
- 1 reply
- 988 views
-
-
முரண்பாடுகளை களைந்து சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்தலாம்: ரணில். முரண்பாடுகளைக் களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டு நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்று ஐக்கியதேசியக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறு சிறு விடயங்களுக்காக நாம் முரண்பட்டுக்கொண்டு பிரிந்திருந்தோமானால் இனப்பிரச்சினைக்கு என்றும் தீர்வுகாண முடியாது என்பதுடன் அதிகாரப்பகிர்வின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்பதே எம்முடைய கொள்கையாகும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார் ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடக நலன்புரி சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்…
-
- 0 replies
- 721 views
-
-
குடாநாட்டில் இரவு எட்டு மணி முதல் மீண்டும் ஊரடங்கு அமுல் வீரகேசரி நாளேடு சாவகச்சேரியில் தேடுதல் யாழ். குடாநாட்டில் நேற்று முதல் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நேரம் இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை தளர்த்தப்பட்டிருந்தது. தற்போது தளர்வு நீக்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு அமுலாகும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென்மராட்சியில் நேற்று பகல் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததுட
-
- 0 replies
- 892 views
-
-
குடா நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலை [saturday December 30 2006 06:39:19 AM GMT] [virakesari.lk] யாழ். குடாநாட்டில் புது வருடத்தில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர்கள் தமது புதிய வகுப்புகளுக்கு செல்ல முடியாத சூழல் தோன்றியிருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் கற்றல் உபகரணங்களான கொப்பிகள், பேனைகள், பென்சில்கள், காகிதாதிகள், புத்தகங்கள் போன்றவை பெரும் பற்றாக்குறையாக இருப்பதுடன் பல இடங்களில் கொப்பிகள், பேனைகள் இல்லை. மேலும் சில இடங்களில் இப்பொருட்கள் கறுப்புச் சந்தையில் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் ஏழை மற்றும் வறிய மாணவர்களினால் இப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது இரு…
-
- 0 replies
- 900 views
-
-
இலங்கைக்கு ஒரு புதிய நோய்! - உதயன் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது, மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொள்ளாமை என்பன குறித்துச் சாடி வந்த வெளி உலகம் சர்வதேசம் இப்போது இந்த நாட்டில் ஊழல் கள் மலிந்து வருவதை கண்டிக்கத் தொடங்கி உள்ளது. இந்த வரிசையில், அமெரிக்காவின், ஆசியப் பிராந்தியங்களுக்கான வெளியுறவுக் கொள்கைக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் ஊழல்கள் மலிந்து வருவதை அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அக்கறை இல்லாத போக்கை கடும் தொனியில் எச்சரித்திருக்கிறது. இலங்கை அரசாங்கம், ஊழல் பெருகுவதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்வதில்லை என்று எள்ளி நகையாடி இருக்கிறது அமெரிக்க செனெட்டின் குழு. ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவதற்கு, லஞ…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் மீண்டும் செயலிழந்தது கையடக்க தொலைபேசி சேவை! கடந்த செப்ரம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மோதல் சூழ்நிலைகாரமாக எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது வெறும் இராணுவ நலனுக்காக யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினை வழங்கிவந்த டயலொக் நிறுவனம் தனது சேவையினை நேற்று வியாழக்கிழமை தொடக்கம் இடைநிறுத்திக்கொண்டது. இது தொடர்பாக தமது யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியினையோ, மன்னிப்பினையோ கோரியிராத மேற்படி நிறுவனம் அதற்கும் ஒருபடி மேல்போய் சேவை நிறுத்தப்பட்டபின்னரும், இணைப்பினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டிருந்தவர்களுக்கு தொடர்ந்தும் தொலைபேசிக்கட்டணங்களை அனுப்பியும் வந்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த கிறிஸ்மஸ் தினத்திலிருந்து திடீர் என்று அங்கு தனது சேவையினை ஓரள…
-
- 3 replies
- 1.4k views
-
-
