ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளுக்கு ஆலோசனை வழங்க இங்கிலாந்து குழு கொழும்பு வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய சிறிலங்காவின் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த பாதுகாப்புத் துறை அபிவிருத்தி ஆலோசனைக் குழு கொழும்பு வந்துள்ளது என்று இங்கிலாந்தில் உள்ள தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார். இக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பணியைத் தொடங்கியது என்றும் மறுசீரமைப்புப் பணிக்காக பலமுறை சிறிலங்காவுக்கு வந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். தற்போதைய பயணத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. http://www.eelampage.com/?cn=29739
-
- 0 replies
- 1.1k views
-
-
வாகரை பாடசாலையிலிருந்து புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம்: இணைத் தலைமை நாடுகளிடம் சரத் பொன்சேகா வாகரை பாடசாலையிலிருந்து இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று இணைத் தலைமை நாடுகள் நடத்திய விசாரணையின் போது சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இணைத் தலைமை நாடுகள் நேரடியாக விசாரணை செய்தன. இணைத் தலைமை நாடுகளுடனான ஆலோசனை கூட்டம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவில்லை. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில…
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ்.குடா நாட்டில் தென்னிலங்கைப் படப்பிடிப்பாளர்களின் மோசடி. யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களின் பசி பட்டினியை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி படம் எடுக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கைச் சினிமாப் படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் இத்தகைய ஒரு மோசடியான செயல் நேற்றுக்காலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இடம் பெற்றுள்ளது. நாளாந்தம் படைத்தரப்பினர் உணவுப் பொருட்கள் வழங்குகின்றார்களா எனப் பார்த்து வாங்குவதற்காக பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு சென்று காத்திருப்பது வழமையாகும் இந்த வகையில் நேற்றுக்காலையில் சென்ற மக்கள் பலத்த ஏமாற்றத்திற்கும் மோசடிக்கும் படைத் தலைமையும் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த திரைப்படப் …
-
- 12 replies
- 3.2k views
-
-
தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் ........ "யுத்த நிறுத்தம்" எனும் சர்வதேச சதி வலைப்பின்னல் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பின்னப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவுற்ற நிலையில், தமிழர் தரப்பு யுத்தம் நடைபெற்ற காலத்தில் சந்தித்த அழிவுகளைப் போல் இன்றும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்தம் எனும் பெயரில், சர்வதேசத்தால் புலிகளின் கைகள் கூடியளவு கட்டப்பட்ட நிலையில், சர்வதேசம், சிறிலங்கா சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கி வருவதையே, இன்றைய கள நிலவரங்கள் புலப்படுத்துகின்றன. தமிழின அழிப்பிற்கு மவுனமாக இருக்கும் சர்வதேசம், புலிகள் தாக்கியவுடன் மட்டும், யுத்த நிறுத்ததை இரு பகுதியினரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் …
-
- 6 replies
- 3k views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-
-
ஏ9 போல அம்பாந்தோட்டை வீதியையும் மூடிவிட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே..! சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய இறுதிப்பேட்டியில் ரவிராஜ் இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏ9 வீதியில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக கூறி அதனை பூட்டிவைத்துக்கொண்டு, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் பொருள்களை அனுப்ப முயற்சிக்கின்றீர்களே அது போல உங்களது இடமான அம்பாந்தோட்டை வீதியிலும் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது தானே..! எனவே அந்த வீதியையும் பூட்டி விட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே! ஏன் அதைச் செய்யவில்லை..? இவ்வாறு மாமனிதர் ரவிராஜ் நேற்று முன்தினம் தாம் கொலை செய்யப்படுவதற்கு சுமார் அரைமணிநேரத் துக்கு முன்பதாக "த…
-
- 0 replies
- 1.2k views
-
-
கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்றத் துணிந்து எழுக! இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தவறான கண்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக" சித்திரித்து நோக்கிய இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இப்போது மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது போலும். இலங்கையின் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் காட்டும் பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன. வாகரையில் கடந்த எட்டாம் திகதி ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களின் அகதிகளின் உயிர் குடிக்கக் காரணமான இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத் தலைமை கூறிய சமா தானங்கள் சமாளிப்புகள் ஏற்கவே முடியாதவை என்பதை…
-
- 1 reply
- 1.4k views
-
-
Dear Friends, You all are aware of the deteriorating situation in the peninsula and elsewhere in the north east. I am copying below an e-mail reply from Dr.N.Sivarajah who is currently the WHO rep in Jaffna and previously of the Medical Faculty in Jaffna. It is very worrying. Please make use of the information to publicise and pressurise for the reopening of the A-9 as a matter of urgency . Feel free to use his name (he is happy with that) but the statement is his own and not WHO. I am also attaching the latest information regarding IDPs. I have made an appointment with my local MP here in England and will be urging him to raise this issue in parliament and with the For…
-
- 3 replies
- 2k views
-
-
ரவிராஜின் படுகொலை அதிர்ச்சியை தருகிறது பிரான்ஸில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி [saturday November 11 2006 07:17:18 PM GMT] [யாழ் வாணன்] தம்பி ரவிராஜின் படுகொலை அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. இந்தக் கொலை கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஆயுதமேந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். இன்றைய உடனடியானதும் அவசியமானதுமான விடயம் இதுவாகும். கொலைக் கலாசாரத்தை எவர் மேற்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப் போவதில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. …
-
- 14 replies
- 3.6k views
-
-
ஏ-9 பாதை திறக்க மாமனிதர் ரவிராஜா குடும்பத்தினர் வேண்டுகோள்: மகிந்த மௌனம் [சனிக்கிழமை, 11 நவம்பர் 2006, 18:21 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை பெருந்திரளானோர் கண்ணீருடன் இறுதி வணக்கம் செலுத்தினர். அவரது உடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் குறித்து இன்று சனிக்கிழமை மாலை மகிந்த எதுவித பதிலும் அளிக்கவில்லை. மாமனிதர் ரவிராஜின் உடல்பேழை அவரது மார்னிங்ரவுன் இல்லத்திலிருந்து பொரளையில் உள்ள ஏ.எஃப்.றேமண்ட்ஸ் இறுதிநிகழ்வு இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாமனிதர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் பணிய…
-
- 2 replies
- 2.2k views
-
-
யாழ்பாணத்தில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் 6 இலட்சம் மக்களின் நிலையைக்கண்டு இந்தியா என்னும் மனிதாபிமான உதவிகள் எதுவும் செய்யமுன்வரவில்லை. அன்று இலங்கை அரசின் அனுமதியில்லாமலே வான்வழியாக உணவுப்பொதிகளைக் போட்டவர்கள் இன்று மெளனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டு முதலமைச்சரும் குரல் கொடுக்காதது எமக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அரபுநாட்டில் இருந்து உணவுப்பொருட்கள் விமானமுலம் அனுப்பிவைக்கிறார்கள் ஆனால் இந்தியா என்ன செய்தது? இந்தியா தமிழ்நாட்டில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே? அவர்கள் தமது இனம் அயல் நாட்டில் அழிந்துகொண்டிருப்பதை இன்னும் பார்துகொண்டிருப்பார்களா?? இதற்கு அவர்கள் தான் செயல்முலம் பதில் செல்லவேண்டு…
-
- 5 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை "தெரண" தொலைக்காட்சிக்கு அவர் நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கான காரணங்கள், சிங்களத் தரப்பின் பொய்மைகளுக்கு விளக்கமான சாடல்கள் என ஆணித்தரமாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. "மாமனிதர்" ரவிராஜின் இறுதி நேர்காணல்": ஏ-9 பாதை திறக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறோம். இதனிடையே ஒக்ரோபர் 16 ஆம் நாள் வடக்கு - கிழக்கை பி…
-
- 2 replies
- 2.1k views
-
-
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 10/11/2006 . தாயக தேசத்தின் விடுதலையைத் தணியாத இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காக அரும்பணி ஆற்றிவந்த ஒரு உயர்ந்த மனிதரைச் சிங்களம் பலிகொண்ட செய்தி எமது ஆழ்மனதில் ஒரு பூகம்ப அதிர்வாக இறங்கியிருக்கிறது. தமிழீழ தேச ஆன்மாவை ஒரு உலுப்பு உலுப்பியிருக்கிறது. நித்தம் சாவையும் அழிவையும் சந்தித்து வாழும் எம்மக்களை மீளவும் துயரச்சுமைக்குள் தள்ளியிருக்கிறது. திரு. நடராசா ரவிராஜ் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர். பந்தபாசங்களுக்கு அடிமைப்பட்டு, பொருளுலகால் ஆட்டிப்படைக்கப்படும் ஒரு பொம்மை மனிதரல்ல அவர். தமிழீழ மண் மீதும் மக்கள் மீதும் ஆழமான பற்றும் பாசமும் கொண்டவர். சிறந்த…
-
- 0 replies
- 1.7k views
-
-
http://www.nerudal.com/content/view/3209/70/ மட்டக்களப்பு -ஏறாவூரில் குடும்பப்பெண்ணொருவர் கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் ஏறாவூர் பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச்சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தாயான கதிர்காமத்தம்பி கௌரி (வயது28) என்ற குடும்பப் பெண்ணே கருணாகுழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டவராவார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தப்பிரதேசத்தில் கருணாகுழுவினர் சிறுவர்கள் இருவரை கடத்திச்செல்லும்போது நேரில் பார்த்ததாகவும் கடத்திக்கொண்டு சென்ற கருணாகுழு உறுப்பினர் ஒருவரை அடையாளம் கண்டு- அவருடைய பெயரைக்கூறி அயலவரிடம் முறையிட்ட இவர் இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய இருந்த சமயமே அவர் கொல்லப்பட்டிர…
-
- 2 replies
- 2.4k views
-
-
http://www.nerudal.com/content/view/3207/70/ சீறும் படை என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்! இன்று காலை கொழும்பில்வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இனுடைய படுகொலைக்கு கருணா குழுவினர் உரிமைகோரியுள்ளனர். மட்டக்களப்பு சீறும்படை என்றபெயரில் இன்றுமாலை துண்டுப்பிரசுரமொன்றை மட்டக்களப்பில் விநியோகித்துள்ளனர். அந்தத் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- எமது எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்தும் வன்னிப்புலிகளின் அடிவருடிகளாகச் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினர் இன்றுகாலை கொழும்பில் வைத்து தமிழின விடியலுக்காக கொன்றொழிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி கிழக்கின் எமது தா…
-
- 14 replies
- 4.8k views
-
-
இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்கா இராணுவத் தாக்குதல்கள்: இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கவலை இலங்கைத் தமிழர்கள் மீதான சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைப் போல் தானும் சம அளவில் கவலை கொள்வதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு கவலை தெரிவித்து இனியும் இந்திய அரசாங்கம் பொறுமை காக்க வேண்டுமா? என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கருணாநிதி நேற்று வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கருணாநிதி சார்பில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை இந்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துப் பேசினார். இலங்கை…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவர்கள் செய்தால் கண்டனம் இவர்கள் செய்தால் கவலை எமது உரிமைகளைப் பெற உங்கள் கண்டனங்களும் கவலையும் தேவையில்லை எம் சக்தியே போதும் வாகரை தாக்குதல்: அமெரிக்கா ஆழ்ந்த வருத்தம் [வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2006, 18:50 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்தினரால் இடம்பெயர்ந்த அகதிகள் மீது வாகரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்தமைக்கு அமெரிக்கா ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளரின் அறிக்கையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அறிக்கை விவரம்: இலங்கையின் கிழக்கில் வாகரை பிரதேசத்தில் நவம்பர் 8 ஆம் நாள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது சிறிலங்கா இராணுவம் நட…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளி 10-11-2006 17:14 மணி தமிழீழம் [நிலாமகன்] திருமலையில் டோரா மூழ்கடிப்பு: 10க்கு மேற்பட்ட கடற்படையினர் பலி! திருமலை உப்புவெளி நிலாவெளியில் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மற்றொரு மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்கா கடற்படையினரின் டோரா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இன்றைய டோரா மூழ்கடிப்பில் சிறீலங்காப் கடற்படையினர் பத்துத் தொடக்கம் பதினைந்து கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை திருமலை நிலாவெளி கடற்பரப்பில் பயணித்த விடுதலைப் புலிகளை சிறீலங்கா கடற்படையினர் வழிமறித்தது தாக்கியபோதே இரு தரப்பினரிடையே உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.…
-
- 1 reply
- 2.6k views
-
-
அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் இந்த மாற்றம் இடம்பெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேறு கட்சிகளிலிருந்து அரசில் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சுப் பொறுப்புகளின்றி அரசில் இணைந்தவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் பொறுப்புகளை வழங்கவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறின. ஆயினும், அமைச்சரவையை மாற்றுவது தொடர்பாக அமைச்சர்களில் அநேகமானோர் மகிழ்ச்சியுடன் இல்லையெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தேச அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றால் ஏற்கனவே 100 ஐ அண்மித்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
குடாநாட்டுக்கான விநியோகத்திற்கு ஐ.நா.வின் உதவி பெறப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் -ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டு மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஐ.நா.வின் ஒத்துழைப்பைப் பெற முயற்சிக்குமானால் அதன் மூலம் எமது நாட்டின் இறைமைக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுமென கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., ஏ-9 வீதியைத் திறக்காமல் மாற்று வழி மூலம் அந்த மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றது. ஐ.நா.வின் தலையீட்டுக்கோ, ஏ-9 வீதியைத் திறப்பதற்கோ ஜே.வி.பி. ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும், அரசாங்கம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ள முற்பட்டால் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ரவிராஜ் எம்பி சுடப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக உறுதிப்படுதமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தகவலை கஜேந்திரன் எம்பி உறுதிப்படுத்தி உள்ளார் நாரகன்பிட்டியில் வைத்து சுடப்பட்டதாக அவர் தெரிவித்தார்
-
- 33 replies
- 6.1k views
-
-
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக கழகத்தின் சார்பில் நாடெங்கும் ஆர்ப்பாட்டம் பட்டினியால் செத்து மடியும் ஈழத் தமிழ் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருள்களை அனுப்பவும்இ வட கிழக்கு மாகாண இணைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் விவரம் வருமாறு: சென்னை நாள்: 12-11-2006 ஞாயிறு காலை 10 மணி; இடம்: மெமோரி யல் ஹால்இ சென்னை; தலைமை: வழக்கறிஞர் கோ. சாமிதுரை எம்.ஏ.இ பி.எல்.இ (திராவிடர் கழகப் பொருளாளர்); முன்னிலை: கலி. பூங்குன்றன் (கழகப் பொதுச்செயலாளர்)இ கு.வெ.கி. ஆசான்இ அ. குணசீலன்இ வழக்கறிஞர் அருள்மொழிஇ மு.அ. கிரிதரன்இ கவிஞர் செ.வை.ரெ. சிகாமணிஇ இரா. வில்வநாதன்இ இர. இராம சாமிஇ ஆவடி ஆர். திருநாவுக்கரசு வட சென்னைஇ தென் சென்னைஇ தாம்பரம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
Rebels attack third Sri Lankan navy gunboat COLOMBO (AFP) - Tamil Tiger rebels have destroyed a Sri Lankan navy gunboat off the island's northeast coast with casualties feared, less than 12 hours after sinking two similar craft, officials and residents said The Dvora gunboat was destroyed off Trincomalee just before dawn, residents said, adding that they saw the craft in flames after hearing a huge explosion. The fate of the crew was not immediately known, but officials said about 10 to 15 sailors were believed to have been onboard. Navy officials in the area also confirmed Tamil Tiger rebels attacked the craft. Fishing was banned there during the nig…
-
- 4 replies
- 2.2k views
-
-
படையினரின் கடைகளில் விற்பனைக்கு 6 ஆயிரம் கிலோ உணவுப்பொருள்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ள 20 நலன்புரி வர்த்தக நிலையங்களுக்கென உணவுப்பொருள்கள் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளன. இத் தகவலை பலாலி பாதுகாப்பு நடவடிக்கைத் தலைமையகம் தெரிவித்தது. இது தொடர்பாகத் தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இராணுவத்தால் திறக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களுக்கென விமானம் மூலம் நெஸ்லே பால்மா, தேங்காய்ப் பால்மா பைக்கற், தேயிலை என்பன 6ஆயிரத்து 200 கிலோ எடுத்து வரப்பட்டுள்ளன. இவை தவிர கடந்த திங்கட்கிழமை ஜெனி கிளியர் கப்பல் மூலம் அரிசி, சில்லறைச் சாமான்கள் 700 மெற்றிக்தொன்னும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மேர்ஸ் யாழ கப்பல்…
-
- 0 replies
- 822 views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20221
-
- 35 replies
- 8.5k views
-