திருமலை, கிளிநொச்சி கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் கொழும்பு வந்து நிலைமைகள் தொடர்பாக ஆராய்வு. திருகோணமலை, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் கொழும்புக்குத் திரும்பியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டதால் உண்டான சிக்கல்களை அடுத்தே மேற்கண்ட இரண்டு மாவட்டங்களிலும் இருந்து குழுவின் பிரதிநிதிகள் கொழும்பு திரும்ப நேர்ந்ததாக அறியப்படுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக தமது பணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சிறி லங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் டோறிஸ் எஜேரி தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 827 views
-
-
பாதுகாப்பு நிலவரம் குறித்து இராணுவத் தளபதி லெப் ஜெனரல் சரத் பொன்சேகா பலாலியில் ஆராய்வு. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜென்ரல் சரத் பொன்சேகா நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். பலாலியில் கட்டளைத் தளபதிகள் மற்றும் படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்து விளக்கினார். சிவில் நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என இராணுவத் தளபதி களமுனைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தினார். இச்சந்திப்பில் யாழ்ப்பாண படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் பிரசன்னமாகி இருந்தார். இதன்பின் இராணுவத் தளபதி துறைமுக மற்றும் விமானத்துறை பிரதி…
-
- 0 replies
- 756 views
-
-
ஒட்டுக்குழுக்கள் கொலைப் பயமுறுத்தல் விடுத்து வர்த்தகர்களிடம் பணம் பறிப்பு. வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்கள் வர்த்தகர்களிடம் பணம் பறிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வவுனியா நகரில் பல்வேறு ஒட்டுக்குழுக்கள் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில் வர்த்தகர்களிடம் அச்சுறுத்தி பெருமளவு பணத்தை அபகரித்து வருகின்றனர். ஒரே வர்த்தகர் பல்வேறு ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகி பலதரப்பிடம் இலட்சக்கணக்கான பணத்தை இழக்கும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வர்த்தகர்கள் ஒட்டுக் குழுக்களின் கொலைப் பயமுறுத்தல்களினால் இலட்சக்கணக்கான பணத்தை ஒப்படைக்கும் நிலையால் பெ…
-
- 0 replies
- 608 views
-
-
நாடாளுமன்ற பெரும்பான்மையின்றி ஆட்சி செய்யும் மகிந்த: கொழும்பு ஆங்கில நாளேடு சிறிலங்காவின் வரலாற்றில் மகிந்த ராஜபக்ச மட்டும்தான் உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மை ஆதரவின்றி ஒரு வருடமாக ஆட்சி நடத்தி வரும் அரச தலைவர் என்று கொழும்பு ஆங்கில நாளேடொன்று தெரிவித்துள்ளது. கொழும்பு நாளேடு மேலும் தெரிவிக்கையில், ஜே.வி.பி. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வருகின்றது. ஆனால் அவர்களுக்கு நன்மை கிட்டும் வரைக்கும் தான் அவர்களின் ஆதரவு தொடரும். எனவே மகிந்த ஒரு பெருன்பான்மை அரசை அமைக்க வேண்டுமாக இருந்தால் ஜே.வி.பி.யை அரசுக்குள் இழுக்க வேண்டும் அல்லது ஐ.தே.கவில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்க வேண்டும். இந்த முயற்சிகள் தான் தற்போது மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 655 views
-
-
தமிழர் கூட்டமைப்பினருக்கு விசா வழங்க இலங்கையிலுள்ள கனடிய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதை திரு.சிவநேசன் அவர்களிடம் பெற்ற செவ்வியாக சங்கதி(www.sankathi.com) வெளியிட்டுள்ளது.இதை உடனடியாக கனடிய தமிழர் பேரவையிடமோ அல்லது கனடியன் தமிழ் காங்கிரஸிடமோ மனுச்செய்யலாம்.அவர்களால் தான் இதன் பின்ண்ணியை கண்டுபிடிக்கமுடியும்
-
- 1 reply
- 1.4k views
-
-
எறிகணை வீச்சில் சிப்பாய் ஒருவர் பலி, ஐவர் காயம். வெலிக்கந்தை பகுதி நோக்கி நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சிறிலங்காப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஐவர் படுகாயமடைந்தனர் வாகரை மதுரங்குளம் பகுதியிலிருந்து இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகச் சிறிலங்கா படைத்தரப்புத் தலைமையகச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இத்தாக்குதல் இடம் பெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. www.sankathi.com
-
- 1 reply
- 641 views
-
-
இலங்கைக்கு வருவாரா கருணாநிதி? [29 - December - 2006] இலங்கைப் பிரச்சினையில் `ராஜீவ் படுகொலை' பெரிய தடைக்கல்லாகவே கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்துமே அதை எப்படிச் சமாளிப்பது என்பது புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தன. `ராஜீவ் கொலை' செய்யப்பட்டதால் விடுதலைப் புலிகள் மீது தமிழகம் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட்ட கோபம்,இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கே முட்டுக்கட்டையாக மாறியது. ஏனென்றால், மற்ற தமிழீழப் போராட்டக் குழுக்கள் எல்லாம் பலம் இழந்துவிட்ட நிலையில், விடுதலைப் புலிகள் மட்டுமே `தனி ஈழம்' போராட்டத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். குறிப்பாக, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இது பெரும்…
-
- 1 reply
- 1.2k views
-
-
சந்திரிகாவிற்கு ஒரு ஏ-9 மகிந்தருக்கு ஏ-15 -அருஸ் (வேல்ஸ்)- 'வாகரையில் இருந்து மிக விரைவில் தமிழீழ விடுதலைப் புலிகளை வெறியேற்றுவதுடன் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகள் முற்றாக வெளியேற்றப்படுவார்கள்" இது சிங்கள தேசத்து இராணுவ தளபதி அண்மையில் தெரிவித்த உளக்கிடக்கை. இராணுவ அதிகாரியின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல அரசின் ஆதங்கமும் அது தான். அண்மையில் தென்பகுதியில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகரும் அவரின் சகோதரருமான பசில் ராஜபக்ச கூறுகையில், அனைத்துக்கட்சி குழு தனது தீர்வுத்திட்ட அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னராக கிழக்கிலங்கையை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதாவது கி…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த தீடீர் திருமலை விஐயம். சிறீலங்கா ஜனாதிபதி தீடீர் விஐயமாக திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இன்று பகல் ஷிராந்தி ராஜபக்ஷ, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ, கடற்படைத்தளபதி வசந்த கர்ணணகொட ஆகியோருடன் திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்திற்கு சென்ற ஜனாதிபதிக்கு கடற்படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா கடற்படையில் இணைந்த ராஜபக்ஷவின் புதல்வல் யோசித்த ராஜபக்ஷ திருமலை டொக் யார்ட் கடற்படை தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. www.pathivu.com
-
- 26 replies
- 4.2k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தை புலிகளின் மீதான தடையை விலக்கக் கோரி மனு. பிரித்தானிய அரசாங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி ஆளும் தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் வர்த்தகர்கள் கூட்டமைப்பு அலுவலர்களும் மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் Jeremy Corbyn, John McDonnellபோன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் யுனிசன், ஆர்.எம்.ரி, சிடபிள்யு (UNISON, RMT and CWU)போன்ற பல வர்த்தக சங்கங்களும் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளதாக அறியமுடிகிறது. சிறீலங்கா அரசாங்கம் தமிழ்மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் இருதசாப்தங்களுக்கு மேலாக சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருவதாகவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இனப்பிரச்சினைக்கு யுத்தம் தீர்வு அல்ல; புலிகளுடன் பேசுவது அவசியம் என்கிறார் ரணில் [29 - December - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண முடியாதெனத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு ஏற்படப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். போர் அச்சுறுத்தலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இலக்குடனேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொண்டிருப்பதாகவும் அந்த இலக்கை அடைவதற்கு சகல அரசியல் கட்சிகளும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமெனவும் க…
-
- 0 replies
- 612 views
-
-
வெள்ளி 29-12-2006 12:58 மணி தமிழீழம் (செந்தமிழ்) வடக்குகிழக்கு இணைப்பை பிரிக்கும் நடவடிக்கைகள் காரணமாக தமது பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக விரைவில் கொழும்பில் கூடவுள்ளதாக குழுவின் பதில் பேச்சாளர் டோரி ஸ்டேஜோரி தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக்கண்காணிப்பு குழு வடக்குகிழக்கு மாகாணத்திற்கென பொதுவான பணித்திட்டங்களை மேற்கொண்டு வந்தது. எனினும் வடக்குகிழக்கு பிரிப்பின் பின்னர் இந்த திட்டங்களை மேற்கொள்வதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்தநிலையில் திருகோணமலையில் பணியாற்றிய போர் நிறுத்தக்கண்காணிப்பு குழுவின் உறுப்பினர்கள் ஏற்கனவே கொழும்பு த…
-
- 1 reply
- 898 views
-
-
தமிழ் மக்களின் அர்ப்பணிப்புத்தான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கும்: கேணல் தீபன் [வெள்ளிக்கிழமை, 29 டிசெம்பர் 2006, 19:58 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான எமது விடுதலைப் போராட்டம் இறுதிக் கட்டத்திற்கான நகர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளைத்தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். இம்ரான்- பாண்டியன் படையணியின் மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப் பாசறையின் இரண்டாம் தொகுதி போராளிகளின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே கேணல் தீபன் இதனை தெரிவித்தார். மேஜர் அகக்குமரன் - 01 பயிற்சிப்பாசறையின் முதலாவது தொகுதி போராளிகளின் நிறைவு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இ…
-
- 0 replies
- 718 views
-
-
ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் தீர்வு யோசனை முன்வைக்கப்படும் - ஐக்கிய தேசியக் கட்சிஇலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தமது யோசனைகளை அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு சமர்பிக்கவுள்ளது. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அனைத்து கட்சி மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது. இதன்போது தமது கட்சி டோக்கியோ மற்றும் ஒஸ்லோ பிரகடனங்களின் அடிப்படையில் யோசனைகளை முன்வைக்கும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் இந்த யோசனைகளில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. இதேவேளை ஏற்கனவே நிபுணர் குழவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகளை தமது கட்சி வரவேற்பதாகவும் அவர் குறிப…
-
- 0 replies
- 763 views
-
-
கடத்தப்பட்ட புளொட் உறுப்பினர் சடலமாக மீட்பு கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு புத்தளம் பகுதியில் கடத்தப்பட்ட இரு மூத்த புளொட் உறுப்பினர்கள் வெள்ளி காலை சடலமாக குருநாகல மீடகம வீதியில் சூட்டுகாயங்களுடன் குருநாகல காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது. மாமா என்றழைக்கப்படும் பாக்கியராஜா, கரிகாலன் ஆகியோரே சின்னக்குடியிருப்பு பகுதியில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது தெரிந்ததே. இதேவேளை பாக்கியராஐ என்பவர் முன்பு புளொட் ஒட்டுக்குழுக்களின் மட்டக்களப்பு மாட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டவர் என அறியமுடிகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 772 views
-
-
யாழில் சவர்காரம் ஒன்றை பெறுவதற்காக அரச பணிகள் ஸ்தம்பிதம். - பண்டார வன்னியன் குசனையலஇ 29 னுநஉநஅடிநச 2006 11:13 யாழ்ப்பாணத்தில் சவர்காரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சவர்காரம் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன் நிலையில் நேற்று நல்லூர் ஆலய வீதியில் உள்ள படை முகாம் ஒன்றி;ல் சவர்காரங்கள் விநியோகிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து.. யாழ்ப்பாண மாநகரசபை, கல்வித் திணைக்களம் உட்பட மூன்று திணைக்களங்களின் கடைமையாற்றும் 500 வரையிலா அரச பணியாளர்கள் குறித்த படை முகாமின் முன்னால் வரிசையில் சவர்காரத்தை பெறுவதற்க்காக காத்து நின்றிருந்தனர். இதன் காரணமாக காலை 9 மணியில் இருந்து சுமார் மூன்று மணித்தியாலங்களாக திணைக்களங்களின் பணிகள் யாவும் ஸ்தம…
-
- 1 reply
- 1.3k views
-
-
மட்டக்களப்பில் விடுதலைப்புலி உறுப்பினர் சுட்டு கொலை நிஷாந்தி மட்டக்களப்பில் இன்று வெள்ளி காலை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் கே.சந்திரசேகரன்(29)என்பவர் விடுதலைப்புலிகளால் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்... இவர் கடந்த 10 வருடங்களாக விடுதலைப்புலி உறுப்பினராக இருந்தவர் எனவும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவர் அவ்வியக்கத்தை விட்டு விலகியவர் என்பது குறிப்பிடதக்கது... இவரது சடலம் டிசெம்பர் 27ம் திகதி களுவன்கேணி பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடதக்கது. ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.என தேசிய பாதுகாப்பு ஊடகமத்தியநிலையம் தெரிவித்துள்ளது... http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=3514
-
- 1 reply
- 1.2k views
-